உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து Jeffersonville, Indiana USA 62-0318 1காலை வணக்கம் நண்பர்களே! இங்கிருப்பதனால் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். இன்று காலையில் சற்று முன்னதாகவே நாம் துவக்குவோம். ஜனங்களுக்குப் போதுமான இருக்கைகளைக் கொடுத்து அமரச் செய்ய முயற்சித்தும் அது முடியாமற்போகிறது. எனவே அது எப்பொழுதுமே வருத்தமளிக்கிறது. நீங்கள் நின்று கொண்டிருப்பது கடினமென்று அறிந்திருக்கிறேன். இன்று காலையில் நான் செய்திக்கென்று அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். இது ஒரு நீண்ட பிரசங்கமாக இருக்கப் போகிறபடியினால் சிலர் நின்று கொண்டிருக்கிறபடியினால் உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்களுக்கு இடமளித்து சற்று நேரம் வெளியே சென்று இளைப்பாறி வரலாம். ஒரு நீண்ட ஆராதனையில் அவ்விதம் செய்வது ஒரு சரியான காரியம் என்று நினைவிற் கொள்ளுங்கள். அப்பொழுது ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கக்கூடும். 2இப்பொழுது அவர்கள் இங்கு கூடாரத்திலுள்ளவர்கள் அனேகருக்கு வசதியாக இருக்கையளிக்கும் விதத்தில் ஒரு பெரியசபைக் கட்டிடம் கட்டும் திட்டத்தில் முனைந்துள்ளார்கள். இங்குள்ள இக்கட்டிடம் 250 அல்லது 300 பேர்களுக்கான இருக்கைகள் மட்டுமே அளிக்கக் கூடியதாயிருக்கிறது; அந்தக் கட்டிடம் இதைவிட 100க்கும் அதிகமான பேர்களுக்கு இருக்கையளிக்கக் கூடியதாயிருக்கும். எனவே அது... இங்கு ஜனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடமில்லாமல் கதவினருகில் வந்து பார்த்து கூடாரமும், சுவர்களும், நடைபாதைகளும் ஜனங்களால் நிரம்பி வழிவதைக் கண்டு திரும்பிப் போய் விடுவதை நான் காண்கிறேன். எல்லோரும் இங்கு வந்து கர்த்தருடைய செய்தியைக் கேட்பதற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் இங்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். 3நான் இன்று 12 மணி வரை பேச முயற்சிப்பேன் என்று அறிவிக்க விரும்புகிறேன். அதன் பிறகு 12 மணிக்குக் கூட்டத்தை முடிக்கலாம். ஜனங்கள் ஆகாரமருந்தி வர ஒவ்வொருவருக்கும் நேரமளிப்போம். அவ்வேளையில் நமது ஊழியராகிய போதகர் நெவில் ஒரு ஞானஸ்நான ஆராதனையை நடத்துவார். ஜனங்களாகிய நீங்கள் வெளியில் சென்று ஏதாவது ஆகாரம் உண்டு திரும்பி வாருங்கள். நான் சரியாக இரண்டு மணிக்குப் பீடத்திற்கு வர முயற்சி செய்வேன். இப்பொழுது பிற்பகல் கூட்டம் ஆரம்பிக்கும். 4இந்த வாரத்தில் நான் பெரும்பாலும் ஜெபத்திலிருந்தேன். மூன்று, நான்கு நாட்கள் ஜெபித்த பிறகு தான் இந்தச் செய்தியினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, இக்கூட்டத்திற்காக ஜெபத்தின் மூலம் தாங்கி இதில் வந்து கலந்து கொண்டதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 5ஒரு வயதான முதியவரிடத்திலும், ஒரு முதிய பெண்மணியிடமும் சில கணம் பேச எனக்குச் சிலாக்கியம் கிடைத்தது சகோதரன் மற்றும் சகோதரி கிட் உடன். அவர்கள் கடந்த வருடங்களெல்லாம் உண்மையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்களென்று நாம் அறிந்துள்ளோம். அவர்கள் என்னைக் காண வேண்டுமென்று சில கணம் நின்றார்கள். அவர்களிடம் வாருங்கள் என்றேன். அவர்களை சிறிது நேரம் கண்டு பேச விரும்பினேன். நான் சிறு குழந்தையாயிருந்த போதிலிருந்தே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வரும் இப்படிப்பட்ட முதியோருடன் பேசுவதென்பது எப்படிப்பட்ட சிலாக்கியம். நாம் பாதையின் முடிவுக்கு வர வர அந்தப் பழைய மகிமையான சுவிசேஷம் நமக்கு இன்னும் அருமையானதாக ஆகிறது. 6இப்பொழுது, இங்கு சில துணிகள் ஜெபத்திற்கென்று வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவைகளின் மீது கைகளை வைத்து ஜெபிப்பேன். இப்பொழுது ஜெபத்திற்காக கொஞ்ச நேரம் நம் தலைகளைத் தாழ்த்துவோம். 7எங்கள் பரலோகப் பிதாவே, நீர் உம்முடைய வார்த்தையில் “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன்” என்று கூறியிருக்கிறீர். இயேசு கிறிஸ்து இன்னும் தேவனுடைய குமாரன் என்றும், உலக ரட்சகர் என்றும், இந்த மரித்துக் கொண்டிருக்கிற சந்ததியின் முன்பாக உயர்த்திக் காட்டுவதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமாயிருக்கிறது. அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டு விசுவாசிக்கும் ஜனங்கள் எங்கிருக்கிறார்களோ, அங்கு நானும் வாழ்வதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். இந்த ஜீவன் முடிந்த பிறகு மறுகரையில் ஒருமகத்தான ஜீவன் உண்டாயிருந்து, சில மணி நேரமுள்ள இந்த பிரயாசம், சோதனைக் களமாகிய இந்த உலகத்தின் நிழல்களினூடே கடந்து, ஒரு ஆகாயப் பாதைக்குள்ளாக நுழைந்து, தேவனுடைய காலம் நிறைவேறும் நேரம் ஒன்று துரிதமாக வரும் என்று காத்திருப்பதை அறிந்திருக்கிறோம். காலங்களைத் தமது மகத்துவமான கரங்களில் அந்நாள் பரியந்தம் ஏந்திக் கொண்டிருப்பவர், முடிவிலே தம் சபையை இப்பூமியை விட்டு போக விட்டு, ஆகாயத்தில் எங்கோ ஒரு தேசத்திற்கு கொண்டு செல்வார், அங்கு வியாதியும், வருத்தமும், வயது சென்ற நிலையும், மரணமும் இருப்பதில்லை, ஆகவே தான் கர்த்தாவே, இந்தக் காரியங்களை யெல்லாம் குறித்த எங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இன்று இங்கே கூடியிருக்கிறோம். 8ஏதோ ஒன்றுமில்லாதற்காக ஜனங்கள் இங்கு கூட்டி சேர்க்கப்படவில்லை. ஏனெனில் வாக்குத்தத்தங்களைச் செய்த தேவகுமாரன் மரிக்கவில்லையென்றும், எங்கள் மத்தியில் என்றென்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்றும், ஒருபோதும் இவ்வுலகம் கண்டிராவண்ணம் அந்த உண்மைத் துவமானது நிரூபிக்கப்பட்டிருப்பதை அறியும் போது நாங்கள் மிகவும் பரவசமடைகிறோம். எல்லாவற்றிக்கும் மேலாக கர்த்தாவே, இந்த உலகத்தை நாங்கள் சுதந்தரித்துக் கொண்டு அநேக நூற்றாண்டுகள் இளமையாயிருந்து மகிழ்ச்சியாயிருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஆனால், அவரில் அன்பு கூருகிறவர்களுக்காக என்ன காலமானது வைக்கப்படிருக்கிறது என்பதை அது ஒத்து இருக்கிறதை அறியும் போது நாங்கள் இந்தக் காலையில் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். ஆகவே இந்த மகத்தான வேளை நெருங்குகிறதென்பதை எங்கள் சகோதர, சகோதரிகளுக்கு குறிப்பிட்டு காட்ட முயற்சிக்கிறோம். அந்த நேரமானது வருவதை நாங்கள் பார்க்கும் போது கர்த்தாவே, எங்கள் உள்ளம் கொழுந்துவிட்டு எரிகிறது. எங்களை ஆயத்தமாக்க விரும்புகிறோம். 9ஒருவர் பின் ஒருவராக நாங்கள் அந்த பாதையின் வழியாகக் கடந்து செல்கிறோம். எங்கள் மத்தியிலிருந்த சகோதரி பெல்லை சற்று முன்புதான் நாங்கள் அடக்கம் செய்தோம். அவர்களோடு ஜெபிக்கவும் நேரமில்லாதவாறு அவ்வளவு துரிதமாக கடந்து சென்று விட்டார்கள். (நாங்கள் அங்கு வரவேண்டுமென்று அவர்கள் விருப்பங் கொண்டார்கள்). எங்கள் இருதயத்திலுள்ள காரியங்களைக் கூட தருவதற்கு நீர் நல்லவராயிருக்கிறீர். உம்முடைய ஒருவரையும் இழக்கமாட்டீர் என்று வாக்கு கொடுத்திருக்கிறீர். இப்பொழுது, உம்மை அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் இருதயத்தில் உம்மை அறிந்து கொள்ள நாங்கள் ஜெபிக்கிறோம். பாவிகளை மனந்திரும்புதலுக்கென்றும், வியாதியுள்ள ஜனங்களை தெய்வீக சுகமளித்தலின் அறிவிற்கும் திருப்பியருளும். ஓ, தேவனே, உம்முடைய பரிசுத்தவான்களை ஆசீர்வதித்து அவர்கள் இருதயங்களை ஒரு மனக்கட்டிற்குள் கட்டியருளும். மேலும், இந்த ஒலி நாடாக்கள் பட்டினங்களுக்கும் உலகமுழுவதிலுமுள்ள நாடுகளின் எல்லா சபைகளுக்கும் செல்லும் போது, ஊழியக்கார சகோதரர்கள், ஒருக்கால் முதலில் தவறாகப் புரிந்துக் கொண்டவர்கள், இப்பொழுது சரியாகப் புரிந்து கொண்டு உம்முடைய சபையாக ஆயத்தப்படட்டும். 10இப்பொழுதும் ஓ, கர்த்தாவே, என் தாயின் வயிற்றினின்றும் என்னை பிரித்து என் வாழ்நாளெல்லாம் என்னைப் பராமரித்து உம்முடைய கிருபையினால் இந்த மணி நேரத்திற்குள் என்னைக் கொண்டு வந்திருக்கிறீர்; நான் ஏன் அவ்விதமாக நடந்து கொண்டேன் என்றும் உம்முடைய சித்தத்தை ஜனங்களுக்கு விளக்கிச்சொல்லும் போது, கர்த்தாவே, உம்முடைய ஊழிக்காரர்களுடைய விசித்திரமான தன்மையை ஜனங்கள் புரிந்துக் கொள்ளட்டும். பிதாவே, இந்த வாரமெல்லாம் ஜெபித்து ஆராய்ந்து எழுதியிருக்கிற இந்த பொருளைக் குறித்த வசனங்களையும், வார்த்தைகளையும் ஆசீர்வதியும். அவைகள் எங்கெங்கு கேட்கப்படுகிறதோ அங்குள்ள நல்ல நிலத்தில் அவை விழுந்து காக்கப்பட்டு விளையச் செயல்படட்டும். அப்பொழுது துதியும் உமக்கே செலுத்தப்படும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 11உள்ளே வர இயலாமல் கார்களில் அமர்ந்திருக்கும் மக்கள் கவனிக்கவும், இப்பொழுது இங்கே ஒரு சிறு கருவியை நான் பொருத்துகிறேன், நீங்கள் உங்கள் வானொலியில் 1150 ற்கு திருப்பவும். அப்பொழுது சரியாக உங்கள் காரில் உள்ள உங்கள் வானொலியில் செய்தியைக் கேட்கலாம். (இப்பொழுது இதில்... இங்கேயுள்ள கருவி ஒலி நாடாக்களுக்கா?) 12இப்பொழுது இங்கிருக்கும் என் நண்பர்களுக்கும், இந்த ஒலி நாடாக்கள் எங்கெல்லாம் செல்கின்றனவோ அங்குள்ளவர்களுக்கும் நான் செய்த அநேக வர்த்தமானங்களைக் குறித்த விவரம் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன் என்பதை உணருகிறேன். அநேக சமயங்களில் ஜனங்கள் என்னிடம் வந்து, ''சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஏன் அவ்விதம் செய்தீர்கள்? அதை ஏன் சொன்னீர்கள்? அவ்விதமாக செய்வதற்கு முகாந்திரம் என்ன?“ என்றெல்லாம் கேட்கிறார்கள். நான் செய்த ஒவ்வொரு காரியங்களும் நல்ல நோக்கத்திற்காக செய்யப்பட்டன என்பதை என் இருதயப்பூர்வமாக கூறுகிறேன், அவைகளை ஒரு காரியத்திற்காக செய்தேன்; மேலும் இந்த காலையிலே, அவைகளை நான் ஏன் செய்தேன் என்றும் எந்த நோக்கத்திற்காக செய்தேன் என்றும் தேவனுடைய உதவியினால் வேதாகமத்திலிருந்து விவரிக்க முயற்சிப்பேன். 13ஒருக்கால் இங்கு இத்தகைய பெரிய கூட்டத்தில் அநேக ஊழியக்காரர் அமர்ந்திருந்து செய்தியைக் கேட்கக் கூடும். என்னுடைய எண்ணங்களையெல்லாம் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வசனங்களோடு ஜனங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக போதுமான நேரம் உண்டாயிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய சகோதரர்களுக்கு நான் உங்களுக்கும், ஒலிநாடாக்களின் பதிவுக்காகவும் பேசுகிறேன். நான் எதை சரியென்று நினைத்து அதின் மேல் நிலையாயிருக்கிறேனோ, அதை குறித்து ஒரு வேளை நீங்கள் அதிகமாக என்னோடு ஒத்துப் போகாமலிருக்கலாம். அவ்விதமாக செய்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு. ஏனெனில் நீங்கள் அதை வேறுவிதமாகப் பார்க்கக்கூடும்; ஆனால் இக்காலையில், நான் ஏன்அவ்விதமாக நிலைநின்றேன் என்பதை தேவ ஒத்தாசையினால் உங்களுக்கு காட்ட முடியும் என்று நம்புகிறேன். 14அநேக நேரங்களில் நான் சபைகளையும், ஸ்தாபனங்களையும், பெண்கள் ஆபாச ஆடையணிவதைக் குறித்தும், மனிதனின் நடவடிக்கைகளைக் குறித்தும், கடிந்து கொண்டிருக்கிறேன். அவ்விதம் செய்வதற்கு நான் முழுவதுமாக வேத வசனங்களைச் சார்ந்திருந்தேன் என்று நினைக்கிறேன். ஒருபோதும் ஒருவரைக் குறித்தாகிலும் தீய உணர்வு எனக்கு இருந்ததில்லை. என் இருதயத்தை தேவன் அறிவார். கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர்கள் என்னோடு ஒவ்வாமலிருந்தாலும் இன்னும் நான் அவர்களை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் என்ன செய்தாலும் சரி, அல்லது என்னை எவ்விதம் நடத்தினாலும் சரி, அது ஒரு காரியமல்ல, தேவனுடைய ஆவி எனக்குள் இருக்கும் வரை நான் எப்பொழுதும் அவருடைய சபையையும் ஜனங்களையும் நேசிக்கத்தான் செய்வேன். 15ஒரு சமயம் மோசே என்ற ஒரு மனிதன் இருந்ததை நான் நினைவு கூறுகிறேன், அந்த ஜனங்கள் அவனைத் தொடர்ச்சியாக பாரப்படுத்தி வந்தார்கள். எல்லாக் காரியங்களிலும் அவர்கள் முறுமுறுத்தார்கள். ஆனால் முறையிட்டார்கள். மோசேக்கு எடுத்துக் காண்பிக்கும் நேரம் ஒன்று வந்தது. அப்பொழுது தேவன் “அவர்களிடமிருந்து உன்னைப் பிரித்துக் கொள்; நான் உன்னை ஒரு ஜாதியாக்குவேன்” என்று சொன்ன போது, மோசே, தேவனுடைய கோபக்கினைக்கு குறுக்கே விழுந்து, “என்னை கொன்று போடும், இந்த ஜனங்களை விட்டு விடும்” என்று கூறினான். அவர்களை அவன் கலகக்காரர் என்று அழைத்தான்; (அவனுக்கும் தேவனுக்கும் விரோதமாக அவர்கள் கலகம் செய்தார்கள்) இருந்தாலும் அவன், “என்னை எடுத்துக் கொள்ளும், அவர்களை இரட்சியும்” என்று கூறும் அளவிற்கு அவர்களை நேசித்தான். கிறிஸ்து மோசேயில் இருந்ததை அது குறிக்கிறது. ஒரு மனிதன் மற்றவர் எவ்வளவுதான் அதிகம் அவனோடு ஒத்துப் போகாமலிருந்தாலும் அவன் அவ்விதமாக நேசிக்காவிட்டால் - உதட்டளவிலல்ல, உள்ளத்தால் - இந்த மனித பிறவிகளை நேசியாவிட்டால் கிறிஸ்துவின் அன்பு அவனிடத்தில் இல்லை என்று நான் நம்புகிறேன். 16ஒரு சமயம் நான் ஒரு காரியத்தைக் குறித்து அதிசயித்தேன் (ஒரு வேடிக்கைக்காக நான் இதைக் கூறவில்லை). சிக்காகோ என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு நீக்ரோ மனிதன் அமர்ந்திருந்து, “நான் டாக்டர். பிரன்ஹாமை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறிக் கொண்டேயிருந்தாராம். அவர் பெரிய தொப்பியை தலையில் கொண்டவராயும், பத்து அங்குல நீள சிலுவையை அணிந்தவராயும், நீண்ட அங்கி தரித்து, மணிகளாலும் வளையல்களாலும் உடுத்தி ஒரு வினோத காட்சியளித்தார். நான் என்னுடைய உடன் ஊழியரான சகோ. பாக்ஸ்டரிடம், “அவரை அறைக்குள் அழைத்து வாருங்கள், நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன்.” என்று கூறினேன். ஆக, அங்கு அவர் என்னோடு அமர்ந்து, “ஐயா, நான் உங்களை எவ்விதம் அழைக்கட்டும்? பிதா, கனம் பொருந்திய, அல்லது மூப்பர், அல்லது எவ்விதமாக நீங்கள் அழைக்கப்பட விரும்புகிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு நான், “நீங்கள் என்னை நேசிக்கிறதுண்டானால் என்னை 'சகோதரன்' என்று அழையுங்கள்” என்றேன். அவர் அவ்விதமே எனக்கு மரியாதை செலுத்தினார். பின்பு அவர் தன்னுடைய பெயரையும், சபையின் பட்டப்பெயரையும், தன்னுடைய பட்டப் பெயர்களையும் கூறினார். அவைகளை எழுத அநேக வரிகள் தேவைப்படும். 17ஆனால் அவர் சொன்ன ஒரு காரியம் என்னை எப்பொழுதும் உறுத்தும். அவர், “சகோ பிரன்ஹாமே, நான் ஒரு ஜாதியைக் குறித்து மாத்திரமே வாஞ்சையுள்ளவனாயிருக்கிறேன், அது இந்த மனித ஜாதிதான்” என்றார். அப்பொழுது நான் “அது அவ்விதமானால் அதன் பேரில் நாம் கைகளைக் குலுக்கிக்கொள்வோம்” என்றேன். மனித ஜாதி என்ற இந்த ஒவ்வொருவருக்காகவும், ஒவ்வொரு மதத்தினருக்காகவும், ஒவ்வொரு நிறத்தாருக்காகவும், கிறிஸ்து மரித்தார். ஆகவே இக்காலையில் அதுவே என் விருப்பமும்கூட, மேலும் அதை எப்பொழுதும் என்னுடைய விருப்பமாக்க முயற்சிக்கிறேன். 18நான் பிரசங்கிக்க நோக்கம் கொள்ளவில்லை. ஏனெனில் நான் இங்கு சொல்வதற்காக வைத்திருக்கும் காரியங்களை கூறுவேனென்றால் பெரும்பாலும் அதற்கு 4 அல்லது 5 மணி நேரம் பிடிக்கும். ஆகவே நான் இப்போதிருந்து 2 மணி நேரம் எடுத்துக் கொள்கிறேன். பின்பு கலைந்து செல்லலாம். பின்பு 1.30 மணிஅளவில் இங்கு கூடுவீர்களானால் இரவு கூடிய வரையில் சீக்கிரமாய் முடிக்கலாம். நான் இன்று பிற்பகல் ஜார்ஜியாவிலுள்ள டிப்டன் என்ற இடத்திற்குப் புறப்படவேண்டும். அங்கு உயர்நிலைப் பள்ளியிலுள்ள அரங்கில் நாளை இரவு நான் பேச பிரசங்கிக்க இருக்கிறேன். அதன்பின் அங்கிருந்து எங்கு செல்வேன் என்பதை நான் அறியேன்: அவர் அங்கிருந்து எங்கே வழி நடத்துகின்றாரோ அங்குமட்டும் செல்வேன். அநேக இடங்கிளில்... சகோ. ஆர்கன் பிரைட் மற்றவரும் என்னை அழைத்து வெளிநாடுகளிலும், மேற்குப்பகுதி கனடா மற்றும் உலக முழுவதும் செல்ல வேண்டுமென்றனர். ஆனால் நான்... நீங்கள் அறிவீர்கள்... நான் இந்த பிரசங்கத்தை முடித்தபின் நீங்கள் அதை அறிவீர்கள். தேவன் எனக்கு அளித்தபடியே நான் அதை உங்களுக்கு அளிக்க உதவுவாரானால், இந்த ஆராதனை முடிந்தவுடன் நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 19அதன்பின், நீங்கள் புரிந்துகொள்ள முடியாதது ஏதாவது இருந்தால், உங்கள் புத்தகங்களையும், கேள்விகளையும் கொண்டு வாருங்கள். ஒலிப்பதிவு கருவிகளையுடையவர்கள், உங்கள் திறந்த இருதயத்தோடே உங்கள் வீடுகளில் அந்த ஒலி நாடாக்களைக் கேளுங்கள். “ஆண்டவரே, இப்பொழுது நான் ஓய்வாய் இருக்கிறேன்; நான் அதைக் கேட்கப் போகிறேன்,” என்று கூறுங்கள். நீங்கள் கேட்கையில் உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால், உடனே வேத வாக்கியங்களைக் கவனியுங்கள். வேதம் கூறுகிறது, இயேசு, “என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவைகளும் அவைகளே”, என்றார். பாருங்கள்? அது சரியானதா என்பதை நாம் வேதத்தின் வழியாகப் பார்த்துக் கொள்ளலாம். 20இப்பொழுது நாம் வசனத்திற்கு வருவோம்... (மன்னிக்கவும். இன்று காலையில் இங்கே ஏராளமான ஒலிப்பெருக்கிக் கருவிகள் உள்ளன. நான் எதில் ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.) நான் ஆதியாகமத்திலிருந்து ஆரம்பித்து இன்றிரவு வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிக்கப் போகிறேன். நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவ வார்த்தையின் ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். உங்களுடைய தாள்களையும் எழுது கோல்களையும் ஆயத்தமாக வைத்திருங்கள். ஏனெனில் என்னிடம் அநேக வசனங்கள் உள்ளன. நான் எல்லா நேரங்களிலும் அவ்வசனங்களை தொடர்ந்து படித்துக் கொண்டேயிருப்பேன். ஆதியாகமம் 1ம் அதிகாரம் 1லிருந்து 13 வசனங்களை இப்பொழுது நாம் வாசிப்போம். “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும் அது ஜலத்தினின்று ஜலத்தைப்பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும், ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் என்றுபேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்களில் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.“ 21இந்த காலையில் என் மூலவாக்கியத்தின் தலைப்பாக ''உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து“ என்று ஆரம்பித்து பேச விரும்புகிறேன். ”உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து. “ தேவன், ”தங்கள் தங்கள் ஜாதியின்படி...... பிறப்பிக்கக்கடவது“ என்று கூறியதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அது எதுவாயிருந்தாலும் அது தன் இனத்தைப் பிறப்பிக்க வேண்டும். தேவனுடைய இந்த வார்த்தையானது நித்தியமாயிருக்கிறது. தேவன் நித்தியமானவராய் இருக்கிறபடியால், அவர் ஒரு காரியத்தைப் பேசி, பின்பு வேறெதாகிலும் ஒரு நல்ல முடிவுக்கு திரும்பவும் அதை மாற்றுகிறவரல்ல. ஏனெனில் தேவனுடைய ஒவ்வொரு முடிவும் பரிபூரணமாயிருக்கிறது. ஒருதரம் அவர் வார்த்தையை உரைத்த பின்பு, அது ஒரு போதும் மரிப்பதில்லை; அது தொடர்ந்து ஜீவிக்கிறது. அது ஒருபோதும் மரிப்பதில்லை. ஏனெனில் அது தேவனாயிருக்கிறது. அவருடைய வார்த்தை மரிப்பதைக் காட்டிலும் அவர் மரிக்கலாம்! ஆகவே தான் யோவான் 1ம், அதிகாரத்தில் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி...” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதியிலே நித்திய நோக்கத்திற்காக உரைக்கப்பட்ட அதே வார்த்தை மாம்சமாகி நமது மத்தியிலே வாசம் செய்தார் - தேவனுடைய வார்த்தை. 22சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெண் (ஒருவேளை இது அதிகார பூர்வமானதாக இல்லாமலிருக்கலாம்) கடிகாரங்கள், கைகடிகாரங்கள், இவைகளின் மணிகாட்டும் முற்களுக்கு ரேடியம் (Radium) என்னும் இரசாயனத்தை பூசும்போது அதை தன் நாவினால் நக்கினாளாம். அது அந்த பெண்ணைக் கொன்றுவிட்டது. அவர்கள் அப்பெண்ணின் மண்டையோட்டை ஒரு சோதனைக்காக வைத்திருந்தார்களாம். அநேக ஆண்டுகளுக்குப் பின்பு, அப்பெண் மரித்து அநேக வருடங்கள் ஆகியும், அவர்கள் உபயோகிக்கும் சில கருவிகளை அம்மண்டை ஓட்டின் அருகே கொண்டு சென்றபோது ஒரு அதிர்ச்சியோடு அம்மண்டையோட்டினுள்ளே ரேடியம் இன்னுமாக ஓடிக்கொண்டிருந்ததை காதினால் கேட்க முடிந்ததாம். இந்த ரேடியமானது தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. 23தேவனுடைய வார்த்தையானது தொடர்ந்து சென்றுக் கொண்டேயிருக்கிறது. கிரகிக்கத்தக்கதான கருவி ஒன்று நமக்கு உண்டாயிருக்குமானால் அதைக்கொண்டு ஒரு மனிதனுடைய சத்தத்தையோ அல்லது நான் இன்று பேசும் என்னுடைய சத்தத்தையோ, இன்றிலிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் ஆகாயத்திலிருந்து கிரகிக்க முடியும் என்று என்னிடம் கூறினார்கள். இது ஒரு கூழாங்கல்லை குளத்தின் நடுவே போடுவதை ஒத்திருக்கிறது. அதில் ஏற்படும் சிறு அலைகள், நம் கண்களுக்கு காணப்படாமற் போனாலும், அது கரையை தொடுமளவும் தொடர்ந்து செல்கிறது. அதுபோன்று நம்முடைய சப்த அலைவரிசைகள் இந்த உலகத்தைச் சுற்றி சுற்றி பிரயாணம் செய்து கொண்டேயிருக்கிறது. ஆகவே, நம்முடைய சப்தம் என்கிற காரியமே நமக்கு நியாத்தீர்ப்பாகிறது. நம்முடைய சாட்சியே நமக்கு விரோதமாக எழும்பும். அவருடைய மகத்தான அந்த கருவி நம்முடைய சப்தத்தை கிரகிக்கும் போது, நாம் முணுமுணுத்த ஒவ்வொரு வார்த்தையும் நாம் பேசிச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையாகிய நம்முடைய சொந்த சப்தமே அந்த நியாத்தீர்ப்புப் பீடத்தண்டையில் நம் காதுகளில் எதிரொலிக்கும். 24அந்த தவறான சப்தத்தை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழி மனந்திரும்புதலாகும். தேவன் மட்டுமே அதை நிறுத்த முடியும். அவ்விதம் அது நிறுத்தப்படவில்லையென்றால் அது தொடர்ந்து சென்று உன்னை நித்தியத்தில் சந்திக்கும். ஆகவே தேவன் பரிபூரணமானவராயும், அவருடைய சப்தம் நித்தியமாயும் இருப்பதால், அவருடைய சொந்த சப்தமே அவரை பிடிப்பதாயிருக்கிறது. ஆதலால், அவர் தம்முடைய எல்லா தீர்மானத்திலும், பரிபூரணமுள்ளவராக இருத்தல் வேண்டும். ஏனெனில், அவர் ஒரு காரியத்தைச் சொல்வாரென்றால், அது முழுவழியும் சென்று பின்பு நியாயத்தீர்ப்புக்கு வர வேண்டியதாயிருக்கிறது. 25நீங்கள் உண்மையிலே புரிந்துக் கொள்பவர்களாக அல்லது அவ்விதம் முயற்சி செய்பவர்களாயிருப்பின், நான் ஏன் எப்பொழுதும் நான் கொண்டிருக்கின்ற தேவனுடைய வார்த்தைக்காக நிற்கின்றேன் என்பதை காணமுடியும். ஏனெனில் மற்ற எல்லாக் காரியங்களும் நிச்சயமாக ஒழிந்து போகும். ஆனால் தேவன் நித்தியமானவர், அவர் வார்த்தையும் நித்தியமாகும். நீங்கள் இதை படிக்கத்தக்கதாகவும், முழு பொருளையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாகவும், எவ்வளவு விவரமாக பேசமுடியுமோ அவ்வளவு விவரமாக பேச முயற்சிக்கிறேன். மேலும் ஒலி நாடாக்களுக்காகவும் நான் அவ்விதம் செய்யவேண்டும் - இந்த வேதபுத்தகமே தேவனுடைய வார்த்தையென்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். 26நியாயத்தீர்ப்பு என்னும் ஒன்றை நாம் சந்திக்க வேண்டும். தேவனுடைய சப்தம் எங்கோ நம்மை பிடிக்கப்போகிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு மானிடப் பிறவிக்கும், அந்த சப்தத்தை கேட்பதற்கு சமயமானது கொடுக்கப்படுகிறது. ஊழியக்காரர்கள் அதை எடுக்க உத்திரவாதமுள்ளவர்களாயிருக்க வேண்டும். தேவனுடைய சப்தமானது ஒவ்வொரு மனிதனையும் சந்திக்க இருப்பதினால், அதை நீ இங்கோ, அல்லது நியாயத்தீர்ப்பு பீடத்தண்டையிலோ கேட்க வேண்டியவனாயிருக்கிறாய். சபையானது தேவனுடைய சப்தமாயிருக்குமானால், ரோமன் கத்தோலிக்கர்கள் கூறுவது போல, நீ சபையின் சப்தத்தைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்களுக்குள்ளே உபதேச பேதங்களினால் குழப்பமான நிலை உண்டாயிருப்பதனால் (ரோமர்கள் என்றும், கிரேக்கர்கள் என்றும் பிரிவுகள் உள்ளன) விசுவாசம் கொள்ளத்தக்கதான இடம் உண்டாயிருக்க முடியாது. ஏனெனில் எது சரியான சபை என்ற கேள்வி எழுகிறதே? 27ரோம சபை உண்மையானதா? கிரேக்க சபை உண்மையானதா? அல்லது வேறு எந்த சபைகள் உண்மை? லூத்தரன்களா? பாப்டிஸ்டுகளா? மெத்தோடிஸ்டுகளா? பிரஸ்பிடேரியன்களா? அல்லது யார் உண்மையான சபை? அவர்களுக்குள்ளே பல வித்தியாசமான மார்க்க பேதங்களைக் கொண்டிருந்து, கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரம் ஒருவருக்கொருவர் பிரிந்திருக்கும் அவர்கள் எவ்வாறு உண்மையான சபையாயிருக்க முடியும்? என்னைப் பொருத்த மட்டில் தேவனுடைய சப்தமே நியாயாதிபதியாகும். ஆகவே, தேவனுடைய சப்தமானது மிக பரிபூரணமாயிருக்கிறது, பரிபூரணமான நிலைமையினின்று அது வர வேண்டியதாயிருக்கிறது. ஆனால் மனிதர் அதை தங்களுடைய ஸ்தாபன வித்தியாசங்களோடு பல வழிகளிலும் கொண்டு வருவார்களென்றால் அவர்கள் சொல்வதைக் கேட்டு, நம்முடைய விசுவாசத்தை நிச்சயமாக எதிலும் வைக்க முடியாது. 28அது தெளிவாயிருக்கிறது என நான் நம்புகிறேன். ஏனெனில் ஒருவர் இது தான் என்று கூறுகிறார்...... மற்றொருவர், நீ இந்த சபையை சேர்ந்துக் கொள் என்று கூறுகிறார். “இந்த சபை மட்டுமே இரட்சிக்கமுடியும்” என்று ஒருவர் கூறுகிறார் இது கத்தோலிக்கருடைய வாக்குமூலம். அவ்விதமே, லூத்தரன்களும், மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தெகொஸ்தேயினரும் தாங்களே வழி என்று கூறுகின்றனர். ஆக, ஒரு கூட்டமான குழப்பம் அங்கு உண்டாயிருக்கிறதென்று காண்கிறோம். இவ்வித நிலையில் எழுதப்பட்ட வார்த்தையை இச்சகோதரரிடத்திற்கு நீ கொண்டு செல்வாயானால், “அந்த நாட்கள் இப்போதைக்குரியதல்ல'' என்று அநேகர் கூறுவார்கள். வேறு சிலர், ”அது வெறும் சரித்திரமே“ என்றும், ”வேதப் புத்தகம் பாடல்கள் நிறைந்த புத்தகம்“ என்றும், ”அதை மாற்றியமைக்க சபைக்கு அதிகாரமுண்டு“ என்றும் கூறுவார்கள். அப்படியானால் நாம் எங்கே நிற்பது? விசுவாசம் இளைப்பாறத்தக்க இடம் தான் எது? 29நாம் ஏதாவதொன்றினால் நியாயந்தீர்க்கப்பட வேண்டுமானால், அவ்விதம் கட்டளை கொடுத்த நித்தியமான தேவனுடைய வார்த்தையினால் மட்டுமே ஆகும்; ஆக, அந்த தேவனுடைய வார்த்தையினால் நாம் நியாயந்தீர்க்கப்பட வேண்டுமானால், ஏழை மனிதனின் மனமானது மிகவும் வீணாக்கப்பட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், ஒருவன் ஒரு ஸ்தாபனத்தையும், மற்றவன் வேறு ஒரு ஸ்தாபனத்தையும் சேர்ந்த இந்த அளவுக்கு ஒரு குழப்பத்தை பூமியில் போட தேவன் அநீதியுள்ளவராயிருப்பார். அந்த ஏழை மனிதன், தான் சரியானதை செய்கிறான் என்று நினைக்க முயற்சித்து ஒரு ஸ்தாபனத்தின் சப்தத்திற்கு செவி கொடுப்பான்; பின்பு வேறொரு ஸ்தாபனத்திற்கு செவி கொடுத்து, அதைவிட இது சற்று நன்றாயிருக்கிறது, என்று யோசித்து சில காலம் அதில் தரித்திருந்து விட்டு பின்பு முதல் இடமே நன்றாயிருந்தது என்று நினைத்து அதற்கு செல்வான். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாயிருக்கிறான். ஆனால் தேவன், ஏதாகிலும் ஒன்றைக்கொண்டு இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறார் என்றால், அது அவருடைய வார்த்தையைக் கொண்டுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். 30சகோதரர்களே, நான் ஏன் இதை சொல்லுகிறேனென்றால் இங்கிருக்கும் இந்த சிறிய கூட்டத்தாருக்கு மட்டும் இதை கூறவில்லை. இந்த ஒலி நாடாக்கள் உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் உள்ள யாவருக்கும் இதை கூறுகிறேன். சற்று என்னை நீங்களெல்லாரும் பொறுத்துக் கொண்டு யோசனை செய்யுங்கள். ஏனெனில் ஏதோ ஒரு இடத்திற்கு நியாயத்தீர்ப்படைய நாம் வரவேண்டியதாயுள்ளது. சிலர் “ஜேம்ஸ் அரசனின் மொழிப் பெயர்ப்பே” (King James Version) சரியானதென்று கூறுகின்றனர். வேறு சிலர் வேறொரு மொழிப் பெயர்ப்பை சுட்டிக் காட்டுகிறார்கள், தற்பொழுது நிலையான மொழிப் பெயர்ப்பு (Standard Version) என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். 31தேவன் தம்மில் தாமே இயங்குபவராயும், (அவர் அவ்விதம்தான்) நித்தியமானவராயுமிருப்பின், அதை அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது அவரை சார்ந்தது. அவர் இருக்கும் இடமான பரலோகத்திற்கு நான் செல்ல வேண்டுமானால், நான் எங்கிருந்து கொண்டு எதை செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு கொடுக்க வேண்டும். ஏதாகிலும் ஒரு இடத்தில் உங்கள் கைகளை வைத்து “இது தான் சரியானது என்று கூற வேண்டுமல்லவா?” என்பார்கள். நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஏதாகிலும் ஒரு இடம் இருக்கத்தான் வேண்டும், அது அவரைச் சார்ந்தது, இல்லையென்றால் அவர் அநீதியுள்ளவராயிருப்பார். 32“கர்த்தாவே, நான் ஒரு லூத்தரனாயிருந்தேன்” என்று நான் கூறுவேனென்றால் மற்றொருவன் “நல்லது, நான் ஒரு கத்தோலிக்கனாயிருந்தேன்” என்று கூறுவான். அங்கு இந்த இருவரும் ஒருவருக்கொருவர் விரோதமாயிருக்கின்றனரே! - அப்படியாயின் ஏழை மனிதன் என்ன செய்யக் கூடும்? அல்லது, கத்தோலிக்க சபைதான் சரியானதென்றால் - லுாத்தரன்கள் எல்லாரும் இழந்து போனவர்களாய் காணப்படுவார்களே! லூத்தரன் சபைதான் சரியானதென்றால், கத்தோலிக்கர்கள் எல்லாரும் இழந்து போனவர்களாக காணப்படுவார்களே. பாருங்கள், விசுவாசமானது எங்கேயாவது ஒரு இடத்தில் தன்னுடைய இளைப்பாரும் ஸ்தலத்தை அடைய வேண்டும், நீங்கள் இதைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் வேதபுத்தகம் தான் ஒருக்காலும் தவறாத, அழியாத தேவனுடைய வார்த்தையாகும். தேவன் தம்முடைய வார்த்தையை கவனித்து அதில் ஒரு காரியமாகிலும் இடம் பிறழாமல் பார்த்துக்கொள்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். 33ஒரு சமயம் என் மகள் ரெபேக்கா என்னிடம், “அப்பா, இந்த உலகமானது பலகோடிக்கணக்கான வருடங்கள் பழமையானது என்று எங்கள் பள்ளிக்கூடத்தில் நிரூபித்து விட்டார்கள். அது வேதத்திற்கு முரண்பட்ட கருத்தல்லவா?” என்று கேட்டாள். அதற்கு நான் “அவ்விதம் இல்லையம்மா” என்று கூறினேன். மேலும் அவள் என்னிடம், “நல்லது அப்பா, கற்களும் அவைகள் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பல வித்தியாசப்பட்ட ஆராய்ச்சிகள் இவ்வுலகம் மிகப் பழமையானது என்று நிரூபித்திருக்க, 24 மணி நேரத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் என்ற தேவனின் வாக்கு மூலம் வேதத்தைப் பொய்யாக்குவது போன்றுள்ளதல்லவா?” என்று கேட்டாள். அதற்கு நான், “இல்லை,'' என்று கூறினேன். வேதத்தைக் குறித்து மோசேயிடம் தேவன் கூறியதை நீங்கள் கவனித்தீர்களென்றால், ”ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.“ இங்கு கால அளவு குறிப்பிடப்படுவதைக் கவனியுங்கள். அவ்வுலகத்தை சிருஷ்டிக்க எவ்வளவு காலமாயிற்று என்பது நமக்கு அடுத்ததல்ல. அவர் தமது காலத்தில் விதைகளை பூமியின் மேல் விதைக்க ஆரம்பித்து காரியங்களை செய்தார். ஆதியிலே என்ற பதம் ஒரு வேளை பல கோடிக்கணக்கான வருடங்களைக் குறிக்கலாம். ஆனால் தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பது ஒரு கால அளவைக் குறிக்கிறதாயிருக்கிறது! அதுவே பிரச்சனைக்கு ஒரு முடிவையுண்டாக்குகிறது. தேவன் செய்த முதல் காரியம் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்ததேயாகும். தேவன் தவறு செய்பவரல்ல. பாருங்கள்..... ”நீ சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு“ என்று பவுல் என்னும் மகத்தான பிரசங்கி தீமோத்தேயுவுக்கு கூறியது போல, திறந்த மனதுடன் அதைப் படிக்கவேண்டும். நானும் அவ்விதம் செய்ய முயற்சிக்கிறேன். 34தேவ வார்த்தையின் பேரில் அத்தகைய விசுவாசம் நான் கொள்வதினால், சில சுயத்தோற்றமான பொருளை நான் ஆதரிப்பதில்லை. ஏனெனில் வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுயத் தோற்றமான பொருளையுடையதாயிராது என்று வேதம் கூறுகிறது. ஆவியானவர் சற்று முன்புதான் அதை எனக்கு வெளிப்படுத்தினார். அந்த வசனம் எனக்கு தெரியும். ஆனால் அது எந்த பாகத்திலிருக்கிறது என்பதை நிச்சயமாய் அறியாதவனாயிருந்தேன். வசனத்தைக் குறித்துக் கொள்பவர்கள் அதை எழுதிக் கொள்ளுங்கள். பேதுரு என நான் நினைக்கிறேன். ஆகவே, ஒரு ஊக்குவிக்கப்பட்ட (Inspired) எழுத்தாளர் கூறினால்..... ஏதோ ஒன்றிற்கு அது தவறாயிருக்குமானால், அதன் வேறு பாகங்களும் எவ்வளவு தவறாயிருக்கும்? ஒன்று அது எல்லாம் தவறாயிருக்க வேண்டும், அல்லது எல்லாம் உண்மையாயிருக்க வேண்டும். அதினின்று வேறு எதையும் நீ ஏற்படுத்த முடியாது, நீங்கள் ஒரு சபைக்கு செல்வீர்களென்றால், அது சரியான சபையென்று கூறமுடியுமா? எது உண்மையான சபை? விசுவாசமானது ஏதாகிலும் ஒன்றில் இளைப்பாற வேண்டி நீங்கள் திரும்பவும் வர வேண்டியதாயிருக்கிறது, பாருங்கள். என்னைப் பொறுத்தமட்டில் அது தேவனுடைய வார்த்தையின் பேரில் உள்ளது. மேலும் வேத புத்தகமானது, ஜனங்களுக்காக எக்காலத்திலும் தேவனுடைய வரைப்படமாகத் திகழ்கிறது என்று விசுவாசிக்கிறேன். 35வேதவாக்கியங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று இயேசு கூறினார். அதாவது, வேதத்தில் எழுதப்பட்டுள்ள? (இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நான் போதகத்தின் கடைசியில் இந்தப் பொருளுக்கு திரும்பவும் வருவேன்). இப்பொழுது அது சற்று ஆழமாய் உங்களுக்குப் பதியட்டும். பாருங்கள்? வேதவசனங்கள் யாவும் நிறைவேறியே ஆகவேண்டும். தேவன் எதையாகிலும் கூறியிருப்பாராகில், அது நிச்சயமாக நிறைவேற வேண்டும்! அப்படியில்லையென்றால் அது தேவனுடைய வார்த்தையாயிருக்க முடியாது. அது அவ்விதம் தேவ வார்த்தையாயிராவிட்டால் நம்முடைய நிலைமை என்ன? தேவனைப் போன்று இருக்கும் ஏதாகிலும் ஒன்றை நாம் தெரிந்து கொள்வோம்,அல்லது நம் விருப்பப்படி காரியங்களை செய்வோம் “புசித்து குடித்து சந்தோஷமாயிருப்போம், ஏனெனில் ஒருவேளை நாம் நாளை மரித்துப் போவோம்” என்ற விதமாய் நாமும் இருப்போம், பாருங்கள்? 36அது தேவனுடைய வார்த்தையாயிராவிட்டால் நாம் அனைவருமே இழக்கப்பட்டவர்களாய் இருப்போம். தேவனுடைய வார்த்தையாயிருக்கும் பட்சத்தில், தேவன் அதின் மேன்மையை காக்க கடமைப்பட்டவராயிருக்கிறார்! எல்லா மேன்மைக்கும் கனத்திற்கும், ஊற்றும், ஆரம்பமும், மூலக்காரணமுமானவர், எல்லா சரித்திரத்திற்கும் காரணமானவர், தாம் கூறுகின்ற காரியத்தை நிச்சயமாக காக்கவேண்டும். அவ்விதம் அது தேவ வார்த்தையாயிராவிட்டால், பின் யார் தேவன்? அவர் எங்கே இருக்கிறார்? அல்லது தேவன் என்று ஒருவர் உண்டா? என்பன போன்ற கேள்வி தோன்றிவிடும். 37“ஓ, சகோ, பிரன்ஹாமே, நான் அதை உணர்கிறேன்” என்று நீ கூறலாம். ஓ, அஞ்ஞானி கூட தன்னுடைய விக்கிரக வணக்கத்தில் அவ்விதம் கூறுகிறான். பிரயாணமாய் சென்று உனக்கென்று நீ சில காரியங்களைப் பார்த்தால் பிரயோஜனமாயிருக்கும். “நான் இதைப் பார்ப்பதினால் விசுவாசிக்கிறேன்'' என்று கூறலாம். “ஆம்.” “நான் இவ்விதம் மாறியதினால் விசுவாசிக்கிறேன் என்று கூறலாம்.” நான் கூட அவ்விதம் செய்கிறேன். ஆனால் ஒரு காரியத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அஞ்ஞானிகள் கூட அதே காரியங்களை செய்கிறார்கள். தங்களைக் கிறிஸ்தவர்களென்று கூறிக்கொள்ளும் இங்குள்ள அமெரிக்கர்களை, ஆதிவாசிகளாகிய விக்கிரக வணக்கம் செய்யும் பல ஆப்பிரிக்க ஜனங்கள் தங்களுடைய நல் ஒழுக்கத்தினாலும், சுத்தத்தினாலும் வெட்கப்படுத்துவார்கள். அவர்கள் இவ்விதம் இருப்பதினால் அவர்கள் பின்பற்றும் தெய்வம் உண்மையாயிருக்குமோ? நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை கவனிக்கிறீர்களா? ஒரு காரியத்தை நீங்கள் அதன் வெளித்தோற்றத்தின்படி பார்க்கும் போது, அது இங்கே ஒரு மகத்தான பெரிய வட்டத்தினால் மூடப்பட வேண்டியதாயுள்ளது; ஆகவே நீங்கள் எங்காவது ஒரு இடத்திற்கு திரும்பி வந்து உங்கள் கைகளை அங்கு வைத்து, இதுதான் அது என்று நிச்சயப்படுத்த வேண்டும். 38லுத்தரன்கள் உரிமைக் கொண்டாடுவதை கவனிப்போம். அவர்கள் தவறுகிறார்கள், அவ்விதமே, கத்தோலிக்கர்கள், பாப்டிஸ்டுகள், பெந்தகோஸ்தேயினர் எல்லோரும் தவறுகிறார்கள். ஆகவே அவர்களில் யாரிலாகிலும் நீங்கள் நம்பிக்கை வைக்க முடியாது. ஆனால், தேவன் யாரையாகிலும் கொண்டு வேதத்தில் எழுதப்பட்ட ஒன்றையாகிலும் அது சத்தியம் தான் என்று நிரூபிக்காமலிருந்ததில்லை. பாருங்கள்? அது உண்மை. நான் அடிக்கடி உங்களிடம், “ஒரு வேளை என் விசுவாசம் ஏனோக்கு ஏறியபடி உயர ஏறாவிடினும், அவ்விதம் ஏறுபவர்களின் வழியில் நான் குறுக்கே நிற்க மாட்டேன்” என்று கூறுவதுண்டு. மகத்தான விசுவாசம்... நான் ஏன் வேதத்தை விசுவாசிக்கிறேன் என்பதின் காரணங்களுக்கு இப்பின்னணியினைக் கொண்டு அங்கிருந்தே என்னுடைய பிரசங்கத்தின் பொருளையும் எடுக்கிறேன். 39அடுத்து, வேதம் தன்னில் தானே முரண்பட்டதாயிருக்கிறது என்பதை நான் விசுவாசிக்கவில்லை, உலகம் முழுவதிலும் அவ்விதம் சொல்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு நான் சவால் விடுத்து அதை நிரூபிக்க அறை கூவல் விடுத்திருக்கிறேன். வேதம் தன்னிலே முரண்பட்டதல்ல; நீங்கள் தான் அதை முரண்பட்டதாக்குகிறீர்கள். தேவன் தம்மையே முரணாக்க முடியாது, அவ்விதம் செய்வாரென்றால் அவர் தேவனாயிருக்க முடியாது. இந்த வார்த்தைதான் தேவன். இந்த வார்த்தை முரண்பட்டது என்றால், நீங்கள் தேவனை முரண்பட்டவராக்குகின்றீர்கள். பின்பு உங்கள் தேவன் எங்கே? என்ற பிரச்சனை எழும் - அது சற்று குழப்பமாய் காணப்படுகிறதல்லவா? 40தேவன் முரண்பட்டவராயிருப்பின், அவர் உங்களையும் என்னையும் போல் ஒருவர் தான். ஏனெனில் அவர் தன்னிலே முரண்பட்டவராயிருக்கிறாரே! தேவனுடைய வார்த்தை அங்கே இருக்கிறது, ஆனால் அது ஞானிகள், கல்விமான்களின் கண்களுக்கு மறைந்திருக்கிறது. ஆகவேதான். மத்தேயு 28:19ல், “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்பதும் “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,” என்பதும் அப்போஸ்தலர் 2:38ல் ஒன்றிற்கொன்று முரண்பட்டதாயிருக்கின்றது என்று பலர் கூறுகின்றனர். அது அவ்விதம் முரண்பட்டதாயில்லை. 41நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை உபயோகித்து ஞானஸ்நானம் பெறவில்லையென்றால், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவில்லையென்று பொருள்! பிதா குமரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் மட்டும் ஞானஸ்நானம் பெற்றிருப்பீர்களென்றால் அது, நீங்கள் ஒரு நாமத்திற்குரிய பட்டப்பெயர்களால் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள் என்று பொருள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது சரியான வெளிப்பாடில்லையென்றால், வேதமானது தவறாயிருக்க வேண்டும். ஏனெனில் வேதத்தில் ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே பெற்றிருக்கின்றனர். இயேசு கிறிஸ்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளை கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு அப்போஸ்தலனும் அந்த காலம் முதல் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்துள்ளதால், வேதமானது தன்னிலே முழுவதும் முரண்பட்டது என்றனர். அது அவ்விதம் இல்லை. அவர் எதைக் குறிப்பாக சொன்னாரோ அதையே அவர்கள் செய்தார்கள். பட்டப்பெயர்களினால் அல்ல. ஆனால் அதற்குரிய நாமத்தினால் அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஆகவே, அதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. 42ஜனங்கள், வேதம் முரண்பாடாயிருக்கிறது என்று சொல்வதான இன்னும் எத்தனை காரியங்களை நான் உங்களுக்கு எடுத்து விளக்கட்டும்? அநேக காரியங்களை நான் இங்கு எழுதி வைத்திருக்கிறேன், யாராகிலும் அத்தகைய முரண்பாடுகளை எனக்கு காண்பிக்க சொல்லி ஏறத்தாழ 30 வருடங்களாக நான் அறை கூவிக்கொண்டிருக்கிறேன். அது அவ்விதமாக இல்லை ஐயா, அது எல்லாம் சத்தியமாயிருக்கிறது. சத்தியமே தவிர அது வேறொன்றுமில்லை. நம்முடைய விசுவாசம், தேவன் எதை கூறினாரோ அதன் பேரிலே இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அதை வியாக்கியானப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்; அது எவ்விதம் கூறுகிறதோ அவ்விதமே கூறுங்கள். உங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அதற்குக் கொடுக்கவேண்டாம், அதற்கு மிஞ்சினது ஒன்றுமில்லை என்று நான் விவாசிக்கிறேன். 43இவ்விதம் நான் கூறுவது உங்களைப் பாதிக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அது என்னைப் பாதிப்பதில்லை; நான் ஏன் அவ்விதம் விசுவாசிக்கிறேன், எதற்காக விசுவாசிக்கிறேன், நான் செய்த காரியங்களிலெல்லாம் எவ்விதம் நடந்து கொண்டேன் என்பதை உங்களுக்குக் கூறவும், இது என்னுடைய தெளிவான உணர்வாயிருப்பதினால் மட்டும் இக்காரியங்களை செய்தேன் என்று உலகிற்கு என்னை காண்பிக்கவே நான் முயற்சிக்கிறேன். இந்த வேதத்துடன் எந்த வார்த்தையாவது கூட்டப்பட்டாலோ அல்லது அதைச் செய்கின்ற குற்றத்திற்குள்ளாகிறவன் யாராயிருந்தாலும், அவன் பங்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்றே நான் விசுவாசிக்கிறேன். “ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனப் புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்” (வெளி. 22: 18 -19) இவ்விதம் செய்பவருக்கு இவ்வசனத்தில் குறிப்பிட்ட விதமாய் சம்பவிக்கும் என நான் விசுவாசிக்கின்றேன். எந்தப் பிரமாணத்தையும், கோட்பாட்டையும் நான் விசுவாசிப்பதில்லை. ஆனால், எளிமையான தேவனுடைய வார்த்தை மட்டுமே தேவனுடைய திட்டம் என்பதை விசுவாசிக்கிறேன். இதற்கு மாறானவைகள் பாவமாகும்; எந்த மனிதனும், எந்த கோட்பாடும், எந்த ஸ்தாபனமும், அல்லது எதுவாயிருந்தாலும் தேவ வார்த்தையோடு ஒன்றை கூட்டினாலும் அல்லது அதின் ஒரு நிறுத்தக் குறியீட்டை (Punctuation) எடுத்துப் போட்டாலும் அது விசாரிக்கப்படத்தக்கதும் நித்தியமாக இழக்கப்பட வேண்டியதாயுமிருக்கிறது. தேவன் ஒரு புத்தகத்தை எழுதி அதை ஒரு கூட்ட ஜனங்களின் கைகளில் கொடுத்து, அவர்களை குழப்பமடையச்செய்து, பின்பு அதே புத்தகத்தைக் கொண்டு இவ்வுலகத்தை நியாயந்தீர்க்கப் போவதற்கு, அவர் ஒன்றும் நேற்றைய கால தேவனில்லை. ஆனால் இந்த வேதத்தை எழுதிய தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அது மட்டுமன்று, தம்முடைய வார்த்தையில் ஜீவித்தும் வார்த்தையை நிரூபித்தும் காண்பிக்கிறார். (இவைகளை நீங்கள் படிக்கும்போது மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டுகிறேன்.) 44நான் ஆதியாகமத்தில் இதை தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷம் முடிய இது தேவனுடைய வார்த்தைதான் என்பதை இணைத்துக் காண்பித்தேன். ஒருவன் இவைகளோடே கூட்டினாலும், எடுத்துப் போட்டாலும், அவனுடைய பங்கு ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகிறது. நான் அதற்குரிய வசனத்தை சற்று பின்பு உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். பாருங்கள்? விசேஷம் முதல் அதிகாரம் காண்பிப்பது என்ன? வார்த்தை என்பது என்ன? அது நித்தியமாயிருக்கிறது. அது மீறப்படவோ, அல்லது கூட்டவோ, குறைக்கப்படவோ கூடாது பாருங்கள்? அது மீறப்படக்கூடாது. தேவன் அதைப் பார்த்துக்கொள்வார். அதனுடன் எந்த ஒன்றையும் கூட்டக் கூடாது. அது நித்தியமாயிருப்பதால் அதனின்று ஒன்றையும் எடுத்துப்போடக் கூடாது. பாருங்கள். இவ்விரண்டிற்கும் (ஆதியாகமம் - வெளிப்படுத்தின விசேஷம்) இடையில் கூறப்பட்டவைகள் ஒன்றோடும் கலக்காது என்ற அடிப்படையை உங்களுக்குக் காண்பித்து நான் பேச முயற்சிக்கிறேன். வெளிப்படுத்தின விசேஷம் கடைசி அதிகாரம். 45இங்குதான் காலையிலிருந்து மாலை 5 மணிவரையில் நடைபெறும் இக்கூட்டத்திலே, நாம் ஒரிவரிலொருவர் வித்தியாசப்படப் போகிறோம். பாருங்கள்? நாம் இங்குதான் ஒருவரிலொருவர் வித்தியாசப்படப் போகிறோம். இங்குள்ள எத்தனைபேர் இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு புத்தகமென்றும், இந்த தேவ வார்த்தையின்படியே தேவன் நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதையும் ஆமோதிக்கிறீர்கள்? அதனோடு ஒன்றையும் கூட்டவும், குறைக்கவும் கூடாது. அப்படியானால் இவ்விதம் ஏன் நடந்திருக்கின்றது? நாம் இப்பொழுது அதைக் காணப்போகிறோம். ஏன் இவ்விதம் முரட்டாட்டமான விதத்தில் காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன? நம்முடைய நாட்களிலும், ஒவ்வொரு காலங்களினூடேயும் நடைபெற்ற, நடைபெறுகின்ற காரியங்களை ஆதியாகமத்திற்கும் வெளிப்படுத்தின விசேஷத்திற்கும் இடையில் நாம் காணப்போகிறோம். 46நான் அதை ஒலிநாடாக்களில் மிகத் தெளிவாக்கட்டும். தேவனுடைய வார்த்தையை நான் ஏன் விசுவாசிக்கிறேன் என்றும், தேவன் அதைக் குறித்து என்ன கூறுகிறார் என்றும், எவ்விதம் அதனோடு ஒன்றையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்று கூறின பிறகு, நான் பேச நிர்ணயித்து வைத்திருக்கும் இந்த நீண்ட பொருளின் ஆழமான பாகத்திற்கு சென்று என்ன நடந்தது என்பதை விவரித்து காண்பிக்க விரும்புகிறேன்; அப்பொழுது நீங்கள், நான் விசுவாசிக்கின்றதையும், ஏன் அதை விசுவாசிக்கின்றேன் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். பாருங்கள்? 47தேவனுடைய வார்த்தை எதனோடும் கலக்கவோ அல்லது கலப்பினமாக்கவோ முடியாது. அது கலப்பினமாகாது. இன்றுள்ள உலகம் கலப்பினம் செய்வதில் சிறந்ததாய் விளங்கி, விலங்குகள், பயிர்கள், கோதுமை முதலானவைகளை கலப்பினமாக்கி, வீரிய உற்பத்தியை உண்டாக்குகிறது. ஆனால் அது நலமானதல்ல. அது ஜீவனில்லாமல் அழிந்து போகக் கூடியவையாயிருக்கிறது. தன்னில் தானே பிரதியுற்பத்தி செய்யக் கூடாதவையாயிருக்கிறது. அது மரித்ததாயிருக்கிறது. ஏனெனில் இன்று பூமியில் காணப்படும் யாவும் ஆரம்பத்தில் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டாக்கப்பட்டவையாகும். 48ஒரு கோவேறு கழுதையானது, கலப்பினத்தால் பிறந்தமையால் அது தன்னைத்தானே பிரதியுற்பத்தி செய்து கொள்ள முடியாது, தேவன் ஒரு குதிரையையும், கழுதையையும் உண்டாக்கினார். ஆனால் மனிதன் இவையிரண்டையும் சேர்த்து கலப்பினமாக்கி அதனின்று ஒரு கோவேறு கழுதையைப் பெற்றான். அது ஒரு கலப்பினம்; ஆகவே அது திரும்பவும் தன்னை உற்பத்தி செய்து கொள்ள முடியாது. (இன்னும் சிறிது நேரத்தில் நாம் சர்ப்பத்தின் வித்தை கவனிக்கப் போகிறோம்). அதனால் தன்னை உற்பத்தி செய்துகொள்ள முடியாது. 49“உரைக்கப்பட்ட வார்த்தையே மூல வித்து” என்பதே என்னுடைய பிரசங்கத்தின் மூலப்பொருள். அதை நான் நிரூபிக்க விரும்புகிறேன். இப்பொழுது நாம் மத்தேயு எழுதின சுவிசேஷம் 24ம் அதிகாரம் 35ம் வசனத்தை சற்று நேரம் ஆராய்வோம். (நமக்கு எவ்வளவு நேரமிருக்கிறது என்று பார்ப்போம்) இயேசு சொன்ன வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன். மத்தேயு 24 மற்றும் அந்த 35 ஆம் வசனம். 24 ஆம் அதிகாரம் 35ஆம் வசனம் வார்த்தையானது எவ்வளவு நித்தியமாயிருக்கிறது என்பதை காண்பிக்கிறார். (நாம் அதைக் குறித்து தான் பேசிக்கொண்டிருக்கிறோம்). இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (34ம் வசனம்) வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (35ம் வசனம்) 50இவ்வசனங்களுடன் நீங்கள் எதையாகிலும் கலக்கமுடியுமா? இப்பொழுது நான் வெளிப்படுத்தின விசேஷம் 22ம் அதிகாரம் 18, 19ம் வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். இது என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம். நாம் 18ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். “இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசின வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது (ஆதியாகமம் தொடங்கி அவர் பேசின வார்த்தைகள் என்பதை கவனிக்கவும்), யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிகிறதாவது; (அது குருக்களுக்கும், கத்தோலிக்க பிரதான குருவுக்கும் (pope), கண்காணிக்கும், மாநில சபை தலைவருக்கும் அல்லது வேறு எவருக்கும்) ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” உங்களுடைய கோட்பாடுகளைக் குறித்த காரியம் என்ன? நீங்கள் செவிகொடுத்துக் கொண்டிருக்கிற எல்லா ஸ்தாபனங்களின் வேத வசன சார்பற்ற பிரமாணங்களைக் குறித்தக் காரியம் என்ன? ...இவர்களில் ஒருவரும் மன்னிக்கப்பட முடியாது! ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், (அது அவ்விதம் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்; உங்களுக்குத் தெரியுமா?) ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். 51ஒரு பிரசங்கியாயிருந்தாலும், தன்னுடைய ஜீவிய காலமெல்லாம் சபையின் அங்கத்தினனாக இருந்தாலும், ஒரு கண்காணியோ அல்லது கத்தோலிக்க மதகுருவாயிருந்தாலும், யாரேனுமொருவன் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால் - ஒரே ஒருவார்த்தை! ஏவாள் ஒரு வார்த்தையை அவிசுவாசித்ததே இவ்வளவு உபத்திரவத்திற்கும் காரணமாயிற்று என்பதை நீங்கள் உணருகிறீர்களா? ஒரு உரைக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை ஏவாள் சந்தேகித்ததினால், ஒவ்வொரு வியாதிக்கும், உபத்திரவப்படும் குழந்தைக்கும், மருத்துவமனைகள் கட்டப்படுவதற்கும், அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கும், எல்லா மரணத்திற்கும் காரணமாயிற்று. அதுதான் காரியம். 52ஏவாள் எதைச் செய்ய முயற்சித்தாள்? அவள் தேவனுடைய வார்த்தையை ஏதோ ஒன்றினுடன் கலப்பினமாக்கி விட்டாள். தேவன் கூறின விதமாக நீங்கள் அதை எடுத்துக் கொள்ளவேண்டும்! அதை எதனோடும் கலக்கமுடியாது. இல்லை, ஐயா. ஒருசமயம் இயேசு, “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கிருந்தால்.......'' என்று கூறினார். இந்த கடுகு விதையை எதனோடும் கலப்பினமாக்க முடியாது என்று என்னிடம் கூறினார்கள். உங்களால் அதை கலப்பினமாக்க முடியாது. மற்ற எல்லா விதைகளையும் நீங்கள் கலப்பினமாக்கலாம். ஆனால் கடுகு விதையை மட்டும் கலப்பினமாக்க முடியாது. பாருங்கள், ஏனெனில் அது எதனோடும் கலக்காது. அந்த விதமான விசுவாசம் உங்களுக்கிருந்தால் நலமாயிருக்கும். இங்குதான் சுவிசேஷகர்கள் தவறுகிறார்கள். (இதைக் குறித்து பின்னால் பார்ப்போம்) ”ஓ, நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்“ என்கிறார்கள். அவர்கள் அந்த ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு விசுவாசித்து அதை கிரியை செய்யவும் வைப்பார்கள். ஆனால் அதை தொடர்ந்து உள்ள வார்த்தையைப் பற்றியென்ன? ”ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், கொலை பாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்“ என்று வேதம் கூறுகிறது. இங்கு பல ஜனங்களும் கலந்துள்ளார்கள், ஆனாலும் நான் சொல்ல வேண்டிய பல வெளியரங்கமான மூலக்காரியங்கள் என்னிடம் உண்டு. ஆகவே சகோதரிகள் அதை மிக நிச்சயமாக புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? 53தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையே ஆரம்பமானதாகும். அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதினால் நாம் அதை விசுவாசிக்கிறோம். தேவன் உண்டாக்கின (நிலைகொள்ளும்படி உரைக்கப்பட்ட) ஒவ்வொரு காரியமும் ஆரம்பம், அல்லது மூலமாகும். அவருடைய சில சிருஷ்டிப்பை நீங்கள் இரண்டாந்தரமாக கலப்பினமாக்க முடியும். ஆகவே ஏவாள் தேவனுடைய ஆரம்ப சிருஷ்டிப்பில் காணப்படாமல் ஆதாமின் ஒரு உபசிருஷ்டியாயிருந்ததால், அவள் தன்னுடைய சொந்த வித்தினால் அதை செய்ய முடிந்தது. தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்துவிட்டு, பின்பு தாம் உண்டாக்கின சிருஷ்டியிலிருந்து ஒரு பாகத்தை எடுத்து அதினின்று ஒரு துணையை ஆதாமிற்கு உண்டாக்கினார். நீங்கள் ஒரு கழுதையையும், குதிரையையும் கலப்பினமாக்க முடியும், ஆனால் அது நீடிக்க முடியாது! அது மரணம்! ஆனால் மூலவித்தோ ஜீவனுள்ளதாயிருக்கிறது. அது திரும்பவும் தன்னை உற்பத்தி செய்கிறது! நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன். மூலவித்து ஜீவனுள்ளதாயிருக்கிறது. இக்காரணத்தினால் தான் எந்த மத நம்பிக்கையும் ஸ்தாபனங்களும், கூட்டமைப்புகளும் மரிக்கின்றன என நான் நினைக்கின்றேன். அவை ஒவ்வொன்றும் மரித்தன என்று சரித்திரமானது நிரூபிக்கும். அவைகள் ஒருபோதும் திரும்ப எழுந்திருப்பதில்லை, அவைகளால் முடியாது. அவர்கள் கருவில்லாதவர்களாயிருப்பதினால் திரும்பவும் தங்களை உற்பத்தி செய்யமுடியாது. ஆகவேதான் ஏவாளின் பிள்ளைகள் மரிக்கின்றனர். 54நீங்கள் கற்றுக் கொள்ளத்தக்கதாக நான் நிதானமாக போதிக்க விரும்புகிறேன். இதற்கு பின்பு என்ன சம்பவிக்கும் என்பதை நான் அறியாதவனாயிருப்பதினால், இவைகள் ஜனங்களிடத்தில் செல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்றோ ஒருநாள், நான் அவருடைய வருகையைக் காணத் தரித்திராமல் இவ்வுலகை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இச்செய்தி தொடர்ந்து ஜீவிக்கும். அது உண்மை. வார்த்தையில் நிலைத்திருங்கள். 55தேவன் உரைத்த ஒவ்வொரு வார்த்தையும் மூலவித்தாகும் என்பதை நினைவு கூறுங்கள். தேவன் ஒவ்வொன்றையும் தமது வார்த்தையினால் நாட்டினார், நீங்கள் அவருடைய மூலவித்தில் நிலைத்திருக்கும் வரை, அது தன்னில் தானே பிரதியுற்பத்தி செய்யும். கலப்பினமாக்கினால் அது மரிக்கும்! எப்பொழுதாவது ஒரு பெண் கலப்பினமாக்கப்பட்டாளென்றால் அது ஏவாள்தான். நான் சிறிது நேரத்திற்குப் பின் அது ஏன் என்று உங்களுக்குக் காண்பித்து நிரூபிக்கும் முன்பாக உங்களில் சிலர் உங்கள் ஒலிநாடாக்களை நிறுத்தமாட்டீர்கள் என்றே நான் நம்புகிறேன். 56அவள் ஒரு மணவாட்டி, அவள் கலப்பினமாக்குகிறவளாயிருந்தாள். அவள் அதன் மூலமாக தேவனுடைய வார்த்தையோடு ஞானத்தைக் கலந்து மரணத்தை கொண்டு வந்தாள், என்று கவனியுங்கள். நீங்கள் அவ்விதம் செய்யக்கூடாது. உங்களுக்கு அதை விளக்கக்கூடிய ஞானம் இருந்தாலும், “தேவன் கூறினார்” ''அதுவே அதற்கு முடிவு'' என்று கூறுங்கள். உங்களால் விளக்க முடியவில்லை யென்றால் அதை அவ்விதமே விட்டுவிடுங்கள், தேவன் கூறினார். ஆகவே அது அவ்விதமாயுள்ளது என்று மட்டும் கூறுங்கள். 57இப்பொழுது கவனியுங்கள். அது எதனுடனும் கலக்காது. அது மீறப்படக் கூடாது. அது தேவனுடைய வார்த்தையாக மட்டும் இருப்பதால் அது எதனோடும் கலக்காது. அதை தாறுமாறாக்குகிறவனை தேவன் தண்டிப்பார். அது தேவனுடைய வார்த்தையே தேவன் தம்முடைய வார்த்தையோடு உன்னுடைய வார்த்தையை சேர்க்க அவசியமில்லை. நாம் நம்முடைய சொந்த வார்த்தையைப் பிரசங்கிக்கக்கூடாது, அவருடைய வார்த்தையையே பிரசங்கிக்க வேண்டும். 58உண்மையான ஜீவன், அதன் ஆரம்ப இனவிருத்தியினால் மட்டுமே தன்னை பிரதியுற்பத்தி செய்யமுடியும். பாருங்கள்... ஜீவன்... இப்பொழுது,.... இப்பொழுது அதைப் படியுங்கள்... நீங்கள் ஒலி நாடாக்களை ஆராய்ந்து பார்க்கையில், அதைப் படியுங்கள். ஜீவன் ஜீ-வ-ன் மூலத்தன்மையினாலேயே தன்னை விருத்தி செய்து கொள்ளும், ஆரம்பத்தில் அது எவ்வாறு தன்னை விருத்தி செய்ததோ அவ்விதமே தன்னை திரும்ப உற்பத்தி செய்கிறது பாருங்கள்? அது கலப்பினமானால் மரிக்கிறது. முதல் சந்ததியில் அது மரித்துவிடுகிறது. சிலர் அவ்விதம் மரித்தனர். அது சரியான ஜீவனைக் கொண்டு வரமுடியாது. ஏனெனில் அது கலப்பினமாயிருக்கிறது. 59வேதம் தேவன் ஆதியாகமம் 1:11-ல் “பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்” என்று கூறுகிறது. தேவன் அதை கூறினாரென்றால் அதுவே அதற்கு எப்பொழுதும் முடிவாயிருக்கிறது. “தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனி விருட்சங்களை முளைப்பிக்கக் கடவது.” கலப்பாக்கும் போது வீரியமுள்ள பயிர் உண்டாகிறது. வீரியப்பயிர் என்றால் என்ன?கவனியுங்கள். கலக்கும்போது அது வீரியமுள்ள பயிரைக் கொண்டு வருகிறதென்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது எத்தகைய பயிர்? அது மரணத்தை விளைவிக்கும் பொய்யான பயிர். உங்கள் தானியத்தைக் கலப்பினமாக்கிப் பாருங்கள். அது ஒரு மிகுதியான விளைச்சலைக் கொடுக்கும்; நல்ல விளைச்சலை, மிகச்சிறந்த விளைச்சலைக் கொடுக்கும்; ஆனால் அது மரித்ததாயிருக்கிறது. அதை விதைத்தால் அது தன்னைப் பிரதியுற்பத்தி செய்யமுடியாது. அது ஏவாளைப் போல மரித்துப்போன ஒன்று. பாருங்கள்? இன்று நம்மைப் பாருங்கள். அவள் ஒரு கலப்பின விளைச்சலைக் கொண்டிருந்தாள். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவைகளைப் பார்த்து அது உண்மையென்று கண்டு கொள்ள முடியும். நிச்சயமாக அவ்வாறே நிகழ்ந்தது. அது தேவனுடைய நோக்கம் அல்ல. இல்லை ஐயா. நான் சிந்தித்துக் கொண்டிருப்பதைக் குறித்து சிறிது..... 60மற்றவைகளுடன் கலப்பதின் மூலம் கலப்பினம் உருவாகிறது; பிரதியுற்பத்தியின் பிரமாணத்தின்படி கலப்பின விளைச்சலானது மரித்துப்போன ஒன்றாக உள்ளது. அது தன்னைத்தானே பிரதியுற்பத்தி செய்து கொள்ளமுடியாது; அது முடியாத ஒன்று. ஏனெனில் தேவன் அவ்வாறு கூறியிருக்கிறார். அது தன்னுடைய ஜாதியை உற்பத்தி செய்ய வேண்டியதாயிருந்தது; நீங்கள் அதை மற்றவற்றுடன் கலந்துவிட்டீர்கள். இப்பொழுதே சபையானது சரியாக எங்கே முடிவடையப் போகிறது என்று நீங்கள் காணமுடியும். அது தன்னுடைய ஜாதியைக் கொண்டுவர முடியாதபடியினால் அது அங்கேயே மரிக்கிறது. ஏனெனில் அது கலப்பினமாகிவிட்டது! அதனுடன் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது மரித்துவிட்டது; அது முடிவடைந்துவிட்டது. அது சரி. எனவே தான் ஒவ்வொரு சந்ததியும் தேவனுடைய வார்தையைப் பிரசங்கிப்பதற்கான தருணத்தையுடைய அதன் எழுப்புதலைப் பெற்றுக் கொள்கிறது. ஓ, சகல அதிகாரமுடைய தேவன் நியாந்தீர்க்க நிற்கிறார்...... ஜான் வெஸ்லியின் கூட்டத்தார் எழும்பிக் குற்றப்படுத்துவார்கள். இன்றைய மெத்தோடிஸ்ட்டுகள் அதற்கு பதிலளிக்க வேண்டும்! லூத்தர் எழும்பி நின்று கத்தோலிக்கர்களைக் குற்றஞ்சாட்டுவார். அவருக்குப் பதில் கூற கத்தோலிக்கர்கள் அங்கு நின்றாக வேண்டும். முற்காலத்திய ஐரேனியஸ், மார்ட்டின், பாலிகார்ப் ஆகியோர் எழும்பி நின்று தேவனுடைய வார்த்தையைக் கோட்பாடுகளாகக் கலப்பினமாக்கினவர்களைக் குற்றஞ்சாட்டுவார்கள். லூத்தரின் எழுப்புதல் மறைந்த பிறகு தோன்றிய லூத்தரன்கள் அவர்களின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கவேண்டும். ஜான் ஸ்மித்தின் எழுப்புதலுக்குப் பிறகு தோன்றிய பாப்டிஸ்ட்டுகள் தங்கள் மீதான ஜான் ஸ்மித்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தாக வேண்டும். அலெக்ஸாண்டர் காம்ப்பெல்லின் எழுப்புதலுக்குப் பின் தோன்றியவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தாகவேண்டும். பெந்தேகொஸ்தே ஜனங்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தாகவேண்டும். அந்த உண்மையான எழுப்புதல் தோன்றி, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தபோது தேவன் ஒரு கூட்டம் ஜனங்களை வெளியே கொணர்ந்து தம் வார்த்தையை அவர்களுக்குள் அனுப்ப முயற்சித்தார். அவர்களோ தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டு அங்கேயே மரித்துப் போனார்கள்! ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்! என்று கூறலாம். அதைக் குறித்து இன்று சிறிது நேரம் கழித்துப் பார்ப்போம். அவைகள் அனைத்தையும் குறித்து நாம் பார்ப்போம். அவைகளின் ஆரம்பத்தை நான் குறிப்பிட்டேன். என்ன சம்பவித்தது என்று சிறிது நேரத்திற்குப் பிறகு நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். 61இப்பொழுது..... எனவே தான் ஒவ்வொரு எழுப்புதலும்...... ஒவ்வொரு சந்ததியும் தன் காலத்தின் எழுப்புதலைப் பெற்றுக்கொண்டது. தேவன் ஒரு மனிதனை எழுப்பி தம்முடைய வார்த்தையுடன் நிலை நிற்கச்செய்து, அந்தக் காலத்தின் செய்தியுடன் அவனை அனுப்புகிறார். அந்த மனிதன் காட்சியிலிருந்து மறைந்தவுடனேயே வேறொருவன் அந்த ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு அவைகளைக் கலப்பினமாக்கிடவே அவர்கள் மீண்டும் மரணத்தில் விழுந்தனர். ஒவ்வொன்றும் கலப்பினமாக்கப்பட்டது. நான் இங்கு ஒரு நிமிடம் நிறுத்துகிறேன். நமக்கு அவசரமில்லை. பாருங்கள்? காலத்தை சற்றுத் திரும்பிப் பாருங்கள்; அது சரியாக ஆதியாகமத்தில் தொடங்கப்பட்ட விதமாகவே இருக்கிறது. தேவன் மனித இனமாகிய விளைச்சலைத் தோற்றுவித்தார். ஏவாள் அதைக் கலப்பினமாக்கிறாள். என்ன சம்பவித்ததென்று பாருங்கள்? அதனால் ஏவாளுக்கு நியாயத்தீர்ப்பு வந்தது. 62லூத்தர் தன் சபையைத் தோற்றுவித்தார். மற்றவர்களும் தங்கள் தங்கள் காலங்களில் தங்கள் சபைகளைத் தோற்றுவித்தனர் - கிறிஸ்து தம் சபையைத் தோற்றுவித்தார். அப்போஸ்தலர்கள் சபையைத் தோற்றுவித்தனர். தீர்க்கதரிசிகள் தோற்றுவித்தனர் - கலப்பு மார்க்கத்தார் அவர்களை எதிர்த்தனர். தேவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள் என்று இயேசுவானவர் கேட்கவில்லையா? ஒரு ராஜா திராட்சத் தோட்டத்தின் பலனைப் பெற்று வரும்படி முதலில் ஒரு ஊழியக்காரனையும், அதன்பின் மற்ற ஊழியக்காரர்களையும் ஒவ்வொருவராக அனுப்பி, அதன்பின் தன் குமாரனை அனுப்பியதை இயேசு கூறவில்லையா? பாருங்கள். ஒவ்வொரு சந்ததியும் தன் காலத்தின் எழுப்புதலைப் பெற்றும் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் செய்த கலப்பினத்தின் காரியங்களையே திரும்பவும் செய்தனர். அவர்களில் புத்தியுள்ள கன்னிகைளும், புத்தியில்லாத கன்னிகைகளும் இருந்தனர். அவர்களில் பாதிப்பேர் இழக்கப்பட்டார்கள். இருவரில் ஒருவர் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டனர்; மற்றவர் அதைக் கலப்பினம் செய்தனர். ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் எவ்வளவு கடினமாக முடியுமோ அவ்வளவாக அவர்கள் திரும்பிச் சென்று கலப்பினமாகினர். நாம் அதை தேவனுடைய வார்த்தையின் மூலமும் சரித்திரத்தின் மூலமும் நிரூபிப்போம். அது சரி. கலப்பினமாக்குதல். 63ஆதியாகமத்தில் ஏதேனில் முதன் முதல் கலப்பினமானது தொடங்கப்பட்டு, பின் அது இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிவடைகிறது. வெளிப்படுத்தின விசேஷம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாயிருக்கிறது. சரியாக நினைவு கூறுங்கள். ஆகவேதான் ஒவ்வொரு சந்ததியிலும் அதற்கென்று எழுப்புதலும், வார்த்தையில் ஒரு தருணமும் கொடுக்கப்பட்டது. வார்த்தையை எடுத்துக்கொண்டு தொடர்ந்து செல்வதற்கு பதிலாக அவர்கள் அதை கலப்பினமாக்கி எங்கோ சென்று விட்டார்கள். 64என்னுடைய ஊழியம், எதற்காக தேவன் என்னை அழைத்தார் என்பதைக் குறித்ததான தனிப்பட்ட காரியத்தை உங்களுக்கும் உலகத்திற்கும் கூறுவேன் என்று நான் உங்களுக்கு சொல்லியிருந்தேன். பாருங்கள்? இந்த பூமியின்மேல் எனது ஊழியம் என்ன? அது வார்த்தையாகிய அவருக்கு முன்னோடியாயிருப்பதே, வரப்போகிற வார்த்தை கிறிஸ்துவேயன்றி வேறல்ல. கிறிஸ்து அவரிலிருப்பதே ஆயிர வருட அரசாட்சி. மேலும் எல்லாம் அங்கு இருக்கிறது. ஏனெனில் அவரே அந்த வார்த்தை, பாருங்கள். 65சரி இயேசு, யோவான் 3:3-5ல் கூறியிருப்பதை இப்பொழுது படிப்போம். நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால் அது யோவான் 3:5. நாம் அனைவரும் அதை அறிந்துள்ளோம் அல்லது நான் அந்த பகுதிக்குத் திருப்புகிறேன்; ஏனெனில் ஒலிநாடாக்களைக் கேட்பவரில் சிலர் அதைத் திருப்பி படிக்க முடியாமலிருக்கலாம். நாம் யோவான் 3:5க்கு வேதத்தை திருப்பி, நாம் அதற்கு சற்று முன்னுள்ள வசனத்திலிருந்து துவங்குவோம். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்தரம் பிரவேசித்துப் பிறக்க கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 66இது ஒரு விதையா? ஒவ்வொரு உரைக்கப்பட்ட தேவ வார்த்தையும் ஒரு வித்தாயிருக்கிறது. அது உண்மை. இயேசு அதைக் குறித்து எங்கே கூறியுள்ளார் என்பதை நான் இன்னும் சிறிது நேரத்தில் அதை நிரூபிக்கப் போகிறேன். தேவனால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஒரு வித்தியாயிருக்கிறது. ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால்... ஏன் அவன் மறுபடியும் பிறக்க வேண்டும்? அவன் கலப்பினமாகி விட்டதால், தான் இருக்கிறதான சரீரத்திலேயே அவன் மரித்திருக்கிறான். அவன் மறுபடியும் பிறந்தாக வேண்டும். ஏன்? ஏவாளின் பாவத்தினால் அவன் பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாக்கப்பட்டு, இவ்வுலகத்திற்கு வந்து பொய்களை பேசுகிறான். அவன் ஆரம்பத்திலே பொய்யனாய் இருக்கிறான். அவன் எவ்வளவு தான் படித்தவனாயிருப்பினும், சாதுரியவானாயிருப்பினும், எவ்வளவு பரிசுத்தமானவர்களாய் அவன் பெற்றோர் இருப்பினும், அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான் என்று வேதம் கூறுகிறது. சத்தியம் என்ன என்பதை கூற வேண்டுமானால் அதை அவன் தன் சொந்த உதடுகளின் வழியாக மட்டுமே சொல்ல முடியும். அந்த ஒரு வழியாகத் தான் சத்தியம் வர முடியும். ஆனால் வார்த்தைக்கு முரணாக வருமானால் இன்னுமாக பொய்யனாயிருக்கிறான். அது மிகவும் வெளிப்படையாயிருக்குகிறது. ஏனெனில், தேவன் “எந்த மனிதனும் பொய்யன், தேவன் ஒருவரே சத்தியபரர்” என்று கூறியிருக்கிறார், பாருங்கள்? ஒரு மனிதனின் உதட்டின் வழியாக வருவது வேதத்திற்கு முரண்பட்டாதாயும், இந்த தேவ வார்த்தையை மறுதலிக்கிறதாயும் அல்லது வேறொரு காலத்திற்கோ, சந்ததிக்கோ அது சேர்ந்தது என்று கூறி அதற்கு சம்பந்தப்படுத்துவதாயுமிருந்தால் அவன் ஒரு பொய்யனாயிருக்கிறான். அது முற்றிலும் உண்மை. அவன் மனந்திரும்ப வேண்டியதாயுள்ளது, அப்பொழுதுதான் அவனால் எல்லா தேவவார்த்தைகளையும் புரிந்து கொள்ள முடியும். தேவனுடைய ஜீவனை அவன் திரும்பவும் உற்பத்தி செய்ய வேண்டுமாயின் அதற்கு ஒரே வழி, மனந்திரும்புதலேயாகும் - ஜீவன். 67ஒரு விதை முளைப்பதற்கு தண்ணீர் அவசியமானது. நீங்கள் ஒரு விதையை பூமியில் போடுவீர்களென்றால் நிலத்தில் ஈரப்பசையில்லாவிடில் அச்செடி வளராது. அச்செடி வளர்வதற்கு சிறிது சதவிகிதமாவது ஈரப்பசை தேவையாயிருக்கிறது. அல்லவென்றால் அது வளராது. அது சரிதானா? “எழுத்து கொல்லுகிறது. ஆவியோ உயிர்ப்பிக்கிறது” பாருங்கள். அது வளர்வதற்கு ஈரப்பசை தேவையாயிருக்கிறது. அவருடைய வார்த்தை விதையாயிருக்கிறது. இதை நிரூபிப்பதற்கென நாம் லூக்கா 8ம் அதிகாரம் 11ம் வசனத்தைப் படிப்போம். அவருடைய வசனம் விதை என்று சொல்லப்பட்டது உண்மையா அல்லது தவறா என்பதை பார்ப்போம், அதைக் குறித்து தேவன் என்ன கூறினார் என்று நாம் பார்ப்போம்: லூக்கா 8ம் அதிகாரம் 10ம் வசனம். இயேசு ஜனங்களுக்கு போதிக்கத் தொடங்கினார் என்று பார்க்கிறோம், இதைக் குறித்து அநேக காரியங்களை நான் கூறவேண்டியுள்ளது. நாம் 8ம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து படிப்போம். சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடின போது, அவர் உவமையாகச் சொன்னது: விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. 68ஈரப்பசை - பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள் தண்ணீரில்லாமல் காணப்பட்டார்கள். ஒரு மனிதன் குணப்படும் போது, அவன் நேரே கிறிஸ்துவை நோக்கி விசுவாசிக்கிறான். பின் நடப்பதென்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஸ்தாபனமானது அவனை ஒரு இடத்தில் கட்டிவைத்து விடுகிறது. பின்பு ஈரப்பசையான ஆவியானது அவனை விட்டு சென்றுவிடுகின்றது. அவன் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனாகி மரித்து விடுகிறான். பாப்டிஸ்டுகள் மட்டுமல்ல, பெந்தேகோஸ்தேயினரும் கூட அவ்விதம்தான்! உங்களில் அநேகர் அவ்விதம் இல்லை என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நீங்கள் சற்று காத்திருங்கள். வேதம் அதை நிலைப்படுத்துகிறதா, இல்லையா என்று நாம் பார்ப்போம். 69எல்லாம் சரி. ஈரப்பசை குறைவினாலே (தமிழ் வேதாகமத்தில்) 6ஆம் வசனத்தின் கடைசி வார்த்தை. “சிலவிதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது” (7ம் வசனம்) அது என்ன என்பதை கவனித்தீர்களா? “வசனத்தைக் கேட்டவுடன் போய் இப்பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்” (14ம் வசனம்) இல்லாத ஒன்றைக் குறித்து நான் இன்று குற்றம்சாட்டப் போவதில்லை... இந்த கிறிஸ்தவ வியாபாரிகளும், பெந்தகொஸ்தெயினரும் மற்ற ஸ்தாபனக்காரர்களும் பல கோடி பணம் செலவழித்து கட்டிடங்களைக் கட்டுகிறார்கள், உலகத்தின் ஐசுவரியம் அவர்களை நெருக்குவதினால் தேவனுடைய மகிமையையும், ஆவியையும் அது எடுத்துப் போடுகிறது. அது நெருக்கப்படுவதினால் மரித்துப் போகிறது. இந்த பிரபஞ்சத்தின் கவலை அவர்களை நெருக்கப்போடுகின்றது. 70பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும் குறைவான ஆடைகளை உடுத்திக் கொண்டும், உலகத்தாரான மற்றவரைப் போல் கிரியை செய்ய விருப்பங் கொள்கிறார்கள். பிரசங்கிமார்களும் பீடத்தில் நின்று கொண்டு தங்கள் வழக்கமான “ஆமென்” களை சொல்லிக் கொண்டு, ஆகாரம் கிடைக்காது என்ற காரணத்தினால் தேவ வார்த்தையை பிரசங்கிக்க பயப்படுகிறார்கள். அவர்கள் உயர்ந்தரக வாகனமான “கெடிலாக்” என்ற வாகனத்தில் சவாரி செய்யாமலிருந்தாலோ, உயர்ந்த ரக ஆடைகள் அணியாமலிருந்தாலோ, ஜனங்கள் அவர்களை ஆவிக்குரியவர்கள் என்று எண்ணுகிறதில்லை. அது சரி. “அவர்கள் பின்வாங்கி போனவர்கள்” அல்லது “அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள்'' என்றெல்லாம் கூறுகின்றனர். வயதான சகோ. கிட் இன்று காலை என்னிடம் கூறினார், அவருடைய சபையின் ஜனங்கள், அவர் வயது சென்றவராயிருப்பதினாலும், வார்த்தையை மட்டும் பிரசங்கிப்பதினாலும் இனி அவர் தங்கள் மத்தியில் தேவையில்லையென்று கூறினார்களாம். இதன் காரியம் என்ன? அவர்களுக்கு ஈரம் போதவில்லை. நான் கூறுவது சரி, “சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார், இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.” (8ம் வசனம்). ஓ! என்னே உவமை! நான் இந்தப் பொருளின் மேல்ஒரு பிரசங்கத்தையே செய்யலாம். அவர் இந்த காரியங்ளைக் கூறினபொழுது...8ம் அதிகாரம் 8ம் வசனம். “சத்தமிட்டு கூறினார்” (சத்தமிட்டார் என்பது ''நூறாக பலன்கொண்டுவா“ என்று கூறினதைப் போன்றிருக்கிறது, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். வேறு விதமாகக் கூறுவோமானால், உங்களுடைய காதுகள் தேவனோடு இசைந்திருந்தால், கேட்கக்கடவீர்கள் என்று பொருள்படும்) பாருங்கள்? “அப்பொழுது அவருடைய சீஷர்கள் இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது ......இரகசியங்கள் (ராஜ்யத்தின் இரகசியம் என்ன? இப்பொழுது, கவனியுங்கள் அவர் எதைக் குறித்து இங்கு கூறுகிறார்? சற்று கவனியுங்கள்) மற்றவர்களுக்கோ அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் (தேவனுடைய வார்த்தை நியாயந்தீர்க்க அவர்களிடம் வருகிறது, பாருங்கள். ஏனெனில் அது அங்கே இருப்பதினால் அதை அவர்கள் பார்க்கிறார்கள்). இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது, “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்” (9-11 வசனங்கள்) 71ஜீவனின் வித்து எது? - தேவனுடைய வார்த்தையே! ஆகவே, கோட்பாட்டின் மூலமாகவோ, ஒரு ஸ்தாபனத்தின் மூலமாகவோ நீங்கள் ஜீவனைப் பெற்று கொள்ள முடியாது, நீங்கள் வார்த்தையி னிடத்திற்குத் திரும்பி வரவேண்டும். இப்பொழுது - ஜீவனின் வித்து. சரி, அவருடைய வார்த்தையே அவரின் வித்து, அவருடைய ஆவிதான் தண்ணீர். இதை யோவான் 3:14ல் நாம் காண்கிறோம். நீங்கள் பாருங்கள்? பாருங்கள்? ஆவி... அதுதான் தண்ணீர். அதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவ்வசனத்தை சற்று படிப்போம். “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல, மனுஷ குமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்” என்றார். பாருங்கள்? மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தியிருப்பானென்றால் அதைப் போலவே கிறிஸ்துவும் உயர்த்தப்பட வேண்டும், அது என்ன? அழிந்து கொண்டிருக்கும் ஜனங்கள் ஜீவனுக்காக தண்ணீரைப் பெற்று கொள்ள மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினான். இங்கே இயேசுவைப் பாருங்கள் (ஓ தேவனே!) இயேசு தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். அதைக் குறித்து நாம் இப்பொழுது பேசி நிரூபிக்கப்போகிறோம். 72இயேசு தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். ஜீவன் வித்தினுள் இருக்கிறபடியால் அவர் வித்தை வெடித்து, ஆவியாகிய ஜீவனை (தண்ணீர் வழிந்து ஓடுவது போல) வித்தின் மேல் பொழிந்து வித்தின் ஜீவனைக் கொண்டு வருகிறார். அது வேறு எதையாகிலும் கொண்டுவந்தால், அதனுடைய இனம் வேறு என்று கூறலாம். ஆமென். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? தேவனுடைய ஆவி வித்திற்கு நீர் பாய்ச்ச வருமானால், அது அந்த வித்திற்கு நீர் பாய்ச்சுகிறதென்றால், அது அந்த வித்தினுடைய ஜீவனைப் பிறப்பிக்கும். விளக்கமாயிருக்கிறதா? தண்ணீர் பாய்ச்சப்படுவது எதற்கென்றால் வித்தினுடைய ஜீவன் உற்பத்தி செய்யப்படுவதற்கே. 73வேதம் வார்த்தையென்றும், அதில் எல்லாம் சத்தியம் என்றும், இயேசு தேவனுடைய வெளிப்பாடென்றும் நான் விசுவாசிக்கின்றேன்; அவரும் அவருடைய வார்த்தையும் ஒன்றே, அவர் யார்? அவரே அந்த வித்தாயிருக்கிறார் என்பதை கவனியுங்கள். ———————————————————————————————————————————————————————————————————————————————————————————————————(Now, I've got to hold something back in order to get it in here this evening, you see. It's hard.) ஏவாள் உற்பத்தி செய்திருக்க வேண்டிய வித்து அவரே, இதை அறிந்து கொண்டீர்களா? ஏவாள் உற்பத்தி செய்திருக்க வேண்டிய வித்து அவரே, ஆனால் அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசியாமற் போனதால் அதை கலப்பினமாக்கிவிட்டாள். அவரே வித்தாயிருக்கிறார், பிரதியுற்பத்தியின் மூலம் அந்த வித்து ஜீவனைக் கொண்டுவர வேண்டுமானால், அது மரித்து தன் ஜீவனைப் பரப்ப வேண்டும்! உங்களால் அதைக் காணமுடிகின்றதா? ஆகவே தான் வித்திற்கு நீர் பாய்ச்ச தண்ணீரானது கொடுக்கப்பட்டிருக்கிறது. 74ஏதேன் தோட்டத்தில் வித்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பரிசுத்த ஆவியானவர் அங்கு இருந்தார். மனிதன் மரிப்பதற்காக அல்ல, ஜீவிப்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் அவன் கலப்பினமானதினால் மரணத்தைக் கொண்டு வந்தான். ஏவாள் கலப்பினமாக்கினாள். இங்கு சர்ப்பத்தின் வித்தை நீங்கள் மறுதலித்தால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன். இன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறதான அடக்க ஆராதனைகளைப் பற்றி என்ன? ஆனால் அவள் கலப்பினமாக்கினாள். நாம் எல்லாரும் ஆரம்பத்திலிருந்தே கலப்பினமாயிருப்பதினால் தொடர்ந்து மரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜீவனானது உண்மையான வித்திலிருந்து வருகிறதாயிருக்கிறது. அந்த வித்து அவரே என்பதை நிரூபிப்பதற்காக அவர் உயிரோடு எழுந்தார்! பாருங்கள்? மூல வித்திலுள்ள ஜீவன் ஏவாளுக்கு கொடுக்கப்பட்டது போல திரும்பவும் அவருடைய உண்மையான சபைக்கு, அவருடைய மணவாட்டியின் கருப்பையின் மூலம் ஜீவனைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது. ஓ, இது ஆழமானதும் மகிமை நிறந்ததுமாயிருக்கிறது. அது உங்களில் இன்னும் ஆழமாகப் பதிய வேண்டுமென்று நான் அதிகநேரம் எடுத்து படித்தேன். அவரே அந்த வித்தாயிருக்கிறார். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு உருவாக்கப்பட்ட அவரே அந்த வித்து. இயேசு “உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று கூறினார், வித்து அங்கு தேவ வார்த்தையை சார்ந்து கொள்வதைப் பாருங்கள்? பாருங்கள்? 75இயேசுவே வார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறார். அவரும் வார்த்தையும் ஒருமைப்பட்டிருப்பதினால், தேவனுடைய வார்த்தையானது பரிபூரணமாக இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டது. அதனால்தான் தேவன் இயேசுவில் பரிபூரணமாய் வெளிப்பட்டார். ஏனெனில் அவரே வார்த்தை வித்தாயிருக்கிறார், (வித்தினுள் ஜீவன் இருக்கிறது) புரிகிறதா? இயேசு தேவனின் வார்த்தை வித்தாயிருந்தார். வித்து ஆவியாயும், தண்ணீராயுமிருக்கிறது, ஆகவே இயேசு வித்தை உடைத்து, அதனின்று ஜீவத் தண்ணீர் புறப்பட்டு, முளைக்கக் காத்திருக்கிறதான மற்ற வித்துக்களுக்கும் பாய்ச்ச வேண்டியதாயிருந்தது. இதை உங்களால் பார்க்க முடிகிறதா? மேலும் இயேசு, “இந்த தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. மற்ற ஆடுகளும் இதைப் பார்க்க வேண்டுமே, அவர்கள் வார்த்தையைப் பெற்று அதிலே நிலைத்திருப்பார்கள், நான் ஆவியை நீர்ப்பாய்ச்ச அனுப்புகிறேன், அவர்கள் சரியானபடி பிரதியுற்பத்தி செய்வார்கள்'' என்றார். மற்ற ஆடுகள் உறவின் முறையான வித்தின் வித்தாயிருப்பதினால், அது அற்புதங்களையும், தேவனுடைய வல்லமையையும் உற்பத்தி செய்து, தேவனுடைய வார்த்தை ஒன்றையும் மறுதலிக்காது. களையைப் பார்த்து, ”என்னோடு வந்து வாழ்க்கை நடத்து“ என்று கூறாது. இல்லை ஐயா, இல்லை. அதை ஒருபோதும் செய்யாது. அதற்கு அது தேவையில்லை, ஏனெனில் அது எதினோடும் கலக்காது. நீங்கள் ஜீவனோடு மரணத்தை கலக்க முடியாது, ஒரே சமயத்தில் நீங்கள் ஜீவனைப் பெற்றும், மரித்தும் இருக்க சாத்தியமில்லை. 76நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை காண்கிறீர்களா? அந்த வித்திலிருந்து வெளிப்பட வேண்டியவர் அவரே. இயேசுவே வார்த்தையின் பரிபூரண வெளிப்பாடாயிருக்கிறார். அதன் காரணத்தினால் தான் அவருக்குள் இருந்தது என்ன? முதல் ஆதாமின் மூலம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனே மனித வர்க்கத்தை தொடர்ந்திருக்க வேண்டும். ஏவாள் சர்ப்பத்தின் கலப்பினமாக்கி ஜீவனில்லாமல், மரணத்திற்கு பிறந்த தவறான பிள்ளைகளை இவ்வுலகிற்கு கொண்டு வந்தாள். ஆனால் இயேசு வந்து, அவரே அவ்வித்து என்பதை நிரூபித்தார். ஆதாம் இழந்த எல்லாவற்றையும் இயேசு மீட்டு கொண்டார். புரிந்து கொண்டீர்களா? ஏவாள் அக்குழந்தையைக் கடைசியிலே கொண்டு வந்திருப்பாள். ஆனால் அவள் அதைக் கலப்பினமாக்கி சர்ப்பத்தின் ஞானத்திற்கும் அறிவிற்கும் செவி கொடுத்ததினால் அந்த வித்தைக் கொண்டுவர தவறினாள். 77நாம் மணவாட்டியோடு இதை சேர்க்கும் வரை சற்று காத்திருங்கள். ஆகவே தான் நான் எதை விசுவாசிக்கிறேனோ அதில் சார்ந்திருக்கிறேன். அது இந்த தேவ வார்த்தைக்கு திரும்பி வர வேண்டியதாயுள்ளது. யாராகிலும் என்னிடம் விவாதிக்க விரும்பினால் இந்த தேவ வார்த்தையைக் குறித்தே விவாதியுங்கள், “வாருங்கள்”, என்று நான் அழைப்பு கொடுக்கிறேன். அது சரி அவ்விதம் எல்லா சமயங்களிலும் நான் அழைப்பு கொடுத்துள்ளேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பது சரியில்லையென்று நினைப்பீர்கள் என்றால், நீங்கள் வந்து என்னிடம் விவாதியுங்கள்: சர்ப்பத்தின் வித்து என்று ஒன்று இல்லையென்று நினைப்பீர்களென்றால், நீங்கள் வந்து என்னைப் பாருங்கள். நாம் வார்த்தையை எடுத்து விவாதிப்போம். பெண்களுக்கு நீட்டமான தலைமயிர் இருக்க வேண்டுமென்றும் அதுவே அவர்களுக்கு முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் விசுவாசியாவிட்டால், நீங்கள் என்னிடம் வந்த வார்த்தையையெடுத்து என்னிடம் அதைக் குறித்துப் பேசுங்கள். மேலும் எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று என்று நீங்கள் விசுவாசியாவிட்டால், நான் பேசிக் கொண்டிருக்கும் இவ்வெல்லா காரியங்களைக் குறித்தும் நீங்கள் என்னிடம் வாருங்கள்... பாருங்கள்? சகோதர வித்துக்களே வாருங்கள். வந்து விவாதியுங்கள். அது சரி. 78நீங்கள் வித்தாயிருந்து தேவ வார்த்தையோடு ஒவ்வாமலிருக்க முடியாது. ஏனெனில் வார்த்தையே வித்தாயிருக்கிறது. நீங்கள் வித்தாயிருக்கும் பட்சத்தில், எவ்வாறு அதினோடு ஒவ்வாமலிருக்க முடியும்? நீங்கள் உங்களை ஒவ்வாமலிருந்து உங்கள் நோக்கத்தை அழித்துக் கொள்வீர்கள். சிலர் என்னிடம், “நீங்கள் ஏன் அந்த ஜனங்ளோடு எப்பொழுதும் அவ்விதம் இருக்கிறீர்கள்?” என்று கூறுகிறார்கள். நான் அவ்விதம் செய்யாமலிருந்தால் என்ன நோக்கத்திற்காக நான் அனுப்பப்பட்டேனோ அந்த நோக்கத்தையே நான் அழிக்கிறவனாயிருப்பேன். ஒரு வெளிச்சமானது உண்டாக வேண்டியதாயிருக்கிறது. நாம் இன்னும் சற்று ஆழமாக போகும் போது, அநேகக் காரியங்களை குறித்து, அவை எவ்விதம் தேவனுடைய வார்த்தையோடு பரிபூரணமான ஒழுங்கில் அமைந்திருக்கின்றன என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன். 79இப்பொழுது, ஆம், ஐயா, அவர்... தேவன் இயேசுவின் மூலம் பரிபூரணமாக கிரியை செய்ய முடிந்தது. அவர் பூமியிலிருந்த போது என்ன கூறினார்? “மெய்யாகவே மெய்யாவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார், அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்றார். அவர் செய்த எந்த காரியமும், எப்பொழுதும் வேத வசனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது, “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே, என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நான் அந்த ஆரம்ப வித்தல்ல, செய்தேனேயானால் நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை? (அது உண்மை) நான் நிற்கும் வழியை நீங்கள் விசுவாசியாவிட்டாலும், நான் செய்கிற கிரியைகளையாகிலும் விசுவாசியுங்கள், ஏனெனில் என் வித்து என்னைத் தான் சுமந்து கொண்டு வரும்.” 80ஒரு களை எப்போதும் களையாகவேயிருக்கும். நீங்கள் அதை எதினோடும் கலப்பினமாக்கலாம், ஆனாலும் அது களையாகவேயிருக்கும். அது உண்மை. அது தன்னை கலப்பினமாக்க ஒப்புக் கொள்ளும். ஆகவே இரு மனமுள்ளது கலப்பினமும், மாய்மாலமுமாயிருக்கிறது. ஒரு மனிதன் தன்னை தேவனுடைய மனிதன் என்று கூறிக்கொண்டு தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பானானால், அவன் ஒரு மாய்மாலக்காரன். ஒரு கோவேறு கழுதை தன்னை குதிரையென்றோ கழுதையென்றோ கூறிக்கொள்ள முடியாது. ஏனெனில் அது இரண்டுமல்ல, மாறாக அது வேசிக்குப் பிறந்த ஒரு கலப்பினமாயிருக்கிறது. அது மிகவும் அப்பட்டமான வார்த்தை தான். ஆனால் அது அவ்விதம்தான். அவ்விதமாயிருப்பதென்பது அதன் குறிக்கோள் அல்ல. மனிதன் தன் ஞானத்தினால் அவ்விதம் அதை உண்டாக்கிவிட்டான். வேசித்தனத்தினால் பிறக்கும் அளவிற்கு அங்குதான் மனிதர் எல்லோருடைய ஞானமும் முடிவடைகிறது. 81தேவன் இயேசுவில் பரிபூரணமாக வெளிப்பட்டார். ஏனென்றால் அவரே வார்த்தையாயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார். எனவே தான் அவர் சரியாக தேவனைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறே தேவன் உன்னில் இருப்பாரென்றால் நீ யாராய் இருப்பாய்? தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்ததைக் குறித்து இயேசு கூறவில்லையா....... யாருக்கு தேவனுடைய வார்த்தை வந்தது?-தீர்க்கதரிசிகளுக்கு. “தேவ வசனத்தைப் பெற்று, கொண்டவர்களைத் தேவர்கள்'' என்று இயேசு கூறவில்லையா? தேவன் அவர்களில் வெளிப்பட்டார். அது என்ன? அது உரைக்கப்பட்ட வார்த்தை வெளிப்பட்டதேயாகும். பாருங்கள்? அதுவேதான். ”உங்களுக்கு ஞானமிருந்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்“ என்றார். ”தேவவசனத்தைப் பெற்று கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? தீர்க்கதரிகளை விசுவாசிக்கிறோம் என்று சொல்லியும் தேவகுமாரனாகிய என்னை எப்படி உங்களால் மறுதலிக்க முடியும்?“ அவர்களால் அன்று ஏன் அதை பார்க்க முடியவில்லை? 82இன்றைக்கும் அதே நிலைமைதான், “வருகிறதாக சொல்லப்பட்ட வித்து நான் தான் (ஸ்திரீயின் வித்து”). “உனக்கு ஒரு வித்தை தருவேன்” என்று தேவன் ஸ்திரீயினிடம் கூறினார். சர்ப்பம் ஏற்கனவே அவளைக் கெடுத்து விட்டிருந்தான். “நான் உனக்கு கொடுக்கும் வித்தானவர் அவன் தலையை நசுக்குவார்'' என்றார். அதே காரியத்தை அவர் திரும்பவும் கொண்டு வருவார்! ஆமென்! நீங்கள் எல்லோரும் அதை காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”தவறாய் செய்து விட்டவைகளை திருத்தவும், ஏவாள் ஜெயங் கொள்ளவுமே நான் வந்தேன்.'' அந்த காரியத்தை நான் செய்யத்தக்கதான ஒரே வழி, வித்தை விசுவாசித்த ஒரு ஸ்திரீயின் மூலம் பிறப்பதேயாகும். ஆனால் ஒரு ஸ்திரீ ஏற்கனவே அந்த வித்தை விசுவாசியாமல் போனாள். ஒரு ஸ்திரீ விசுவாசித்தாள், மற்றவளோ அதை விசுவாசிக்கவில்லை. “நான் ஜெயங்கொள்ளுகிறவர். அவள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யவே என் மரணத்தின் மூலம், ஜீவனைக்கொடுக்கவும், நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக ஆவதற்காக அந்த ஜீவனை உங்கள் மேல் வழிந்தோட செய்வதற்கும் நான் வந்தேன்.” (பாருங்கள்) வித்தானது அங்கு இருக்கும் பட்சத்தில் இவை சம்பவிக்கும். நீங்கள் அதை கலப்பாக்கினால் வார்த்தையை மறுதலித்தால் ஸ்தாபனமாகிய வேசியின் பிள்ளையைத் தவிர வேறொன்றையும் நீங்கள் பெறமுடியாது. மன்னிக்கவும் சகோதரிகளே, அது இருக்கிற விதமாகவே நான் சொல்ல வேண்டியதாயுள்ளது. பாருங்கள்? அது அவ்விதத்தில் இருக்கின்றது. 83யோவான் 3ம் அதிகாரத்தில் கூறப்பட்ட வண்ணம் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கும் பொழுது, அது நம்மை திரும்பவும் உரைக்கப்பட்ட வித்திற்கு கொண்டு வருகிறது. ஆம். ஐயா. எல்லா தேவனுடைய குமாரர்களும் அவ்விதம்தான் வரவேண்டும். ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கும் அனுபவம் உங்களை, நீங்கள் ஆரம்பத்தில் எந்த இடத்தில் இருந்திருக்க வேண்டுமோ அந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது. பாருங்கள்? ஆகவே தான் கிறிஸ்துவின் மரணம் நம்மை தேவனுடைய குமாரர்கள் என்ற ஸ்தானத்திற்கு கொண்டு வருகிறது. ஏவாள் அக்குழந்தையை உற்பத்தி செய்திருப்பாளென்றால்... அதை அவள் செய்திருக்கக் கூடும். “பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள்'' என்று தேவன் அவர்களோடு சொல்லியிருக்கவில்லையா? ஆனால் அவளோ அங்கு நடந்து சென்று ஒரு விபச்சாரியின் பாகத்தை ஏற்று நடித்து விட்டாள். 84“சகோ. பிரன்ஹாமே, அது விபரீதமாயிருக்கிறது” என்று நீங்கள் சொல்லலாம். “அப்படி நடந்திருக்க முடியாது” என்றும் நீங்கள் சொல்லலாம். சற்று பொறுங்கள், தேவனுடைய வார்த்தை அதைக் குறித்து சொல்வது சரியா தவறா என்று பார்ப்போம். பாருங்கள், பாருங்கள்? இவைகள் மறைந்திருக்கவில்லை ஐயா, அப்படி மறைந்திருக்குமானால், அது இழந்து போனவர்களுக்குத்தான். அது தான் உண்மை. பாருங்கள்? 85உரைக்கப்பட்ட வார்தைக்கு நம்மைத் திரும்பவும் கொண்டு வரும்போது தான் நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறோம். பாருங்கள்? இயேசுவும் இதைக் குறித்து தான், “என்னை விசுவாசிக்கிறவன் நான் (நான் யாரென்றும், எதற்காக வந்தேன் என்றும் - தேவனுடைய வார்த்தைக்கு மட்டும் மனிதனை திருப்ப வந்தேனென்றும்) செய்கிற அதே கிரியைகளை தானும் செய்வான்” என்று கூறினார். 86ஏன் அக்கிரியைகள் இன்று செய்யப்படுகிறதில்லை? அது கலப்பினமாய் பிறந்த தவறான குழந்தைகள் - கோவேறு கழுதைகள். கோவேறு கழுதைக்கு, தான் விசுவாசிக்கிறது இன்னதென்று தெரியாது. ஒரு கோவேறு கழுதைக்கு தன் தாயும் தகப்பனும் யாரென்று தெரியாது. அதற்கு வம்ச விருத்தி கிடையாது. அது முறை தவறி வந்த ஒன்று. ஆகவேதான், ஒருவன் தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறியும் அவருடைய வார்த்தைகளை விசுவாசிக்கவில்லையென்றால், ஒரு ஸ்தாபனக் கோட்பாடோடு தேவனுடைய வார்த்தை கர்ப்பங் கொள்ளச் செய்கிறவனாயிருப்பான். அவ்விதம் நீங்கள் இருப்பீர்களென்றால், நீங்கள் தேவனுடையவர்களாயிராமல் மரித்தவர்களாயிருப்பீர்கள். நீங்கள் ஒரே நேரத்தில் மரித்தவர்களாகவும் ஜீவனுள்ளவர்களாகவும் இருக்கமுடியாது. ஆகவே தேவனுடைய வார்த்தை அங்கு வளர முடியாது. மாறாக நீங்கள் அப்பாகத்தை மாய்மாலமாக நடிப்பீர்கள். இச்செய்தி கண்காணிகளுக்கும், குருக்களுக்கும், அத்தியட்சகர்களுக்கும் அல்லது யாருக்காகிலும் செல்லட்டும். அது உண்மை. அது வார்த்தையாயிருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மரணத்திற்குரியதவறான பிள்ளைகளாயிருப்பீர்கள், ஒருவேளை நீங்கள், ஒரே நிலப்பரப்பில் வளர்கிறவர்களாயிருந்தாலும் ஒரே மந்தையைச் சேர்ந்தவர்களாயிருக்கமாட்டீர்கள். தேவனுடைய பாகம்..... அங்கே அது வளர முடியாது. 87சரி, சரி... இப்பொழுது அதை கவனிக்கிறோம். பாருங்கள், உரைக்கப்பட்ட வார்த்தை.... நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறோம். தேவனுடைய சபையானது உரைக்கப்பட்ட வார்த்தைக்கு வந்து தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஒரு மனிதனில் அவருடைய சொந்த வித்து இல்லாதிருக்கும் பட்சத்தில், பின் எப்படி அவர் தம்மை அவனில் வெளிப்படுத்தமுடியும்? “என்னுடைய போதகர் இந்த கோட்பாடுகளை போதிக்கிறாரென்றும், அற்புத அடையாளங்கள் இக்காலத்திற்குரியதல்லவென்றும்,” கூறி உங்கள் சொந்த விசுவாசத்தில் நீங்கள் இருந்து கொண்டு, பின்பு எவ்விதம் உங்களை தேவனுடைய புத்திரர்களாக வெளிப்படுத்தமுடியும்? நீங்கள் எவ்விதமாக அதைச் செய்ய முடியும்? காரியம் அவ்விதம் இருப்பின், இயேசுவின் மரணத்தினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை “ஓ, நான் அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறேன்!'' என்கிறாய். நிச்சயமாக நீ ஏற்றுக் கொள்ளவில்லை! அவ்விதம் சொல்லுகிறாயேயன்றி அவ்விதம் செய்யவில்லை. ஏனெனில் உன் கிரியைகள் நீ யாரென்று உன்னை நிரூபிக்கிறது. இயேசுவும் அதே காரியத்தைத்தான் கூறினார். ”நான் முறை தவறி பிறந்தவன் என்ற நீங்கள் நினைத்தால்...“ பரிசேயர், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், ஒருவனும் எங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை” என்றார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால், என்னை அறிந்திருப்பீர்கள், என்னிடத்தில் பாவம் (அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? தேவன் என்னைக் குறித்து செய்த வாக்குத்தத்தங்களில் எது ஒன்று நிறைவேறாமல் போயிற்று என்று எனக்கு காண்பியுங்கள். தேவன் வாக்கு செய்ததில் நான் எது ஒன்றை நிறைவேற்றவில்லை என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். பாவம் என்பது அவிசுவாசமாயிருக்கிறது. நீங்கள் என் கிரியைகளை உற்பத்தி செய்யுங்களேன் பார்க்கலாம்'' என்றார். அது அவர்களை மிகவும் கேவலப்படுத்தி விட்டது. பாருங்கள்? நிச்சயமாக. இயேசு ”என்னை குற்றப்படுத்தக்கூடியவர் யார்? என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் விசுவாசிக்காவிடில், பிதாவானவர் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொரு வார்த்தையையும் ஏன் என் மூலமாக செய்து கொண்டிருக்கிறார்? நீங்கள் உங்களுடையதை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்கள் என்று நான் காணட்டும்,“ என்றார். 88யார் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள்? ——ஸ்தாபனத்தார்கள் தாம்! தங்களைத் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக்கொள்கிறார்கள்; ஆனால் சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்களாயிருக்கிறார்கள். இயேசு, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். எத்தகைய கிரியைகளை பிசாசு செய்வான்? ஏவாளின் மூலம் தேவனுடைய வார்த்தையை கலப்பினமாக்கினது போன்ற கிரியைகளைத்தான் அவன் செய்ய முயற்சிப்பான். அதையேதான் இன்றுள்ள ஸ்தாபனங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அவர்கள் பிதாவாகிய பிசாசின் கிரியைகளை அவர்களும் செய்கிறார்கள். ஒரு கோட்பாட்டை எடுத்து அதை தேவனுடைய வார்த்தையோடு கலப்பினமாக்க முயற்சிக்கிறார்கள்! இதைத் தான் அவர்கள் தகப்பனாகிய பிசாசானவன் ஆதியிலே செய்தான். சகோதரர்களே, அதினின்று வெளியே வாருங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்! இயேசு அவ்விதம் கூறினார். தேவனுடைய சிறு அம்சமாவது உங்களிடம் இருக்குமானால் நீங்கள் அதை கவனித்து விடுவீர்கள். கலப்பினம். ஓ, என்னே! 89தேவனுடைய மூல வித்தாகிய இயேசு , தமது மரணத்தின் மூலமாக உங்களை மூலவித்தினிடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த தேவனுடைய வித்து உங்களுக்குள் இருக்குமானால், அவருக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி, வித்திற்கு தண்ணீர் பாய்ச்சி, அவர் செய்த அதே கிரியைகளை உங்களிலும் வெளிப்படுத்துவார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. யோவான் 14ம் அதிகாரம் 12ம் வசனத்தைப் பார்ப்போம். நீங்கள், “சகோ, பிரன்ஹாமே, நான் நிச்சயமாக ஒரு விசுவாசி” என்று கூறலாம். அது சரிதான். தேவனுடைய வார்த்தையாகிய இயேசு அவ்விதம் உங்களை அழைக்கிறாரா என்று பார்ப்போம். “மெய்யாகவே, மெய்யாகவே, (முற்றிலுமாக, முற்றிலுமாக) நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்று இயேசு கூறினார். 90அது என்ன? அதே வித்து. இங்கே கொஞ்சம் கோதுமையை விதைத்துவிட்டு, “நான் இங்கே வெள்ளரிப் பழங்களையும் அங்கே கோதுமையையும் பெறப்போகிறேன்.” என்று கூறுவீர்களா? நீங்கள் அவ்விதம் செய்யமுடியாது. வெள்ளரிப்பழங்களை பெறுவதற்கு ஒரே ஒரு வழி, வெள்ளரி விதைகளை விதைப்பதேயாகும். ஆனால் அதை கலப்பின மாக்குவீர்களானால், அது வெள்ளரிப்பழமாயிருக்க முடியாது. அது ஒரு மாய்மாலமாயிருக்கும். அது சரிதானா? நண்பர்களே, அது கோதுமையும் அல்ல, வெள்ளரிப்பழமும் அல்ல. அது ஒரு கலப்பினம் - மாய்மாலம், கெட்ட உற்பத்தி, தன்னில் தானே அது மரித்ததாயிருக்கிறது, தன்னை பிரதியுற்பத்தி செய்ய முடியாததாயிருக்கிறது. அதுதான் அதின் முடிவு நண்பர்களே. உங்களுக்கு வெள்ளரிப்பழம் வேண்டுமாயில் வெள்ளரியில் ஆரம்பியுங்கள். ஒரு சபையை நீங்கள் விரும்புவீர்களானால், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அதை ஆரம்பியுங்கள். தேவனுடைய ஜீவனை நீங்கள் விரும்புவீர்களானால், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஆரம்பியுங்கள். தேவனுடைய வார்த்தையை அதின் பரிபூரணத்திலும், அதில் ஒவ்வொரு அணுவையும் ஏற்று கொள்ளுங்கள். அத்தகைய தேவனின் பரிபூரணம் உங்களில் இருக்குமானால், அதின் மேல் பொழியும் மழையானது உங்கள் தோட்டத்தில் உள்ளது எதுவோ அதை சரியாக உற்பத்தி செய்யும். பின்பு, பின்மாரி அதின் மேல் பொழிவதெங்கே? சிறிது காலம் சென்ற பின் அது எங்கே போகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பேய்க் கொம்மட்டிக் காய்களை மடி நிறைய அறுத்து கூழ்பானையில் போட்ட அந்த தீர்க்கதரிசிகளின் புத்திரரின் ஸ்தாபனத்திற்கு எலிசா சென்றது போன்றது. அவர்கள் போய்க் கொம்மட்டிக் காய்களைச் சேகரித்து அவைகளைப் பட்டாணி என்று நினைத்துக் கொண்டார்கள். ஓ, நல்லது. 91அது தேவனுடைய வார்த்தை விதையாயிருப்பதினால் அவரில் அதே கிரியைகளை வெளிப்படுத்தும். தேவகுமாரனாகிய அவர், தேவனுடைய மாதிரி வித்தாயிருந்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற ஞானஸ்நானம் இயேசுவின் மேல் வந்த பொழுது, அவருடைய ஜீவன் எத்தகையதாயிருந்தது? அவர் உற்பத்தி செய்த அந்த ஜீவன் (பரிசுத்த ஆவியின் அதே நீர் பாய்ச்சுதல்) தேவன் செய்த அதே கிரியைகளை திரும்பவும் செய்தது, தேவகுமாரனாகிய வித்து தேவகுமாரன் என்ற வித்தைப் பிறப்பிக்கும். தலைமயிர் கத்தரிக்கப்பட்ட பெண்களே, உங்களுக்கு அவமானம். சத்தியத்தை மறுதலிக்கும் பிரசங்கிகளே, உங்களுக்கு அவமானம். “தலை மயிரைப்பற்றி ஒன்றுமில்லை, அப்படி செய்தால் பரவாயில்லை” என்று கூறுகிறார்கள். ஆனால் தேவன் அது தவறு என்று கூறுகிறார். 92அது எவ்விதமாயுள்ளது என்று பாருங்கள்? ஆகவே தான் நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். அது ஒரு விதையாயிருக்கிறது. மழையானது அவ்விதையின் மேல் பொழியுமானால், அது தன்னுடைய இனத்தைப் பிறப்பிக்கிறதாயிருக்கிறது. அப்படியானால் இந்த அநேக அற்புதங்களைக் குறித்தென்ன?இதைக் குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்? நாற்பத்து நான்கோடு பலகோடிகளை சேர்ப்பதைப் போன்றுள்ளது; பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தகோஸ்தேயினர், இன்னும் பலவாக ஒன்றின் மேல் ஒன்றாக ஸ்தாபனங்கள் அடுக்கிக் கொண்டே போகிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் கிரியைகளின் வெளிப்படுத்தல் எங்கே? “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” (யோ: 5:19) என்று இயேசு கூறினார். அத்தகைய வித்து எங்கிருந்து வருகிறது? பரிசுத்த ஆவியானவர் நீர்பாய்ச்சி அவ்வித்தைக் கொண்டு வருவார். அது விதைக்கு நீராயிருக்கின்றது. ஒரு விதை விதைக்கப்படுமானால் அதை விளையச் செய்வதற்கே நீரானது பாய்ச்சப்படுகிறது. தண்ணீரானது உங்கள் மேல் பொழியுமானால், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிரசங்கியாரே, நான் இன்னாரைச் சேர்ந்தவன், அத்தகைய காரியத்தை நான் விசுவாசிக்கிறதில்லை” என்று கூறுவீர்களானால், நீங்கள் பழைய மாய் மாலத்தை ஆரம்பமாய் கொண்ட ஸ்தாபனத்தாராயிருக்கிறீர்கள், அந்த வித்து தான் உங்களில் பயிரிடப்பட்டிருக்கிறது என்று பொருள். 93என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தேனே நான் உங்களை நேசிக்கிறேன். இந்த பொருளை நீங்கள் அறிந்து கொள்ள நான் முயற்சிக்கிறேன். பாருங்கள். இப்பிரசங்கம் இவ்விதமே தொடரட்டும், ஆனால், ஒரு நேரத்தில் எது சரியென்றும், நான் விசுவாசிக்கிறதை ஏன் விசுவாசிக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிய விரும்புகிறேன். உண்மையாக சொல்லப்போனால், பிசாசு உங்களை வஞ்சித்துவிட்டான். அவன் அவ்விதம் செய்திருக்கிறான் என்பதை நான் அறிவேன். கர்த்தருடைய வார்த்தையின்படி அது தவறாயிருக்கிறது. அவன் உங்களை வஞ்சித்துவிட்டான். ஆம், ஐயா. தேவனுடைய வார்த்தை அவ்விதம் கூறுவதால் தான் நான் அவ்விதம் பிரசங்கிக்கிறேன். “ஓ, சகோ. பிரன்ஹாமே, இது ஒரு வித்தியாசமான காலம்,” என்று நீங்கள் கூறலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை இன்றும் அதேபோல் இருக்கிறதே. சில வருடங்களுக்கு முன்னால், யோசேப்பின் காலத்திய கோதுமை மணிகளை கண்டுபிடித்து அதை பயிரிட்டார்களாம். அது (அந்த செய்தியை பத்திரிகையில் நீங்கள் பார்க்கவில்லையா?) அநேக காலமாகியும் அவை கோதுமைச் செடியைப் பிறப்பித்ததாம். அது இன்னும் கோதுமையாயிருப்பதே அதன் காரணம். அதற்கு தேவை சற்று நீர் பாய்ச்ச வேண்டியதுதான். 94பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவன் உரைத்த வண்ணமே இன்றும் அவர் வார்த்தை மாறாததாயிருக்கிறது. அதற்கு தேவையானதெல்லாம் தண்ணீர் மட்டுமே! நாம் ஏன் பயிர் முளையப் பெறுகிறதில்லை? ஏனெனில் நாம் தவறான இனவித்தை கொண்டவர்களாயிருக்கிறோம். “எத்தனை பேர் உங்களுடைய ஸ்தாபனத்தின் பெயரை மாற்றி கொள்ள விரும்புகிறீர்கள்?” நீ இருமனமுள்ள பிள்ளையாயிருந்தால், ஆரம்பத்தில் இருந்ததைப் பார்க்கிலும் இருமடங்கு நரகத்தின் பிள்ளையாயிருப்பாய்! “மெத்தோடிஸ்டுகளாகிய நீங்கள் எத்தனை பேர் பாப்டிஸ்டுகளாக மாறவிரும்புகிறீர்கள்?” “.........பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் பெந்தேகோஸ்தேயினராக விரும்புகிறீர்களா? உங்கள் அங்கத்தினர் சீட்டை இங்கு கொண்டுவாருங்கள்” ஓ, உங்கள் நன்மைக்காக கூறுகிறேன்! அது பதராயும், சாத்தானாயுமிருக்கிறது. அதில் ஜீவனே இல்லை. அது கலப்பினம், மாய் மாலம், இலையுதிர்ந்து கனியற்று இரண்டு தரஞ் செத்து வேரற்று போன மரங்களாயிருக்கிறது. “என் பரம பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்” என்று இயேசு கூறவில்லையா? அது ஸ்தாபனமோ அல்லது வேறு எதுவாயிருந்தாலும் சரி. வேரோடு பிடுங்கப்படும்! தேவனுடைய வார்த்தை மட்டுமே நிலைநிற்கும்! அதுதான் சரி. ஆகவே தான் தேவன், “எந்த மனுஷனும் பொய்யன், தேவன் ஒருவரே சத்தியபரர்'' என்று கூறினார். 95அப்படியானால் நாம் எங்கே போகப் போகிறோம்? நீங்கள் உங்கள் சுயநினைவுக்கு வாருங்கள். ஆனாலும் நீங்கள் முன் குறிக்கப்படாமலிருந்தால் செவி கொடுக்க முடியாது. நாம் அதைக் குறித்து பேசப்போகிறோம். வாத்தின் முதுகில் ஊற்றப்பட்ட மிகுதியான தண்ணீரைப் பற்றி அதிசயமொன்றுமில்லை. வாத்து தண்ணீரை கிரகிக்கத்தக்க பறவையன்று, அதை வழிந்தோடச் செய்யும் சுபாவமுள்ளது. நோவாவின் பேழை கொப்பேர் மரத்தினாலும் சித்திம் மரத்தினாலும் செய்யப்பட்டதாயிருந்தது. அது குழலைப் போன்று நடுவில் குழியாக இருந்தது. அதிலிருந்த எல்லாம் வெளியெடுக்கப்பட்டது. அவ்விதம் வளர்ந்தது - அது லேசான மரம். அது பிசின் தைல மரத்தைக் காட்டிலும் மிகவும் இலேசாக இருந்தது. அதை ஏன் அவ்விதம் செய்தார்கள்? அதனால் அதை மிதக்கும்படியாக நீரில் அமிழ்த்தினார்கள். அது கிரகிக்கக் கூடியதாயிருந்தது. “சிந்தூர மரம் (oak tree) அதைக் காட்டிலும் நலமானது அன்றோ?” என்று நீங்கள் கேட்கலாம். இல்லை ஐயா, அது கிரகிக்கத்தக்க மரமல்ல, எதிர்த்தடிக்கும் மரம், ஆனால் கொப்பேர் மரமோ ஒரு கிரகிக்கும் மரமாக காணப்பட்டது. ஒரு உண்மையான தேவனுடைய வித்து ஆவியை (ஆவியாகியத் தண்ணீரை - தமிழாக்கியோன்) கிரகிக்கத்தக்கதாயிருக்கின்றது! உள்ளேயுள்ள எல்லா ஸ்தாபனத்தின் காரியங்களும், அவிசுவாசமும் எடுக்கப்பட்டு விட்டன, அங்கேயிருக்கும் ஜீவனாகிய வித்தினுள் பரிசுத்த ஆவி வரும்பொழுது, அது சரியாக இன்னுமொரு வித்தைப் பிறப்பிக்கின்றது. இன்னுமொரு தேவனுடைய குமாரன் பிறக்கிறான். ஆமென்! மற்றுமொரு தேவகுமாரன், ஒரு குட்டி தேவன். 96சார்லி பிரன்ஹாமுக்கும், ஈலாவுக்கும் நான் பிறந்தமையால் நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். நான் அவர்களுடைய வித்தாயிருப்பதினால் நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். அவர்கள் இருவருடைய விந்துக்களும் ஒன்று சேர்ந்த ஒப்பந்தப்படி உண்டாக்கப்பட்ட வித்தே நான். தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றாகும்பொழுது, (அல்லேலுயா) தேவனுடைய ஆவி தேவனுடைய வித்தின் மேல் (தேவ வார்த்தையின் மேல் நீர் பாய்ச்சும் பொழுது, அது தேவனைப் பிறப்பிக்கின்றது; அது ஒரு தனிப்பட்ட ஆளாக இல்லை; அது தேவனாகவேயிருக்கிறது! நீங்கள் மரிக்கிறீர்கள், இனி நீங்களல்ல, உங்களை மரித்தவர்களாக எண்ணி, உள் தோண்டப்பட்டவர்களாக (கசடுகள் நீங்கினவர்களாக - தமிழாக்கியோன்) வித்திலுள்ள ஜீவன் வெளிப்பட காத்திருக்கின்றீர்கள். பின் அவன் அதே மனிதனல்ல, தேவனே அவனில் நிலைத்திருக்கிறார். அந்த வித்தின் ஜீவன் ஆரம்பத்தில் உரைக்கப்பட்ட வார்த்தைக்கு ஒப்பாயிருக்கின்றது. தேவனுடைய வார்த்தை அம்மனிதனில் வெளிப்பட்டிருக்கிறபடியினால், இனி அவனல்ல, தேவனே அவனில் நிலைத்திருக்கிறார். ஏனெனில் அவன் மரித்துப்போனான். அவன் ஒரே சமயத்தில் கலப்பினமாகவும் தேவனுடைய குமாரனாகவும் இருக்க முடியாது. என்று அவன் மரணத்தின் பிள்ளையாகவோ அல்லது ஜீவனின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும். ஆக, அவன் மரணத்தின் ஒரு குமாரனாயிருப்பானானால், சாத்தானிடம் அவன் செல்லட்டும். அங்கு சாத்தான் அவனைக் கொல்லுவான். அவன் தேவகுமாரனாயிருப்பானானால் அவன் தன்னை தேவனுக்குத் தரட்டும். அப்பொழுது அவர் அவனுக்குள் வந்து அவனிலுள்ள சாத்தானைக் கொல்லுவார். பின் தேவன் அவனில் தம் சொந்த ஜீவனைப் பயிரிடுவார். அப்பொழுது இனி அவனல்ல, அது தேவனுடைய ஜீவன். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருந்து, பரிசுத்த ஆவியினால் நீர் பாய்ச்சப்பட்டு, அதே கிரியையை உற்பத்தி செய்கிறது. நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? இன்னும் இந்தப் பொருளின் மேல் பேச எனக்கு விருப்பமே. நான் இன்னும் முப்பது அல்லது நாற்பது பக்கங்களுக்கு வேத வசனங்களை எழுதி வைத்துள்ளேன். ஆனால் நான் மூன்று பக்கங்கள் மட்டுமே முடித்துள்ளேன். 97சரி. அது வார்த்தையாயிருப்பதால், அது நம்மூலம் அந்த கிரியைகளைப் பிரத்தியட்சமாக்குகின்றது. நீங்கள் கிறிஸ்துவின் கிரியையை செய்ய வேண்டுமானால் அவர் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும். “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு கூறினார், அது என்ன? எதை விசுவாசிப்பது? வந்திருப்பவரான அவரே அந்த மூலவித்தும், ஜீவனும் என்று விசுவாசிப்பதேயாகும். எங்கே அந்த வித்து? இங்கேயிருக்கின்ற கைக்குட்டைகளை நான் எடுக்கட்டும். இங்கேயிருக்க வேண்டிய மனிதன் சரியாக இங்கே இருந்திருக்க வேண்டும். இருக்க வேண்டிய மனிதன்... நடந்ததென்ன? ஏவாள் அதை கலப்பினமாக்கி விட்டாள். பின் நடந்ததென்ன? மரணமானது சம்பவித்தது. தொடர்ந்து சம்பவித்துக் கொண்டேயிருக்கிறது. என்ன நடந்தது? வார்த்தையானது இங்குள்ளது. வார்தையானது மாறாததாக இங்கு நிலை கொண்டிருக்கிறது. “பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்'' என்று கூறப்பட்ட வார்த்தையானது தான் இறங்கத்தக்கதான இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, இந்த வார்த்தை ஒரு கன்னியின் கருப்பையைக் கண்டு பிடித்துவிட்டது. (இரண்டு கருப்பைகளைக் குறித்து அதிகமாக இன்று மதியம் போலாம்). பின் நடந்த காரியம் என்ன? அவரினின்று ஜீவத் தண்ணீர் வித்தின் மேல் பாய்ச்சப்பட்டு, அவ்வித்து தன்னை திரும்பவும் உற்பத்தி செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவரினின்று ஆவி வெளிவந்து பின்பு மேல் நோக்கிச் செல்கிறது. 98நாம் இவ்விதமாகத்தான் வந்துள்ளோம். சம்பவித்த காரியம் என்ன? நாம் அதை விசுவாசிக்கிறோம்; நாம் அதை விவாதிக்கிறோம். இயேசு, “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை - பரிசுத்த ஆவியின் கிரியை என்மேல் புறாவைப் போல் வந்திறங்கி இக்கிரியைகளைச் செய்கிறார், (கலப்பினத்தின் மூலமாயல்ல, கன்னியின் மூலமாக) பிறந்ததினால் இக்கிரியையைச்செய்தார். ஒரு கணவனும் மனைவியும் ஒரு பிள்ளையை உண்டாக்குவது போலல்ல; ஒருகன்னியினிடத்தில் பிறந்ததேயாகும். இதின் மூலமாகவே என் ஜீவனை நான் கொடுக்கிறேன், பிதாவையும், தீர்க்கதரிசிகளையும், எல்லா வேத வார்த்தையும் நீங்கள் விசுவாசித்தால், ஏற்று கொள்வீர்களானால், என்னுடைய ஆவியை உங்களில் பாய்ச்சி நான் செய்கிற அதே கிரியைகளை நீங்களும் செய்யும்படி செய்வீர்கள்” என்றார். 99“நான் செய்கிற கிரியைகளை அவனும் செய்வான்'' அவர் என்ன கிரியைகளைச் செய்தார்? பிதாவானவர் காண்பித்ததையே அவர் கண்டார். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் - அவர் என்னவானார்? தேவன் தம்மை மனிதனாக்கினார். தேவன் தாமாய்ச் செய்யமாட்டார் என்று இயேசு கூறினார். அவர் தாமே தம்மை மனிதனாக்கிக் கொண்டார். தேவன் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை ஒரு கன்னியின் மூலம், ஒரு சரீரத்தைக் கொண்டு வந்து, அச்சரீரத்தினின்று ஆவியாகிய தண்ணீர் வெளிவந்து, வார்த்தையாகிய தண்ணீரினால் கழுவப்பட்டதாய் அவருக்குள் சென்று வாசம் செய்து, அங்கிருந்து தேவனுடைய ஜீவனை கிறிஸ்துவின் மூலமாய், வெளிப்படுத்தினது. தேவன் கிறிஸ்துவிலிருந்தார். அவரே அபிஷேகம் பண்ணப்பட்டவர். 100கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருள். அவர் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன். தேவன் அவரில் வாசம் செய்கிறார். அது என்ன? மாம்சத்தில் இருந்த அந்த வித்தாகிய அபிஷேகம் பண்ணப்பட்டவர், வெளிப்படும் வார்த்தையாகிய தேவனை உற்பத்தி செய்தார். “அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேரானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. கிருபையால் நிறைந்திருந்தது.....” பாருங்கள். அதோ அவர். பாருங்கள்? அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். நீங்கள் கலப்பினமானதற்காக கிரயம் செலுத்தும்படி அவர் மரித்தார். அதுதான் காரியம். அது என்ன? நீங்கள் உங்களுடையவர்களல்ல என்று சொல்லுமளவிற்கு மரித்து அவருடைய வார்த்தையினால் நிறைந்து, அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறதினால், அவரிலுள்ள பரிசுத்த ஆவி கீழிறங்கி வந்து உங்களிலுள்ள பயிரானது வளரத்தக்கதாக நீர்பாய்ச்சுகிறார். அப்படியானால் என்ன? நம்முடைய கலப்பினத்திற்காகவும், நம்மை தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக்கு வதற் காகவும்,தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை மரணத்திற்குட்படுத்தி, கிறிஸ்துவில் அவருடைய வார்த்தை வெளிப்பட்ட விதமாக சபையின் மூலமாக தொடர்ச்சியாக வார்த்தையின் வெளிப்பாடு உண்டாகும்படி செய்கிறார். கிறிஸ்துவே தேவவார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறார், அவருடைய ஆவியை அனுப்புவதற்காக அவர் மரித்தார். சரீரமோ உயரே சென்று ஆவியானது தண்ணீராக நான் விசுவாசித்ததால், நம்முடைய இரட்சிப்பின் கிரயமாக செலுத்தத்தக்கதாக அது கீழ் நோக்கிப் பாய்ந்தது, “என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்த கிரியைகளை தானும் செய்வான்”.... பின்பு பரிசுத்த ஆவியானவர் அதே வார்த்தையின் மேல்வருகிறார்...... 101“ஆக, பின் ஏன் வேதத்ததையே சுட்டிக்காட்டுகின்றீகள்?” என்று நீங்கள் கேட்கலாம். வேதமானது உன் இருதயத்திற்குள் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையானது விதையாயிருப்பதினால், இது தனித்து இருக்கும் வரை ஒரு காரியமும் செய்ய முடியாது, ஆனால் அது இருதயமாகிய நிலத்திற்குள் வருமானால், பரிசுத்த ஆவியினால் தேவனுடைய கிரியைகளாகிய தரிசனங்களையும், வல்லமையையும், தாழ்மையையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது. 'நான் எல்லாம் அறிந்தவன்' என்பது வெளியேறி விடுகிறது. நீங்கள் ஒன்றுமில்லாதவர்களாகி கிறிஸ்து உங்களில் ஜீவிக்கிறார். நீங்கள் மரிக்கிறீர்கள், கிறிஸ்துவோ ஜீவிக்கிறார். அதுதான் காரியம். அவர் மரித்ததினால் நான் ஜீவிக்கிறேன். நான் மரிக்கிறேன்; அவர் ஜீவிக்கிறார். நான் மரித்த பின் எனக்கு ஜீவன் தருவதாக வாக்களித்திருக்கிறார். நான் அவருடைய ஜீவனைப் பெறுவதற்காக எனக்காக நானே மரிக்கிறேன். அதை எவ்விதம் நான் செய்கிறேன்? விசுவாசத்தினாலே அவருடைய வித்தை என் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதை சார்ந்து விசுவாசிக்கிறேன். ஆகவே அது வேதம் சொல்லியபடி சரியாக உற்பத்தி செய்கிறது. 102என் சகோதரர்களே, தேசம் முழுவதும் தேடிபாருங்கள். போலிகள் தாம் அதிகம் தென்படும். ————————————————————————————————————————————————-Let's go on just a little while longer. சரி. கிறிஸ்துவில் வெளிப்பட்ட அதே கிரியைகளே அவருடைய சபையிலும் உண்டாகும். அவர் அவ்விதமாக யோவான் 14:12ல் கூறியுள்ளார். மேலும் இயேசு, “வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்றார். வார்த்தையாகிய விதை மாம்சமாவதற்தாக அவர் முன் குறிக்கப்பட்டார். நான் இங்கு சற்று நிறுத்துகிறேன், ஏனெனில் ஒலி நாடாக்களை கேட்பவர்கள் புரிந்து கொள்ளாமற் போவார்கள். 103முன் குறிக்கப்படுதல்: எல்லா தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் முன் குறிக்கப்பட்டவர்கள். எபேசியர்; 1ம் அதிகாரம் 4ம் வசனத்தை உங்களுக்கு குறிப்பிடுகிறேன். சரி. நாம் முன் குறிக்கப்பட்டவர்கள். ஏன்?—-கிறிஸ்து மூல வித்தாயிருக்கிறார், விழுதல் உண்டாகும் என்று அறிந்து, நம்முடைய இடத்தை அவர் எடுத்துக் கொள்வதற்காக இந்த மூல வித்து தேவனுடைய தீர்மானத்தின்படி குறிக்கப்பட்டார். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? எல்லா தேவ குமாரரும், குமாரத்திகளும் முன் குறிக்கப்பட்டவர்கள். அவ்விதமிருப்பின் “ஆனால்” என்று வேறு கூறுகிறீர்களே! அப்படியானால் “சிலரை ஆக்கினைக்குட் படுத்துவாரா?” இல்லை ஐயா. நீங்கள் இவ்வுலகில் சுயாதீனப்பிரதி நிதியாக உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் தேவன்-அவர் முடிவற்றவர். எல்லாவற்றையும் முன்னறிந்திருக்கிறார். அவர்கள் யாரென்று அவருக்கு முன்னரே தெரியும். 104ஏவாள் அவ்விதம் செய்ய அவளை அவர் உண்டாக்கவில்லை. அவள் அதைச் செய்ய அவளை உண்டாக்கவில்லை. ஆனால் அவள் அவ்விதம்செய்வாள் என்று அவர் முன்னறிந்தார். அது லூக்கா 12ம் அதிகாரம் என்று நான் நம்புகிறேன். (அதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன்) அவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளிருந்தும் கேளாமலும் என்று ஏசாயா நன்றாக கூறினான், ஏசாயா உங்களை முன்பே கண்டான்“ என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அங்கே அவர்கள் கண்களையும், காதுகளையும் உடையவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் காணமுடியவில்லை. ஏன்? ஏனெனில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு எதிராளிகளாயிருந்தார்கள். ஆகவே இயேசு”நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால், உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின் படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.“ மேலும் இயேசு, ”ஓ மாயக்காரரே, என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப் படுத்தக் கூடும்? என்னுடைய ஊழியத்தை மறுதலிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய ஊழியம் என்னுடைய ஊழியத்தைப் போல் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுகிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம்“ என்றார். பாருங்கள்! பாருங்கள்? 105இப்பொழுது, அவர் முன் குறிக்கப்பட்டிருந்தது போல...“முன் குறிக்கப்படுதல் எப்படி வருகின்றது?'' என்று நீங்கள் கேட்கலாம். இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், நான் முடிக்கும் பொழுது நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தலாம். பாருங்கள்? 106அவர்கள் அங்கிருக்க வேண்டுமென்றுமுன்குறித்தார். தேவன் ஆதியிலே, ஆதாமையும் ஏவாளையும், பலுகிப் பெருகி பூமியைநிரப்புங்கள் என்று கட்டளை கொடுத்தார். ஆகவேதான் ஆண், பெண் பாகுபாடு அங்குகொடுக்கப்பட்டது. ஆனால் கலப்பினம் என்ன செய்தது? அது மரணத்தைக் கொண்டு வந்தது.இரண்டு வித கருப்பைகளைப் பற்றி மாலையில் பார்ப்போம். பாருங்கள்? இங்கு கவனியுங்கள், தேவன், குமாரரும் குமாரத்திகளும் கொண்ட ஒரு உலகத்தை தீர்மானத்தில் கொண்டவராய் அதை முன் குறித்தார்.அவர்கள் அங்கிருக்க வேண்டுமென்று முன் குறித்தார். ஆனால் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காததினால் கலப்பினம் அங்கு உண்டானது. தேவனோ, நீங்கள் ஆதியிலே எப்படி இருந்திருக்க வேண்டுமோ, அந்நிலைக்கு நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பதற்காக, திரும்பவும் நீங்கள் கலப்பினம் செய்ய வேண்டாத ஒரு நிலைக்கு உங்களை கொண்டு வந்திருக்கிறார். பாருங்கள்? 107கிறிஸ்து, தாம் தேவனுடைய குமாரனாயிருப்பதற்கு முன் குறிக்கப்பட்டதால் அவர் அவ்விதம் தான் இருக்க வேண்டும் என்பது தவிர வேறு வழியில்லை. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களால் காணமுடிகிறதா? ஏற்கனவே உங்களுக்கு குறிக்கோள் இருக்குமானால், தேவ வார்த்தையை உங்களால் காணவும், விசுவாசிக்கவும் முடியும், குடும்பவாகு என்பதைக் குறித்து நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? ஒரு குடும்பத்திலுள்ள ஒரு மகன் தன் தகப்பனையோ, தாயையோ,அல்லது பாட்டனாரையோ, முப்பாட்டானாரையோ, போன்று கிரியைகள் காணப்படுவதை குடும்ப வாகுஎன்கிறோம். முன்குறிக்கப்படுதலும் அதனின்றே வருகிறதாயிருக்கின்றது. நீங்கள் ஆதியிலே சரியான வழியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் இன்று இருக்கிறதான வழியில் இருந்து விழுதலுக்குக் காரணமானீர்கள். இருந்தாலும் நீங்கள் முன்குறிக்கப்பட்டிருப்பதினால் தேவனுடைய வார்த்தையைக் கேட்டீர்கள். அது உங்களைத் திரும்பவும் முன் குறிக்கப்பட்ட ஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டது! ஆமென். நீங்கள் செய்கிறதான இக்காரியங்களை விட்டு விட்டு, தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க உங்களுக்கு நேர்ந்தது என்ன? ஏதோ ஒன்று உங்களில் இருந்து கொண்டு, நீங்கள் நித்தியமாக வாழ வேண்டுமென்று கூறினதினால்தானே! 108“அது சரி, இதற்கு வேத ஆதாரம், பிரசங்கிமார்களே!” இதோ வேத ஆதாரம், “எவர்களை முன் குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று வேதம் கூறுகிறது, “அப்படியானால் பிரசங்கிப்பதினால் பலன் என்ன சகோ. பிரன்ஹாமே”? என்று நீங்கள் கேட்கலாம். பயிர் அங்கேயிருக்கிறதே; நான் செய்வதெல்லாம் வித்தை அள்ளி தூவுகிறேன். தீப்பொரியை அனுப்புகிறேன். அவர்கள் அதை எதிர்ப்பார்களாயின், இவ்வுலகத்தோடு ஒன்றி போயுள்ள ஸ்தாபனமே அவ்வாறு செய்யும், அதைக் குறித்து நான் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அங்கு ஏதாவது ஒன்று அதை கிரகித்துக் கொள்ளுமானால் அது ஒரு தேவ குமாரனாகவோ, குமாரத்தியாகவோ நிக்சயமாக மாறும். ஆமென். ஏனெனில் அது முன்குறிக்கப்பட்டிருக்கிறது. 109தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை முன்குறித்திருந்ததால் தான் அவர் மூலமாய் கிரியை செய்ய முடிந்தது. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டு குட்டியாயிருந்தார்! அவர், தாம் முன் குறிக்கப்பட்ட ஸ்தானத்தை எடுக்க சரியாய் அமைந்தார். ஆமென், அதன் காரணமாகவே அவர் பிதாவின் சித்தத்தை செய்து வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். அது போலவே, ஒவ்வொரு முன் குறிக்கப்பட்ட குமாரர்களும் அத்தகைய வெளிப்படுத்தலை உடையவர்களாயிருப்பார்கள். 110உலகத் தோற்ற முதற்கொண்டு, ஒவ்வொரு சந்ததியிலிருந்தும் ஒரு சிறு கூட்ட ஜனங்கள் உயிர்த்தெழுதலில் பங்கடைவார்கள். அதன் காரணமாகவே அவர்கள் அதை உறுதியாய்ப் பிடித்திருக்கின்றனர்...பவுலும் இதைக்குறித்து, “சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினால் வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” என்று எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கூறுகிறார். ஆமென். உண்பதற்கு ஒன்றுமில்லாமல் விரட்டப்பட்டு துன்பப்படுத்தப் பட்டார்கள். வாளால் அறுப்புண்ட ஏசாயா தீர்க்கதரிசி போன்ற இன்னும் பலரையும் குறித்தே பவுல் கூறுகின்றார். தீர்க்கதரிசி ஏசாயா உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவன். அவன் ஏவாளின் கருப்பையின் மூலமாக வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் வேறொரு ஸ்திரீயின் கருப்பையின் மூலமாக வந்தான்; அவனுடைய ஆவி இங்கு சாட்சியாக வர வேண்டியதாயிருக்கிறது. மனிதன் மரிப்பான். ஆனால் இயேசுவின் மூலம் திரும்ப ஜீவிப்பான் என்பதற்கு சாட்சியாக இயேசுவும் தமது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலின் மூலமாக சாட்சி பகர்ந்தார், ஏனெனில் வருகிறதான வித்து அவரே. ஆமென். நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன். 111சரி. அவர் முன் குறிக்கப்பட்டது போல் சபையாகிய உங்களில் வித்தாகிய வார்த்தையை மாம்சமாக செய்கிறார். “சகோ.பிரன்ஹாமே, நிச்சயமாக ஒவ்வொரு வார்த்தையையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று நீங்கள் கூறலாம், அப்படியானால் நீங்கள் உங்கள் பாரம்பரியத்தை சந்திக்கும் பொழுது, தேவனுடைய வார்த்தையை விட்டு பின்னடையாதீர்கள் ! பாருங்கள்? என்ன நடந்தாலும் தேவனுடைய வார்த்தையில் மட்டும் நிலைத்திருந்து, பின் என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள், “ஓ, கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்பும் ” என்று ஜெபித்து, பின்னர் சம்பவிப்பதை கவனித்திருங்கள். அவர் அவ்விதம் செய்வாரெனில் நீங்கள் அதை பெற்றுக் கொண்டீர்கள்....ஒரு வித உணர்ச்சிகளாலல்ல, அற்புதங்களாலல்ல. பிசாசுகள் கூட அவ்விதம் செய்கின்றன; ஆனால் தொடர்ந்து அசையாமல் தேவ வார்த்தையை நீங்கள் விசுவாசித்து, வார்த்தையின் வாழ்க்கையை வாழ்ந்து, எதையும் ஒரு போதும் மறுதலிக்காமலிருங்கள். அது தான் சரி. அதுவே வார்த்தையானது உங்களில் மாம்சமாகின்ற காரியம் பாருங்கள். அதே மாம்சமும், ஆவியாகிய தண்ணீரும். 112சிறிது பொறுத்துக்கொள்ளுங்கள். நான் இதைக் கடந்து போக விரும்பவில்லை. இயேசு ஆபிரகாமின் வித்தாயிருக்கிறார். (மாம்ச பிரகாரம் பேசுவோமானால்....அது சரிதானா?) ஆபிரகாமின் வித்து என்று முன் குறிக்கப்பட்டவர், ஆவியானது அவர் மேல் பொழிந்தபோது எத்தகைய ஜீவனை அவர் உற்பத்தி செய்தார்? அவர் விசுவாசமென்னும் ஜீவனைக் கொண்டு வந்தார். சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். நான் இதைக் கடந்து போக விரும்பவில்லை. “ஆபிரகாமைப் போல் அவரும் ஒரு பரதேசியாயிருக்கப்போகிறார் என்று நீங்கள் பொருள்பட சொல்லுகிறீர்களா?” இன்றைக்கு ஜனங்கள் அதில்தான் குழப்பமடைந்திருக்கிறார்கள். ஒரு தேவனுடைய மனிதன் இன்னின்ன காரியங்களை செய்து இன்னின்னப்படி பின்பற்ற வேண்டும் என்று எண்ண முயற்சிக்கிறார்கள். ஓ, இல்லை ஐயா! கிறிஸ்து எவ்விதம் ஆபிரகாமின் வித்தாயிருந்தார்? ஆபிரகாமுடைய வித்தாக (சரீரப்பிரகாரமாக) ஈசாக்கு தோன்றினானே! ஈசாக்கினுடைய வித்தும் முடிவில் விழுந்து மரித்ததே! அது பின் வாங்கி கலப்பினமாயிற்றே! அதைக் குறித்து நாம் நேரடியாகப் பார்ப்போம். பாருங்கள்? ஆனால் ஆபிரகாமின் விசுவாசமென்னும் வித்து எந்த சூழ்நிலையாயிருந்தாலும் தேவனை விசுவாசித்தது. அதுதான் சரி. வ்யூ. நான் கூக்குரலிட விரும்புகிறேன். இந்த விசுவாசமென்னும் வித்தைக் கவனியுங்கள். அது என்ன?—-அது அபிரகாமின் சரீரமல்ல, ஆபிரகாமின் விசுவாசமாயிருக்கிறது. ஆபிரகாமின் விசுவாசம் எதிலிருந்தது? —-அது தேவனுடைய வார்த்தையிலிருந்தது. எக்காரியம் வந்தாலும், அது முரண்பட்டதாயிருப்பின், அதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஓ, இந்த ஸ்தாபனங்களை அவனுடைய கிரியைகள் துண்டு துண்டாக கிழித்தெறிந்திடாதா? நிச்சயமாக அது கிழித்தெறியும். 113விவாகமும், விவாகரத்தும் என்பதைப் பற்றிய சத்தியம் வேதத்தில் அது கொடுக்கப்பட்ட வெளிச்சத்தின்படி வெளியே கொண்டு வரப்படுமானால், இந்த நகரத்தில் மட்டுமல்ல, எந்த நகரத்திலுமுள்ள சபைகளும் உடைந்து சிதறிப் போகும். அதை அவர்கள் ஆதரிக்கின்றார்கள் (தவறான உபதேசத்தை-தமிழாக்கியோன்) இவ் விஷயத்தில் இரு சாராரும் தவறாயிருக்கின்றார்கள் நான் அதை வார்த்தையின் மூலமாக என்னால் நிரூபிக்கமுடியும். அவர்கள் இருவரும் தவறாயிருக்கிறார்கள். சரி. அது புருஷன் செய்தாலும் ஸ்திரீ செய்தாலும் அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் மத்தியில் போதுமான அளவிற்கு குழப்பம் உண்டு, பாருங்கள்? “ அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்'' என்று இயேசு கூறினார். அதைக் குறித்து அவர்கள் சாக்கு போக்கு சொல்லுவார்கள். சத்தியத்தை சொன்னாலும் விசுவாசிக்க மாட்டார்கள், நித்திய ஜீவனுக்கென்று அவர்கள் பிறந்திருந்தால் வார்த்தையை விசுவாசிப்பார்கள். பாருங்கள்? அது தான் சரி. அவர்கள் அதை விசுவாசியாவிட்டால், தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவார், ஆனாலும் அவர்கள் அதை விசுவாசிக்கமாட்டார்கள். ஏன், ஒரு போதும் விசுவாசிக்க மாட்டார்கள். அவ்வளவுதான் அது. 114இதைக் குறித்து, நாம் முதலில் கவனம் செலுத்தி, ஏன் இக்காரியங்களை நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும் என்றும், எதற்காக விசுவாசிக்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டும், நீங்கள் கட்டாயமாக அவைகளை விசுவாசித்துதான் ஆகவேண்டும். இல்லையென்றால் நீங்கள் இழந்தவர்களாயிருப்பீர்கள். “சகோ.பிரன்ஹாமே, எதை விசுவாசிப்பது?—-உங்களையா?” இல்லை ஐயா, என்னை இல்லை. நான் வார்த்தையைக் கூறுகிறேன். நான் இங்கு எதையாகிலும் பேசவில்லை. வார்த்தையை விசுவாசிப்பதைக் குறித்து வேதம் என்ன கூறுகிறதோ, அதையே நான் உங்களுக்கு கூறுகிறேன். ஆகவேதான் நான் வார்த்தையை அது எழுதப்பட்ட விதமாகவே விசுவாசிக்கவும் அதன்படி நடக்கவும் முயற்சிக்கிறேன். நான் அதினோடு எதையும் கூட்டு வதோ, குறைப்பதோ கிடையாது. அது இருக்கிற விதமாகவே அதை வாசித்து விசுவாசிக்கிறேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிருபையினாலும், உதவியினாலும் அவர் அதை நிரூபித்து இருக்கிறார், யாராகிலும் அவ்வாறு இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்று கேட்கிறேன்? ஒலி நாடாக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களும் கூட, நீங்களும் அதைச்செய்யலாம். நான் கூறிய ஏதாகிலும் எப்பொழுதாவது தவறாயிருந்தது என்று நீங்கள் கூறமுடியுமா? அல்லது நான் கூறிய ஏதாகிலும் அது சொல்லப்பட்ட விதமாகவே தேவன் அதை நிரூபிக்காமலிருந்திருக்கிறாரா? 115சரி, அவள் முன் குறிக்கப்பட்டவள். இன்றுள்ள சபை முன் குறிக்கப்பட்ட மணவாட்டியாயிருக்கிறதா? கறை திறை இல்லாத ஒரு மணவாட்டியை தேவன் தமக்காக பெற்றுக் கொள்வார் என்று வேதம் கூறவில்லையா? அப்படியானால் அது முன் குறிக்கப்பட்டதாயிருக்கும் அல்லவா? பாருங்கள்? நல்லது, கிறிஸ்துவும் முன் குறிக்கப்பட்டவராயிருந்தார். அவர் ஆபிரகாமின் ராஜரீக வித்தாயிருந்தார், அவ்வித்து என்ன செய்தது? ஆவியானது கிறிஸ்துவின் மேல் வந்த பொழுது, அவர் தேவ வார்தைக்கு சாட்சி பகிர்ந்தார். தண்ணீரான ஆவி, வார்த்தையாகிய வித்தின் மேல் பொழியும் போது, தேவனுடைய வார்த்தையின் பேரில் உள்ள ராஜரீக வித்தான ஆபிராகமின் விசுவாசம், அதே பயிரை திரும்பவும் உறபத்திச் செய்யும். “நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்று நீங்கள் கூறலாம். சரி. நாம் ஆபிரகாமின் வித்து தான் என்பதை வேதத்தில் பார்க்கலாமா? ஆதியாகமம் 17ம் அதிகாரம் 6ம் வசனம் முதல் அதை பார்ப்போம். நான் அநேக குறிப்புகளை விட வேண்டியதாயிருக்கிறது. ஆனாலும் அவைகளின் பேரில் சில குறிப்புகளை மட்டும் பேச விரும்புகிறேன். ஏனெனில் யாராவது ஒரு பரியாசக்காரன் வந்து, “நான் அதை விசுவாசிக்கவில்லை” என்று சொல்லாதபடி அவனைத் தடுத்து நிறுத்தவே இக்காரியங்களைக் குறிப்பிடுகிறேன். பாருங்கள்? சரி. 17:7. நாம் 6ம்வசனத்திலிருந்து துவங்குவோம். “உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி...... (ஆபிரகாமின் வித்து)...உன்னிலே ஜாதிகளை (புறஜாதியார் பலரும்) உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும் உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை (கவனியுங்கள்) நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.” 116இப்பொழுது ஆபிரகாமின் வித்து என்பது என்ன?அது அவனுடைய மாம்சத்தைக் குறிப்பதல்ல. “இதைக்குறித்து பவுலும், வெளிப்பிரகாரமாக யூதன் யூதனல்ல, உள்ளான யூதனே யூதன் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஆபிரகாமின் வித்து என்பது என்ன?—-எந்த ஸ்தாபனம் என்ன கூறினாலும், தகப்பனோ அல்லது தாயோ அல்லது யார் என்ன கூறினாலும், தேவனுடைய முழு ஆலோசனையான வார்த்தையை விசுவாசிப்பதே ஆபிரகாமின் வித்தாகும். தேவன், ”என் உடன்படிக்கையை இப்பொழுதே ஸ்தாபிப்பேன் (முன்குறித்தல்), இந்த உடன்படிக்கையை உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன், அச்சந்ததி அதை விசுவாசிக்கும்“ என்றார். அதுதான் ஆபிரகாமின் வித்து. இப்பொழுது கவனியுங்கள், தேவன், ”நான் அதை வித்தினுடன் ஸ்தாபிப்பேன்,“ என்றார். 117“நல்லது. சகோ.பிரன்ஹாமே, அது எல்லோரையும் குறிக்கிறதே” என்று நீங்கள் கூறலாம். சற்று பொறுங்கள். நாம் இப்பொழுது எபேசியர் 1ம் அதிகாரத்திற்கு சென்று, சற்று அதில் கூறப்பட்டதை படித்து, அங்கு இந்த பொருளைப் பற்றி தேவன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். கவனியுங்கள். பவுல் எபேசு சபையின் மக்களை அழைக்கும் விதத்தை கவனியுங்கள். இப்பொழுது படிக்கப் போவதை கவனிக்க நீங்கள் எல்லோரும் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நமக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளன.....இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள் உள்ளன...அதன் பின் பகல் உணவிற்காக நாம் கூட்டத்தை முடிப்போம். தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய (அப்போஸ்தலன் என்றால் என்ன?—-அனுப்பப்பட்டவன் என்று பொருள். “இயேசு கிறிஸ்துவினால் அனுப்பப்பட்ட பவுல்” அது சரியா? “சனகரீம்' சங்கத்தினருடைய சித்தத்தினாலா? அவ்விதம் தவறாக படித்து விட்டேனா நான்? ”லூத்தரன் சபையின் சித்தத்தின்படியா?“) பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு (யார். அது? எல்லாருக்குமா? இல்லை, ஐயா. எல்லாரும் பரிசுத்தவான்களின் ஸ்தானத்தை எடுக்க முடியாது. அது சரி) எழுதுகிறதாவது: 118கிறிஸ்து இயேசுவுக்குள் ஏற்கனவே இருப்பவர்கள். அதைக் குறித்து தான் இக்காலை நான் இச்சபைக்கு பேசிக் கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். இக்காரியத்தை அக்குழந்தைகளுக்கு கூற முடியாது. அவர்கள் பலமான ஆகாரத்தை புசிக்க முடியாது; பாலைத்தான் அவர்கள் குடிக்க வேண்டும். அவர்கள் உணர்ச்சி தடைப்பட்டவர்கள். பாருங்கள்? அவர்களால் பலமான ஆகாரத்தை உண்ண முடியாது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது கவனியுங்கள். “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக. (சரி). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை (இக்காலை நேரம் போல்—-இவ்வெளிப்பாட்டில் அன்பு கூருகிறவர்கள்; இதை உட்கொள்ளுங்கள்) ஆசீர்வதித்திருக்கிறார். (இங்கு சபைக்கு பேசுகிறார வெளியிலுள்ளவர்களுக்கு அல்ல) 119தமக்கு முன்பாக... நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத் துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்துகொண்டபடியே“ நாம் அவரை தெரிந்து கொண்டோமா? ”ஓ சகோ.பிரன்ஹாமே, மன்னிக்கவும், நான் அவரை தெரிந்து கொண்டேன்“ இல்லை, ஐயா....வார்த்தையின்படி நீங்கள் அவரை தெரிந்து கொள்ளவில்லை. இயேசு, ”நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை. நான் உங்களை தெரிந்து கொண்டேன்“ என்று கூறினார். அவர் எப்பொழுது நம்மை தெரிந்து கொண்டார்? எப்பொழுது தம்முடைய சபையை தெரிந்து கொண்டதாக இயேசுகூறுகிறார்?—-உலகத் தோற்றத்துக்கு முன்னே என்று கூறுகிறார். “கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டபடியே” (மேதகு.இன்னார் நடத்திய கடைசி எழுப்புதல் கூட்டத்திலா? இல்லை, இல்லை. ஒருவேளை அவ்விதமாக ஒரு கோட்பாடிலோ, அல்லது பாடப் புத்தகத்திலோ படித்திருப்பீர்கள்; ஆனால் இந்த ஒன்றிலல்ல) “உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டபடியே',......(எப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப்பட்டோம்? கடைசியாக நடந்த எழுப்புதல் கூட்டத்திலா? நாம் தொடப்பட்ட அந்த இரவிலா? இல்லை. இவ்வுலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே, நட்சத்திரங்களும், அணுக்களும், உண்டாக்கப்படுவதற்கு முன்பே—-அப்பொழுது தான் நாம்தெரிந்து கொள்ளப்பட்டோம். ஆமென். நான் அதைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்ய வேண்டாம். நான் இங்கே வேறொன்றை விளக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சரி....) “உலகத் தோற்றத்துக்கு முன்னே ”....(அது என்ன ? அங்கத்தினர்களாயிருப்பதற்கா!“ இல்லை அல்லது நீங்கள் இரட்சிக்கப்பட்ட பின்பு என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படிச் செய்யவா'') —- தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு...... (அங்கத்தினர்களாவதினாலா? ஓ! அது அன்பு அல்லவா? அது உண்மை . சரி. ”அன்பிலே“ என்று எழுதப்பட்டிருக்கிறது) (தயவு செய்து என்னை மன்னிக்கவும். நான் இடையிட்டு பேசிக்கொண்டிருக்கிறேன் என்றே யூகிக்கிறேன். நான் அவ்விதம் செய்யக் கூடாது. சரி.)....தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி (ஆதியிலே இருந்த வித்து, பாருங்கள்) முன் குறித்திருக்கிறார். (என்ன? மு-ன்-கு-றி-த்-தி-ரு-க்-கி-றா-ர்.) 120யாரால் அதுசெய்யப்பட்டது?—-தேவனால்! எப்பொழுது அதைச் செய்தார்? - உலகத் தோற்றத்திற்கு முன்பே! ஏவாளின் மூலம் தவறான பிறப்பினால், நாமெல்லாரும் மரணத்தின் பிள்ளைகளாக்கப் பட்டிருப்போமானால், சுயமாக இயங்கும் தேவனானவர் தம்முடைய பிள்ளைகளை மீட்பதற்கென்று ஒரு வழியை ஏற்படுத்தத்தான் வேண்டும். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற (கொடுத்த) யாவும் என்னிடத்தில் வரும்; என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்,” என்று இயேசு கூறினார், ஓ! என்னே! அப்படியானால் நீங்கள் செய்ததாக கூறும் மகத்தான காரியங்கள் எங்கே? நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் வெட்கப்பட்டாக வேண்டும். ஏனெனில் தேவனே எல்லாவற்றையும் செய்திருக்கிறார். என்னைக் குறித்து தவறாயும், மோசமாகவும் குற்றப்படுத்தி ஒருவர் பேசுவதாக நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அதற்கு நான்,“ஓ! அதை மறந்து விடுங்கள்” என்றேன். “அதை எவ்வாறு நீங்கள் அவ்வளவு சுலபமாக கருதுகின்றீர்கள்? உங்கள் குடும்பத்தை சம்பந்தப்படுத்தி சொல்லப்பட்ட காரியமல்லவா?” என்று கூறினார். அதற்கு நான், “ஓ! என்னே ! அவ்விதமான ஒரு சோதனை எனக்கு வரவேண்டுமென்று உலகத் தோற்றத்திற்கு முன்பே குறிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே அதைப் பற்றி பரவாயில்லை” என்றேன். அதற்கு அவர், “எப்படி அதை தாங்கிக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், 'அவ்விதம் இக்காரியங்களைநான் தாங்காதிருப்பேனானால், எல்லா நேரங்களிலும் நான் விழுந்து பின்வாங்குகிறவனாயிருப்பேன்“ என்று கூறினேன். 121இன்றுள்ள ஜனங்களோடு இருக்கும் காரியம் அதுதான். “சகோ.பிரன்ஹாமே, நான் தேவனுடைய வார்த்தையின், சத்தியத்தை ஏற்றுக் கொள்வேனானால், என்னை வெளியே துரத்தி விடுவார்களே” என்று கூறுகின்றனர். நல்லது. இங்கு நீங்கள் எதை பெற்றுக்கொள்ள கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்பாதையின் முடிவை கவனித்துப் பாருங்கள். உலகக் காரியங்களை நீங்கள் பார்ப்பீர்களானால், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அவன் இவ்வழியாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இனிவரப் போகும் மேலான காரியங்களை நீங்கள் நோக்குவீர்களானால், நீங்கள் போகும் பாதை உங்களுக்குத் தெரியும்.பாருங்கள்? அதுவேதான். நீங்கள் போகும் பாதையைக் கவனித்துப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையின் வரிசையில் சார்ந்து கொள்ளுங்கள். 122சரி, சுவிகார புத்திரராகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். நாம் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, இயேசு முன்குறிக்கப்பட்டவரா? ஒரு வெளிச்சமோ, அணுவோ அல்லது ஏதாகிலுமொன்றோ தோன்றுவதற்கு முன்பே இயேசு அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டி யாகவும், தேவகுமாரனாகவும் இருந்தார். ஓ, அது தேவனின் மகத்தான காரியம். அப்படியிருக்க, இந்த செயற்கையாக குஞ்சு பொறிக்கப்பட்ட, பட்டாணி அளவுள்ள மூளையுள்ள மனிதவர்க்கம் தேவவார்த்தையைக் குறித்து தர்க்கம் செய்து அது சரியாயில்லையென்கிறது. வெட்கத்திற்குரிய காரியம். நீ யார்? சிலர் நரகம் இல்லையென்று வாதிக்கின்றார்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் நரகத்தின் மேலலேயே உட்கார்ந்திருக்கிறீர்கள்—-8000 மைல் அகலத்திற்கு உங்களுடைய கால்களுக்கடியில் எரிமலைப் போன்ற குழம்பு இருக்கின்றது, இப்படியிருக்க, நீங்கள் மேலே நோக்கிப் பார்த்து தேவனையும் அவருடைய வார்த்தையையும் மறுதலிக்கின்றீர்கள்! நீங்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதென்பது தேவனையே மறுதலிக்கிறதாகும். நிச்சயமாக. அது தான் சரி. ஓ! கர்த்தாவே, நீர் எவ்வளவு மகத்துவமானவர், நாங்கள் எவ்வளவு உத்தமர்களாயிருக்கவேண்டும். 123சரி, வார்த்தையின் விசுவாசிகளும் ஆவியும் நிச்சயமாக ஒன்றாக இருத்தல் அவசியம் , உங்களுக்குப் புரிகிறதா? விசுவாசிகளும், வார்த்தையும், ஆவியும் முற்றிலுமாக ஒன்றாகயிருக்க வேண்டும். உங்களுடைய சொந்த எண்ணத்தை நீங்கள் எண்ணுவதில்லை. உங்கள் சொந்த சிந்தனையை நீங்கள் உபயோகிப்பதில்லை. அது அற்புதமானதில்லையா? கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கும். பாருங்கள்? கிறிஸ்துவிலிருந்த சிந்தை உங்களிலிருக்குமானால் அவர் வார்த்தையை எடுத்த வண்ணமே நீங்களும் எடுப்பீர்கள். ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். கிறிஸ்துவின் சிந்தை உங்களிலிருக்குமானால் நீங்களும் வார்த்தையாயிருக்கிறீர்கள். தேவனுடைய ஜீவிக்கிற வார்த்தையாய் இவ்வுலகத்தில் அவருக்கு பிரதிநிதிகளாக அவருடைய கிரியைகளை தொடர்ந்து செய்வீர்கள். (அது சரி.) சபையானது அவ்விதமாகவே இருக்கவேண்டும். அது அவ்விதமாயிருக்குமேயானால், வேதமானது ஆதியிலே இயேசுவின் சீஷர்களின் மூலம் வெளிப்பட்ட விதமாக மறுபடியும் உங்களில் வெளிப்பட்டு ஜீவிக்கிறதாயிருக்கும். 124இப்பொழுது நாம் பார்ப்போம். இங்குள்ள பதினைந்து பக்கங்களை நான் துரிதமாக முடிக்க வேண்டும். அவ்விதம் துரிதமாகச் செய்ய எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் அவைகளை வேகமாக முடிக்க முயல்வேன். இல்லையெனில், நான் இன்று பிற்பகல் அதைச் செய்வேன். எனக்கு நாளை ஒரு கூட்டம் உண்டு. நான் அதை துரிதமாகச் செய்ய வேண்டும். சரி, நம்மால் முடிந்தவரை நாம் சிறிது வேகமாகச் செய்யலாம்-அதற்குள்ளாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. 125அது அவ்விதமாயிருக்கையில், கிறிஸ்து ஆதி காலங்களில் எவ்விதமாய் வெளிப்பட்டாரோ, வேதமானது அவ்விதமே மறுபடியும் வெளிப்பட்டிருக்கிறது. பாருங்கள்? நீங்கள் கிறிஸ்துவைப் போல முன்குறிக்கப்பட்ட வித்தாயிருக்கிறதினால் மழையானது வித்தின் மேல் பொழியும் போது அது தன்னை உற்பத்தி செய்கின்றது. பரிசுத்த ஆவி பொழியும்பொழுது...இயேசு தாம் தெரிந்து கொண்ட அந்த வித்துக்கள் மீது பரிசுத்த ஆவி-விழுந்த பொது....எப்பொழுது தெரிந்து கொண்டார்? உலகம் தோன்றுவதற்கு முன்பே....அப்பொழுதே அவர்கள் முன் குறிக்கப்பட்டுவிட்டனர். அது சரியா? அப்போஸ்தலர்கள் என்ற வார்த்தை யாகிய வித்துக்கள் அந்த மேலறையிலேதரித்திருந்தார்கள், அங்கே அவர்களுக்குள் வித்தானது ஜீவனற்று கிடந்தது. சடுதியிலே வானத்திலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போன்று சத்தம் கேட்டது, அது அவ்வறை முழுவதையும் நிரப்பிற்று. அவ்வித்துக்கள் முளைத்து வளர ஆரம்பித்தன, அவர்கள் தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். 126சரி. அப்படியானால் இன்று ஏன் எழுப்புதல் அக்கினி கொழுந்து விட்டு எரியவில்லை? நான் இங்கு ஏறக்குறைய பத்து வேத வாக்கியங்களைக் குறித்து வைத்துள்ளேன்-நான் பேச வேண்டியவைகள். (நீங்கள் அதை இங்கே காணலாம்). ஆனால் நான் அவைகளில் சிலவற்றை விட்டு விடுகிறேன். நான் ... அதன் சுருக்கத்தை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சரி, ஏன் எழுப்புதல் அக்கினி கொழுந்துவிட்டு எரியவில்லை? இங்கு சிலருடைய பெயர்களை நான் குறிப்பிட அவசியமாயுள்ளது. தேவன் அவ்விதம் குறிப்பிட அனுமதிக்காத பட்சத்தில் நான் அதை செய்ய விரும்புவதில்லை. ஆனால் இங்கு நான் அவ்விதம் குறிப்பிட வேண்டியவனாயுள்ளேன். சில காரியங்களை நான் சொல்ல விரும்புகிறதில்லை. ஆனாலும் அவைகளைச் சொல்லத்தான் வேண்டும். ஏனெனில் இப்பொருள் தெளிவாகும் பொருட்டும், நான் எதை நோக்கி செல்கிறேன் என்றும், நான் ஏன் அதை செய்தேன், எதற்காக செய்தேன் என்பதற்காகவும் இவைகளை நான் குறிப்பிடுகிறேன். இதுவே தேவனுடைய வார்த்தையென்று நான் விசுவாசிக்கிறேன். கிறிஸ்துவுக்கென்று ஒரு சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். சபையே நிலமாயிருக்கிறது.(அதை குறித்து சற்று பின்பு பார்ப்போம்) அங்கு ஆவியின் மழைபொழிவதற்கு முன்பு வார்த்தையாகிய விதை அங்கு விதைக்கப்பட வேண்டியதா யிருக்கிறது, பாருங்கள்? 127ஏன் இந்த எழுப்புதல் அக்கினி இன்று குறைந்து போயிற்று? ஓரல் ராபர்ட்ஸ், பில்லி கிரஹாம் போன்ற சுவிசேஷகர்கள் முன்புதேசத்தை அக்கினியால் எரித்தது போல ஏன் இப்பொழுது இல்லை? என்னுடைய கூட்டங்களோகேட்கப்படுவது கூட கிடையாது. அந்த மூன்று கூட்டங்கள் தாம். காரியம் என்ன? இங்கு நாம் சற்று ஆழமான காரியங்களைப்படிக்க போகிறோம். இந்த செய்தி அடங்கிய ஒலி நாடாக்கள் பில்லி கிரஹாமின் கையிலோ,ஓரல் ராபர்ட்சின் கையிலோ கிடைக்குமானால், “சகோதரர்களே, நான் உங்களை அவமரியாதைசெய்ய விரும்பவில்லை; உங்களோடு நானும் சுவிசேஷ ஊழியத்தில் ஒரு சகோதரன் என்றுதெரியப் படுத்துகிறேன். நீங்கள் இச்செய்தியை கேட்ட பின், நான் ஏன் அவ்விதம்செய்தேன் என்று உங்களுக்கு நன்றாய் புரிந்து கொள்ளுதல் உண்டாயிருக்கும். மேலும்நான் காரணத்தை கூறும் பொழுது, அதை நேர்மை யாகவும், உண்மையாகவும் நான்கூறப்போவதால், தேவனுடைய சமூகத்திலும் உங்களுடைய பார்வையிலும் எனக்கு கிருபைகிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” 128பில்லி கிரஹாமின் மூலம் இவ்வுலகம் சற்றுகாலத்துக்கு முன்பு கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் இப்பொழுதோ அது அதிகம் கேட்கப்படுவதில்லை. அவர் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறார். ஆனாலும் அக்கினி குறைந்ததன் காரணம் என்ன? அவ்விதம் ஓரல் ராபர்ட்சும், டாமி ஆஸ்பானும். அவர்கள் எல்லோரும் தேவ மனிதர்கள்தாம். என்ன நடந்தது என்னை ஊழியத்திற்கு தேவன் அழைத்தாரென்று நான் விசுவாசிக்கிறேனே, ஆனால் என்னுடைய ஊழியத்திற்கு நேர்ந்தது என்ன? இங்குதான் சில கேள்விகளுக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன். சம்பவித்தது என்ன? “சகோ.பிரன்ஹாமே, அவர்களெல்லாரைக் காட்டிலும் உம்முடைய ஊழியம் தான் மிகவும் மரித்ததாயிருக்கிறது' என்று நீங்கள் கூறலாம். அது உண்மைதான். அது சரி. என்னையும் ஓரல் ராபர்ட்சையும் விட பில்லிகிரகாம் அதிகமாக அறியப்பட்டார். நான் 6 மாதங்களில் ஜனங்களுக்கு அறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரேநாளில் ஓரல்ராபர்ட்ஸ் அறியப்பட்டார். டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் போன்றவர்கள் அதிகமாக இவ்வுலகில் அறியப்பட்டனர். அவர்கள் எல்லோரையும் விட என் காரியம் அதிக தூரமாயிருந்தது. ”சகோ. பிரன்ஹாமே, வார்த்தையை உண்மையாக விசுவாசிக்கிறதாகச் சொல்லுகிறீர்களே உங்களுக்கு நேர்ந்தது என்ன?,'' என்று நீங்கள் கேட்கலாம். என்ன நடைபெற்றது? அதைத்தான் நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.அதைத்தான் நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். 129இப்பொழுது உங்கள் மனதை திறந்து சற்று கவனியுங்கள். நீங்கள் சகலத்தையும் ஒதுக்கிவிட்டு, உங்கள் இருதயத்தை ஒரு நிமிடம் திறந்து கவனியுங்கள். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில், நாம் நம்முடைய சிந்தனைகளுக்கு ஆதாரமாக இன்று, “தங்கள் தங்கள் ஜாதியின்படியே பிறப்பிக்கக் கடவது” என்ற காரியத்தை வாசித்ததை ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள், அது தன்னுடைய ஜாதியை மட்டுமே பிறப்பிக்க வேண்டும். அதுதான் உண்மை. ஞாபகம் கொள்ளுங்கள், இவ்வுலகம் முழுவதிலும் விதைகள் விதைக்கப்பட்டிருந்தன. மழையானது, அவைகள் தங்கள் தங்கள் ஜாதியைப் பிறப்பிக்குமாறு செய்தது. பயிர்கள் அறுவடையின் காலத்திற்கு அருகாமையில் இருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அதை எல்லோரும் ஒப்புக் கொள்வீர்கள். நாம் அறுவடையின் காலத்திற்கு அருகாமையில் இருக்கிறோம், விதைகள் எல்லாம் பயிரிடப்பட்டுவிட்டன. நம்மோடு உள்ள காரியம் அதுதான். விதைகள் எல்லாம் பயிரிடப்பட்டுவிட்டன. ஓ தேவனே, எனக்கு முன்பாக எது கடந்து போயிற்று என்று நீங்கள் பார்க்க விரும்புகின்றேன். விதைகள் எல்லாம் பயிரிடப்பட்டுவிட்டன. விதைக்க ஒரு காலம், அறுவடை செய்ய ஒரு காலம் என்பதை நினைவு கூருங்கள். 130சரி. மூன்று வகையான விதைகள் விதைக்கப்பட்டன. முதலாவது ஸ்தாபனத்தின் வித்து—- பில்லிகிரஹாம். அவர்தான் தலைமை பயிரிடுபவர். இரண்டாவது, பெந்தகோஸ்தே வித்து—-ஓரல் ராபர்ட்ஸ். பெந்தகோஸ்தே விதையானது விதைக்கப்பட்டாயிற்று. (நான் இப்பொழுது ஸ்தாபன பெந்தகோஸ்தேயைப் பற்றி பேசுகிறேன்) மூன்றாவது தேவ வார்த்தை என்னும் விதை விதைக்கப்பட்டது. சகோதரர்களே, நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் திரும்பச் சொல்லச் சொன்னாலொழிய நான் இதைக் கூறப் போவதில்லை. ஆகவே நீங்கள் இதை தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். மூன்று விதமான விதைகள் நடப்பட்டாயிற்று. ஆகவே தான் விதைப்பு என்கிற காரியம் ஏறத்தாழ முடிந்து விட்டதாய் இருக்கின்றது. பாருங்கள்? மழை அல்லது ஆவி பொழியப்படுவதற்கு முன்பு விதைகள் விதைக்கப்பட்டாக வேண்டும். (அது சரியா?) இங்கு நீங்கள் என்னோடு சற்று ஒவ்வாமல் இருக்கலாம். ஆனால் சற்று பொறுங்கள். விதைகள் விதைக்கப்பட்ட பிறகே மழையானது பொழிந்து விதைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அது சரியா? இங்கு எபிரேய பாஷை தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? நீங்கள் விரும்பினால் அப்பதத்தைப் பாருங்கள். 131அனேக ஸ்தாபனங்கள், நாம் “பின்மாரி”யின் காலத்தில் ஜீவிக்கிறோம் என்று கூறுவதைக் கேள்விப்படுகிறோம். அது அறிவீனம், அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. ஓ....ஏதோ ஒன்று சம்பவிக்கின்றது. அது என் முன்னால் கடந்து போவதை நான் காண்கிறேன். அந்த ஆவியானவரைப் பிடித்து விட்டேன் பாருங்கள். ஆமென். இது சத்தியம் என்று நான் அறிவேன்; இது கர்த்தர் உரைக்கிறதாவது என்ற விதமாயுள்ளது. ஒரு தரிசனம் என் முன்பு அசைந்து வருகிறது. அதை இங்கு சொல்வதற்கு கடினமாயுள்ளது. ஒவ்வொரு சமயமும் நான் பார்க்கும்போது, அது என் முன்னால் அசைந்து, அவ்விதமாக உடைந்து, இப்பக்கமாக அசைந்து, அவ்வழியே பார்க்கிறது. சில நபர்கள் அங்கு உட்கார்ந்திருப்பதை நான் கவனித்துக்கொண்டேயிருக்கிறேன். பாருங்கள்? சரி, அங்கு அந்த வரிசையில் என்ன நடந்தது என்பதை சரியாக அறியாதவனாக நான் இருக்கிறேன். 132அறுவடையின் காலம் அருகாமையிலிருக்கிறது என நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் விதைகள் விதைக்கப்பட்டாகி விட்டன. ஸ்தாபனத்தில் வித்துக்களான சபைகளாகிய பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள் விதைக்கப்பட்டு விட்டனர். ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஹிக்ஸ், டாமி ஆஸ்பார்ன் போன்ற மகத்தான தேவமனிதர்கள் மூலம் பெந்தகோஸ்தேயின் வித்துக்கள், பெந்தகோஸ்தே ஸ்தாபனத்திற்குள் விதைக்கப்பட்டு விட்டன. பாருங்கள்? கலப்பில்லாத தேவ வார்த்தையான வித்தும் ஸ்தாபனங்களுக்கு புறம்பே விதைக்கப்பட்டாயிற்று என்று நான் விசுவாசிக்கிறேன். அதுதான் காரியம். பாருங்கள்? வித்தின் செடியானது வளரும் முன்னர் அதற்கு வித்தின் தண்ணீர் அவசியமாயிருக்கின்றது. விதைக்கப்பட்ட விதை வளர்வதற்கு முன்பாக தண்ணீரானது அதின் மேல் பொழியப்பட வேண்டியதாயுள்ளது. “நல்லது, சகோ. பிரன்ஹாமே, எங்களுடைய அமைப்பு அவ்விதம்......” என்று நீங்கள் கூறலாம். அது சரிதான் என்று நான் அறிந்திருக்கிறேன். உங்கள் எண்ணம் எது என்று நான் கிரகிக்கிறேன்; அதை நீங்கள் மறைக்க முடியாது. பாருங்கள்? ஆனால் எதை நினைக்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். 133இப்பொழுது, விதைகள் விதைக்கப்பட்டாக வேண்டும். அது வளர்வதற்கேன்று அதற்கு தண்ணீர் அவசியமாயிருக்கின்றது. “நல்லது,சகோ, பிரன்ஹாமே, (உங்கள் எண்ணங்களை நான் திறக்கப் போகிறேன்) எங்களுக்கு தண்ணீர் இருந்தது” என்று நீங்கள் கூறலாம். அது அவ்விதமே இருக்கட்டும். அது உண்மைதான், நீங்கள் தண்ணீரை உடையவர்களாக இருந்தீர்கள். ஒரு முட்டைகோஸையோ அல்லது ஏதாகிலும் ஒரு விதையையோ விதைக்கும் போது வழக்கமாக சிறிதளவு தண்ணீரை ஊற்றுவார்கள். பாருங்கள்? சரி, விதைக்கும் பருவத்தில் நமக்கு உண்டாயிருப்பது என்ன?—-'ஓ முன்மாரி என்று கூறுவீர்கள்.“ அறீவீனம். யோவேல் 2ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் முன் மாரியை எபிரேயு பாஷையில் எவ்விதம் குறிக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். அது (m-o-u-r-e-h,) 'மூரே' என்று எழுதப்பட்டிருக்கிறது, அதன் பொருள்—-போதகம். ஆக, போதக மழையானது கடந்து சென்றது, ஸ்தாபனத்தின் போதக மழையானது கடந்து சென்றது என்பதே அதன் பொருள். ”நாற்பத்து நாலில் ஒரு கோடி நபர்கள்“ என்பது போல. பாப்டிஸ்டுகள், பெந்தகோஸ்தேயினர் அங்கத்தினர்கள் கோடிக்கணக்காக சேர்த்தனர். பாருங்கள்? அதுதான் சரி. அதேசமயம் போதக மழை ஒரு சிறுபான்மையோரான கூட்டத்திற்காகவும் பெய்தது. 134இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, மூரே என்னும் வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். மூரே என்னும் வார்த்தைக்கு முன்மாரி-போதித்தல் என்று பொருள். அது மூரே மழை-போதிக்கும் மழை. போதிக்கும் மழை புறப்பட்டது. பில்லிகிரஹாமும், பெந்தகோஸ்தேயினரும்இவ்வுலகத்தைத் தட்டி எழுப்பினர். அதேபோல் தேவனுடைய வார்த்தையும் இவ்வுலகத்தை தட்டி எழுப்பிற்று. ஆனால் தற்பொழுது காரியம் என்ன? பின்மாரிக்காக அவள் இப்பொழுது காத்து கொண்டிருக்கிறாள். அது அவள் தன் கனிகளைப் பிறப்பிக்கும் போது உண்டாகும். ஓ, நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன். 135எந்த ஜாதி விதையை நீங்கள் உங்கள் நிலத்தில் பயிரிடுகிறீர்களோ அதே ஜாதியைத்தான் அறுவடை செய்வீர்கள். ஸ்தாபனங்கள் அதிகமான அங்கத்தினர்கள் வேண்டுமென்று விரும்பினால் அதைதான் அவர்கள் பெறப்போகிறார்கள். அதைத் தான் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். பெந்தகோஸ்தேயினர் அதிக பெந்கோஸ்தேயினரை விரும்புகின்றனர். அவர்கள் அதையே பெறப்போகிறார்கள். சரி. ஆனால் வார்த்தை தேவ குமாரர்களையும் தேவகுமாரத்திகளையும் உற்பத்தி செய்யப் போகிறது. ஹு.... ஹும். அது இனி வரப்போகிறதாயிருக்கிறது. கவனியுங்கள், வரப்போகின்றதாயுள்ள அந்த மகத்தான பின்மாரி செய்ய விருப்பதை கவனியுங்கள். அவர்கள் மதில்கள் மேலாக ஓடித்தாவி ஒரு சேனையாக வரப்போகிறார்கள். நீங்கள் சிறிது பொறுத்திருங்கள். ஹு...ஹும். எந்த ஜாதி விதையை நீங்கள் நிலத்தில் பயிரிடுகிறீர்களோ அதே ஜாதியைத்தான் அறுவடை செய்வீர்கள். 136சரி, இந்த இரண்டு ஸ்தாபன ஜாதிகளைப் பற்றி புரிந்து கொண்டீர்களா? இந்த இரண்டு ஸ்தாபன ஜாதிகளும் ஒன்றாக இணைந்து சோதோமுக்குச் செல்லும். ஆனால் வார்த்தையோ, ராஜரீக வித்தினிடம் தங்கிவிடும். ஆமென். பாருங்கள்? “லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்' என்று இயேசு கூறினார். ஒரு பின் வாங்கிப் போன மனிதனுக்காகவும் (சிறிதளவு தேவபக்தி அவனிடம் இருந்தது) அவனுடைய மனைவிக்காகவும் இரண்டு அபிஷேகிக்கப்பட்ட தூதர்கள் சோதோமிற்கு சென்று அவர்களை மீட்க முயற்சி செய்தனர். அவனுடைய மனைவிக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? அவள் கிருபையை இழந்து போனாள். அவர்கள் வெளியே வந்த பிறகு அவனுடைய மகள்கள் எதை உற்பத்தி செய்தார்கள் என்று பாருங்கள். ”பிஸ்கோத்திலுள்ள மயிரைப் போன்று“ என்ற பழமொழிக்கிணங்க அது எப்பொழுதும் அவ்விதமாயுள்ளது. அது சரியென்று உங்களுக்குத் தெரியும். அவ்விதம் சொல்வதற்தாக மன்னிக்கவும்; அது அப்பொழுதும் அவ்விதமே...தேவனுடைய வார்த்தையை நீங்கள் மறுதலிக்க முடியாது! 137ஒருவர் அங்கு ஆபிரகாமோடு தங்கி அவனுக்குஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அது சரிதானா? சரி. சரி. ஒருவர் அங்கேயே...... ஆபிரகாமும் அவனுடைய குழுவினரும் எவ்விதம் அழைக்கப் பட்டனர்? தெரிந்து கொள்ளப்பட்ட வித்து ஒரு போதும் விழுந்து போகவில்லை. அவர்கள் பரதேசிகளாயிருந்தனர். அவர்கள் இங்கும் அங்குமாக சுற்றித் திரிந்து இங்கும் அங்குமாக திரிந்து எந்த ஒரு ஸ்தாபனமாயுமிருக்கவில்லை. ஆனால் ஸ்தாபனமோ அங்கு சென்று ஒரு பட்டணத்தைக் கட்டிக் கொண்டது. லோத்து அங்கு மதகுருவாகவோ, நியாயாதிபதியாகவோ அமர்ந்திருந்தான். அங்கிருந்த கண்காணி, “அந்த மனிதன் நம்மிடையே வேண்டாம், அவன் நம்முடைய பிரமாணங்களோடு ஒத்துப் போகமலிருக்கிறான். அத்தகையவனை நாம் வைத்திருக்கமுடியாது” என்றான். அந்த வயது சென்ற லோத்து அங்கு அமர்ந்திருந்தான். “நம்முடைய கூட்டத்தின் விசுவாசப் பிரமாணத்தை அவன் கைக்கொள்ளவில்லையென்றால், அவன் நம் மத்தியில் வேண்டவே வேண்டாம்” என்று அவர்கள் கூறினார்கள். கலப்பினமே! தேவனுடைய வீட்டின் மேல் உங்களை நியாயாதிபதியாக வைத்தது யார்? ஹு... ஹும். தேவனுடையவாரர்த்தை எவ்விதமாயினும் பிரசங்கிக்கப்படும். 138பரிசுத்த மார்டீன் அவ்விதமாயிருந்த ஒரு கூட்டத்திற்கு சென்றார். அவர் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற பிறகும் கூட அங்கிருந்த தலைவன் அவருக்கு எழுந்திருந்து ஒரு மரியாதையும் செலுத்தவில்லை. தேவன் அத்தலைவன் அமர்ந்திருந்த ஆசனத்தையும் அவன் அங்கிகளையும் எரியச்செய்து, தேவனுடைய மனிதனுக்கு மரியாதை செலுத்தத்தக்கதாக எழுந்திருக்கச் செய்தார். ஹு..... ஹும். பாருங்கள்? அது சரி. அவள் அமர்ந்திருந்த சிங்காசனம் தீப்பற்றி எரிந்தது. அது உண்மை . அதை நீங்கள் சபையின் சரித்திரத்தில் படித்திருப்பீர்கள். ஆம் ஐயா. அவர் அங்கு சென்று அற்புதங்களையும் அடையாளங்களையும் நிகழ்த்தி, தான் நிற்கிறதான வார்த்தையை நீரூபித்தார். அவர்கள் தங்கள் கண்காணியையும், தாங்கள் என்ன விரும்பினார்களோ அவைகளையெல்லாம் அங்கு வைத்திருந்தார்கள். ஆனால், அங்கு முன் குறிக்கப்பட்ட தேவபிள்ளைகள் தேவனுக்கு உண்டு, அவர்களிடமும் தேவன் செல்ல வேண்டுமே. அது தான் சரி. 139ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அது என்ன? இப்பொழுது, இங்கு நாம் சிறிது நிறுத்துவோம்... லோத்து ஸ்தாபனமற்றவனாக இருப்பதற்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அது சரியா? ஆபிரகாமோடு பிரயாணம் செய்வதற்கு அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் உலக ஆசை அவனை நெருக்கிப் போட்டுவிட்டது. அதுதான் இன்றும் நடந்திருக்கிறது. ஞாபகம் கொள்ளுங்கள்,சோதோமிலிருந்தவர்கள் ஒருபோதும் இயற்கைக்கு மேம்பட்ட அற்புதங்களைக் கண்டதில்லை. அவர்களுக்கு ஒரு குருட்டாட்டம் இருந்தது; வார்த்தையை பிரசங்கிப்பது ஒரு அவிசுவாசியை குருடாக்குகிறது, அதை தான் பில்லிகிரகாமும், மற்றவர்களும் அங்கேயுள்ள அவிசுவாசிகளுக்குச் செய்கின்றனர். இதை நீங்கள் மறுக்க முடியாது. அது உண்மை. ஏனெனில், இயேசு, “லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்'' என்றார். இதோ அது இங்கே வேதத்திலுள்ளது.பாருங்கள்? மனுஷ குமாரன் வருகையிலும் அது அப்படியே நடக்கும். 140இங்கு கவனியுங்கள், வார்த்தை என்ற ஒருவர் இருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் யாருடன் தங்கினார்? அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்களோடு அல்லது முன் குறிக்கப்பட்டவர்களோடு தங்கினார். வார்த்தை தெரிந்துகொள்ளப்பட்டவர்களோடு தங்கிற்று. இன்றைக்கு வார்த்தையாகிய தேவன் முன் குறிக்கப்பட்டவர்களோடு தான் தங்குவார்! அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆபிரகாமின் ராஜரீக வித்தாயிருக்கிறது. அது எவ்வித கிரியையைச் செய்தது? இயேசுகிறிஸ்து என்ற ரூபமாக 800 வருடங்களுக்குப் பின் வெளிப்பட்ட அது என்ன கிரியையைச் செய்தது? ஆபிரகாமிடம் செய்த வார்த்தையாகிய அதே கிரியையை திரும்பவும் செய்தது. அங்கு சில நாளைக்கு முன்பாகத்தான் அவர் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியிருந்தார். அவர் கூடாரத்திற்கு தம் முதுகை காட்டியவாறு, “உன்னுடைய மனைவி சாராள் (சாராய் அல்ல) எங்கே?” என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், “உமக்கு பின் பாக கூடாரத்தில் இருக்கிறாள் ” என்றான். அவர், “ஒரு பூரண உற்பவ காலத் திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்கு திரும்ப வருவேன், (ஆங்கில வேதத்தில்- ”I Will certainly return“ என்று எழுதியிருக்கிறது. ”I' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட சொல் தனிப்பட்ட பெயர் சொல்லை குறிக்கிறது. தமிழாக்கியோன்) நீ காத்திருந்த அந்த பிள்ளையை பெற்று கொள்ளுவாய். பின்மாரியானது பெய்யக் காத்திருக்கிறது. வரப்போகும் குமாரனை நீ விசுவாசித்து அந்த வித்தை போதுமான காலம் வரை நீ உனக்குள் வைத்திருந்து விட்டாய், இப்பொழுதோ அவர் வருகிறார்“ என்றுகூறினார். அந்த தெரிந்து கொள்ளப்பட்ட வித்தே இன்று உண்மையான சபையாகும், பாருங்கள்.”நீங்கள் அவருக்காக காத்திருக்கிறீர்கள், நான் அவரை உங்களிடம் அனுப்பப்போகிறேன்.“ இதை சொன்னவர் யார்? வார்த்தையானவரே இதை சொன்னார். 141“ஓ. அது வார்த்தையில்லை” என்று நீங்கள் கூறலாம். தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும். ஆபிரகாம் அவரை ஏலோஹிம் என்று அழைத்தான். ஏலோஹிம் என்பதற்கு தன்னில் தானே நிறைந்தவர், சர்வவல்லவர் என்று பொருள். அவர்தான் வார்த்தையாகிய ஏலோஹிம். அவர் எங்கு வருகிறார்? ஆபிரகாமின் வித்திற்கு வருகிறார். ஸ்தாபனத்தோடு அவருக்கு எந்த விதமான சம்பந்தமுமில்லை என்பதை நினைவு கூறுங்கள். அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோடு தரித்திருந்து அற்புதங்களையும், அடையாளங்களையும் காண்பித்தார். இப்பொழுது சிறிதுநேரம் பொருத்திருங்கள். 142அப்பொழுது சாராள் அவனுக்குள்...அந்த சீர்கேட்டைட் பாருங்கள். பாருங்கள்? சாராள் அதை அவிசுவாசித்தாள், தேவன் அவளை அதற்காக கொன்றிருக்கலாம். அது உங்களுக்குத் தெரியுமா அவள் அங்கு வெளியே வந்து ஆபிரகாமை மறுதலித்தாள். அவள் “நான் கிழவியும், என் ஆண்டவன் நூறு வயதுள்ளவரானார் ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு நின்று போய் அநேக வருடங்கள் ஆகின்றன, ஏன் நாங்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து 25 அல்லது 30 வருடங்களாகின்றன. ஸ்திரீகளுக்குள்ள வழிபாடும் 50 வருடங்களுக்கு முன்பே நின்று போயிற்று இப்படியிருக்க எனக்கு இன்பம் உண்டாயிருக்கும் என்று அவர் கூறுகிறாரே'' என்று தன் உள்ளத்திலே நகைத்தாள், அவள் புன்சிரிப்பு செய்யவில்லை-அவள் தன் உள்ளத்தில் சற்று சிரித்தாள் ஆபிரகாம்-அவனுடைய கணவன். அவ்விதமான மனைவிகளாகத் தான் நீங்கள் இருக்க வேண்டும். இருந்தாக வேண்டும். பவுலும் இதையே கூறினான். உங்கள் கணவன்மார்களை இவ்விதம்தான் நேசிக்க வேண்டும். கலப்பினம் செய்வதற்காக அல்ல. பாருங்கள் உங்கள் சிந்தனைகளை நினைவில் கொள்ளுங்கள். நாம் அதைக் குறித்து இன்று பிற்பகலில் காண்போம். 143சாராள் ஆபிரகாமை மிகவும் நேசித்தாள்.“என்னுடைய ஆண்டவன் முதிர்ந்த வயதுமுள்ளவரானார், நானும் கிழவியானவள். எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?'' என்றாள் இவ்விதமாக நினைத்து உள்ளத்திலே நகைத்தாள். தூதனானவர்தான் வார்த்தை என்பதை ஆபிரகாமுக்கு காண்பித்திருந்தார். அவர் சொன்னார் ”சாராள் ஏன் நகைத்தாள்?“ அவளோ, ”நான் நகைக்கவேயில்லை“, என்று மறுத்தாள். அவர், “இல்லை நீ நகைத்தாய்” என்றார். அது கிருபை பாருங்கள், சரி . தேவன் அவளை அங்கே கொன்றிருக்கக் கூடும் ஆனால் அவ்விதம் செய்யவில்லை. மூடத்தனத்தைப் பாருங்கள்! நம் ஒவ்வொருவரையும் அவர் கொல்லக்கூடும். ஆனால் அவா அவ்விதம் செய்கிறதில்லை. சாராளைக் கொல்லுவதென்பது ஆபிரகாமின் ஜீவனையும் எடுப்பது போலாகும், ஏனெனில் சாராள் ஆபிரகாமின் ஒரு பாகமாயிருந்தாள். அவர்கள் இருவரும் ஒருமைப்பட்டிருந்தார்கள்! அதே விதமாக சபையைக் கொல்வதென்பது அவரால் முடியாத காரியம். ஏனென்றால் அது அவருடைய பாகமாயிருக்கிறது. அது வார்த்தை மாம்சமாகிய பாகமாயிருக்கிறது. ஓ “ஆச்சரியமான கிருபை, அதன் சப்தம் எவ்வளவு இனிமையாயிருக்கிறது! ” ஓ , உங்களுக்கு புரிகிறதா? அவரால் அவளைக் கொல்லமுடியாது. அவரால் அவனைக் கொல்ல முடியாது. அவனுடைய ஜீவனை அவர் எடுக்க முடியாது. ஏனெனில் அவள் ஆபிரகாமின் ஒரு பாகமாகயிருந்தாள். சாராள் ஆபிரகாமின் மாம்சத்தின் மாம்சமும், எலும்பின் எலும்புமாயிருந்தாள். பாருங்கள். 144நமது தவறுகளில்.......“நான் தோல்வியுற்றேன்'' என்று கூறாதீர்கள். இல்லை, அது அவ்விதம்.....? ஆபிரகாமும் கூட தோல்விகளை சந்தித்தான், பாருங்கள். அவர் தம் சபையை அழிக்க முடியாது. அதற்தாக அவர் முன் குறிக்கப்பட்ட சபையைக் கொல்ல முடியாது. உங்களுடைய ஜீவனை அவர் எடுக்கமுடியாது, ஏனெனில் நீங்கள் அவரில் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நீங்களே வார்த்தை யாயிருக்கிறீர்கள். அந்த வார்த்தை உங்களில் உள்ளது. அது உங்களில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை போன்ற கனிகளை வெளிப்படுத்தி நிரூபித்திருக்கிறது. தேவனுடைய எல்லா வார்த்தையும்-நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் விசவாசிக்கிறீர்கள். அது உங்களில் உங்கள் மூலமாய்க் கிரியை செய்கிறது. கிறிஸ்துவின் வார்த்தையில் நீங்கள் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். அவர்தான் வார்த்தையென்று நாம் போதிக்கப்பட்டுள்ளோம். நாம் அவருடைய மாம்சத்தில் மாம்சமும், எலும்பில் எலும்பாகவும் இருக்கிறோம் என்று போதிக்கப்பட்டு இருக்கிறோம். அதுதான் காரியம். இப்பொழுது, நாம் வெறொன்றிற்கு வருகிறோம். 145மூரே என்ற மழை முன்மாரியும், உரிமையின் மழையுமாக கடந்து சென்றது. நடந்ததென்ன? முன்மாரியும் கடந்தது. பின்மாரியும் பொழிந்தது. நடந்ததென்ன? சோதோமும், சோதோமியரும் அக்கினிக்கிரையாயினர்! ஆபிரகாமோ வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொண்டான். “இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள். அறுப்பு காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது,களைகளைப் பிடுங்கி அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான்” என்று இயேசு கூறினார். பாருங்கள்? பின்மாரியானது சமீபித்திருக்கிறது. நான் அதைக் குறித்து மிக நன்மையான ஒன்றை வைத்துள்ளதால், நான் இந்தப் பொருளின்மேல் அந்த நேரம்...நான் அதை அறிந்துள்ளேன். பாருங்கள்? 146ஸ்தாபனமும் பெந்தகோஸ்தே என்ற இரண்டு ஸ்தாபனங்களும் ஒன்றாக இணையப் போகின்றன. ஆனால் அன்று ஆபிரகாமோடு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தானது நிலைத்து நின்றது போல இன்றும் வார்த்தை மட்டுமே நிலைத்து நிற்கும். “உங்களுக்கு காதுகளிலிருந்தும் கேட்கவில்லையா? கண்களிலிருந்தும் காணவில்லையா? அன்று நடந்தது போலவே இன்றும் நடக்கும்” என்று இயேசு கூறினார். இக்காலை இயேசு இங்கிருப்பாரென்றால் “லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் என்று எழுதியிருக்க வில்லையா?” என்று நம்மை கேட்க மாட்டாரா? இரண்டு அறுவடைகள் வருவதை நீங்கள் காணவில்லையா? இவையிரண்டும் கடைசி மழைப் பொழிவை பெற்றுக் கொள்ளப் போகின்றனவே! பின் நடக்கப்போவதுஎன்ன? தூதர்களும் கர்த்தரும் மறைந்து போவார்கள். அதன் பின்பு மழையானது பெய்யப்போகின்றது. 147சரி. இப்பொழுது ஊக்கமாய் கவனியுங்கள்.முன்மாரி, பின்மாரி-இந்தப் பொருளைக் குறித்தே நான் பேசிக் கொண்டிருந்தேன். எல்லா அடையாளங்களும் கடைசி காலத்தை சுட்டி காட்டுகின்றன. தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் அதை அறிவீர்கள். இங்கு சற்று நிறுத்தி, நான் சில பெயர்களை குறிப்பிட வேண்டியதாயிருக்கிறது. நான் கடினமாக இருக்க நோக்கம் கொள்ளவில்லை. என் ஜீவியம் முழுவதிலும் நான் அறிந்ததையே உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன், ஆனாலும் கடைசியில் சில காரியங்களை கூறாமல் வைக்க வேண்டியாதயுள்ளது, அவர் என்னை அனுமதிக்கும் வரையில் நான் காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தப் போகிறேன். சகோதரி உட் அதை அறிந்திருக்கிறார்கள். நான் இப்பாகத்திற்கு வந்த பிறகு, அதன் பின்பு அநேக பக்கங்கள் இருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர், “அதை செய்யாதே” என்று கூறினார். சகோதரி உட் அவர்களே, நான் அவ்விதம் செய்யக் கூடாது என்று அவர் எனக்கு சொன்னதை நான் உங்களிடம் சொல்லவில்லையா? ஆகவே, நான் திரும்பிச் சென்று ஜெபித்தேன். அந்த இரவு அவர் எனக்கு தரிசனத்தில், “இப்பாகத்திற்குச் செல், இதை எடுத்து அங்கே பொருத்து. ஏனெனில் அவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. அதற்குரிய நேரம் இன்னும் வரவில்லை, அதை இங்கு பொருத்து' என்று கூறினார். நான் அவ்விதமே செய்தேன். அது தான் சரி. ”பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்“ பாருங்கள். சரி-கீழ்ப்படிதல்.... 148கவனியுங்கள். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். புத்தியுள்ள, புத்தியில்லாத கன்னிகைகளைப் பற்றிய உவமையும் நம்மிடத்தில் உண்டு. புத்தியில்லாத கன்னிகை கலப்பினமாகப் போகிறாள் பாருங்கள். அவளுக்கு வித்து உண்டு. ஆனால் எண்ணெய் இல்லை, அவள் வளர்வதற்கு தகுந்த ஈரம் அங்கு இல்லை. அவள் அங்கு என்ன செய்கிறாள்? பெந்தெகொஸ்தே கூட்டமும் உலக ஸ்தாபனக் கூட்டமும், சுவிசேஷ கூட்டங்களும் ஒன்றாக இணைகின்றார்கள். எதற்காக? (கவனியுங்கள்). சோதோமிற்கு சென்று இந்த அறுவடையை அறுப்பதற்காக. 149ஒரு கிறிஸ்துவ வர்த்தக சபையில் மிகவும் அறிவாளியான, சிறந்த விதமாக படித்த எனது பெந்தகொஸ்தே நண்பரொருவர், அவர்கள் மத்தியில் அத்தியட்ச குருவின் ஆட்சியிலிருக்கும் (Episcopalian preachers) பிரசங்கிகளும் கத்தோலிக்க குருக்களும் அங்கு வந்திருப்பதைக் குறித்து மிகவும் சத்தமிட்டு தேவனுக்கு துதிகளைச் செலுத்தினார். அவர்கள் கன நித்திரை அடைந்திருக்கிறார்களோ என்று நான் அதிசயித்தேன். “ஓ, சகோ பிரன்ஹாமே, நீங்கள் கேள்விப்படாத மகத்தான காரியம் இது, இந்த கத்தோலிக்கரும், எபிஸ்கோப்பலியன் ஜனங்களும், தாங்கள் பரிசுத்த ஆவியைப்பெற்று கொண்டதாகவும், அவர்களும் அந்நிய பாஷையில் பேசுவதாகவும் கூறுகிறார்கள். தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அவர்களுடைய சபை புரட்சிகரமாக மாறிவிட்டது” என்று என் நண்பர் கூறினார்! ஓ என் சகோதரர்களே, அதுதான் அடையாளம் என்பதை நீங்கள் அறியாமலிருக்கிறீர்களா? 150இந்த புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெயை விரும்பி அதை வாங்க போகும் நேரத்தில் தான் மணவாளன் வருகிறார்! ஓ, பெந்தெகொஸ்தேயினரே, உங்களுக்கு நேர்ந்தது என்ன? தேவன் அதை உங்களுக்கு காண்பிக்காவிடில் நீங்கள் பார்க்க முடியாது. அது ஒரு நிச்சயமான காரியம். நீங்கள் ஆரம்பத்திலே முன் குறிக்கப்படவில்லையென்றால் அதை இழந்து போவீர்கள். காத்திருந்து கேட்கிறவைகளாகிய காதுகள் பாக்கியமுள்ளவைகள்; உணர்ந்து கொள்ளும் இருதயம் பாக்கியமுள்ளது, ஏனெனில் காலம் சமீபித்திருக்கிறது. எல்லா அடையாளங்களும் அதையே சுட்டிக் காட்டுகின்றன. பாருங்கள். 151எத்தகைய எழுப்புதல்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். மகத்தான எழுப்புதல்கள், அது பார்வைக்கு நல்லதாய் தோன்றுகிறதல்லவா? “நல்லது, சகோ. பிரன்ஹாமே, நாங்கள் இணைக்கப்பட்டதை பிடித்து கொண்டீர்களே!” என்று நீங்கள் கூறலாம். அங்கேதான் உங்களை பிடிக்க விரும்புகிறேன். எது சரி, எது தவறு என்று நீங்கள் எவ்விதம் அறிந்து கொள்ளப்போகிறீர்கள்? அதற்கு ஒரு வார்த்தையின் பரிசோதனையைக் கொடுங்கள். அது சரியா தவறா என்று கூறுவதற்கு அதுவே சரியான வழியாகும். அதுதான், வார்த்தை பரிசோதனை மாத்திரம் கொடுங்கள். அது வார்த்தையைக் குறித்து என்ன கூறிகிறதென்று நாம் பார்ப்போம். அது ஒரு ஆவியாய் இருக்குமானால் வார்த்தையின் பரிசோதனையைக் கொடுங்கள். அது தேவனுடைய வார்த்தையை மறுதலித்ததானால் அது எதுவாயிருந்தாலும் தேவனால் உண்டானதல்ல. 152கவனியுங்கள்-வார்த்தை பரிசோதனையைக் கொடுங்கள்; என்ன சம்பவிக்கின்றது நாம் பார்ப்போம். மத்தேயு 24ம் அதிகாரம் 35ம் வசனத்தில், இயேசு இதைக் குறித்து நம்மை எச்சரித்திருக்கின்றார். ஒலி நாடாக்கள் நிமித்தம் நாம் சற்று அதைப் பார்ப்போம். இயேசு கூறியதை சற்று கவனமாக செவிகொடுத்து கேளுங்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அந்த இருஆவிகளும் ஒன்று போல இருக்கும் என்று அவர் கூறினார். அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களல்லவா? அது உண்மையாக இருக்குமா? ஆம் ஐயா. மத்தேயு 24:35 இவ்விதமாக கூறுகிறது; “வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” சிறிது நேரம்....நாம் இந்தக் கூட்டத்தை முடிக்க இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நாம் இந்த செய்தியின் மூன்றில் ஒரு பங்கு கூட பிரசங்கிக்கவில்லை. ஆனாலும் நாம் மத்தேயு 24:35யை எவ்விதமாகிலும் படித்தாக வேண்டும். இப்பொழுது, இயேசு என்ன கூறினாரென்பதைக்கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, இந்த இரண்டு ஆவிகளும் மிகவும் நெருங்கியிருந்து,கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். நீங்கள் அதை அறிவீர்கள்,இல்லையா? இப்பொழுது, அது உண்மை யாகுமா? ஆம், ஐயா. மத்தேயு 24:35. எவ்விதமாகிலும் படித்தாக வேண்டும். இப்பொழுது, இயேசு என்ன கூறினாரென்பதைக் கூர்ந்து கவனியுங்கள். வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. (பாருங்கள்?) இந்த இரு ஆவிகளும் மிகவும் நெருங்கியுள்ளன.....அது அவ்விதம் இருந்தாக வேண்டும். அது அவ்விதம் இருக்கத்தான் வேண்டும். இந்த பெந்தெகோஸ்தே ஸ்தாபனமானது உண்மையைப் போல நிச்சயமாக நடிக்கத்தான் வேண்டும். ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே வஞ்சிக்கப்பட முடியாது என்று இயேசு கூறினார். அந்த நினைவு என்னைக் கொல்லு கின்றது. என் பெந்தெகோஸ்தே சகோதரர்களே, நான் ஏன்,எதற்காக செய்தேன் என்பதை உங்களால் காணமுடியவில்லையா? கூடுமானால், அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். பாருங்கள்? நித்திய ஜீவனுக்கென்று தெரிந்து கொள்ளப்பட்டவர்களே இதை பிடித்துக் கொள்ள முடியும். நாம் அதைக் குறித்து நிச்சயமாகப் பார்க்கப்போகிறோம். பாருங்கள்? 153“நல்லது, நீர் செய்வது சரியென்று உமக்கு எப்படி தெரியும்?” என்று நீங்கள் கேட்கலாம். அப்படியானால் வார்த்தையைக் கொண்டு என்னை சோதித்துப்பாருங்கள். உங்கள் ஸ்தாபனத்தையும் வார்த்தையினால் சோதித்துப் பாருங்கள். அப்பொழுது யார் உண்மையென்று தெரியும். வேதம், “எல்லாவற்றையும்” நிரூபித்துப் பார்த்து.....'' என்று கூறுகின்றது. “இவ்விதம் ஞானஸ்நானம் கொடுப்பதினால் எந்தவித வித்தியாசமும் உண்டாவதில்லை” என்று நீங்கள் கூறலாம். அது வித்தியாசத்தை உண்டாக்குகிறது! ஏவாளிடம் சாத்தான் நிச்சயமாய் அதைத் தான் கூறினான். ஒரு நல்ல கிறிஸ்தவ மனிதனால் அப்போஸ்தலர் 19ல் சிலபேர் யோவானின் ஞானஸ்நானம் ஏற்கனவே பெற்றிருந்தார்கள். பவுல், அவர்களைப் பார்த்து, “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?,” என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான் (பாருங்கள்), அதற்கு அவர்கள்; இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அந்த மகத்தான மனிதன் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல், “இன்றைக்கு அது கிரியை செய்யாது, ஏனெனில் யோவான் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தான். (ஆங்கிலத்தில் மனந்திரும்புதலுக்கென்று ”unto'' என்று இருக்கிறது —- தமிழில் மனந்திரும்புதலுக்கு ஏற்ற—-என்று இருக்கிறது —- தமிழாக்கியோன்). பாவமன்னிப்புக்கென்றல்ல; பலியானது அப்பொழுது செலுத்தப்படாமலிருந்ததே“ என்றான். ”அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.“ 154தேவன் மோசேயைப் பார்த்து, “உன் கால்களில்இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு” என்றார். அதற்கு மோசே, “கர்த்தாவே, நான் இன்று காலை அப்பாத ரட்சைகளை சற்று இறுக்கமாக கட்டி விட்டேன். என்னுடைய தலையிலிருக்கும் தொப்பியை கழற்றுவதின் மூலம் நான் அதிக மரியாதையை உமக்குக் காட்டுவேன்'' என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? அது கிரியை செய்திருக்காது. அவர் பாதரட்சை என்று தான் கூறினாரேயன்றி தொப்பி என்று கூறவில்லை! தாயாகிய ஏவாளிடம் சாத்தான் வெள்ளையடிக்க முயற்சித்தது போன்று இருக்கிறது அது. ஒவ்வொரு வார்த்தையும், தேவன் அதை எழுதிய பிரகாரமாகவே சத்தியமாயிருக்கிறது. அந்த விதமாகத் தான் அதை நான் விசுவாசிக்கிறேன். “நல்லது நாங்களும் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்” என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் தொடர்ந்துசெல்லுங்களேன், அது சரி. நீங்கள் குருடாயிருந்தால் தொடர்ந்து சென்று இருட்டில் தடுமாறுவீர்கள். சகோதரனே, இந்த தேவ வார்த்தை தான் உன்னை நியாயந்தீர்க்கப் போகிறது, உன்னுடைய கோட்பாடல்ல. ஓ, அது பார்ப்பதற்கு அழகாயிருக்கும். ஆம் ஐயா. அது பார்ப்பதற்கு அழகாயிருக்கும். 155“நல்லது சகோ. பிரன்ஹாமே, சற்று பொறுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர்கள் சென்று வியாதியை சொஸ்தப்படுத்துகிறார்களே” என்று நீங்கள் கூறலாம். ஆம், ஐயா. நானும் கூட அதை செய்கிறேன். “அவர்கள் அந்நிய பாஷைகளைப் பேசுகிறதை பார்த்திருக்கிறேன்” என்றும் கூறலாம். ஆம். ஐயா. நான் கூட பேசுகிறேன். அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஆரம்ப அடையாளம் என்று தேவனுடைய வார்த்தையைக் கொண்டு யாரும் நிரூபிக்க முடியாது. அவ்விதமாக நான் ஒரு போதும் விசுவாசித்ததில்லை. அந்த மனிதன் வந்து அதைச் செய்யவேண்டுமென நான் விரும்புகிறேன். அதை குறித்து நான் இந்நாள் மட்டும் சவால் விடுத்திருக்கிறேன். அந்நிய பாஷை பேசுதலை நான் விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா; ஆனால் சூனியக் காரனும், மந்திரவாதிகளும் பிசாசின் உதவியினால் அந்நிய பாஷைகளைப் பேசி மொழி பெயர்க்கின்றதையும் இயேசு கிறிஸ்துவை மறுதலிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்நிய பாஷைகளைப் பேசி வேறொரு மனிதனின் மனைவியோடு வாழும் மனிதனையும் நான் பார்த்திருக்கிறேன். நான் தரிசனத்தைக் கண்டு அவ்விதமிருந்தவனை முகமுகமாக சந்தித்து அவனுடைய ஜீவியத்தைக் குறித்து சாட்சி பகரச் செய்தேன். அதை பரிசுத்த ஆவியென்று நீங்கள் அழைக்க முடியுமா? 156“நல்லது சகோ. பிரன்ஹாமே. பரிசுத்தஆவி அந்நிய பாஷைகளைப் பேசுவதை நீங்கள் விசுவாசிக்கிறதில்லையா?” ஆம் ஐயா, விசுவாசிக்கிறேன். ஆனால் அதற்கு வார்த்தையின் பரிசோதனையைக் கொடுங்கள்! பாருங்கள்? பின்பு கவனியுங்கள். யந்நேக்களும், யம்பிரேக்களும் கூட அற்புதங்களை செய்தார்கள். அது சரி. அவ்விதம் அவர்கள் செய்தார்களா? யந்நேக்களும், யம்பிரேக்களும்...ஆம், ஐயா-எகிப்திற்கு மோசே சென்ற போது, அடையாளம் என்ற முறையில் செய்த எல்லாகிரியைகளையும், அந்த இரண்டு மந்திரவாதிகளாலும் செய்ய முடிந்தது. இரண்டுபிசாசுகள்—- மோசே, “வண்டுகள் உண்டாகட்டும்” என்று கூறுவான். அவர்களும் வண்டுகள் உண்டாகட்டும்“ என்று கூறுவார்கள். மோசே, “கோலை கீழே போடு” என்பான். அவர்களும், “கோலை கீழே போடு” என்பார்கள். மோசே, “சர்ப்பம்” என்று கூறுவான். அவர்களும். “சர்ப்பம்” என்றுகூறுவார்கள். அது சரி! அவர்களால் அற்புதங்களை செய்யமுடியும். கடைசி நாளில் பிசாசுகள் எழுந்து அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து ஜனங்களை வஞ்சிக்கும் என்று வேதம் கூறுகிறது. அது ஒரு கடினமான அவலட்சணம், சகோதரனே, ஆனால் நீ சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும். 157“அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்பார்கள். அதற்கு அவர், “அக்கிரம் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்று இயேசு கூறினார். அக்கிரமம் என்றால் என்ன? தவறு என்று அறிந்தும் அத்தவறை எவ்வாறாயினும் நிறைவேற்றுவதே அக்கிரமமாகும், தேவனுடைய வார்த்தை சரியென்று அறிந்திருந்தும், பின்பு ஏன் நீங்கள் மாய்மாலம் செய்கின்றீர்கள்? இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் எடுத்து மீதியை மறுதலிக்கும் உங்கள் ஸ்தாபனங்களினாலல்லவா அவ்விதம் செய்கிறீர்கள். “அக்கிரம் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்; நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை.” இப்பொழுது, நீங்கள் இப்பொழுதே நரகத்தைக் கடந்து....அல்லது....பாருங்கள்? 158இப்பொழுது, இது உண்மை என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். இயேசு இவ்விதமே கூறினார். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றார்கள்; “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல” என்று வேதம் கூறுகின்றது. என்ன? கடைசி நாளில் இவர்கள் ஆவிகளாக திரும்பவும் ஜனங்களின் விடுதலைக்குச் சற்று முன்பாக காணப்படுவார்கள். அல்லேலுயா! விடுதலையின் நேரம் இங்கு இருக்கிறது! மத்தெயு 24ல் அவர்கள் கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே, இதை கிரகித்துக் கொள்வார்கள். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்-கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் ...... “யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல, தேவ வார்த்தையின் சத்தியத்தைக் குறித்து துஷ்ட எண்ணமுடைய இம்மனிதர்களும் எதிர்த்து நிற்பார்கள்.'' வார்த்தையே சத்தியம். அது சரியா? இது ஏடெடுக்கப்பட்ட பாலில்லை, நண்பர்களே! பாருங்கள். பாருங்கள்? 159அவ்வளவு நெருக்கமாக இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க முடியாது. வித்துக்கள் அங்கு இழக்கப்படுகின்றன வென்றால் அவை இழக்கப்படுவதற்கென்றே தெரிந்து கொள்ளப்பட்டவைகள். அவை முன்மாரியில் சென்ற விதைகள். ஸ்தாபனங்கள் விதைக்கப்பட்டன; வார்த்தையும் விதைக்கப்பட்டது, பாருங்கள். கடைசி நாளில் எழும் யந்நேக்களும், யம்பிரேக்களும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து ஜனங்களை வஞ்சிக்கும் என்று வேதம் குறிப்பிடுகின்றது. அப்படியானால், நீங்கள் வித்தியாசத்தை எவ்விதம் கண்டுபிடிப்பீர்கள்?—- வார்த்தையின் மூலமாகவே! 160“வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லா விட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. அவர்கள் ஏதாவதொன்றை மறுதலித்தால்.......பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை உபயோகித்து ஞானஸ்நானம் கொடுத்த ஒருவரை வேதத்தினின்று எடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம். பின் ஏன் அவ்விதம் நீங்கள் செய்கிறதில்லை?—-கோட்பாடினாலும், கலப்பினத்தினாலும் மரித்த பிள்ளைகள், வேசித்தனத்தில் பிறந்த பிள்ளைகள் கனியற்று இரண்டு தரஞ் செத்து வேரற்றுபோன மரங்கள். “என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.” “வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்று இயேசு கூறினார். இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள், நான் ஏன் வார்த்தையில் மட்டும் நிலை நிற்கிறேன் என்று. 161பெண்கள் தங்கள் தலைமுடியை கத்தரிப்பது சாபமல்ல என்று வேதத்தில் எங்காவது காட்ட முடியுமா? அதுதான் காரியம். ஆனால் நீங்கள் இதைக் குறித்து சாக்குபோக்கு சொல்லுகிறீர்கள். “ஓ, சகோ. பிரன்ஹாம் ஒரு தீர்க்கதரிசிதான். அவர் ஜனங்களோடு பேசி, அவர்கள் பாவங்களை உணர்த்தி, வியாதிகளை சுகமாக்கும் வரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் உபதேசிப்பதை விசுவாசிக்க முடியாது” என்று ஜனங்கள் கூறுகிறார்கள். நல்லது, நீங்கள் மாய்மாலக்காரராயிருக்கின்றீர்கள். உங்களுக்குக் காரியம் புரிகிறதில்லை! வார்த்தையானது தீர்க்கதரிசிக்கு வருகிறது என்று வேதம் கூறவில்லையா? நான் என்னை தீர்க்கதரிசிஎன்று அழைத்துக் கொள்கிறதில்லை. நான் தீர்க்கதரிசி அல்ல. ஆனால் நீங்கள் தாம் அவ்விதம் என்னை அழைக்கிறீர்கள். நீங்கள் சொன்னதையே நான் சொல்கிறேன்.அப்படியிருந்தும் எனக்கு முதுகைக் காட்டி இவ்விதமாய் கூறுகிறீர்கள். அவ்விதம் சொல்லவில்லை என்று மறுதலிக்காதீர்கள். நீங்கள் அவ்விதம் சொன்ன காரியங்களை நான் ஒலி நாடாக்களில் பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் அதை அறியீர்கள், அல்லவா? நான் அவ்விதம் கூறவில்லை என்று ஒரு முறையாவது சொல்லிப் பாருங்கள்; நீங்கள் அவ்விதம் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அப்பொழுது, உங்கள் சொந்த சப்தத்தையே நீங்கள் திரும்பக் கேட்கும்படி அதை நான் இயக்கிக் காண்பிப்பேன். 162யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றார்கள்—-அவர்கள் அற்புதங்களைச் செய்தார்கள். ஆனால், உண்மையான வார்த்தை எங்கிருந்தது? அவர்கள் அற்புதங்களைச் செய்தவர்கள். அவர்கள் அற்புத வரிசையில் எதையாகிலும் செய்யக் கூடியவர்கள்...அங்கே அபிஷேகிக்கப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகள்-அல்லது ஒரு தீர்க்கதரிசியும் அவனுடைய உதவியாளனும் அங்கு நின்றிருந்தனர். அங்கு தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான மோசே, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்ற வார்த்தை யோடும் அவனுடைய உதவியாளனோடும் நின்று கொண்டிருந்தான். விடுதலைக்குச் சற்று முன்னர் எல்லாக் காரியங்களும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டன. அது சரியா? அற்புதங்களை செய்த அந்த போலி கிரியைக்காரர்கள் அங்கேதானே மரித்துப்போனார்கள். 163அவர்கள் அங்கு என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்? அவர்கள் பின்மாரியை உற்பத்தி செய்ய முயற்சித்தார்கள். அறிவீனம்! பின்மாரியானது உலகத்தையே அசைக்கும். முன்மாரியானது விதைகளை விதைத்து விட்டது. அதுசரி. ஆனால் பின்மாரியானது உலகத்தை அறுவடை செய்யுமே, சகோதரனே. இந்த பின்மாரி மழையானது ஒரு இணைப்பைக் கொண்டு வரும் மழையாயிருக்கிறது. பெந்தெகோஸ்தேயினரும், மற்ற எல்லாக் கூட்டத்தார்களும் ஒன்றாக இணைந்து வார்த்தையைக் கேட்கக் கூடாதவாறு கதவுகளை அடைத்து உங்களுடைய வாயைக் கூட திறவாதபடி செய்யப் போகிறார்கள். அது சரி. அவர் வருகின்ற நேரம் அதுவே. அவர் வரும்போது அது தான் நடக்கும். அப்பொழுது தான் நீங்கள் மழையக் காண்பீர்கள். ஓ! அது மட்டும் அமைதியாயிருந்து அது கடந்து போக விடுங்கள், பாருங்கள்? 164ஆனால், தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறதாயிருக்கிறபடியால் வார்த்தையானது அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசியினிடத்தில் இருக்கிறது. தேவன் தம்முடைய முறைமைகளை ஒருபோதும் மாற்றுவதில்லை. இல்லை, இல்லை. அவர் தம் முறையை ஒருபோதும் மாற்றினதேயில்லை. அது என்ன? இங்கு அந்த மூன்று திரும்பவும் நிலைகொண்டிருக்கிறது. மோசேயின் நாட்களில் யந்நேயும், யம்பிரேயும் அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்தார்கள். அதுபோல சோதோமில் இரண்டு பேர் ஜனங்களின் கண்களைக் குருடாக்கினார்கள். பாருங்கள், அங்கு தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான ஆபிரகாம் தன் துணைவியான சாராளோடு நிலைகொண்டிருந்தான். அது சரியா? அதே விதமாக மோசே, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த யந்நேயுக்கும், யம்பிரேக்கும் எதிராக தன் உதவியாளனோடு நிலை கொண்டிருந்தான். ஓ, நான் அந்த பொருளின்மேல் இன்னும் இரண்டு மணி நேரம் பிரசங்கிக்க விரும்பினேன். 165சரி. ஆதியாகமம் 1ல் கூறப்பட்டவாறு அந்தந்த ஜாதிவிதை அந்தந்த ஜாதியைப் பிறப்பிக்கும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது எப்பொழுதும் அவ்விதமே. அங்கேதான் எல்லா மாதிரிகளும் காணப்படுகின்றன. ஒரு மனிதன்,சபையானது (மணவாட்டி) உபத்திரவத்திற்குள் போகும் என்று கூறுவானானால் அதற்கேற்ற தேவ வித்தை எங்கிருந்து பெறப் போகிறீர்கள் என்று நான் அதிசயிக்கிறேன். “நல்லது அது அவ்விதம் கூறியிருக்கிறதே, அவர்கள் அவ்வாறு செய்யப் போகிறார்கள்”......என்றெல்லாம் கூறத் தொடங்குவீர்களென்றால், மழையானது முன்னர் மற்ற ஜாதிகளின் மேல் பொழியப்பட்டதை நீங்கள் கவனிக்க வில்லையா? நியாயத்தீர்ப்பானது பூமியைத் தொடும் முன்பு நோவா பேழைக்குள் காக்கப்பட்டானே, சோதோம் அழியும் முன்னர் லோத்து வெளியே கொண்டு வரப்பட்டானே! பாருங்கள்? நாம் நிச்சயமாக உபத்திரவத்திற்குள் செல்லுகிறதில்லை; ஆனால் எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கடையப் போகிறோம். நீங்கள் ஏன் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்? இயேசு கிறிஸ்து என்னுடைய உபத்திரவத்தில் என்னோடு இருந்தாரே, அங்கு தான் என் உபத்திரவம் நடைபெற்றது. ஆம். நான் அவரை ஏற்றுக்கொண்டதால் விடுதலையாக்கப்பட்டேன். “இரத்தத்தின் அடையாளத்தை அங்கு பார்க்கும் போது நான் உன்னைக் கடந்து செல்வேன்'' என்று தேவன் கூறினார். அது தான் சரி. மோசே,இஸ்ரவேலரோடு உபத்திரவத்தினின்று காப்பாற்றப்பட்டு பத்திரமாயிருந்தான். அது சரி. 166சரி. ஒவ்வொரு வித்தும் தன்தன் ஜாதியின்படியே வர வேண்டும். தேவன் மனிதனை தம்முடைய சாயலாகவும், ஜாதியாகவும், அவருடைய வார்த்தையாகவும் இருக்க இவ்வுலகத்தில் அவனை உண்டாக்கினார். தேவன் கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்தினார். அது என்ன? தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அது தன்னுடைய ஜாதியின்படியே பிறப்பிக்கப்பட்ட ஒரு மனிதன், பாருங்கள்? வார்த்தையாகிய தேவன்....கிறிஸ்து வார்த்தை என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? வார்த்தையானது கிறிஸ்துவிலிருந்த போது, ஒரு மனிதன் அவர் மூலமாய் தேவனையே வெளிப்படுத்துவதாயிருந்தது; தேவன் ஆதியிலே மனிதனை தம்முடைய சாயலாக சிருஷ்டித்தார்; அந்த விதமான மனிதனைத் தான் தேவன் இன்றும் சிருஷ்டிக்கிறார். வேத கல்லூரி என்னும் அடைக்காக்கும் கருவி ஒரு கூட்ட கலப்பினத்தை உண்டாக்குகின்றது. பாருங்கள். ஆனால் தேவன் ஒரு மனிதனை அழைப்பாரென்றால், அவனை அவர் சாயலாகப் படைத்து வார்த்தையை அவனில் ஜீவிக்கச் செய்கிறார். அது தான் சரி. அவன் தான் தேவனுடைய மனிதன்; அவன் அவர் சாயலாக, அவரைப் போன்றே இருக்கிறான். நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான் என்று இயேசு கூறினார். தேவன் மனிதனை தமது சாயலாக, தமது ஜாதியின்படியே சிருஷ்டித்தார். 167அவருடைய ஜாதி என்றால் என்ன?-அவருடைய ஜாதி வார்த்தையாயிருக்கிறது. அவரே அந்த வார்த்தையாயிருக்கிறார், ஆக, ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பானானால், அவன் எவ்விதம் தேவ சாயலாயிருப்பான்? இக்கேள்வியை நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். 'வார்த்தையானது அவருடைய சாயலை வெளிப்படுத்துகிறது-அப்படியெனில் ஒருவன் தேவனுடைய வார்த்தையை மறுதலித்து, அவனால் தேவ சாயலாக இருக்க முடியுமா?“ தேவனுடைய வெளிப் படுத்தப்பட்ட சாயலாக இருக்கிறேன் என்பவர்கள், ”ஓ! அது அவ்வித அர்த்தம் கொள்ளவில்லை, நான் தான் அதைகூறினேன். ஆனால் உண்மையாக அவ்விதம் நான் அதை குறிப்பிடவில்லை. நான் அங்கு தவறுதலாய் கூறிவிட்டேன்“ என்றெல்லாம் கூறுகிறார்கள். அது பதராயும் ஏவாளுக்கு பிசாசு கொடுத்த கலங்கின தண்ணீராயுமிருக்கிறது. அவ்விதம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் அவன் செய்ய முடியாது. இல்லை, ஐயா. ஏனெனில் அவர்கள் அவனைப் புறம்பே தள்ளி விடுவார்கள். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். ”எங்களோடு வந்து ஐக்கியம் கொள்ளுங்கள்“ என்று கூறுகின்றார்களா? ஒன்றிலும் நாங்கள் ஐக்கியம் கொள்ள மாட்டோம். நீங்கள் மறுபடியும் பிறந்து தான் ஆகவேண்டும். சேர்ந்து கொள்வதல்ல! நாங்களோ புது சிருஷ்டிகள். 168நாம் பூமியிலே அவருடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருக்கும்படி ஆம், நாம் அவருடைய சொந்த சாயலாகவும், அவருடைய ஜாதியாகவும் இருக்கிறோம். இயேசு தேவனுடைய தற்சொரூபமாயிருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நாம் யாராயிருக்கிறோம்? நாம் தேவ குமாரராய் இருக்கிறோம். நாம் சபையிலே வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக (கிறிஸ்துவின் ஆவியின் சரீரமாக) இயேசு பூமிலிருந்த போது செய்த அதே கிரியைகளை தொடர்ந்து செய்கிறோம். பாருங்கள்? அதுவே அவருடைய ஜாதியின்படி இருக்கும் ஜாதியாகும். நீங்கள் லூத்தரன் என்ற ஜாதியினின்று லூத்தரனைப் பெற்று கொள்ளலாம். அதேவிதமாக மெத்தோடிஸ்டு, கத்தோலிக்க மார்க்கம்,பெந்தெகோஸ்தே, ஒருத்துவம், திரித்துவம் என்ற ஜாதி களினின்று அந்தந்த ஜாதிகளைப் பெற்றுகொள்ளலாம். ஆனால் நீங்கள் தேவனுடய ஜாதியாயிருப்பீர்களானால் அது வித்தியாசப்பட்டதாயிருக்கிறது. நீங்களே வார்த்தையின் தற்சொரூபமாயிருந்து வார்த்தையை வெளிப்படுத்துகிறீர்கள். ஓ! தண்ணீர் அதின் மேல் பொழிந்தவுடன் அது கிரியைச் செய்யத்தான் வேண்டும். 169தேவன் மனிதனை தமது சாயலாகவே சிருஷ்டித்தார்...இன்னும் தொடர்ந்து பேசிட எனக்கு நேரமில்லை என்றே நான் நினைக்கிறேன்; அது விசேஷமானது...தேவனுடைய வார்த்தைகள் யாவும் யோக்கியங்களே...பாருங்கள்? நான் இன்னும் ஆறில் ஒரு பங்கு கூட பேசி முடிக்கவில்லை..... ஹும். சரி. நாம் இங்கே நிறுத்துவோம். நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? இன்று பிற்பகல் உங்களில் எத்தனை பேரால்வரமுடியும்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள்....நல்லது. உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்க நான் விரும்பவில்லை. நான்..... உங்களைக் களைப்புறச் செய்ய விரும்பவில்லை. நான்....அங்கு ஒலி நாடாக்களைப் பதிவு செய்யும் பையன்கள்...நான் இன்னும் ஒரு நிமிடத்தில் நேரத்தில் நிறுத்துகிறேன்...சரி, ஐயா. 170சரி. நாம் கடைசியாக பேசின பொருள்: தேவன் மனிதனை தம்முடைய சாயலாக தமது ஜாதியின்படியே சிருஷ்டித்தார். தேவன் மனிதனை தமது ஜாதியின்படியே சிருஷ்டித்தார். நீங்கள் அதை புரிந்து கொண்டீர்களா? அவருடைய ஜாதியான ஒரு மனிதன். நல்லது. எத்தகைய ஜாதியான மனிதன். அவன் அவர் மாம்சத்தில் வந்த பொழுது எத்தகைய ஜாதியாயிருந்தாரோ அத்தகையவன் தான் அம்மனிதன். அவ்விதமாகத்தான் அவ ர்உண்டாக்குகிறார். அது சரியா? மனிதனை தமது ஜாதியின்படியே....ஆமென். அது சரி,அல்லவா? அவன்தான் அவருடைய ஜாதியான மனிதன். ஹும். ஒரு சமயம் அவர், “என் இருதயத்திற்குகந்த தாசன்” என்று தாவீதைக் குறித்து கூறினார். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? தேவனுடைய ஆவி தாவீதிலிருந்தது. அவன் ஒரு புறம்பாக்கப் பட்ட ராஜாவாயிருந்தான். அபிஷேகம் பண்ணப்பப்பட்டதெல்லாம் புறம்பாக்கபட்டிருக்கும். புறம்பாக்கப்பட்ட ராஜாவாகிய தாவீது...மலையின் மேல் ஏறிச் சென்றபோது...அடுத்த மூன்று நிமிடங்களுக்கு நான் இதைப் பிரசங்கிக்கட்டும். தாவீதின் சொந்த குமாரனும், ஜனங்களும் அவனை புறம்பாக்கினபோது-அவனை சிங்காசனத்தினின்றி புறக்கணித்தபோது-அங்கு சிமேயி வந்து அபிஷேகிக்கப்பட்ட ராஜாவின் மேல் துப்பினான். இவன் உபதேசத்தில் முடமானவனாக அங்கு வந்து (அவன் நொண்டியாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது) ராஜாவின் மேல் துப்பினான். கிறிஸ்துவை கவனியுங்கள். கிறிஸ்துவின் மேலும் துப்பினார்கள்! தாவீதின் பக்கத்திலுள்ள பலசாலி, (தாவீதின் பிரதிநிதியும், தூதனாகவும் இருந்தவன்) பட்டயத்தை உருவி, “அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமே” என்றான். 171அதற்கு தாவீது, “உன் பட்டயத்தை உறையிலே போடு; அவன் என்னை தூஷிக்கட்டும்,” என்று கூறி எருசலேம் மலையின் உச்சியில் சென்று திரும்பிபார்த்து புறக்கணிக்கப்பட்ட அவன் அழுதான். 800 வருடங்களுக்குப் பிறகு தாவீதின் குமாரனானவர், தாவீதில் ஒரு பங்காக இருந்த ஆவியானவர், அதே மலையின் மேல் நின்று எருசலேமைப் பார்த்து அழுதார். அவரும் புறம்பாக்கப்பட்டு துப்பப்பட்டு வேடிக்கைக்குரியவரானார். அது சரியா? அங்கு அந்த கல்வாரி மலையின் மேல் தூதனானவர் அவரோடு நடந்து வந்து, “அந்த நாயின் தலையை நான் வாங்கிப் போடட்டுமே” என்று இயேசுவிடம் கூறுவதைப் போன்றும், இயேசு அதற்கு, “அவனை விட்டு விடுங்கள்'' என்று கூறுவதைப் போன்றும் நான் யூகிக்கின்றேன். ஆனால் எனக்கருமையானவர்களே, ஒரு நேரம் வருகிறதாயிருக்கிறது. ஆனால், திரும்ப வந்து ராஜ்ய பாரத்தைக்கட்டிக் கொண்ட தாவீதைப் பற்றி என்ன? கதையானது மாறிவிட்டது. தாவீது தன்னு டையராஜரீகத்தில் வந்தான். இந்த சிமேயி என்னும் மனிதனோ கிருபைக்காக கூக்குரலிட்டான்.நிச்சயமாக இயேசு தம்முடைய வல்லமையில் என்றாவது ஒரு நாள் வருவார். அப்பொழுது சிரிப்பொலிகள் அடங்கி மாறி விடும். அது தான் சரி. அவர்களை இப்பொழுது அவ்விதமாகவே விட்டுவிடுங்கள். 172“தாவீதே, நீ என் இருதயத்துக்குகந்த தாசன்”என்று தேவன் கூறினார். தேவன் ஒரு மனிதனை சிருஷ்டிக்கும் போது அவர் சாயலாக சிருஷ்டிக்கிறார். “உமக்கு விரோதமாய் நான் பாவம் செய்யாதபடிக்கு, உம்முடைய வார்த்தையை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்'' என்று தாவீது கூறினான். அவனுக்குத் தேவையாயிருந்ததெல்லாம் மழைதான். அவன் அந்த மழையைப் பெற்றிருந்திருப்பானென்றால், அவனுக்கு எல்லாம் சரியாயிருந்திருக்கும். ஆனால் பரிசுத்த ஆவி இன்னுமாய் அவனுடைய நாட்களில் பொழியப்படாமல் இருந்தது. அவன் வார்த்தையை பெற்றவனாயிருந்தான். அவனுக்குள் அந்த வார்த்தை இருந்ததை அவன் அறிந்திருந்தான். ஆகவே தான் அவன், ”கர்த்தாவே, அது வெளிவந்து எவ்விதம் அது நடந்து கொள்ள வேண்டுமோ அது நேரிடாதபடி நான் அதை என் இருதயத்திலே வைத்து வைத்தேன்', என்று கூறினான். ஆனால் இயேசு வார்த்தையின் வெளிப்பாடாய் வந்த பொழுது, வித்திலிருந்த ஜீவனை எடுத்து அதை வார்த்தைக்கு திரும்பச் செய்தார். ஆவியின் அனுக்கிரகம் இல்லாமலே தாவீதின் ஆத்துமா நிரம்பி வழிந்தோடினதென்றால், நம்முடையவைகள் எவ்வளவு அதிகமாக இருக்கவேண்டும்? ஆமென். அவர் அற்புதமானவரல்லவா. அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அற்புதன் அல்லவோ! அற்புதன் அல்லவோ! அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு கண்டோம் கேள்விப்பட்டோம், வேதத்தில் வாசிக்கின்றோம் அற்புதன் அல்லவோ கிறிஸ்தேசு எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள்? ஓ! அவர் அற்புதமானவர். அவர் அவ்விதமல்லவா? 173நண்பர்களே, இது கடினமான உபதேசம். நான் அவ்விதமாயிருக்க நோக்கம் கொள்ளவில்லை. ஆம். நீங்கள் அதை புரிந்து இருக்கும் என நம்புகிறேன். பாருங்கள்? நான் ஏன் அவ்விதம் நடந்து கொண்டேன் என்பதைத் தான் இன்று உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன். நாம் கலைந்து போகும் முன்பு, இப்பொழுது பேசினவைகளைக் குறித்த ஒரு சிறுபொருளடக்கத்தைச் சிந்திப்போம். என்னுடைய நோக்கம் தேவனுடைய வார்த்தையாகிய அவரைப் பிரியப்படுத்து வதேயாகும். நான் எல்லாவற்றிற்கும் செவி கொடாமலிருந்து தேவனுடைய வார்த்தையை விசுவாசியாதிருப்பதைக் காட்டிலும், எல்லா தேவனுடைய வார்த்தைக்கும் செவிகொடுத்து தேவனைப் பிரியப்படுத்தவே நான் விரும்புகிறேன். அவருடைய வார்த்தையை அறிந்து, அவருடைய வார்த்தையினாலே அவருக்கு ஊழியம் செய்து அவரை பிரியப்படுத்துவதையே என் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். நான் மற்றவற்றிற்கு விரோதமாக...தேவனுடைய ஆவியினால் பிறந்து தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டத்திலிருக்கும் இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும், ஒருவேளை முன்பு மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தகோஸ்தே போன்ற அமைப்புகளில் இருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, “அவர்களிடத்தில் போவோம்” என்று கூறுவீர்களானால், அதைத் தான் நீங்கள்செய்யக்கூடும். ஏனெனில் நீங்கள் விதையை தூவுவீர்களானால் அங்கே சில ஆத்துமாக்கள் இருக்கும்; அறுவடையானது ஏதாகிலும் ஒருநாளில் நடைபெறும். அதில் சில, “அவன் ஒரு ஏமாற்றுகாரனேயன்றி வேறல்ல” என்று சொல்லக் கூடும்; நம்முடைய ஆண்டவராகிய இயேசுவைக் குறித்தும் அவ்விதமே கூறினார்களல்லவா? ''அதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது“ என்று கூறினார்கள், நல்லது. அப்படியானால் என்னோடு ஆராய்ந்து பாருங்கள் என்றார். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? ”அவன் ஒரு ஏமாற்றுகாரன்'' என்று கூறினார்கள். பாருங்கள்? “அப்படியானால் வார்த்தையில் ஆராய்ந்து பாருங்கள்,'' என்று கூறினார். பாருங்கள். அது வார்த்தையாயிராமலிருக்குமானால் வஞ்சிக்கிறதாய் இருக்கும். பாருங்கள்? உங்களுடைய வேதசாஸ்திரம் தேவனுடைய வார்த்தையினின்று வித்தியாசமாயிருக்குமானால்? அது சரியானதல்ல. பாருங்கள்? 174வேறு சிலர் “நல்லது. நான் சற்று காலம் அதை பின்பற்ற முயற்சிப்பேன்” என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நெருக்கப்பட்டு பலனிழந்து போவார்கள். அது சரி. பாருங்கள்? ஆனால் நீங்கள் உண்மையிலே உங்களைத் தாழ்த்தி, “கர்த்தாவே, இனி நானல்ல, நீரே இது முதல் எனக்கு எல்லாம்” என்று உங்களை வெறுமையாக்கினால், அப்பொழுது நீங்கள் நூறாய்ப் பலனளிப்பீர்கள். பாருங்கள்? அது அனைவருக்கும் விடுதலையையும் நீதியையும் கொண்டு வரும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா. இந்த சத்தியத்திற்காக நின்று அவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்க என் ஜீவனையும் பணயம் வைப்பேன் என்று கர்த்தரிடம் நான் பொருத்தனை செய்திருக்கிறேன். நான் அவ்விதமாகவே இன்னும் தொடர்ந்து நிறைவேற்றுவேன். அது எனக்கு ஒரு மகத்தான காரியம். அவ்விதம் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறதில்லை, ஆனால் அவ்விதம் தான் நிறைவேற்ற வேண்டுமென்றிருந்தால், அன்று சிங்க கெபியிலும், சிலுவைகளிலும், வாளாலும், மரித்து ஸ்தாபனங்களினின்று உதைத்துத் தள்ளப்பட்டு, செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக் கொண்டு பரதேசிகளைப் போல் அலைந்து திரிந்த பரிசுத்தவான்கள் தங்கள் இரத்தத்தை இப் பூமியில் கலந்தது போல நானும் என் இரத்தத்தை இவ்வுலகோடு கலந்து விடுவேன். இயேசுகிறிஸ்துவின் சீஷர், தாங்கள் அவருடைய நாமத்திற்காக அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால் சந்தோஷமடைந்தது போல நானும் கிறிஸ்துவுக்காக நிந்தையை அனுபவிப்பதை ஒரு மகத்தான பாக்கியமாக கருதுவேன். துன்பத்தை அனுபவிக்க அவர்களால் முடிந்தது. நான் துன்பம் அனுபவிக்க விரும்பவில்லை. அவ்விதமே ஒவ்வொருவரும் இருப்பார்கள். “சகோதரர்களே, வாருங்கள் ஒருமித்துபோவோம்” என்று எல்லா ஸ்தாபனங்களோடு நான் என் கரங்களை கோர்த்துக் கொள்ள விருப்பமாயிருக்கிறேன். அவ்விதம் செய்வேனானால், தேவனுடைய கரங்களினின்று என்னுடைய கரத்தை நான் பிடுங்குகிறவனாக இருப்பேன். அவ்விதம் செய்வது எனக்கு தூரமாயிருப்பதாக. நான் தனியாக நிற்பேனானால், அவரோடும், அவருடைய வார்த்தையோடு மட்டுமே நிற்பேன். 175“நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்; வேறஸ்திபாரம் மணல் தான்” என்று எடி ப்ரூயிட் என்பவர் கூறினார். கிறிஸ்துவே வார்த்தையிலிருக்கிறார். “ஆதியிலே.....” என்ன அது? ஒவ்வொரு வித்தும் அதனதன் ஜாதியின்படி தங்களைப் பிறப்பித்தது. ஸ்தாபனத்தின் வித்து ஸ்தாபனத்தை பிறப்பிக்கும், பெந்தகோஸ்தே, பாப்டிஸ்டு வித்துக்கள் திரும்பவும் அவைகளையே பிறப்பித்தன—-தொடர்ந்து ஸ்தாபனங்களாகவே பிறப்பிக்கப்பட்டன. கர்த்தருக்குச் சித்தமானால் இன்று மதியம் அவைகள் எவ்விதம் ஆரம்பிக்கப்பட்டன? அதற்கு காரணம் என்ன? அவைகள் எங்கு எவ்விதம் முடிவடையும் என்பதைக் குறித்து வேதம் கூறுவதை ஆராய்வோம். 176உள்ளே வர முடியாததால் வெளியே தங்கள் மோட்டார் வாகனங்களில் அமர்ந்து, இந்த ஒலிப்பெருக்கி மூலம் செய்தியைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்த சுவற்றை சுற்றி நிற்கும் உங்களெல்லோரையும் கர்த்தர் இக்காலை நேரத்தில் ஆசீர்வதிப்பாராக, கர்த்தருடைய கிருபையினால் நான் எந்தவித குற்றசாட்டுகளையும் கொண்டு வரவில்லையென நம்புகிறேன். என்னை நானே தெளிவுப்படுத்திக் கொள்ளுகிறேன். நான் இன்று காலை கூறிய விதமாகவே நீங்கள் விசுவாசிப் பீர்களானால் அந்த விதமாகவே நிலை நிற்க மாட்டீர்களா? நிச்சயமாக அவ்விதமாயிருப்பீர்களென நம்புகிறேன். நாம் இப்பொழுது சற்று தலைவணங்கி ஜெபிப்போம். 177கிருபை நிறைந்த பரம பிதாவே, நாங்கள் இக்கூட்டத்தை முடிக்க முயற்சி செய்யாமல், சிறிது நேரம் இளைப்பாற சமயம் எடுத்துக் கொள்கிறோம். இன்று காலை விதைக்கப்பட்ட விதைகள் பசுமையான நிலத்தில் விழுந்திருக்கட்டும். கர்த்தாவே, அவை பரிபூரண நித்திய ஜீவனைக் கொண்டு வரட்டும். பிதாவே, விதைக்கப்பட்ட விதைகள் பின்மாரிக்காக காத்திருக்கும் போது அவைகளின் மேல் அம்மழை பெய்ய நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனெனில் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப்பெலன் அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே. தேவனே, வார்த்தைக்கு நாங்கள் ஓடவேண்டாம், அதிலே நிலைத்திருக்க வேண்டும். இதை அருளிச் செய்யும் கர்த்தாவே. எங்களை ஆசீர்வதியும். இப்பொழுது மதிய உணவு உண்ணப் போகும் ஜனங்களை ஆசீர்வதியும். அவர்களுக்கு உணவு கொடுத்து அதன் மூலம் அவர்கள் பலத்தைப் பெற்று திரும்பவும் இங்கு வர ஆசீர்வதியும், கர்த்தாவே, இங்கு அவர்கள் ஆலயத்தில் அமர்ந்திருந்து காத்திருக்க உதவி புரியும். நானும் சென்று ஜெபம் செய்து திரும்பிவரச் செய்யும். இம்மதியத்தில் என்னை புதிதாக அபிஷேகம் செய்யும்படி ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நான் விசுவாசிக்கிற விதமாக ஜனங்களுக்கு கொடுக்க உதவி செய்யும். பிதாவே அருளிச் செய்யும். 178இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கூட்ட ஜனங்களோடு ஞானஸ்நான ஆராதனைக்கு போக இருக்கும் எங்கள் அருமையான மேய்ப்பன் சகோ.நெவிலை அவர்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். பிதாவே, வேறுவிதமாக கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற்றவர்கள் இங்கிருப்பின், உம்முடைய ஊழியக்காரனான பவுல், “நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, (ஒளியின் தூதனின் வேஷத்தை தரித்துக்கொண்ட தூதன்) வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்று கூறினான். பிதாவே, இது வேதவசனத்தில் எழுதியிருக்கிறது என நாங்கள் அறிந்திருக்கிறோம். பிதாவே, அவர்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாதவர்களாகிய அந்த ஜனங்களை, அவர்களுடைய பாவமன்னிப்பிற்கென்று திரும்பவும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி கட்டளை கொடுத்தவன் இந்த பவுல் தான் என்று அவர்களுக்கு உணர்த்தியருளும். இது ஜனங்களிடம் செல்வதாக. பிதாவே, திரித்துவ மூன்று கடவுள் சித்தாந்தத்திற்கு ஆதாரமாக வேதத்தலிருந்து ஒரு வசனத்தையும் அவர்கள் காண்பிக்கமுடியாது. ஆகவே, கர்த்தாவே, இந்த ஞானஸ்நான ஆராதனை நடக்கும் போது சத்தியம் இது தான் என்று அவர்கள் உணர்ந்து கொள்ளும்படிச் செய்யும். பிதாவே, நீர் பிதா, குமாரன்,பரிசுத்த ஆவி என்ற மூன்று அலுவல்களை உடையவர் என்று நாங்கள் எல்லோரும் விசுவாசிக்கிறோம். மூன்று கடவுள்கள் என்றல்ல; தேவனுடைய நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 179பிதாவே, ஜனங்கள் அதை கவனித்து தங்கள் பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானத்தில் கீழ்ப்படியட்டும். ஞானஸ்நானத்திற்கென்ற இச்சிறு வார்த்தைகள் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் ஆழமாய்ப் பதியட்டும். இன்னும் எவ்வளவு காலம் என்பதை நாங்கள் அறியோம். பிதாவே, நேரம் சமீபமாயிருக்கிறது. இன்று மதியம் நாங்கள் பேச இருக்கும் போது, சத்துருவானவன் மிகவும் தைரியமாவதை நாங்கள் காண்கிறோம். கர்த்தாவே, அவர்கள் சிங்காசனத்தைப் பிடித்ததிலிருந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதை எங்களால் காண முடிகிறது, கர்த்தாவே, அது கம்யூனிஸமல்ல, அது பழைய வேசியாகிய தாயும், அவளுடைய பிள்ளைகளுமாகிய ரோமானிய ஆதிக்கம் என்றும், வர இருக்கிறதான மிருகத்தின் சுரூபம் என்றும் ஜனங்கள் புரிந்து கொள்ளட்டும். பிதாவாகிய தேவனே, அந்த பின்மாரிக்கு முன்பு நாங்கள் ஆயத்தமாக பேழைக்குள் சென்று பாதுகாப்பை அடைந்து கொள்ள கிருபையருளும். இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்டு கொள்கிறோம். ஆமென். 180இப்பொழுது, கட்டிடத்திலுள்ள நீங்கள்...வெளியே சென்று உணவருந்தி உள்ளே வரவிரும்பினால்... நீங்கள் திரும்ப வரலாம். ஆராதனை முடிந்தவுடன், நீங்கள் துரிதமாக மறுபடியும் உள்ளே வாருங்கள். இப்பொழுது நாம் எல்லோரும் எழுந்து நிற்போம். எத்தனைபேர் கர்த்தரின் வார்த்தையை விசுவாசிக்கிறீர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஆமென். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். நேசிக்கிறேன்——நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால்...... (சகோ. பிரன்ஹாம் கைக்குட்டைகளின் மீது கைகளை வைத்து ஜெபிக்கிறார்.) கர்த்தராகிய இயேசுவே, இந்த கைக் குட்டைகளை ஆசீர்வதியும். அவைகளின்மேல், கர்த்தாவே, அபிஷேகத்தைத் தாரும். கர்த்தாவே, நாங்கள் அதை இயேசுவின் நாமத்தினால் விசுவாசிக்கிறோம்....?) முன்பு அவர் நேசித்ததால். நேசிக்கிறேன்——நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால்....... 181ஓ....அது அருமையானது சகோதரனே..?..அவர் தம்முடைய...கூறிட விரும்புகின்றாரா..?.. (ஒருசகோதரன் ஒரு சாட்சியைக் கூறுகின்றார் - ஆசி) அது...அதுதான் சகோதரன் எட் அது தான்அது. ஓ...இது மிகவும் அருமையானது அல்லவா. நான் அந்த சாட்சி....விரும்புகிறேன். இப்பொழுது...அந்த கார் ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது, அது அதற்காகத்தான் இங்கே இருக்கின்றது. (ஒலிநாடாவில் காலி இடம்- ஆசி) நீங்கள் எல்லாரும் இப்பொழுது நன்றாயிருப்பதாக உணர்கின்றீர்களா? நாம் இப்பொழுதே கூட்டத்தை ஆரம்பித்து, அதை நள்ளிரவு வரை நடத்துவோம். அதன் பின்... நல்லது...கர்த்தர் நமக்கு உதவியதற்காகவும், நம்மை ஆசீர்வதித்ததற்காகவும் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் ஆரம்பிக்கும் முன்பு, யாரைக் குறித்து பேசுகிறோமோ அவரிடம் சற்று ஜெபம் செய்வோம். 182கிருபை நிறைந்த பரம பிதாவே, இந்த வயது சென்ற பயபக்தியான பரிசுத்த மனிதனுடைய சாட்சியை நீர் செவிகொடுத்து கேட்டீர். எவ்விதம் அவருடைய மனைவி தன் கணவன் ஒரு பிரசங்கி யாகவேண்டும் என்று மன்றாடி கேட்டு கொண்டாளோ, அவ்விதமே இவ்வளவு காலம் அவர் பிரசிங்கியாயிருக்கிறார். ஒருசமயம் அவர் சிறந்த வைத்தியர்களால் கைவிடப்பட்டு, “ஒரு சில மணி நேரங்கள் கூட அவர் வாழ முடியாது, ஏனெனில் புற்றுநோய் அவருடைய சரீரத்தைத் தின்று விட்டது” என்று அபிப்பிராயம் கூறினார்கள்; அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை, பிதாவே, அவரை நீர் சுகப்படுத்தினீர். நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இதோ இன்னும் அவர் எங்கள் மத்தியில் இருக்கிறார். வார்த்தை பயிரிடப்பட்டவுடன், நீர் பாய்ச்சப்பட்டு பயிரை வளரச் செய்கிறது என்பதற்கு இது ஒரு அத்தாட்சியாயிருக்கிறது. பிதாவே, இந்த பகலிலும் உம்முடைய வார்த்தையை நாங்கள் பயிரிடட்டும். கர்த்தாவே, இது உம்முடைய வார்த்தை. அது இருக்கிற விதமாக அதை பயிரிட நாங்கள் விரும்புகிறோம். உம்முடைய ஆவியாகிய தண்ணீரை நீர் அதற்கு பாய்ச்சும். எங்களை இச்செய்தியோடு உமக்கு சமர்ப்பிக்கிறோம். நீரே எங்களை உபயோகப்படுத்த வேண்டுமாய் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 183இப்பொழுது, நாம் துரிதமாக துவங்குவோம். வயது சென்றவர்களும், மற்றவர்களும் எவ்விதம் கால் மரத்துப்போகும் அளவு நின்று கொண்டு, அசௌகரியத்தின் மத்தியிலும் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்று இன்று காலை என் மனைவி என்னிடம் கூறினாள். உங்களுடைய உத்தமத்தைக் குறித்து நான் மிகவும் பாராட்டுகிறேன். இப்பொழுது நாம் நேரிடையாகவே செய்திக்குச் செல்வோம், நான் அதிக அவசரப்பட போவதில்லை. இருந்தாலும் என்னால் முடிந்தவரை இச்செய்தியை இப்பகலில் முடிக்கும்படி முயற்சி செய்ய விரும்புகிறேன். இக்கூட்டம் முடிந்தவுடன் நாங்கள் டிப்டான், ஜியார்ஜியா என்னும் இடத்தில் ஒருபள்ளிக்கூடக் கட்டிடத்தில், நாளை ஒரு இரவு பிரசங்கத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு செல்லவிருக்கிறோம். அது ஒரு சாதாரணக் கூட்டம் தான். ஏனெனில் நான் இங்கு பிரசங்கித்த ஒன்றையே அங்கு பிரசங்கிப்பேன். அங்குள்ள ஜனங்களைக் கண்டு விசாரிக்கவே செல்கிறோம். ஏனெனில் அங்கு அவர்களுக்கு தொடர்ச்சியாக எந்த ஆராதனையும் அமையவில்லை. 184ஆதியாகமம் 1ம் அதிகாரம் 11ம் வசனத்தில் இன்று காலை நாம் பேசிய “உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து'' என்ற பொருளைத் தொடர்ந்து கவனிப்போம். என்னுடைய செய்கைகள் ஏன் அவ்விதமாயுள்ளன என்பதை ஜனங்களாகிய உங்களுக்கு விளக்க முயற்சிப்பதே என்னுடைய இன்றைய நோக்கமாயிருக்கிறது. இச்செய்திகள் ஒலிப்பதிவாக்கப்பட்டு வெளியிடப்படப் போகிறது என்பதை நான் உணருகிறேன். ஒரு வேளை நான் இங்கிருந்து கடந்து சென்று விட்டாலும், இயேசுவின் வருகை தாமதித்தாலும் ஜனங்கள் அதை கேட்பார்கள். ஆனாலும் தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்பதை நான் விசுவாசிக்கிறேன் என்று கூறிடவே நான் விரும்புகிறேன். 185நாம் இப்பொழுது கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னர் தேசங்களைப் பற்றியெரியச் செய்த சுவிஷேகர்களின் ஊழியங்கள் என்னவாயிற்று? எல்லாம் நின்று விட்டது போல் காணப்படுகின்றது. அவர்களெல்லாரும் ஊழியத்தினின்று சென்றுவிட்டார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலன் ஏதும் காணப்படவில்லை. அவர்கள் ஒன்றையும் பெறமுடியவில்லை. பாருங்கள்? இது என்ன? நிலம் பயிரிடப்பட்டுவிட்டது என்பதே அதன் பொருள். 186யாரோ ஒருவர் அந்த எபிரெய வார்த்தையை திரும்பவும் கூறுமாறு கேட்டுக்கொண்டார். யோவேல்: 2:28ல் இந்த முன்மாரியைக் குறித்தும் பின்மாரியைக் குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. முன்மாரி என்ற வார்த்தை எபிரெய மொழியில் மூரே (m-o-u-r-e-h) என்றுள்ளது. இதன் பொருள் 'போதகம்' என்பதாம். வேறு வார்த்தையில் கூறப்போனால், அது போதக மழையும், அறுவடை மழையுமாகும். நாம் ஏற்கனவே போதக மழையைப் பெற்றுக் கொண்டோம். இனி அறுவடை மழையைப் பெற்று கொள்ள ஆயத்தமாயிருக்கிறோம். விதையை விதைக்கும் போது பொழிவது முதல் மழையாகும். இதனால் பயிர் வளரத் தொடங்குகின்றது. பின்பு அது முதிர்ச்சியடையும் பருவத்திற்கு சற்று முன்பு மற்றொரு மழை வருகிறது. அதையே அறுவடை மழையென்கிறோம். வசந்த கால மழையை நாம் அறிந்திருக்கிறோம். அதன் பின்பு ஜுன் மாதத்தில் ஒரு மழை பொழிகிறது, அதுவே உங்களுடைய பயிருக்கு அறுவடை சமயமாகும். 187இங்கு மழை என்பது ஆவியைக் குறிக்கிறது என்று நாம் கண்டோம். இப்பொழுது, அந்த முழு காரியமும் என்னவாயிருக்கும் என்ற என் சிந்தனைகளைக் கொடுத்தவுடன் நாம் கலைந்து சென்றோம். அந்த மழை பொழியப்பட்டுவிட்டது என்றே நான் விசுவாசிக்கிறேன். ஏற்கனவே பயிரிடப்பட்டு விட்டதினாலேயே நாம் அமைதியாகிவிட்டோம். எது எங்கு விதைக்கப்படிருக்கிறது என்பதை நீங்கள் காணமுடியாது. ஏனெனில் அவை வானொலி, தொலைக்காட்சி, ஒலி நாடாக்கள் மூலமாகவும் வார்த்தையாகவும், தேசம் முழுமையும் விதைக்கப்பட்டிருக்கின்றன. விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. எவ்வித விதைகள் விதைக்கப்பட்டிருக் கின்றனவோ அதையேயன்றி வேறொன்றையும் நீங்கள் பெற்று கொள்ள முடியாது. அதை புரிந்து கொண்டீர்களா? அது விதைக்கப் பட்ட விதையாகவேயிருக்கும். இப்பொழுது, அதின் மேல் ஆவியான மழை பொழியும்.ஆனாலும் எத்தகைய விதையாக நிலத்தில் விழுந்ததோ அதே விதையையே அது அறுவடையின் போது கொண்டு வரும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 188சரி. இந்த பெந்தெகோஸ்தே கூட்டமும், சுவிசேஷக் கூட்டமும் ஒன்றாக ஊழியம் செய்து ஒரு ஸ்தாபனமாக இணைந்து, பின்பு உலக ஐக்கிய ஆலோசனை சபையில் ஒரு அங்கமாக மாறும் என்பதனை நான் முன்னறிவிக்கிறேன். ஏற்கனவே அவர்கள் அவ்விதமாயிருக்கின்றனர். அவர்கள் மூலமாகமற்ற சபைகளுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான தடையுண்டாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப் பட்ட அச்சபைகளைச் (union of churches) சார்ந்தது மட்டுமே நிலைத்திருக்கத் தக்கதான நிலைமை ஒன்று வருகிறதாயிருக்கிறது. ரோம மார்க்கமான மிருகத்தின் முத்திரையைப் பெற்றுகொள்ளாதவர்கள் வாங்கவோ, விற்கவோ கூடாத அளவிற்கு ஒரு தடை வரப்போகிறது என்று வேதம் கூறுகிறது. மிருகத்திற்கு ஒரு சொரூபம் கொடுக்கப்பட்டது. அதுதான் கத்தோலிக்க மார்க்கத்திற்கு விரோதமாய் பிரிந்த பிராடெஸ்டெண்ட் மார்க்கமாகும். இந்த சொரூபத்திற்கு (ஸ்தாபன சபைகள்—- தமிழாக்கியோன்) பேசத்தக்கதாக ஆவியையும் சத்துவத்தையும் கொடுக்க மிருகம் வல்லமையுள்ளதாயிருந்தது. ஸ்தாபன சபைகளாக ஐக்கிய ஆலோசனை சபையில் அவர்கள் சேரும்போது நடைபெறப்போவது அதுவே. 189இங்கு அநேக வாலிபர்கள் இருக்கின்றீர்கள். ஒருவேளை இன்று பகல் அல்லது அடுத்த வருடம் இயேசு வரக்கூடும். அவர் எப்பொழுது வருவார் என்று நான் அறியாதவனாயிருக்கிறேன். ஆனால் ஒன்றை ஞாபகம் கொள்ளுங்கள்; அவர் வருவதை நான் பார்க்க ஜீவித்திராவிட்டால், (அவ்விதம் அவர் வருவதைக் காண நான் ஜீவித்திருப்பேன் என்று நம்புகிறேன்) இந்த என்னுடைய வார்த்தைகள் உங்கள் செவிகளையும் இருதயங்களையும் விட்டு அகலாதிருப்பதாக.பாருங்கள்? நான் இவைகளை கர்த்தருடைய நாமத்தினால் கூறுகிறேன். ஒரு சங்கம் (union) போன்று அது அமைந்து பின்பு ஆக்கப்பூர்வமான ஒரு தடையையுண்டாக்கும்; அவ்விதமாகவே ஸ்தாபனங்கள் முதிர்ச்சியடையும் என்று நான் என் இதயப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். இங்கு நம்மிடையேயுள்ள சபைகள் எல்லாம் மூடப்பட்டு, ஐக்கிய ஆலோசனைச் சங்கத்தின் அனுமதி அல்லது சான்றிதழ் இல்லாமல் பேசவோ, ஆராதனை நடத்தவோ முடியாத ஒரு நிலைமையுண்டாகும். 190இப்பொழுதே, அவ்விதமான காரியங்களும் கட்டுப்பாடுகளும் ஸ்தாபன சபைகளில் உண்டாயிருக்கின்றன. ஆம் ஐயா, அதை நீங்கள் பெற்று கொள்வீர்கள் என்பதற்கு அறிகுறியாக அவை அங்கேயுண்டாயிருக்கின்றன. அதிலேதான் அது முடிவடையும். கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரனாக, நான் பெற்ற வார்த்தையின் வெளிப்பாட்டின் புரிந்து கொள்ளுதல் மூலமாக ஸ்தாபனங்கள் அவ்விதமான கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் என்று நான் முன் அறிவிக்கிறேன். எல்லா அடையாளங்களும் முடிவை சுட்டிக் காட்டுகின்றன. அதைக் குறித்து சற்று முன்புதான் நான் பிரசங்கித்தேன். புத்தியில்லாத கன்னிகைகளும் கூட எண்ணெய்க்காக கதற ஆரம்பித்து விட்டார்கள். அவள் ஒரு கன்னிகையாயிருந்தாள் என்பதைக் கவனம் கொள்ளுங்கள். அவள் அவ்விதம் ஒரு கன்னிகையானால் அவளும் ஒரு சபையாயிருக்கிறாள். பாருங்கள். அதைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் கூறப்பட்டதை சற்று பின்பு பார்ப்போம், அவள் ஒரு கன்னிகையானால் அவள் சபையாகும். சபை என்னப்பட்டது ஒரு கன்னிகையாகும். பவுலும், “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரு புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்,” என்று கூறினான். வெளிப்படுத்தின விசேஷத்தில் 17ம்அதிகாரத்தில் கூறப்பட்ட வேசியும் ஒரு சபையாகும். யோவான் அவள் அழகைக் கண்டுஆச்சரியப்பட்டான். ஆனாலும் அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதை அவன் கண்டான்—-அவளால் கொல்லப்பட்ட பரிசுத்தவான்கள். இது உண்மை . 191ஹிப்போ நாட்டை சேர்ந்தவரான பரி.அகஸ்டியன் என்பவரின் காலத்திலிருந்து, ரோமன் கத்தோலிக்க சபை சுமார் 68,000,000 மில்லியன் ப்ராடெஸ்டண்ட் கிறிஸ்தவர்களை தன்னு டைய கொள்கையை ஒப்புக்கொள்ளாததினால் கொல்லப்பட்டனர் என்று புனித தியாகிகளின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்” என்று வேதம் கூறினதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை . “உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்கும் காலம் வரும்” என்று இயேசு கூறவில்லையா? அதைக் குறித்து அவர்கள் மிக உண்மையா யிருக்கின்றனர். அவர்கள் மாய்மாலக் காரர்கள் அல்ல. அவர்கள் அவ்விதமாகப் போதிக்கப்பட்டு, அதையே விசுவாசித்தார்கள், வார்த்தை விதைக்கப்பட்டபின்பு, அது பயிரை நிச்சயமாக வெளியே கொண்டு வரத்தான் வேண்டும். நிச்சயமாக. நாம் விதையைக்குறித்து தியானித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுதான் நாம் சிந்திக்கின்ற பொருளாகும். உரைக்கப்பட்ட வார்த்தையே ஆரம்ப வித்தாயிருக்கிறது. பாருங்கள்? அது திரும்பவும் இந்த வார்த்தைக்கு வந்து, பின்பு வார்த்தை என்ன கூறுகிறதோ அதை பிரதியுற்பத்திச் செய்யத்தான் வேண்டும். 192அதன் காரணமாகத்தான் நான் தெய்வீக சுகமளித்தலிலும் தரிசனங்களிலும், தேவதூதர்களிலும், இச்செய்தியிலும் விசுவாசம் கொண்டுள்ளேன். ஏனெனில் அது தேவனுடைய' வார்த்தையினின்று வருகிறதாயிருக்கிறது. தேவ வார்த்தைக்குப் புறம்பேயிருந்து வருகிற யாதொன்றையும் நான் விசுவாசிக்கிறதில்லை. ஒரு வேளை அது சரியாகவும் இருக்கலாம். ஆனாலும் நான் தேவன் கூறியதில் நிலை கொண்டிருந்து, நான் சரியாக இருக்கிறேனா என்று நிச்சயப்படுத்திக்கொள்வேன். தேவன் தாம் விரும்பினதை செய்ய முடியும். ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். அவருடைய வார்த்தையில் நான் நிலைகொண்டிருக்கும் வரை அதுவே சரியானதாகும் என்று நான் அறிந்திருக்கின்றேன். நான் அதை விசுவாசிக்கிறேன். 193இந்த புத்தியில்லாத கன்னிகை ஒரு பெண்ணாகவும், ஒரு சபையாகவும் இருக்கிறாள். ஆனால் அவள் புத்தியில்லாதவளாயிருந்தாள் என்பதை கவனியுங்கள். பாருங்கள்? அவள் மந்த புத்தியுள்ளவளா யிருந்தாலும் தன்னை மணவாட்டி என்று அழைத்துக்கொள்கிறாள். மூன்று என்னும் எண்ணில் பரிபூரணம் அமைந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய தொழில்களான பிதா குமாரன், பரிசுத்த ஆவி மூன்று என்ற பரிபூரணத்தில் அமைந்திருக்கின்றது. தேவனாகிய பிதா அக்கினி ஸ்தம்பத்தில் ஜீவித்தவராயிருந்தார். அவர் அங்கிருந்து இஸ்ரவேலரை தம்மிடம் இழுக்க முயற்சித்தார். ஆனால் அவர்களோ வரவில்லை. பிதாவாகியதேவன் குமாரனில் ஜீவித்தார். அதே தேவன்தான், தேவ குமாரனாகவும், தேவனுடைய தற்சொரூபமாகவும், வெளிப்பட்ட தேவனுடைய வித்தாகவும் திரும்ப வந்து ஜனங்களை தம்மிடம் இழுக்க முயற்சித்தார். ஆனால் அவர்களோ அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். பரிசுத்த ஆவியும், ஆரம்பத்தில் தேவகுமாரனில் இருந்த அதே தேவனாயிருந்து இப்பொழுது மற்றொரு தேவத் தொழிலான பரிசுத்த ஆவியாக இந்த கடைசி நாட்களில் சபையில் ஜீவித்துக் கொண்டு,வார்த்தையை (மற்ற இரண்டு அலுவல்களின் மூலமாக, உரைக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டு வந்தது போல) ஜனங்களுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் ஜனங்களோ அதை புறம்பாக்குகிறார்கள். அது அதே காரியம்தான். ஒரு தேவனில் மூன்று அலுவல்கள் அல்லது மூன்று வெளிப்படுத்தல்கள் கிரியையில் காணப்பட்டன. இன்று தேவன் தம்முடைய ஜனங்களில் இருந்து கிரியை செய்யும் காரியம் தேவனே கிரியைச் செய்கிறதாகும். பாருங்கள்? அது ஜனங்களில் தேவன் இருப்பதைக் குறிக்கிறது, 194கர்த்தருக்குச் சித்தமானால் நாளைய தினம் நான், “தேவன் தம்முடைய பிரபஞ்சத்திலும், தம்முடைய குமாரனிலும், தம்முடைய ஜனங்களிலும்” என்ற பொருளின் மேல் பிரசங்கிக்க விருப்பம் கொண்டுள்ளேன். நான் அதன் பேரில் முன்பே பேசியிருக்கிறேன் என்றே நம்புகிறேன். 195இந்த புத்தியில்லாத கன்னிகை, எண்ணெய் வாங்கச் சென்ற போது....அவள் எண்ணெய் வாங்க அனுப்பப்பட்டாள். அவள் அவ்விதம் வாங்கச் சென்ற பின்பு தான் காலம் அதிகம் கடந்து விட்டது என்பதை கண்டாள். ஏன்? ஏன் நண்பனே? ஏனெனில் வித்துக்கள் ஏற்கனவே விதைக்கப் பட்டாயிற்று.பாருங்கள்? சோதோமின் முடிவு நேரத்திற்கென மூவர் வந்துவிட்டனர். எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் மூன்று என்ற எண் தொடர்ந்து வருகின்றது. கிறிஸ்துவின் வருகை மூன்று முறை நிகழும். தம்முடைய மணவாட்டியை மீட்பதற்கென அவர் முதலில் வந்தார். இரண்டாவதாக தம்முடைய மணவாட்டியை எடுத்துக் கொள்ள வருகிறார். மூன்றாவதாக ஆயிரம் வருட அரசாட்சியில் தம்முடைய மணவாட்டியுடன் வருகிறார். எல்லாம் மூன்றிலிருக்கின்றது. மூன்று என்பது பரிபூரணமான எண்ணாக இருக்கிறது. ஐந்து என்னும் எண் கிருபையையும், ஏழு என்பது முடிவையும், பன்னிரெண்டு என்பது தொழுது கொள்ளுதலையும் இருபத்து நான்கு-அல்லது-அல்லது-நாற்பது என்பது சோதிக்கப்படுதலையும், ஐம்பது என்பது விடுதலையையும் குறிக்கின்றதாயிருக்கின்றது. பெந்தெகோஸ்தே என்னும் வார்த்தை விடுதலை என்று பொருள்படும்-ஏனெனில் அது ஐம்பதாவது நாளில் சம்பவித்தது. பாருங்கள்? 196தேவன் தம்முடைய எண்களிலும், தம்முடைய வார்த்தை யிலும், தம்முடைய கிரியையிலும் பரிபூரணராயிருக்கிறார்; அவர் எல்லாவற்றிலும் பரிபூரணராயிருக்கிறார்—-ஏனெனில் அவர் ஒரு பரிபூரணமான தேவன். ஆம், இந்த கன்னிகைகளையும், அழைக்கப்பட்ட வேசியையும் நாம் வேதத்தில் காண்கிறோம் (என்னுடைய சகோதரிமார்கள் என்னை மன்னிக்கவேண்டும். ஏனெனில், வேதம் அவ்விதம் கூறகின்றது. இன்று நான் மிகவும் வெளிப்படையாக பேசுகிறேன்), வேதம் அவளை மகாவேசியென்றும் வேசிகளின் தாய் என்றும் அழைக்கின்றது. இரண்டும் ஒரேபொருளைத்தான் குறிக்கின்றன. மகாவேசி என்றும், (அது ஒருசபை) வேசி என்றும், (அதுவும் ஒருசபை) மணவாட்டி என்ற ஒரு சபையும் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதை நீங்கள் கவனியுங்கள். (ஆங்கிலத்தில் WHORE என்றும் HARLOT என்றும் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு தமிழில் மகாவேசியென்றும், வேசியென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது—- தமிழாக்கியோன்) இங்கேயும் அந்த மூன்று. அவர்கள் யார் யாருடைய மணவாட்டிகள் என்றும் அவர்கள் எவ்விதம் தேவனால் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதையும், கர்த்தருக்குச் சித்தமானால் சற்று பின்பு பார்ப்போம். 197முதலில் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்ல விருப்பமாயுள்ளேன். அதை நான் சற்று மறந்து போனேன். கம்யூனிசத்தைக் குறித்து ஒரு போதும் நீங்கள் பயப்படவேண்டாம். ஏனெனில் கம்யூனிசம் என்பது தேவனுடைய கரங்களில் இருக்கும் கிரியைக்குரிய ஒரு ஆயுதம்தான். கீழ்ப்படியாத இஸ்ரவேலரை ஒடுக்க தேவன் நேபுகாத்நேச்சாரை அனுப்பியது போன்று ஒரு காரியம்தான் அது. தீர்க்கதரிசி என்ன வரப்போகிறதென்று கூறி ஜனங்களைத் தங்கள் தேசத்தில் இருக்கும்படியாகவும், தேவனை நினைவு கூறுங்கள் என்று கூறின பின்பும், இஸ்ரவேலர் அவன் வார்த்தைக்குச் செவிகொடாமல் தேசத்தை விட்டு சென்று விட்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டான். கம்யூனிசம் எழுப்பப்பட்டதற்கு காரணம் ருஷியா தேசத்திலிருந்த கத்தோலிக்க சபையின் முறைகேடான வேசித்தனமான கிரியைகளேயாகும். எல்லா பணத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டு, எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்த்தனர். அதுதான் அதன் முடிவாயிருந்தது. அதுவே கம்யூனிசத்தை ஏற்படுத்துவதற்கு சரியான காரணமாயிருந்தது. 198ஃபின்லாந்தில், மரித்துப்போன அந்த சிறுவன் உயிரோடு எழுப்பப்பட்ட போது, அங்கு நின்று கொண்டிருந்த பெரிய கம்யூனிஸ்டு சிப்பாய்களை நான் கடந்து சென்றபோது, அவர்கள் தங்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட எனக்கு வணக்கத்தை ஏறெடுத்து, “இத்தகைய தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று கூறினார்கள்—-ஒரு தேவன் மரித்தவனை உயிரோடு எழுப்பி தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வாரானால், நிச்சயமாக அத்தகைய தேவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பாருங்கள்? ஆனால் வெறுமையாக ஆலயத்திற்குச் சென்று,பிசாசுகளைப் போல் வாழ்ந்து, ஏனைய உலகத்தாரைப் போல் ஜீவித்து, ஒன்றும் செய்யக் கூடாதவர்களை அவர்களால் நம்ப முடியாது. உண்மையுள்ளவனாய் நான் உங்களுக்குக் கூறுவது: நான் ஒரு கம்யூனிஸ்டுமல்ல, ஒரு அவிசுவாசியும் அல்ல. அதுதான் உண்மை . அது உண்மை .பாருங்கள்? கம்யூனிசம் உலகத்தை ஆளும் என்பதற்கு சான்றாக ஒரு தேவ வசனமும் கிடையாது, ஆனால் ரோமமார்க்கம் உலகத்தை ஆளும் என்று அநேக வசனங்கள் கூறுகின்றன. ஆகவே உங்கள் கவனத்தை ரோமமார்க்கத்தின் மேல் வையுங்கள். 199நேற்றிரவு, அந்த கென்டகியைச் சேர்ந்த அரசாங்க சபை அங்கத்தினன் (Senator) (கத்தோலிக்க மார்க்கத்தைச் சேர்ந்தவர்) ஜனநாயககட்சியைச் சேர்ந்த ஒரு மனிதன் (இவர் ஒரு ப்ராடெஸ்டண்டு) கென்டகி மாநிலத்தின் பிரதிநிதியாயிருப்பதைக் குறித்து, “அவர் ஒரு ப்ராடெஸ்டண்டாக இருப்பதினால் ஒரு நன்மையும் இல்லை” என்று கூறினார். அவர்கள் எவ்வளவு துணிகரமடைய முடியுமோ அவ்வளவு துணிகரமுள்ளவர்களாகி வருகிறார்கள். அதனோடு மற்றக் காரியங்களும் செல்லுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். 200புத்தியில்லாத கன்னிகைகளின் நேரம் இது—-இது நாம் காண்கிறோம். இதற்கு முன்பு இவ்விதம் சம்பவிக்கவில்லை. காலா காலங்களில் வந்த ஒரு போதகனும் நாம் இன்று பேசும் காரியங்களைப் பேசவில்லை. புத்தியில்லாத கன்னிகைகளும், கலப்பினமான பெந்தெ கோஸ்தேயினரும் (உலகத்தின் காரியங்களோடு கலப்பினமாக்குவது)....நினைவில் கொள்ளுங்கள். நானும் ஒரு பெந்தெகொஸ்தேயைச் சேர்ந்தவன் தான். ஆனால் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனல்ல. ஸ்தாபனத்தைக் குறித்து நான் கோபம் கொள்கிறேன். நான் அனுபவத்தில் (Experience) ஒரு பெந்தகொஸ்தேவைச் சேர்ந்தவன். பெந்தெகொஸ்தேயின் அனுபவத்தை ஜனங்கள் பெற்றிருப்பார்களானால் அவர்கள் மெத்தோடிஸ்டானாலும், பாப்டிஸ்டானாலும், கத்தோலிக்கரானாலும் அவர்களும் பெந்தெகொஸ்தேயினரே. பெந்தெகோஸ்தேவை நீங்கள் ஸ்தாபனமாக்க முடியாது. ஏனெனில் அது ஒரு அனுபவமாயும் தேவனாகவும் இருக்கிறது, தேவனை நீங்கள் ஸ்தாபனமாக்க முடியாதே! 201இப்பொழுது, இப்பொழுது, புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் காலத்தில் எழுந்திருந்து எண்ணெயை விரும்பி பின்பு காலமானது தங்களுக்கு மிகவும் கடந்து விட்டது என்பதைக் காண்பார்கள் என்பதைக் குறித்தும் இவை சம்பவிக்கும் என்பதைக் குறித்தும் இயேசு நமக்குக் கூறியிருக்கிறார். பாருங்கள்? இப்பொழுது இந்த மூன்று சபைகளையும். கவனியுங்கள். அங்கே அந்த மகாவேசி காணப்படுகின்றாள்; ஒன்றுமில்லாதற்காக அவள் அங்கு வரவில்லை. அவள் தன்னைத்தானே மையப்படுத்திக் கொண்டிருக்கிறாள். ப்ராடெஸ்டண்ட் சபையாகிய புத்தியில்லாத கன்னிகையும், மணவாட்டியும் அங்கே காணப்படுகின்றார்கள். பாருங்கள்? இப்பொழுது, கடைசி நாட்களில் காணப்படும் மூன்று சபை நிலையாக உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், கர்த்தருக்குச் சித்தமானால் நாம் அவைகளை ஆதியாகமம் தொடங்கி இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் சபை எடுத்துக் கொள்ளப்படுதல் வரை பொருத்துவோம். 202இங்கே எல்லாக் காரியங்களும், பெந்தகோஸ்தே ஸ்தாபனமும் காண்பதற்கு உண்மையைப் போல் இருக்கின்றது. “நான் பெந்தெகொஸ்தேயை சேர்ந்தவன். அதைப் பற்றி என்ன?” என்று நீ கேட்கலாம். அது பன்றியின் தொழுவத்தில் நீ வாழ்ந்திருந்ததைக் காட்டிலும் பரவாயில்லை என்று அர்த்தமாகாது! ஒரு சிறிதளவு கூட அதற்கும் இதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அது வெறும் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருக்கிறது. ஆம். நீ எதைச் சேர்ந்தவனாயிருந்தாலும் சரி. அதைக் குறித்து ஒரு காரியமும் இல்லை, நீ தேவ ஆவியினால் பிறவாமல்...பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து (நீ தேவ ஆவியினால் பிறவாத காரணத்தால்) எல்லா தேவனுடைய வார்த்தையையும் விசுவாசியாவிட்டால், நீ இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. அது உண்மை அது நிச்சயமான உண்மை . பரிசுத்த ஆவி...நீ சத்தியத்தைக் கேட்கும் போது பரிசுத்த ஆவியானவர் உன்னை சத்தியத்திற்கு நேராக வழி நடத்த வில்லையானால், பின் மற்றொரு ஆவி அங்கிருந்து உன்னை சத்தியத்திற்குப் புறம்பாக்குகிறது. ஆகவே உன்னில் நீ பெற்றிருக்கிறதான ஆவி பரிசுத்த ஆவியில்லை. ஓ! ஆம். 203சரி. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல (அதைக் குறித்து நாம் பேசினோம்), இக்காரியங்களும் கடைசி நாளில் எவ்விதம் நடக்கும் என்பதை நாம் பார்த்தோம். பின்பு கடைசிக் குறிப்பாக, தேவன் ஒவ்வொரு விதையையும் அதனதன் ஜாதியின்படியே சிருஷ்டித்தார்; அவருடைய வித்தும் அவ்வாறே என்றும் பார்த்தோம். பின்பு அவர் தம்முடைய மனிதனை சிருஷ்டித்த போது அவருடைய ரூபத்தின்படியும் சாயலின்படியும் சிருஷ்டித்தார். அது அவருடைய வார்த்தையின் வித்தாயிருந்தது. இயேசு மாம்சமானபோது, அவர் தேவ வார்த்தையின் மாம்சமாயிருந்தார். நாமும் கூட தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ளும் போது, நம்முடைய மாம்சத்தில் தேவ வார்த்தையாகிறோம். பாருங்கள்? சபையானது அந்த நிலைமையில் தான் இருக்க வேண்டும். 204இப்பொழுது, தேவன் மனிதனை தமது சாயலின்படி சிருஷ்டித்தபின்...“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்....”அவர் இதைச் செய்த பின்பு...(இதைப் பெற்றுக் கொள்ளத் தவறாதீர்கள்) தேவன் தம்முடைய மனிதனை தமது உரைக்கப்பட்ட வார்த்தையின்மூலம் சிருஷ்டித்தார்—-அவன் ஒரு பரிபூரணமான மனிதனாயிருந்தான், ஆனால் அவனிலிருந்து ஒரு மணவாட்டியாகிய ஒரு உப சிருஷ்டியை (By-Product) தேவன் எடுத்த பொழுது அங்கே விழுந்து போதல் சம்பவித்தது. அது தான் இன்றைய உபத்திரவத்திற்குக் காரணம். நீங்கள் ஆவிக்குரியவர் களாயிருந்தால் இதை ஏற்கனவே புரிந்து கொண்டிருப்பீர்கள். பாருங்கள், பாருங்கள்? அவன் ஆதாம் வஞ்சனைக்குள்ளாகவில்லை; ஆதாம் வார்த்தையை அவிசுவாசிக்கவில்லை. அவனுடைய மணவாட்டியே அவிசுவாசத்தினால் சோதனைக்குள்ளானாள். இயேசு வார்த்தையை அவிசுவாசிக்கவில்லை. ஏனெனில், அவரே வார்த்தையாயிருந்தார். ஆனால் அவருடைய மணவாட்டியே வார்த்தையை அவிசுவாசித்தாள். 205கலப்பினம் என்பது இங்கு தான் வருகின்றது. கலப்பினம் ஆதாமின் மூலம் உண்டாகவில்லை. இதைக் காணத்தவறும் உங்களுக்கு வெட்கம் உண்டாகட்டும். பாருங்கள்? அது ஆதாமின் தவறல்ல. ஆதாமிற்கும் அதற்கும் எந்தவித சம்மந்தமில்லை. மரணம் ஆதாமின் மூலம் உண்டாகுமானால், அது தேவனால் வருகிறது என்று பொருள்படும். மரணம் தேவனுடைய வார்த்தையினால் உண்டாகிறதில்லை, வார்த்தையை ஸ்தாபனத்தின் கொள்கைகளின் மூலம் கலப்பினமாக்கும் போதே மரணம் உண்டாகிறது. கிறிஸ்துவுக்கு பதிலாக கொள்கைகளும், வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளும் மரணத்தைப் பிறப்பிக்கின்றது. அது வார்த்தையினால் வரவில்லை. வார்த்தையே ஜீவன்- “என்னுடைய வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயுமிருக்கிறது”என்று இயேசு கூறினார். ஆவியானது வார்த்தையை உயிர்ப்பித்து அதற்கு ஜீவனைக்கொடுக்கின்றது, அதைக் கலப்பினமாக்கும் பொழுது அங்கே தான் மரணம் சம்பவிக்கின்றது.ஆதாம் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாயும் அவருடைய ஆரம்ப வித்தாயுமிருந்திருப்பானென்றால் (ஏனெனில் ஆதாம் சிருஷ்டியில் முதலாவது சிருஷ்டிக்கப்பட்டவன்) இரண்டாம் ஆதாமும் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டாக்கப்பட்டவரே. புரிந்துக் கொள்கிறீர்களா? ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை; அவனுடைய மணவாட்டியே வஞ்சிக்கப்பட்டாள். கிறிஸ்து இன்று வஞ்சிக்கப்படவில்லை, வார்த்தை வஞ்சித்துக் கொண்டிருக்கவில்லை. மணவாட்டியே வார்த்தையைக் கொண்டு வஞ்சித்துக் கொண்டிருக்கிறாள். உங்களால் இதைக் காணமுடிகிறதா? 206இப்பொழுது, இரண்டாம் ஆதாமிற்கு அடையாளமாக அவர் அவனுக்கு ஒரு மணவாட்டியைத் தந்தார். முதலாம் ஆதாமிற்கு ஒரு மணவாட்டியை அவர் தந்தார், அவள் விழுந்து போனாள். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவுக்கும் ஒரு மணவாட்டியை அவர் தந்தார், அவளும் விழுந்து போனாள்.அது நிச்சயமானது. ஏன்? அவள் ஆரம்ப சிருஷ்டியில் இல்லாமல் ஒரு உப-சிருஷ்டியாக இருந்தமையால் விழுந்து போனாள். இன்றுள்ள மணவாட்டியும் ஒரு உப-சிருஷ்டியே. அவள் தன்னை மணவாட்டி என்று கூறிக்கொள்கிறாள். ஆனால் அவள் யார்? ஸ்தாபனம் என்னும் வஸ்துவால் அவள் உண்டாக்கப் பட்டவள்; தேவ வார்த்தையினால் அல்ல. போதுமான தேவ வார்த்தைகள் அதில் அடங்கி உண்டாக்கப் பட்ட ஒரு உப-சிருஷ்டியைப் போன்ற மாய்மாலத்தன்மையை அது உண்டாக்குகின்றது. ஏவாள் ஏறத்தாழ எல்லா வார்த்தையையும் விசுவாசித்தாள். ஆனால் ஒரு பாகத்தை அவிசுவாசித்தாள். இன்று மத்தேயு 28:19ஐ அப்போஸ்தலர் 2:38 ட்டோடு சம்பந்தப்படுத்தினால் அவள் குழம்புகிறாள். பாருங்கள். இது, அவள் இடறக் கூடிய நூற்றுக்கணக்கான மற்றவைகளில் ஒரு சிறிய இடம் தான். 207ஆதாமின் மணவாட்டி இரண்டாம் ஆதாமின் மணவாட்டிக்கு ஒப்புவமையானவள். தேவன் ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, “பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என்றுகூறினார்—-ஆதாமின் மணவாட்டியினால் அந்த மட்டும் காத்திருக்க முடியவில்லை. அது இனி சம்பவிக்கப் போகிற ஒரு காரியமாயிருந்தது—-அது ஒரு வாக்குத்தத்தம். ஏவாள் இன்னுமாக ஆதாமின் மணவாட்டியாகவில்லை. ஏனெனில் ஆதாம் அவளோடு இன்னும் வாழ்க்கை நடத்தவில்லை; கிறிஸ்துவின் மணவாட்டியும் அவருக்கு இன்னும் மணவாட்டியாகவில்லை, ஏனெனில் கலியாண விருந்து இனி சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது. புரிந்துகொண்டீர்களா? கவனியுங்கள். ஓ, இது மிகவும் ஐசுவரியமானது! ஏவாள் அவசரப்பட்டுவிட்டாள், பின் என்ன செய்தாள்? - அவள் தன் வித்தை கலந்துவிட்டாள். தன்னுடைய வித்தை சர்ப்பத்தின் வித்தோடு கலந்துவிட்டாள், அவள் அதை செய்த பின்பு, உலகுக்கு எதைக் கொண்டு வந்தாள்? மரணம் என்ற ஒரு பிள்ளையை உலகுக்குக் கொண்டு வந்தாள், அது ஒரு தாறுமாறான பிள்ளை—-அதன் பின்பு ஏற்பட்ட எல்லா பிள்ளைகளும் தாறுமாறாக்கப்பட்டவர்களே. கன்னியாக பிறந்த இயேசு கிறிஸ்துவின் சபை பெந்த கோஸ்தேநாளில் கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட பின்பு ரோம சபையின் நாட்களில் தாறுமாறாக்கப்பட்டது—-அவள் என்ன செய்தாள்? அவள் எல்லைக் கோட்டைத் தாண்டி ரோம சபையின் கொள்கையோடு தன்னைக் கலந்து விட்டாள். ப்ராடெஸ்டண்டு சபையும் அதே காரியத்தைத்தான் செய்தாள். அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. 208சுத்தமான, நல்ல ஒரு வாலிபனுக்கு ஒரு பெண் கலியாணத்திற்கென்று நிச்சயம் பண்ணப்பட்ட பின்பு அவர்கள் கலியாணம் முடிந்து கூடி வரும் முன்பே அவள் வேறொருவன் மூலமாய் கர்ப்பவதியாக காணப்பட்டாள். விவாக நிச்சயம் செய்யப்பட்ட அவளுடைய சொந்த சரீரமும்,வித்தும் வேறொரு மனிதனுடைய வித்தினால் நிறையப்பட்டிருந்ததை நிச்சயிக்கப் பட்ட அவள்கணவன் கண்டான். என்னே ஒரு அவமானம்! ஆதாமும் சரியாக அதையே கண்டான். கிறிஸ்துவும் அதையே கண்டார். மணவாட்டியினால் காத்திருக்க முடியவில்லை. இன்றைக்குள்ள ஜனங்களோடும் அவ்விதமேயுள்ளது. உண்மையான பரிசுத்த ஆவி சபையை ஆண்டு கொள்ள ஜனங்கள் காத்திருக்கிறதில்லை. தம்முடைய ஜனங்கள் மத்தியில் கிறிஸ்து தம்முடையஉண்மையான உயிர்த்தெழுந்த வல்லமையை வெளிப்படுத்த ஜனங்கள் கர்த்தரிடத்தில் காத்திருப்பதற்கு பதிலாக, சபையானது அதிக அங்கத்தினர்களால் நிறையத் தக்கதாக, ஆரம்ப அடையாளம், அன்னிய பாஷை பேசுதல் போன்றவைகளை யுத்தியாக உற்பத்தி செய்ய விழைகின்றார்கள். அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. 209அவள் செய்தது என்ன? அவள் எல்லைக் கோட்டைத்தாண்டி சென்று ஸ்தாபனத்தினால் கர்ப்பவதியானாள், முதாலாவது, தேவ கூட்டு சபை அவ்விதமாக கெட்டு போனாள், பின்பு ஒருத்துவ சபையும் இவ்விதமாக மற்றவர்களும் தொடர்ந்து கெட்டு போனார்கள். இப்பொழுதோ தன்னை மணவாட்டி என்று அழைத்துக் கொள்ளும் இவள் போலியான எல்லாக் காரியங்களினாலும் கர்ப்பவதியானாள். அவமானம். பெண்களும், ஆண்களும், பிரசங்கிகளும் சிறிதளவேனும் தங்கள் கவனத்தை தேவ வார்த்தைக்கு திருப்பாமல் ஒன்றுமில்லாத இவ்வுலகத்திற்குசெவிகொடுத்து, பின்பு தங்களை மணவாட்டி என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். அது என்ன? அவள் கர்ப்பவதியானாள். கிறிஸ்துவின் மணவாட்டி உலகத்திற்கேற்றபடி உடை உடுத்துதல், உலக வழக்கமாய் ஜீவித்தல், பெரிய அழகான ஆலயங்களைக் கட்டிக் கொள்ளுதல் போன்றவைகளினால் கர்ப்பவதியாகி இருக்கின்றாள். இக்காரியங்களெல்லாம் அவள் யார் என்பதை தெரியப்படுத்துகின்றது. அவள் பிசாசினால் உண்டாயிருக்கிறாள்! இதைத்தான் பிசாசும் ஆரம்பத்தில் செய்தான், அவன் ஒரு அழகான ராஜ்ஜியத்தைப் பரலோகத்தில் கட்ட முயற்சித்து தேவனால் உதைத்து தள்ளப்பட்டு புறம்பாக்கப்பட்டான். நவநாகரீகமான கிறிஸ்துவின் மணவாட்டியும் அவ்வாறே உதைத்து தள்ளப்பட்டு புறம்பாக்கப்பட்டாள். ஏனெனில் அவள் தன் கன்னித்தன்மையைக் காத்துக் கொள்ளாமல் ஒரு வேசியாகிவிட்டாள். இது மிகவும் ஆழமாயிருக்கிறது. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 210ஆதாமின் மணவாட்டி காத்திராமல் தன்னுடைய வித்தை சட்ட விரோதமாக, சட்டவிரோதமாக கலந்துவிட்டாள். நாம் தேவனுடைய வார்த்தையை மட்டும் விசுவாசிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது! சகோதரர்களே, இங்கும், ஒலிநாடாவிலும் கேட்டுக் கொண்டிருக்கும், சகோதரர்களே, நான் ஏன் தேவனுடைய வார்த்தைக்காக வார்த்தைக்கு வார்த்தைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் காண முடிகின்றதா? தேவன் சத்தியபரர் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதை நான் ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கிறேன். தேவன் தம்முடைய வேதத்தைப் பாதுகாக்கிறார். அவர் இந்த உலகத்தை ஏதாவது ஒன்றைக் கொண்டு நியாயந்தீர்க்க வேண்டுமானால் அது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமேயாகும், இந்த வார்த்தைதான் மாம்சமாகி இயேசு கிறிஸ்துவாக காணப்பட்டது..... இது ஆழமாக உங்களில் பதிய விரும்புகிறேன். வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். இந்த மணவாட்டியை கலப்பினமாக்கப்பட்டவளாக அவர் காண்கிறார். இத்தகைய ஒருவளை அவர் கலியாணம் செய்துகொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு போதும் அவ்வாறு செய்யமாட்டார்.ஏனெனில் அவர் பரிசுத்தராயிருக்கிறார். அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. சட்டவிரோதம், ஆதாம் அதைத்தான் கண்டான். 211சகோதரர்களே, சகோதரிகளே, திரும்பிப்பாருங்கள்...நீங்கள் ஏதாகிலும் ஒரு நிழலைப் பார்ப்பீர்களானால், அது வர இருக்கும் உண்மையான ரூபத்தின் சரியான தோற்றம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஆதாம் தன் மணவாட்டியை கர்ப்பவதியாக காண நேர்ந்தது என்பதை கவனியுங்கள், அவளோ, “சர்ப்பம் என்னை வஞ்சித்தது,” என்று கூறினாள். கர்த்தருக்குச் சித்தமானால் இன்னும் சிறிது நேரத்தில் நான் இப்பொருளை இரண்டு வித கருத்தாக பேசி, பாருங்கள்? அது வேறு எந்த விதமாகவும் இருக்கமுடியாது என்பதை உங்களுக்குக் காட்டப் போகிறேன். 212ஆதாமின் மணவாட்டி காத்திராமல் முதலில் சென்று கிரியை செய்தாள். அதை போல இன்றுள்ள மணவாட்டியும் இருக்கிறாள். “கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக” என்று கூறி ஏதாகிலும் ஒன்றை உற்பத்தி செய்ய விரும்புகிறாள். அதை பிரசங்க பீடத்தில் செய்ய விரும்புகிறாள். அவள் எல்லாவற்றையும் பெற்றிருக்க வேண்டும். பாருங்கள்? அவள் என்ன செய்துக்கொண்டிருக்கிறாள்? அவள் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறாள். அது எங்கே போகிறது என்று கவனியுங்கள். அது ஒன்றுமில்லையென்று உங்களால் காணமுடியும். அது போலியாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மை . அது அவ்விதம் இல்லாமலிருந்தால், இவ்வுலகமும், சபையும் தேவனுடைய வல்லமை யென்னும் அக்கினியால் கொழுந்துவிட்டு எரியும் ; ஓ....மரித்தோர் எழுந்திருத்தல், போன்ற பல்வேறு அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும். ஆனால் கிறிஸ்து தம்முடைய வித்தை அவளில் விதைக்கும் முன்பே அவள் வேறொன்றினால் விதைக்கப்பட்டு விட்டாள். அவள் எதைக் கொண்டிருக்கிறாள்? உலகம், ஸ்தாபனம் என்னும் களையான வித்தையே தன்னில் கொண்டிருக்கிறாள். அதன் காரணமாகத்தான் இன்று அவள் தன்னுடைய அறுவடையை அறுத்துக் கொண்டிருக்கிறாள். இது உங்களை குழப்பாது என்று நான் நம்புகிறேன். ஆனால் இது உங்களில் எங்கு இறங்க வேண்டும் என்று தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறாரோ அங்கு இது செல்லும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். பாருங்கள்? 213சட்டவிரோதமாக தன்னுடைய வித்தை வார்த்தையிடம் கலந்து விட்டாள். அவள் எதைக் காண முயற்சித்தாள்? (இப்பொழுது விழிப்போடு கவனியுங்கள்) அவள் எதன் பின் சென்றார்? ஞானம்! ஞானம்! அதைத்தான் இன்றுள்ள மணவாட்டியும் செய்திருக்கிறாள். தன்னுடைய பிரசங்கிகளை வேதப்பள்ளிகளுக்கு அனுப்பி வேதத்தில் காணப்படாத மனோதத்துவம் போன்ற எல்லாக் காரியங்களாலும் அவர்களை பயிற்றுவித்து, செயற்கை முறையாக குஞ்சு பொறித்துக் கொண்டிருக்கிறாள். அவள் அவ்விதம் செய்த பின்பு அதன் மூலம், தேவனுடைய செய்தியை மறுதலித்து எல்லாவற்றோடும் ஒத்து போகிற ஒரு கூட்ட ஜனங்களை கொண்டு வருகிறாள். தான் செய்வது இன்னதென்று அறியாதவளாயிருக்கிறாள். அவள் அதைக் குறித்த அறியாமையையுடையவளாய் இருக்கிறாள். தான் தவறென்று விசுவாசிக்கவில்லை-அவள் நினைக்கவில்லை. ஏவாளும் கூட தான் செய்தது தவறென்று நினைக்கவில்லை. ஏவாள் அது சரியென்றே எண்ணினாள். அது ஒரு உதாரணமாயிருக்குமானால், இதுவும் அதற்கு எதிர்மறையான ஓர் உதாரணமாகும். அந்த உதாரணம் எதை செய்ததோ அதையே இதுவும் செய்ய வேண்டும், என்னைப் பொறுத்த மட்டில் அது, இரண்டும் இரண்டும் நாலு என்பது போலவே அமைந்திருக்கிறது. 214இப்பொழுது கவனியுங்கள். ஏவாளின் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன? முதலாவதாகப் பிறந்தஅவன்...“பலுகிப் பெருகி (தம்முடைய மணவாட்டிக்கும் ஆதாமின் மணவாட்டிக்கும்) பூமியை நிரப்புங்கள்” என்று தேவன் கூறியிருப்பாரென்றால், அது ஒரு தேவ கட்டளையாயிருக்கிறது; அவர்கள் இருவரும் கலக்காமலே, அவள் அதை செய்திருக்கக்கூடும்.ஆனால் நடந்தது என்ன? ஆதாம் அவளிடம் வருவதற்கு ஆயத்தமானபோது அவள் ஏற்கனவே தாயாகி இருந்தாள். நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை காண முடிகின்றதா? அதே காரியம் கிறிஸ்துவின் சபைக்கும்-கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் சம்பவித்திருக்கிறது. இதற்கு மேலும் ஆழமாய் சில நிமிடங்களில் செல்லுவோம். கவனியுங்கள், ஏவாள் செய்தது என்ன? அவளுடைய முதல் பிள்ளை வெளியே வந்தது. அது ஒரு வேசிப்பிள்ளையாகவும், மரணத்தின் பிள்ளையாயும் மரணத்தை விளைவிக்கிறதுமாயிருந்தது. அதன் பின்பு வந்த ஒவ்வொருவரும் மரித்தனர்! அது பால் உணர்ச்சியாகத்தான் (Sex) இருந்திருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். அது பால் உணர்ச்சியாயிராவிட்டால் பின் ஏன் நீங்கள் மரிக்கிறீர்கள்? தேவன் ஒரு கட்டளை கொடுப்பாரென்றால் அது அழிய முடியாதே! தேவன் நித்தியமானவராயிற்றே! அது ஒரு போதும் தவற முடியாதே! “பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்” என்று அவர் சொன்னபோது—-அது ஒரு நித்திய நோக்கத்திற்காக கூறப்பட்டது: அதை நீங்கள் நிறைவேற்றும் போது மரிக்க முடியாது, ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருந்து நீங்கள் ஜீவிக்கத்தான் வேண்டும். ஏவாளின் பிள்ளை சரியான முறையில் கொண்டு வரப்பட்டிருக்குமானால், மரணமானது சம்பவித்திருக்க முடியாது; ஆனால் ஏவாளோ காத்திருக்கவில்லை. 215இன்றைக்கும் அது தான் காரியம். மணவாட்டியிடம் தேவனுடைய உண்மையான வார்த்தை வெளிப்படுவதற்கு காத்திருப்பதற்கு பதிலாக கூச்சலிடுவது, குதிப்பது, அன்னியபாஷை பேசுவது போன்ற போலியான முகப்பூச்சை அவள் விரும்புகிறாள். தேவனுடைய வார்த்தையை எடுக்கும் ஜாதியான உண்மையான தேவ மணவாட்டி தன்னுடைய பிள்ளைகளைப் பிறப்பிப்பாளானால் அவர்கள் வார்த்தையால் கொண்டு வரப்படுவதால் அவர்கள் மரிப்பதில்லை. ஏனெனில் அது வார்த்தையாயிருக்கிறது. ஆமென். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவளால் மரிக்கமுடியாது, ஏனெனில்....அந்த பிள்ளை மரிக்க முடியாது, ஏனெனில் அது வார்த்தையின்பிள்ளையாயிருக்கிறது; அது ஒரு வார்த்தை-வித்தின் பிள்ளையாயும், நித்திய பிள்ளையாயுமிருக்கிறது. அல்லேலூயா! இயேசுகிறிஸ்து உரைக்கப்பட்ட நித்திய பிள்ளையாயிருந்தார். அவர் மரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாவக் கடனைத் தீர்ப்பதற்காக அவர் அவ்விதம் செய்தார். அந்த ஒரு வழியாகத்தான் கடனைத் தீர்க்க முடியும். அதை வேறு யாரும் செய்ய முடியாது; ஏனெனில் மற்றவரெல்லாம் பிசாசின் திட்டப்படி பால் உணர்ச்சியினால் பிறந்தவர்களாயிருந்தனர். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள்? 216ஒவ்வொரு மனிதனும், அவன் போப்பாக இருந்தாலும், கண்காணியாகவோ பிரசங்கியாகவோ, அல்லது யாராயிருந்தாலும் மரிக்கிறான். ஏனெனில் அவன் ஒரு கலப்பினமாக இருக்கின்றான். அது நிச்சயம். அவன் சாத்தானுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவன். நீங்கள் எவ்விதமாக வேண்டுமானாலும் உங்களை அழைத்துக் கொள்ளுங்கள், அது சாத்தானும் ஏவாளுமாயிருக்கிறது. ஆரம்ப வித்திற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, ஏனெனில் ஆரம்ப வித்து ஜீவனாயிருக்கிறது. சாத்தான் அதை கலப்பினமாக்கி மரணத்தைக் கொண்டுவந்தான்! இன்றுள்ள சபை தன்னை பெந்தெகொஸ்தே என்றும், பாப்டிஸ்டு என்றும் அல்லது வேறு எவ்விதமாகவோ தன்னை அழைத்துக்கொண்டு தேவனுடைய வார்த்தையை கொள்கைகளோடு கலப்பினமாக்கும்போது, அது மரணத்தின் பிள்ளையைப் பிறப்பிக்கின்றது. அவளுக்கு ஜீவன் இருக்க முடியாது! அவளும் அவள் பிள்ளைகளும் மரித்தவர்களாயிருக்கின்றனர்! வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன், “இதோ, நான் அவளை கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபச்சாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்'' என்று கூறுகிறார். அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? உலகம் என்னும் படுக்கையில் அவளைத் தள்ளி (அங்குதான் அவள் இருக்கிறாள்) அவளுடைய பிள்ளைகளையும் அக்கினியால் அழிப்பார். கோதுமை செடிகளுக்கு இடையில் இருந்த பதர்களுக்கு என்ன நடக்கும் என்பதை கவனியுங்கள். அது எரிக்கப்பட வேண்டிய ஒரு பொருள். ஓ, தேவ வார்த்தையை நீங்கள் பொய்யாக்க முடியாது, அது சத்தியமாயிருக்கிறது. சில சமயங்களில் உங்கள் சந்தேகத்தினால் அதை தவறாய் மதிப்பிடுகிறீர்கள். ஆனால் அதை நேராக நீங்கள் போக விடுவீர்களானால் அது ஒன்று, இரண்டு—-ஒன்று இரண்டு (ஜோடு, ஜோடாக...தமிழாக்கியோன்) என்ற விதமாக ஒழுங்காகச் செல்லும். உலகமென்னும் படுக்கையில் அவளைத் தள்ளி...மரித்த பிள்ளைகளைத் தவிர அவளால் வேறொன்றும் கொண்டு வர இயலாது. 217ஆக, ஒரு ஸ்தாபனமானது கலப்பினமான ஒரு பிள்ளையை மட்டுமே பிறப்பிக்க முடியுமானால், பின் ஏன் நீங்கள் அதை சேர்ந்தவர்களாயிருக்கவேண்டும்? சகோதரர்களே, அதன் காரணமாகத்தான் நான் அதை எதிர்க்கிறேன். அவள் ஆரம்பத்திலிருந்தே மகா வேசியாயிருக்கிறாள், வேதம் அவளை அவ்விதம்தான் அழைக்கிறது. அது மிகவும் வெளிப்படையாயிருக்கிறது, அவள் யாரென்று நான் வெளிப்படையாகப் பேசப்போகிறேன் என்று ஏற்கனவே உங்களுக்கு கூறியிருக்கிறேன். அவள் வார்த்தையை விசுவாசிப்பதை விட்டு கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக் கொண்டு அதையே தன் பிள்ளைகளுக்கும் போதித்து, செய்ய வைப்பதினால் அவள் ஆவிக்குரிய விபச்சாரம் செய்கிறவளாயிருக்கிறாள். அவளுடைய பிள்ளைகள் கர்ப்பப்பையினின்று வரும் போதே மரித்தவர்களாயிருக்கின்றனர். அவளும் மரிக்கத்தான் வேண்டும். முற்றிலும் உண்மை . கர்ப்பம் திறந்து வரும் ஒவ்வொருமனிதனும் எவ்விதம் மரிக்க வேண்டுமோ, அவ்விதமே அவர்களால் பிறக்கும் ஒவ்வொருவரும் மரிக்க வேண்டும், ஏனெனில் அவள் ஒரு கலப்பினமானவளானபடியால் அவளும் அவளுடைய பிள்ளைகளும் சட்ட விரோதமானவர்களே. அது தான் சரி. இது உங்கள் தலையில் பதியும் என்று நான் நம்புகிறேன் 218யேகோவா ஒரு மணவாட்டியை உடையவராயிருந்தார். ஆதாமும், இயேசுவும் ஒரு மணவாட்டியை உடையவராயிருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் அவளைத் தள்ளிவிட்டார்.அவள் வேசியானதினிமித்தம் தேவன் அவளைத் தள்ளி விட்டார். அவர் சரியாக அதைத்தான் சொன்னார். அவள் வேசியானாள், விபசாரி. அவள் அவ்வாறு மாறுவதற்கு எது காரணமாயிருந்தது? (நமக்கு நேரமிருந்தால் அதை நான் படிக்க விரும்புகிறேன். அதைக் குறித்து சற்று பார்ப்போம்) சாமுவேல் தீர்க்கதரிசியின் நாட்களில், இஸ்ரவேலருக்கு தேவன் ராஜாவாயிருந்தார். அப்பொழுது இஸ்ரவேல் ஒரு கன்னிகையாக இருந்து, ஏதோ ஒன்றை உற்பத்தி செய்ய இருந்தாள். ஆனால் நடந்தது என்ன? அவள் தன்னை சுற்றிலுமுள்ள ராஜ்ஜியங்களில் ராஜாக்கள் ஜனங்களை ஆளுவதைப் பார்த்து தானும் அவ்விதமே இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டாள். 219பின்வாங்கி போன பெந்தகோஸ்தேயினரே, நீங்களும் அதையேத்தான் செய்தீர்கள். இன்றைக்கு ஏறத்தாழ 100 வருடங்களுக்கு முன்பு அங்கே பெந்தெகொஸ்தே இயக்கமானது தோன்றின போது,அவர்கள் ஸ்தாபனத்தைக் குறித்து ஒன்றும் பேசவில்லை. அவர்கள் அதற்கு செவிகொடுக்காமல், அதை பிசாசு என்று அழைத்தனர். அம்மனிதர்கள் சரியான கிறிஸ்தவர்கள்! ஆனால் இன்றுள்ள நீங்கள் என்ன செய்தீர்கள்? மற்ற சபைகளைப் போல் நீங்களும் நடிக்கவேண்டியதாயிருந்து, உங்களை ஸ்தாபித்துக் கொண்டீர்கள். உங்களுக்கு நடுவே வேலியுண்டாக்கி, பின்பு இவ்விதம் தான் போதிக்க வேண்டும் என்று கூறி, (தேவனுக்கு மகிமை! அல்லேலூயா) மேலும் கீழும் குதித்து, அன்னிய பாஷை பேசி, “அவனை இங்கு அங்கத்தினனாக்கு; அவன் பரிசுத்த அவியைப் பெற்றுக்கொண்டான்” என்றும் கூறுகிறீர்கள். அவன் தண்ணீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் சரியாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அவன் தவறாயிருக்கிறான். அவனுடைய கனிகள் அவனை யார் என்று நிரூபிக்கின்றது. அவனுக்குள் தவறான வித்திலிருந்து வளருகிறவனாயிருக்கின்றானே: “தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக சகோதரனே, நாங்கள் உன் மேல் எங்கள் கைகளை வைத்து உன்னை இங்கு மூப்பனாக்குகிறோம்! தேவ கூட்டு சபையை விட இச்சபையை பெரிய ஸ்தாபனமாக கட்டப் போகிறோம்!” என்று கூறுகிறீர்கள். அவ்விதம் தான் அது சென்று விட்டது. பெந்தகோஸ்தேயினரின் சரித்திரத்தையும் மற்ற சபைகளின் காரியத்தையும் நீங்களே படித்து அது அவ்விதம் தானா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 220பாப்டிஸ்டுகள் மெத்தோடிஸ்டுகளையும், மெத்தோடிஸ்டுகள் லூத்தரன்களையும், லூத்தரன்கள் கத்தோலிக்கரையும், ஒருவரை யொருவர் மிஞ்ச போட்டியிடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரை மிஞ்சப்பார்க்கின்றனர். பாருங்கள், அது அந்த...அது ஸ்தாபனத்தின் ஆவியாயிருக்கின்றது. ஆனால் இயேசு, ''இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்றார். ”தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர் “ என்றும் இயேசு கூறினார் சிலர் என்று அவர் கூறியிருப்பாரென்றால் அதுதான் தேவ வார்த்தையாகிய வித்து. அது சிலர் தான். அது லட்சங்களாகவோ, கோடியாகவோ அல்ல. வெகு சிலரே அதைக் கண்டு பிடிப்பார்கள். அவர்கள் அதை கேட்பதற்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள். முன்மாரியானது இப்பொழுது சென்று போயிற்று. 221இப்பொழுது, யேகோவா தேவன் ஒரு மணவாட்டியை உடையவராயிருந்து அவளை நேசித்தார். ஆனால் அவளோ வெளியே சென்று விபச்சாரியானாள். உலகத்தின் மற்ற வல்லமைகளோடு அவள் விபச்சாரம் செய்தாள். இந்த வயது சென்ற தேவபக்தியுள்ள அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியோடு தேவன் என்ன செய்தார்? (தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வருகிறதாயிருக்கிறது )அவர் அந்த தீர்க்கதரிசியோடு நடந்து வந்தார். சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, “பிள்ளைகளே, என்னிடமாய் ஒரு நிமிடம் கூடி வாருங்கள், நான் உங்களோடு பேசவேண்டும், நீங்கள் எதற்காக ஒரு ராஜாவை விரும்புகிறீர்கள்? யேகோவா உங்கள் ராஜாவாயிற்றே! ஒரு கொள்கை உங்களுக்கு எதற்கு? வேதமே உங்கள் கொள்கையல்லவா? வேதம் சத்தியம், மற்ற கொள்கைகள் எல்லாம் பொய்களே, மனிதனுடைய கொள்கைகளைக் கைக் கொண்டால் மரணம் தான்” என்று கூறினான். “அப்போஸ்தலருடைய விசுவாச பிரமாணம்'' என்று இப்பொழுதுள்ளவர்கள் கூறுகின்றார்கள். அது வேதத்தில் இருக்கிறதா என்று எனக்குக் காண்பியுங்கள். அத்தகைய காரியத்தை யாராகிலும் கேள்விப்பட்டதுண்டா? ”பரிசுத்தவான்களோடு ஐக்கியம் கொள்வதை நான் விசுவாசிக்கிறேன்“ என்று கூறுகிறார்கள். மரித்த பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விசுவாசிப்பவர்கள், ஆவிகளோடு (பிசாசின்) தொடர்பு கொள்பவர் என்றுஅழைக்கப்படுவார்—-மரித்தவர்களோடு ஐக்கியப்படுதல், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரே ஒரு மத்தியஸ்தர் உண்டு. அவர் தான் கிறிஸ்து. அவர் மரித்தவர் அல்ல. அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். பிராடெஸ்டண்டுகள் வட்டமான கழுத்துப்பட்டிகளை அணிந்தவர்களாய் சபையின் இத்தகைய உபதேசங்களை முழங்குகிறவர்களாயிருக்கின்றனர். ஏனைய உலகத்தார் நேசிப்பது போல்அவர்களும் அவைகளை நேசிக்கிறார்கள். 222“ஓ,நாங்கள் பெந்தெகொஸ்தேயினரைப் போல் இருந்தோட நாங்கள் மூலையில் நின்று கொண்டு தம்பூராவை மீட்டி, பின்பு ஜெபித்தோம். பெண்கள் நீட்டமாக வளர்ந்த தங்கள் தலைமயிர் தொங்க அங்கே நின்று கொண்டு தேவனைத் துதித்தது போன்ற காரியங்களெல்லாம் எங்களிடத்தில் உண்டு” என்று கூறுகிறார்கள். ஓ! அதைக்காட்டிலும் மேலாக செய்ய இன்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் உங்கள் முகத்திற்கு நேராக நகைப்பார்கள், எந்த ஒரு நல்ல கிறிஸ்தவனும் அவ்விதம் நகைப்பான். பானையைப் போன்று மயிரைக் கத்தரித்தவர்களாய், முகத்தில் வர்ணங்களைப் பூசினவர்களாய், உடம்பை பிடிக்கும் வண்ண உடை அணிந்தவர்களாய் அங்கு நின்று கொண்டு காரியங்களைச் செய்யும் நீங்களா தேவனுடைய பரிசுத்தவான்கள்? உங்களைக் காட்டிலும் உலகம் அதற்கு மேலாகச் செய்ய அறிந்திருக்கிறது. உங்களுக்கு அவமானம், அதைத் தவிர வேறெந்த கனிகளையும் உங்களால் கொடுக்க முடியவில்லையென்றால், அவ்விதம் மூலையில் நின்று பிரசங்கிப்பதை விட்டுவிடுங்கள். நான் கேலி செய்யவும் இல்லை. என் பட்சமாகவும் பேசவில்லை. நான் சத்தியத்தைக் கூறுகிறேன். ஒரு நாளில் அதன் பலனை நீங்கள் காண்பீர்கள். காலமானது அதிகம் கடந்து விட்டதென்று அவர்கள் உணருமட்டும் அது அவ்விதமே ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சமயமும் அவர்கள் அவ்விதமே செய்தார்கள். 223ஏனைய ஜனங்கள் செய்ய விரும்பினதையே யேகோவாவின் மணவாட்டியும் செய்ய விரும்பினாள். அதையேதான் இயேசுவின் மணவாட்டியும் செய்தாள். அங்கு அந்த வயது சென்ற சாமுவேல் தீர்க்கதரிசி அவர்களிடமாய் வந்து, “சற்று பொறுங்கள் என் பிள்ளைகளே, அக்காரியத்தின் பின்னே நீங்கள் போகவேண்டுவது என்ன? நான் கர்த்தருடைய நாமத்தினால் சொல்லிய ஏதாகிலும் தவறினதுண்டா ?” அவ்விதம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதை நீங்கள் படித்த ஞாபகம் உண்டா ? நிச்சயமாக நீங்கள் ஞாபகம் கொள்வீர்கள். “இன்னுமொரு காரியம். நான் பெரியக் கூட்டங்கள் நடத்தத்தக்கதாக சென்று உங்கள் பணத்தையெல்லாம் கொள்ளையடித்திருக்கிறேனா, அல்லது நான் எப்பொழுதாவது பணத்திற்காக பிச்சையெடுத்திருக்கிறேனா?” -நான் சாமுவேல் தீர்க்கதரிசியைக் குறித்து பேசுகிறேன். வேறு யாரிடமாகிலும் தேவனுடைய வார்த்தை வந்ததா? சாமுவேல் மேலும், “எப்பொழுதாவது நான் காணிக்கை எடுக்கச் சொல்லி—-இவ்வளவு, இவ்வளவு பணம் போட்டு இன்னின்ன காரியங்களை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறேனா?” அதற்கு அவர்கள், “இல்லை, இல்லை. நீர் அவ்விதமாக செய்ய வில்லை, உண்மையைத் தவிர வேறொன்றையும் நீர் எங்களுக்குச் சொன்னதில்லை” என்றார்கள். “பின் ஏன் உங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கூறிகிறீர்கள்?” என்றான். அதற்கு அவர்கள், “சாமுவேலே நீர் சொல்வது சரிதான். ஆனாலும் எங்களுக்கு அவ்விதம் தான் வேண்டும்” என்றார்கள். 224இந்த பெந்தெகொஸ்தே சபையும் அவ்விதமாகவே செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே நான்அவர்களை சார்ந்தவனாயிருக்கவில்லை. நிச்சயமாக தேவனுடைய வார்த்தையோடு ஒருகன்னிகையாக நான் இருப்பதையே விரும்புகிறேன். பெரிய பகட்டான காரியங்கள்என்னிடத்தில் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறதில்லை. நான் அவ்விதமிருக்க மறுத்து விட்டேன். அத்தகைய காரியத்தில் என்னை பிணைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இது என்னுடைய ஞானமாயிராமல் தேவனுடைய ஞானமாயிருக்கிறது. அவ்விதம் நான் செய்வேனானால், நான் ஜனங்களிடமிருந்து ஒரு “உறிஞ்சுகிறவன் போல்”, -பிசாசு-“இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்காக இவ்வளவு தொகை நான் கொடுக்க வேண்டும்; இன்னும் வேறு சிலக்காரியங்களுக்காக நான் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும். ஆகவே நீங்கள் அவைகளுக்காகப் பணத்தைக் கொடுங்கள்” என்று கூறி கொக்கியை இழுக்கிறவனாயிருப்பேன். ஆனால் கர்த்தருடைய நாமத்தினால் நான் உங்களுக்கு கூறிய யாவும் நிறைவேறாமல் இருந்ததில்லை. வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் உங்களுக்குக் கூறினதில்லை. நீங்களே நியாயந்தீர்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாகிலும் ஒன்றிற்காக உங்களிடம் விண்ணப்பித்திருக்கிறேனா? இல்லை. ஐயா, இல்லை. தேவன் என்னுடைய காரியங்களைக் கவனித்துக் கொண்டார். என்னை ஆதரிப்பதற்காக பெரிய பெரிய திட்டங்களை நான் கொண்டிருக்கவில்லை. அவ்விதமான எதுவும் என்னிடம் கிடையாது. தேவனை சார்ந்தவர்களான ஒவ்வொருவரும் தேவனுக்கு செவிகொடுப்பார்கள்! தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டு எங்கு செல்ல வேண்டுமோ அங்கேயும், எதை செய்ய வேண்டுமோ அதையும் செய்யுங்கள். தேவை எல்லாம் அதுவே-அதையே கைக்கொள்ளுங்கள், கோடிக் கோடியாக பணங்களை குவிக்கும் திட்டங்களுக்கு உடன்படாதீர்கள், அநேகர் அவ்விதம் செய்கிறார்கள். கோடி கோடியான டாலர்களால் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். 225நான் குற்றம் கண்டு பிடிக்கிறேன் என்பதைக் குறித்து மனம் வருந்தவில்லை. ஏனெனில் அதுகுற்றம் பிடிப்பதற்குரிய காரியமே. நான் யாருடைய உணர்ச்சிகளையும் துன்பப்படுத்த விரும்பவில்லை. ஆனால் தேவனுடைய உணர்ச்சிகளை நான் துன்பப்படுத்துவதைப் பார்க்கிலும் யாராகிலும் ஒரு மனிதனுடைய உணர்ச்சிகளை துன்பப்படுத்துவது பரவாயில்லை என்று எண்ணுகிறேன். அவர் உனக்கு கட்டளை கொடுத்து அனுப்பி இந்த இந்த காரியங்களை செய் என்று சொல்லி அதை ஜனங்கள் மத்தியில் நிரூபித்தாரென்றால், நீ நிச்சயமாக அதற்கு செவி கொடுக்கத்தான் வேண்டும். நான் சத்தியத்தை உங்களுக்குக் கூறுகிறேன். தேவனும் அது சாத்தியம் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அடையாளங்களால் மட்டுமல்ல, தம்முடைய வார்த்தையினாலும் அது சாத்தியம் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை . 226யேகோவாவின் மணவாட்டி விபச்சாரம் செய்யச் சென்று, அவள் என்ன செய்தாள்? பின் சட்டவிரோதமான பிள்ளைகளைக் கொண்டிருந்தாள். அது சரியா? அது சத்தியம் என்று நாம் அறிவோம். நேபுகாத்நேச்சார் என்னும் அரசனால் சிறை பிடிக்கப்பட்டாள். கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்தாள். காரியம் என்ன?—-வளால் காத்திருக்க முடியவில்லை. ஓ,இல்லை ஹூ....ஹூம், அவளால் காத்திருக்க மட்டும் முடியவில்லை. அவர்கள் ஏதாகிலும் ஒன்றை உற்பத்தி செய்ய வேண்டியதாயிருந்தது. பரிசுத்த ஆவி சபையில் வந்து பொறுப்பேற்கும் வரை அவர்களால் காத்திருக்க முடியவில்லை. பாருங்கள், அவர்களுடைய ஸ்தாபனத்திற்கு அதிகமான அங்கத்தினர்களை பெற வேண்டியதாயிருந்தது. 50 அல்லது 100 வருடங்களுக்கு முன்பு பெந்தெகொஸ்தே முதலில் தொடங்கி வார்த்தையானது பிரசங்கிக்கப்பட்ட போது இருந்ததைப்போல் இன்று இருந்திருக்குமானால், ஒருவேளை ஏறத்தாழ 50 அங்கத்தினர்கள் கூட இருந்திருக்க மாட்டார்கள். அது சரி. ஆனால் அந்த சொற்பமான அங்கத்தினர்கள் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களாயிருந்திருப்பார்கள்! தேவ வல்லமை அவர்களோடு இருந்திருக்கும். இந்த உலகமானது வார்த்தைக்கு வார்த்தை உரைக்கப்படும் வார்த்தை மாம்சமாகி அதன் விளைவாக மகத்தான அசைவு உண்டாயிருக்கும். ஆனால் இன்றோ அது சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருக்கிறது. அது உண்மை . அது ஒரு அறிவீனமாகி, கேலிக்குரியதும், உலகத்திற்கும், தேவனுக்கும் ஒருஅவமான சின்னமாகி விட்டது. 227ஒரு சமயம் நானும், இரண்டு சகோதரர்களும், அரிசோனாவிலிருந்து மிஸ்சௌரியிலுள்ள, ஸ்பிரிங் பீஃல்டு என்னும் இடத்திற்கு காலை ஆகாரம் உட்கொள்ள வந்து கொண்டிருக்கும்போது, சகோ. உட் அவர்கள் என்னுடைய கவனத்தை அங்கு இருந்த ஒரு சகோதரியினிடமாகத் திருப்பினார். அச்சகோதரி, சகோதரி காலின்ஸ் என்றவரைப் போன்று அழகான நீண்ட மயிரை வைத்திருந்தாள். சகோ உட் என்னைப் பார்த்து, “சகோ. வில்லர்ட் காலின்சுடைய மனைவியைப் போல் அச்சகோதரி காணப்படு கிறாளல்லவா” என்று கேட்டார். அதற்கு நான், “அப்படிதான் இருக்கிறாள்” என்று கூறினேன், அந்நேரத்தில் அங்கு வேறொரு பெண் மணியும் வந்தாள், அப்பொழுது நான், “இந்தப் பெண் அவளுடைய தாயாரைப் போன்று இருக்கிறாள் என்று யூகிக்கிறேன், அந்த நீளமான அடர்த்தியான மயிரைப் பாருங்கள்”என்றேன். மேலும் நான், அது சரி. தேவ கூட்டு சபையின் (Assemblies of God) தலைமை ஸ்தலம் இங்கு தான் இருக்கிறது. அக்காரணத்தினால்தான் அவர்கள் அவ்விதம் இருக்கிறார்கள்.“ என்றேன், அங்கு அமர்ந்திருந்த எல்லா சகோதரிகளும், தங்கள் மயிரைக் கத்தரித்து விட்டு இருந்தார்கள்; அவர்கள் அங்கு வேதாகமப் பள்ளியில் படிக்கும் மாணவிகள். அவர்கள் சிறிய ”ரிக்கிகள்“ (”Rickys“). அவர்கள் தங்கள் வேதாக மங்களை வைத்திருந்தனர். 228அவர்கள் நவ நாகரீகமான பெண்களைப் போல கேலி பேசிக்கொண்டும் கெக்கலித்துக்கொண்டும் இருந்தார்கள். அவர்களனைவரும் புறப்பட்டுச் செல்லும் வரை நாங்கள் கவனித்துக் கொண்டேயிருந்தோம்—-நாளைய தினம் வர இருக்கும் பெந்தெகொஸ்தே பயிர்கள் அவர்கள்—-அதில் ஒரு கிறிஸ்தவன் இருந்தால்!- ஏன் ஒரு கிறிஸ்தவனும் கூட இல்லை? ஏனெனில் அத்தகைய விதைதான் அங்கு விதைக்கப்பட்டிருக்கின்றது. அது முற்றிலும் உண்மை. அந்த சகோதரி சென்ற பின்பு, மற்ற எல்லோரும் கூட சென்றுவிட்டனர், ஆனால் இந்த சிறிய பெண்மணி எங்களிடம் வந்து “உங்களுக்காக நான் ஏதாகிலும் செய்ய வேண்டுமா” என்று கேட்டாள். அதற்கு நான், 'உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்“ என்றேன். அதற்கு அவள் “கேளுங்கள், ஐயா?” என்றாள். நான், “(ஒரு அன்னியனைப் போல-எங்களை அவள் அறிந்திருக்கக் கூடும் என்று நான் நினைத்தேன்) அங்கு ஒரு வேதாகமப் பள்ளி உண்டு அல்லவா?”, என்றேன். அதற்கு அவள் “ஆம் ஐயா, அங்கு உண்டு” என்றாள். நான், “அங்கிருந்து உனக்கு அதிகப்படியான வியாபாரங்கள் கிடைக்கிறது என்று யூகிக்கிறேன்” என்றேன். (சபையின் பொக்கிஷ பொறுப்பாளர்களான சகோ ஃபிரட் சோத்மனும், சகோ பாங்க்ஸ்உட்டும் அங்கு என்னோடு அமர்ந்திருந்தார்கள்) அதற்கு அவள்,“ஆம், ஐயா. அது அவ்விதம் தான்” என்றாள். “நீயும் கூட அதைச் சேர்ந்தவளா?”என்று நான் கேட்டேன். அதற்கு அவள், “இல்லை ஐயா, மன்னிக்கவும், நான் அதைச் சேர்ந்தவள் இல்லை” என்றாள்.மேலும் நான், “நான் அவ்விதம் நினைத்ததன் காரணம் என்னவென்றால் அந்த மாணவிகளோடு இருந்த அந்த பெண்மணி உன்னைப் போலவே நீளமான மயிரை வளர்த்திருந்தாள், ஒரு வேளை உன்னுடைய தாயாரோ?” என்று கூறினேன். அதற்கு அவள், “இல்லை ஐயா, அப்பெண்மனி அங்கு வேலை செய்கிறாள். ஆனால் நான் வேலை செய்யவில்லை. நான் நீளமான மயிரை விரும்புகிறேன், எனக்கு ஒரு சிறு பெண் பிள்ளையும் உண்டு. அவளுக்கு கூட நீளமான மயிரை நான் வளர்த்திருக்கிறேன், என்னுடைய கணவருக்கு நீளமான மயிர் வளர்த்தலே பிடிக்கும்” என்று கூறினாள். அதற்கு நான், “தேவன் உன் கணவரை ஆசீர்வதிப்பாராக” என்றேன். 229அதற்கு அவள், “நல்லது ஐயா?” என்றாள். “தங்கள் மயிரைக் கத்திரித்தவர்களாய் இருக்கும் அந்த மாணவிகளோடு அந்த நீளமான மயிரையுடைய பெண்மணி, இருப்பது குறித்து மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது”என்று நான் கூறினேன். “ஆம்.” நாங்கள் நடந்து சென்று...பின்பு நான், “நன்றி” என்று கூறிவிட்டு, அங்கிருந்து நாங்கள் சென்று விட்டோம். நான் சகோதரர்களிடம், “ அங்குள்ள அந்த தவறாய்ப் பிறந்த பிள்ளைகளின் மத்தியில் அச்சகோதரியை தேவன் அவர்களுக்கு ஒரு கடிந்து கொள்ளுதலுக்காக வைத்திருக்கிறார்” என்று கூறினேன். அது உண்மை-முறைதவறிப் பிறந்தவர்கள், உலகத்தின் பின் செல்லும் கூட்டம். தேசத்தின் ராணியான யேசபேலைப் போன்று அவளைப் பின்பற்றும் பெண்கள் எத்தனைபேர் இருக்கின்றார்கள்? அவளைப் போன்ற எத்தனைபேர் இன்று பரலோகத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? பாருங்கள்? உலகத்தின் காரியங்கள்—-உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் அவனிடம் தேவனுடைய அன்பு இல்லையென்று வேதம் கூறுகின்றது. அது என்ன?அவர்கள் பெந்தெகொஸ்தேயின் நாளையப் பயிருக்கு இன்றையப் பாலாடையாயிருக்கின்றார்கள் (Cream). அந்த சபை தேசத்தில் ஒரு பெரிய அமைப்பாயிருக்கிறது. அதுவா மணவாட்டி! எனக்கு எட்டாததாயிருக்கிறது. 230சரி,அவள் எதை செய்ய முயற்சிக்கிறாள்? ஓ பீடத்தினண்டையில் குதித்து ஆடி எதையோ ஒன்றை உற்பத்தி செய்கிறாள்—-நான் அதைக் குறித்து கேலி செய்யவில்லை; அவ்விதம் செய்வதினால் தவறொன்றுமில்லை. அவள் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்கிறாள். ஏன் அவ்விதம் செய்கிறாள்? சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்காக. காரியம் என்ன? அவளால் காத்திருக்க முடியவில்லை. பாருங்கள்? தேவனே அதை செய்யும் வரை அவளால் காத்திருக்க முடியவில்லை. பாருங்கள். எங்கிருந்தாவது அவர்களுக்கு அங்கத்தினர்கள் வரவேண்டும், ஆகவே அவர்கள் சபை மக்களிடம், “நீங்கள் அவ்விதமாகத்தான் செய்ய வேண்டும்”என்கிறார்கள். பாருங்கள், அங்கே தான் அந்த வித்து வருகிறதாயிருக்கிறது. அவர்கள் அதைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். 231நான் ஒரு அப்போஸ்தலன். ஆப்பிரிக்கர்கள் ஒரு மிருகத்தினுடைய இரத்தத்தை எடுத்து தங்கள் மேல் அதை ஊற்றி (ஆணும், பெண்ணும் நிர்வாணமாயிருப்பார்கள்) தங்களுடைய முகங்களில் வர்ணங்களைப் பூசிக் கொள்வார்கள். இத்தகைய காரியம் ஒரு புறஜாதியானிடமிருந்து தான் வருகிறதாயிருக்கிறது. அது நமக்கு அல்ல. கிறிஸ்தவ விசுவாசிகளே, ஒரு போதும் இல்லை. ஒரே ஒரு ஸ்திரீ தன்னை வர்ணம் பூசிக்கொண்டாள் என்று வேதம் கூறுகிறது. அவள் யேசபேலேயல்லாமல் வேறு யாருமில்லை; அவள் ஒரு பிசாசு. இவ்விதமாக ஆப்பிரிக்கர்கள் வர்ணத்தை தங்கள் முகத்தில் பூசி காதுகள் தொங்கும் அளவுக்கு மரத்தினால் ஆன துண்டுகளை காதுகளில் (ஜுலு என்ற இனத்தவர்) மாட்டிக்கொண்டும், சில சமயங்களில் உதடுகளைப் பிரிக்கும் அளவுக்கு அவைகளை மாட்டிக்கொண்டும், (அதை அழகு என்று அவர்கள் நினைக்கின்றார்கள்) மார்பகங்களிலும், கால்களைச் சுற்றிலும் கூட அவைகளை கட்டி, வரிக்குதிரையின் உடலிலுள்ள கோடுகளைப் போன்று உடலெல்லாம் வரைந்து, கூக்குரலிட்டு, ஆவியில் நடனமாடி அன்னிய பாஷைகளைப் பேசி, பிசாசுகளைத் தொழுது கொள்கிறார்கள்: இதுவா பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம்! 232இந்தியாவில் நான் இருந்தபோது, நெருப்பின் மேல் நடக்கிறவர்கள் அங்கிருக்கிறார்கள் என்ற காரியங்கள் உண்மையென்று நானறிந்தேன். ஒரு பெரிய விக்கிரகம் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அதன் காதுகளில் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட காதணிகள் மாட்டப்பட்டிருக்கும், அந்த ஜனங்கள் குத்திக் கொண்டு, உபாதைப்படுத்தும் கருவிகளால் தங்கள் மாம்சத்தை துளைத்து கொண்டும், தங்களையே அடித்துக்கொண்டும், (பொய் சொன்னால் தங்கள் உதடுகளை தைத்து தங்களுக்குத் தாங்களே நியாயத்தீர்ப்பு செய்து) ஒரு கூர்மையான கம்பியை மேல்வாயின் மூலம் குத்தி உதட்டைக் கிழித்து மூக்கினிடம் மட்டும் துருத்தி நிற்கும் படியாக வைத்து, கிறிஸ்துமஸ் மரம் பந்துகள் போல் இருக்கும் மீன் பிடி கொக்கிகளை ஆயிரக்கணக்கில் உடலெல்லாம் குத்தி தொங்கவிட்டு, அந்த விக்கிரகத்தின் முன்பாக நடனமாடிச் சென்று ஒரு கிடாரியை கொன்று விக்கிரகத்தை இவ்விதமாய் தொழுது கொண்டு, கொதிக்கிற நெருப்பின் மேல் நடந்து, ஒரு வித வடுவும் கூட இல்லாதவர்களாய் காணப்படுகின்றார்கள். பெந்தெகொஸ்தேயினராகிய உங்களில் சிலர் அவ்விதம் முயற்சி செய்து பாருங்களேன். 233அது ஏற்கனவே எபிரேய வாலிபரால் நடந்தேறிய ஒன்று. ஆனால் அவர்கள் ஒரு போதும் தங்கள் தேவனாகிய கர்த்தரை சோதிக்கவில்லை; அவர்கள் நெருப்பிலே தூக்கியெறியப்பட்டார்கள். அவர்கள் எதையும் செயற்கையாக உற்பத்தி செய்ய முயற்சிக்கவில்லை. இன்றுள்ள பெந்தெகொஸ்தேயினரிடம் உள்ள காரியம் அதுதான். அவர்கள் எதையோ செயற்கையாக உற்பத்தி செய்கிறார்கள்! அவர்களால் காத்திருக்க முடியவில்லை! ஓ தேவனே, அவர்களால் காத்திருக்க முடியவில்லை. ஆகையால் அவர்கள் விபச்சாரம் செய்து விட்டார்கள். ஆமென். களைகளும் ஏதாவதொன்றை உற்பத்திச்செய்யும், அது என்னத்தைக் கொண்டு வருகிறது?—-முதல் மணவாட்டி செய்தது போலவே, அவர்களாலும் காத்திருக்க முடியவில்லை. அவள் வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையின் மூலம் மரணத்தைக் கொண்டு வந்ததினால் அதன் மூலம் நாமும் அத்தகைய பிள்ளைகளாயிருக்கிறோம். தேவன் மாம்சத்தில் வந்து நமக்கு வேறாரு பிறப்பைக் கொடுத்து, அதன் மூலம் நம்மை ஆரம்ப குமாரரும், குமாரத்திகளுமாக திரும்ப பெற்றார். பாருங்கள்? அதுதான் காரியம். ஏவாளின் சரியான வித்து ஒரு போதும் சம்பவிக்கவில்லை, ஏன்? அவள் அதை கலப்பினமாக்கி விட்டாள்.அவள் அதை விலக்கி வைத்தாள். நியமிக்கப்பட்ட நேரத்தில் ஆதாம் தன் மணவாட்டியாகிய ஏவாளிடத்தில் வரும் முன்பே—-அதை போலவே கிறிஸ்துவும் சபையாகிய அந்த கூட்டத்திற்கு வரவேண்டியவராயிருக்கிறார்; அவ்விதம் செய்வதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பலுகிப் பெருக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், ஆனால் அவர்கள் தேவனுடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். 234அதுதான் இன்றுள்ள காரியம். தேவனுடைய நேரத்திற்கென்று காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக வேறு எதையோ விரும்புகிறார்கள். ஆகவே பிசாசு ஞானத்தைக் கொண்டவனாய் இருந்து மற்றவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய ஸ்தாபனத்தை உண்டாக்கத்தக்கதாக அதை அவர்களுக்கு கொடுக்கிறான். நான் ஏன் அதற்கு எதிராய் இருக்கிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா? நிச்சயமாக, எனக்குள் இருக்கும் எல்லாவற்றாலும் நான் அதற்கு எதிரிடையாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தை என்னில் உள்ள வரையிலும் அது எப்பொழுதும் எதிரிடையாகத்தான் இருக்கும். ஏனெனில் தேவன் அதை எதிர்க்கிறார். தேவன் அதற்கு எதிராக இருக்கிறார் என்றே அவரே கூறினார். அது சரி. காத்திருக்கு மட்டும்... 235ஏவாளின் வித்து ஒரு போதும் சம்பவிக்கவில்லை. அது சாத்தானின் பொய்க்கு கலப்பினமாக்கப்பட்டு ஆதாமின் அழகான மணவாட்டி கறைபட்டு போனாள். அதைப் போலவே கிறிஸ்துவின் மணவாட்டியும் கறைபட எது காரணமாயிற்று? (இப்பொழுது, ஆதாமின் மணவாட்டி)—-அவள் தேவனுடைய வார்த்தையில் ஒரு போதும் தரித்து இருக்கவில்லை. அது சரியா? அது சரியில்லையென்றால் ஒன்றும் கூற வேண்டாம், சரியென்றால் ஆமோதியுங்கள்....அங்கு மூன்று காரியங்கள் காணப்படுகின்றன; ஆதாம், கிறிஸ்து, தேவன். சரியான ஜீவனையுடைய பிள்ளையை ஆதாமின் மனைவி கர்ப்பந்தரிக்கவில்லை. ஏனெனில் அவள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்தாள். அது உண்மையானால், “ஆமென்” என்று கூறுங்கள் (சபையார், “ஆமென்'' என்று கூறுகிறார்கள்). யேகோவாவின் மனைவி அல்லது மணவாட்டி தள்ளப்பட்டதின் காரணம் அவள் தேவனுடைய வார்த்தையான தீர்க்கதரிசியை புறம்பாக்கினாள். அது உண்மையா? கிறிஸ்துவின் மணவாட்டி விவாகரத்தின் மூலம் தள்ளப்பட்டதின் காரணம் அவள் ஏவாளைப் போன்றும் மற்றவர்களைப் போன்றும் தேவனுடைய வார்த்தையை புறம்பாக்கினதேயாகும்; சரியாக, இவர்களெல்லோரும் வேசிகளும், கறைபட்டவர்களுமாயிருக்கின்றனர். அவர்களுடைய கணவன்மார்கள் அவர்களிடம் செல்ல முடியவில்லை. ஏனெனில் கணவன்மார்கள் அவர்களிடம் வருவதற்கு முன்பே அவர்கள் கர்ப்பவதிகளாகக் காணப்பட்டனர். ஓ,தேவனே! அது ஒரு பரிதாபமான காட்சியல்லவா! யோசித்துப் பாருங்கள். ஒரு வாலிபன் நியமிக்கப்பட்ட தன் மணவாட்டியிடம் சேர விரும்பும்போது, அவள் ஏற்கனவே இன்னொரு வனுடைய வித்தினால் நிறையப்பட்டிருப்பதைக் காண்கிறான். என்னே ஒரு காரியம்! தேவனுக்குச் சம்பவித்தது அதுவே; ஆதாமுக்குச் சம்பவித்ததும் அதுவே; கிறிஸ்துவுக்குச் சம்பவித்ததும் அதுவே. ஓ! 236ஆம், அவள் வார்த்தையில் நிலை நிற்காமல் கலப்பினத்தை உண்டாக்கினாள். அதைத் தான் இஸ்ரவேல் செய்தது. கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்தாள். அவள் எங்கே இருக்கின்றாள் என்று பாருங்கள்? அவர்கள் மற்றவர்களிடமே சென்றனர். கிறிஸ்துவின் பெந்தெகொஸ்தே மணவாட்டியும், அதையே செய்தாள். அவளால் வார்த்தையாகிய ஆவிக்குரிய பிள்ளைகளைக் கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் அவள் தன்னிலே ஒரு கலப்பினமாயிருந்தாள். தன்னை ஸ்தாபனத்தோடு கலப்பினமாக்கின பின்பு எவ்வாறு அவளால் கிரியை செய்ய முடியும்? அவர்களோடு இணைந்து உலக ஐக்கிய சபைகளோடும் இணைந்து எல்லாம் அவர்களைப் போலாகி, மற்றவர்களைப் போல கலப்பினமானாள். பின் எவ்விதம் அவள் சரியான பிள்ளையைக் கொண்டுவரமுடியும்? அவளால் முடியாது. 237இப்பொழுது, இங்கு இன்னும் அநேகம் உள்ளன. நான் துரிதமாக இவைகளை முடிக்க வேண்டும். நான்...நான் இவைகள் ஒவ்வொன்றின் மீதிலும் பிரசங்கிக்க வேண்டும். பாருங்கள்? 238கவனியுங்கள். உண்மையான மணவாட்டி....அல்லேலூயா, உண்மையான மணவாட்டியென்று ஒருத்தியிருக்கிறாள்! ஏன்? அல்லேலுயா. அவள் முன் குறிக்கப்பட்டவள். அவள் தன்னை ஸ்தாபிக்க மாட்டாள். ஏனெனில் அவள் முன் குறிக்கப்பட்ட வள். ஏதாகிலும் சில ஸ்தாபனங்களைக் குறித்து அவள் கவலைக் கொள்ள வேண்டியதில்லை. அவள் தன் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும்படியாக ஏற்கனவே முன் குறிக்கப்பட்டிருந்தாள். கவனியுங்கள், மரியாளைப்போல...இதை நீங்கள் தவறாமல் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்—-ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்படியானால், “ஆமென்''என்று கூறுங்கள் (சபையார், ”ஆமென்“ என்று கூறுகிறார்கள்.). கிறிஸ்து தம் மணவாட்டியிடம் வரும்போது, அவள் மரியாளைப் போன்று கன்னியாக இருப்பாள். ஏனெனில் தேவன் கிறிஸ்துவையும் மணவாட்டியையும் ஒரு வேசியின் கர்ப்பப்பையின் மூலமாக கொண்டு வர முடியாது. தம்முடைய வார்த்தையை, வார்த்தையைக் கலப்பினமாக்கின ஒரு வேசியின் மூலமாக அவரால் கொண்டுவர முடியாது. அது கடினமான வார்த்தை , ஆனால் அதைத்தான் வேதம் கூறுகிறது. வேதம் என்ன சொல்லுகிறதோ அதையே தான் நானும் சொல்லுகிறேன். ஏனெனில் இவை புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். 239மரியாளைப் போன்று, உண்மையான மணவாட்டி, ஒரு கன்னிமையான கருப்பையை கிறிஸ்து என்ற வார்த்தைக்காக கொண்டிருப்பாள். கிறிஸ்து என்ற வார்த்தை மணவாட்டியிடம் வரும் போது, அவள் அவரைப் போன்றே கலப்பில்லாத வார்த்தையாயிருப்பாள். இது புரிந்து கொள்ளப்படுகிறது என்று நம்புகிறேன். சகோ. நெவில் அவர்களே, பாருங்கள், பாருங்கள். நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அவர் யார்?—-வார்த்தையானவர்!—-வார்த்தையாகிய தேவன். “ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய நாமம் வஸ்திரத்தின் மேல் எழுதப்பட்டிருந்தது”. அவருடைய நாமம் “வார்த்தையாகிய தேவன்.” “ஆதியிலே, வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, இந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி..... நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. அவருடைய மணவாட்டி வரும்போது, அவள் அவரைப் போன்றே கன்னியான உற்பத்தியாயிருப்பாள். 240கிறிஸ்துவும் யேகோவாவும் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவரா? மணவாட்டியும் கூட அவ்விதம் இல்லை! அவள் அவரில் பாகமாயிருக்கிறாள். அவளுக்கு ஒரு கோட்பாடு தேவையில்லை. அவள் ஒரு பூரண கன்னியாயிருக்கிறாள். எப்படி? அவளுடைய கிரியைகளினால். ஆமென். அவள் ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும், “ஆமென், ஆமென்” என்று சொல்லி “உம்முடைய வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது” என்பாள். ஓ! அது தான் காரியம். ஒரு கன்னி கருப்பையையுடையவளாயிருக்கிறாள். அவள் வார்த்தையென்னும் கன்னி கருப்பையினின்று வெளி வந்தாள். இயேசு எதினின்று வெளிவந்தார்? ஒரு கன்னியின் கருப்பையின் மூலமாக! பாருங்கள்? 241ஆதாம் தன்னுடைய மணவாட்டியிடம் வந்தபோது அவள் ஏற்கனவே கர்ப்பவதியாயிருந்தாள். அவள் ஏதோ ஒன்றை செய்து விட்டாள். அவள் தன்னைக் கலந்து கலப்பின பிள்ளையை உற்பவித்தாள், அது மரித்தது. ஆனால் யோசேப்பு தன் மணவாட்டியிடம் வந்தபோது, அவளும் ஏற்கனவே கர்ப்பமுற்றிருந்தாள். ஆனால் அதுவோ ஜீவனாயிருந்தது. ஆதாம் தன் மணவாட்டியிடம் கூடிவரும் முன்னர்—-யோசேப்பும் மரியாளையும் போல, கிறிஸ்துவும் சபையும் போல (இதைக் காண முடிகிறதா?)—-பாருங்கள்? அவர்கள் கூடி வரும் முன்னே (ஆதாமும் ஏவாளும்) அவள் சர்ப்பத்தினால் ஒரு கறைப்பட்ட வித்தைக் கர்ப்பமுற்றிருக்கக் கண்டான். ஆதாம் தன் மனையிடம் வந்தபோது, அவள் மரணத்திற்கு கர்ப்பமுற்றிருந்ததை அவன் கண்டான். பாருங்கள்? எவ்வித மரணம்?—-ஆவிக்குரிய விதமாகவும், மாம்சத்திற்குரிய விதமாகவும் அது மரித்ததாயிருந்தது; ஆனால் யோசேப்பு என்னும் மனிதன் தன் மணவாட்டியிடம் வந்த போது (மகிமை! அவளை அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை!) அவள் நித்திய ஜீவனால் கர்ப்பமுற்றிருந்தாள், வார்த்தையாகிய தேவன் நமக்குள்ளே மாம்சமானார். 242உரைக்கப்பட்ட வார்த்தையை திரும்பவும் கொண்டு வா! இங்குள்ள வார்த்தை, வார்த்தையாகிய தேவன் மனித கருப்பையின் மூலமாக வருகை புரிதல். ஆமென்! தேவன் எப்படியாயினும் அதை நிறை வேற்றுவார். அவர் உரைத்தார், அது அப்படியே ஆக வேண்டும். ஓ மகிமை! ஆமென். அவர் நம்முடைய தேவன். இது ஐசுவரியமாயிருக்கிறது. சகோதரர்களே, இதை நீங்கள் ஜீரணித்தால் புரிந்துக்கொள்ள முடியும். அங்கு தான் அவர்களை அவர் கண்டுபிடித்தார். 243ஆதாம் தன் மனைவியிடம் வந்த போது, அவள் தவறான வித்தினால் கருவுற்றிருந்தாள். ஜோ...அந்த வித்து மரித்தது. யோசேப்பு தன் மனைவியிடம் வந்தபோது, அவளும் கருவுற்றிருந்தாள்.ஏவாளின் கர்ப்பத்தையும், மரியாளின் கர்ப்பத்தையும் எது வித்தியாசப்படுத்திற்று? ஆதாமின் மணவாட்டி வார்த்தையை சந்தேகித்தாள். அது சரியா? யோசேப்பின் மணவாட்டியோ வார்த்தையை விசுவாசித்தாள். அது தான் வித்தியாசம். அப்படியானால் அதன் பின் என்ன?அது தான் வார்த்தை , ஓ! அந்த விலையேறப்பட்ட வார்த்தை ! இவ்வுலகம் அந்த தேவவார்த்தையினால் உண்டாக்கப்பட்டது! அல்லேலுயா! என்னுடைய இளைப்பாறும் இடம் அதுவே. எல்லா ஸ்தாபனங்களும் மற்ற யாவும் எதை வேண்டுமாலும் செய்து விழுந்து போகட்டும்: நானோ வார்த்தையின் பேரிலே மட்டும் சாருவேன். அதன் காரணமாகவே நான் எதைச் செய்தேனோ அதைச் செய்தேன். அதன் காரணமாகவே நான் ஸ்தாபனங்களை புறம்பாக்குகிறேன். “அவன் சபைகளை உடைக்கிறான்” என்று கூறுகிறார்கள். நம்முடைய கர்த்தரைக் குறித்தும் அதையே அவர்கள் கூறினார்கள். அதையே எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? 244இப்பொழுது, இப்பொழுது....அவன் அதைக் கண்டான். கிறிஸ்து தமது மணவாட்டியிடம் வருகிறார். அவர் அவளில் எதைக் காண்கிறார்? அதே காரியத்தை. ஏன்? கிறிஸ்துவின் மணவாட்டி முதலில் ஆரம்பித்து வெளிவந்த போது—-(கவனியுங்கள், நீங்கள் இதை தவற விட நான் விரும்பவில்லை) அவள் ஆரம்பித்த பொழுது அவள் ஒரு கன்னியாக இருந்தாள். ஆதிசபை-அவள் சரியாகவே இருந்தாள். அச்சபை மிகவும் அற்புதமாயிருந்தது. தேவன் அவருக்கு ஒரு மணவாட்டியை அளித்தார். ஆனால் அவள் என்ன செய்தாள்? சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நலமாயிருக்கும் கி.பி.606ம் வருடத்தில் அவள் ரோமசபையின் கோட்பாடுகளினால் கர்ப்பம் தரித்து ஒரு ஸ்தாபனமானாள். அதன் பிறகு, வேதத்தில் குறிப்பிடப்பட்ட அந்த மகா வேசியான அந்த தாய், சபைகளைப் பெற்றெடுத்துக் கொண்டே இருந்தாள். அவர்கள் வேசிகளாய் (Harlots) இருந்தார்கள்—-(இவர்கள் தாம் ப்ராடெஸ்டண்டு கிறிஸ்தவர்கள்) அவளால் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் தங்கள்-ஸ்தாபனத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். நான் ஏன் அதற்கு விரோதமாயுள்ளேன் என்பதை உங்களால் காணமுடிகிறதா? சரி. 245இங்கு வார்த்தையின் பிறப்போ கிறிஸ்துவாயிருக்கிறது. அது ஸ்தாபனங்களோடு தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளவில்லை. ஆதி சபையானது ஸ்தாபன இயக்கமாயிராமல் தேவனுடைய வார்த்தையாலும், ஆவியாலும் நீர் பாய்ச்சப்பட்டதாயிருந்தது. சகோதரனே, தேவன் அங்கு வார்த்தையை அவ்விதம் விதைத்திருந்தார்; பரிசுத்த ஆவி அதற்கு நீர் பாய்ச்சினது. அவளும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஆனால் அவளாலும் தொடர்ந்து ஒன்றும் செய்யக்கூடாமல் இருந்தது? ஏனெனில் அவளும் முற்றிலுமாக தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டு உலகத்தை தன்னோடு கலந்து விட்டாள். அவளால் ஒன்றும் செய்யக் கூடாமல் இருந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள்.. 246இப்பொழுது, இப்பொழுது, கவனியுங்கள் தேவன் தம்முடைய வார்த்தையை தம்முடைய சரீரத்தின் மூலம் உறுதிப்படுத்தினார். அது சரியா? ஆனால் அவள் ஆதாமின் மணவாட்டி ஏதேனில் விபச்சாரம் செய்தது போலவும் யேகோவாவின் மணவாட்டி சாமுவேலின் நாட்களில் ஒரு ராஜாவை ஏற்படுத்தி, தேவனையும் வார்த்தையையும் தள்ளிவிட்டு (அவளுக்கென்று விவாக நிச்சயிக்கப்பட்ட கணவன்) மற்ற தேசங்களைப் போல விபச்சாரம் செய்தது போலவும் செய்துவிட்டாள்; ஆகவே தேவன் அவளை விவாகரத்து செய்து விட்டார். அதையேதான் இன்றும்செய்தார். 247மணவாட்டியின் குமாரர்கள் மணவாட்டியுடன் விபச்சாரம் செய்தார்கள்; பெந்தெகொஸ்தேயினின்று வந்த தேவகுமாரனுடைய மணவாட்டி வார்த்தையின் கன்னிகையாயிருந்தாள், ஆனால் அவள் ஆதாமின் மனைவியைப் போன்று, யேகோவாவின் மனைவியைப் போன்று விபச்சாரம் செய்தாள்; இங்கே தேவகுமாரனுடைய மனைவி, ரோமக் கடவுள்களோடு (பன்மை) விபச்சாரம் செய்து கொண்டு ரோம கடவுள்களாகிய தனது நேசர்களை பிரியப்படுத்தத்தக்கதாக தனது சொந்த கணவனை மூன்று கூறாக்கினாள்! தேவன் அவர்களுக்கு இரக்கம் பாராட்டுவாராக, நிச்சயமாக. அவர்கள் சூரியக் கடவுளான அஸ்தரோத் பாலாம், பரலோகத்தின் ராணி என்பன போன்ற நூற்றுக்கணக்கான கடவுள்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மணவாட்டி, தன்னுடைய கீர்த்தியற்ற நேசர்களை சாலமோனின் உன்னதப்பாட்டில் தேவன் தம்முடைய மணவாட்டி ஒவ்வொரு தன் நேசர்களுக்காகவும் தன்னை விரித்து வைத்து சோரம் போய் இவ்விதம் அவள் ஒரு வேசியாயிருந்தாள் என்று கூறுவதை நீங்கள் வாசிக்கவில்லையா? நான் வெளிப்படையாக பேசுகிறேன். வேதமும் அவ்விதம் தான் கூறுகின்றது. அவளோடு கூடச்செல்ல விருப்பமுள்ள எந்த மனிதனும் அவளோடு போகலாம். விருப்பமுள்ள எந்த மனிதனும் அவளோடு போகலாம். கிறிஸ்துவின் மணவாட்டியும், எல்லா பழைய அசுத்தத்திற்கும், அருவருப்பான பழக்க வழக்கங்களுக்கும் தன்னை உட்படுத்தி எல்லா ஸ்தாபனங்களும் தன்னோடு விபச்சாரம் செய்யத்தக்கதாக தன்னை விரிவாக்கி வைத்துவிட்டாள். 248நான் இவ்விதமாக பிரசங்கம் செய்கிறதற்காக கடுமையாக விமரிசிக்கப்பட போகிறேன். அதைக் குறித்துப் பரவாயில்லை. ஏனெனில் அதற்காக நான் ஆசீர்வதிக்கப்படவும் போகிறேன். நான் பிரசங்கிக்கும் காரியங்கள் சத்தியமாயிருக்கிறது. ஏனெனில் தேவன் சத்திய பரராயிருக்கிறார். அவர் அவ்விதம் சொல்ல விரும்புகிறார். நானும் என்னால் முடிந்தவரை அதையே கூற முயற்சிக்கிறேன். 249அவள் தனது அநேக நேசர்களைப் பிரியப்படுத்த முயற்சித் தாள். ஹூ.... ஹூம். அவ்விதம் பிரியப்படுத்த நினைத்தபோது, அவள் தேவனுடைய வார்த்தையைத் தனது நேசர்களோடு கலப்பினமாக்க முயற்சித்தாள்; ஆனால் அது கிரியை செய்யாத படியினால் “தேவ வார்த்தையின் மேல் குற்றம் சுமத்து” என்ற தன்னுடைய சொந்த பிரமாணத்தை உண்டாக்கி விட்டாள். இந்த ப்ராடஸ்டண்டுகள் கத்தோலிக்கரைப் பார்த்து, “அவர்கள் கத்தோலிக்கர்” என்ற விதமாய் அழைக்க விடாதீர்கள். ஏனெனில் இவர்களும் தங்கள் சபைகள் சங்கத்தில் கத்தோலிக்கர்களின் கிரியைகளைத் தான் செய்கிறார்கள்—-விபச்சாரம். வேதம் இவர்களை வேசிகள் (Harlots) என்று அழைத்ததைக் குறித்து வியப்பொன்றுமில்லை! அது கடினமான வார்த்தை இல்லையா? அது உன் முதுகில் உள்ள தோலை உலுக்குவதாகும். ஆனால் சில சமயங்களில் அத்தகைய உலுக்குதல் உங்களை விழித்தெழச்செய்ய தேவையாயிருக்கிறது. 250அவளும் சரியாக அவ்விதமாகவே செய்தாள் இஸ்ரவேல் என்னும் மணவாட்டி வார்த்தை -அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான சாமுவேலை விட்டு செங்கோலை ஏந்திய சவுலைத் தெரிந்துக் கொண்டது போல, இயேசுவின் மணவாட்டி தன்னுடைய வார்த்தையாகிய மணவாளனை விட்டு விட்டாள் ! அவள் முடிவில் செங்கோலை ஏந்திய ராஜாவிடம் ஆயிரம் வருட அரசாட்சியில் வந்திருக்க வேண்டும். ஆனால் அன்றே அவள் அதை புறம்பே உதறித்தள்ளினவளாய் காணப்பட்டாள். ஆகவே தேவன் புறஜாதியில் ஒரு மணவாட்டியை தெரிந்தெடுக்கச் சென்று விட்டார். அது சரியா? அது தான் வார்த்தையாயிருக்கிறது. இப்பொழுது, அவள் வார்த்தையாகிய இயேசுவை தள்ளிவிட்டு போப் என்னும் வேறொரு மனிதனையும் அவன் கொள்கையையும் விவாகம் செய்து கொண்டாள். இப்பொழுது அவளுக்கு இயேசு இல்லை; கத்தோலிக்க மதத்தலைவன் (Pope) தான் இருக்கின்றான். ப்ராடெஸ்டண்டு மார்க்கத்தார்களுக்கும் இப்பொழுது இயேசு இல்லை; அதற்கு பதிலாக மிருகத்திற்கு கொடுக்கப்பட்ட சுரூபமாகிய ஸ்தாபனம் தான் இருக்கின்றது. 251அவளாலும் ஸ்தாபனங்களாலும் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. ஏனெனில் அவள் வேசியாயிருக்கிறாள். வேதம் அவளை அவ்விதம் தான் அழைக்கிறது. தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற் பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். வேசித்தனம் என்றால் என்ன?-அது அசுத்தமாக ஜீவித்தலேயாகும். ஜனங்களுக்குஅவள் கொடுக்கும் உபதேசமாகிய அசுத்தமே வேசித்தனமாகும். பூமியின் ராஜாக்களும், குடிகளும் அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் வெறி கொண்டிருந்தார்கள். அது முற்றிலும் சரி. சகோதரனே அதை கவனி, அதற்காக அவர்கள் உன்னுடைய தொண்டையை அறுக்கவும் தயங்கமாட்டார்கள். கத்தோலிக்கர் மட்டுமல்ல, இந்த ப்ராடெஸ்டண்டுகளும் கூட. 252ஜோசப் ஸ்மித் (Joseph Smith) என்பவரைக் கொன்ற மெத்தோடிஸ்டுகளே, நீங்கள் இப்பொழுது காக்கையைப் போல் கத்துகின்றீர்கள். அவருடைய உபதேசத்தை நான் விசுவாசிக்கிறதில்லை. அதுபோல் உங்களுடைய உபதேசத்தை நான் விசுவாசிக்கிறதில்லை. அது அதுவல்ல! அது நீங்களே. அதன் காரணத்தினால்...இந்த நாட்டிலே நீங்கள் உங்கள் உபதேசத்தை பிரசங்கிக்க எவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கிறீர்களோ அவ்விதம் ஜோசப் பெற்றிருந்தார். ஆனால் உங்கள் உபதேசத்தைக் காட்டிலும் அவர் சற்று வித்தியாசப்பட்டார் என்பதினால், இல்லினாய்ஸ் (Illinois) என்னும் இடத்தில் நீங்கள் அவரை காரணமின்றி சுட்டுக் கொன்று விட்டு, பின்பு கத்தோலிக்க சபையைக் குறித்து கூக்குரலிடுகிறீர்கள்! நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்ட மெத்தோடிஸ்டுகளே! உங்கள் அருவருப்புகளினின்று வெளியே வாருங்கள்-உங்கள் செயல்களைக் கண்டு ஜான்வெஸ்லிக்கு அவர் கல்லறையிலும் கூட நிம்மதி இராது. ஜான் வெஸ்லி அவ்விதமாக ஒரு சபையை உண்டாக்கவில்லை . “ரிக்கீகளும்” (Rickys) “எல்வீசுகளும்”(Elvises) போன்றதொரு கூட்டம் ஜான் வெஸ்லியின் மரணத்திற்குப் பின்பு தான் உண்டாயின.அது உண்மை. இன்றைக்கு இருக்கிறதான காரியங்களை ஆதி பெந்தெகொஸ்தே சபை உருவாக்கவில்லை. ஆதி பெந்தெகொஸ்தேயினரின் மரணத்திற்கு பின்பே இவைகள் உண்டாயிற்று. அது உண்மை. இன்றைக்கு தங்களை பெந்தெகொஸ்தே என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பை இயேசு கிறிஸ்து உண்டாக்கியிருக்க முடியாது; பரிசுத்த ஆவியும் அதை உண்டாக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக வேறெதையோ நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்; பரிசுத்த ஆவியை அவர்கள் ஒரு போதும் கொல்ல முடியாது. அது ஒரு மணவாட்டியை எப்படியாயினும் ஆயத்தப்படுத்தும். அது எப்படியாயினும் ஒன்றை ஆயத்தப் படுத்தும். அம்மணவாட்டி ஏற்கனவே முன் குறிக்கப்பட்டிருக்கிறாள் என்று அவர் கூறியிருக்கிறார். 253அவள் வேசியாயிருந்ததினிமித்தம் தன்னுடைய வார்த்தை மணவாளனை விட்டு விட்டு கத்தோலிக்க மதத்தலைவனை விவாகம் செய்து கொண்டு விட்டாள், ஆவிக்குரிய பிரகாரமாக அவளால் பிரசவிக்க முடியாது. ஆனால் ஸ்தாபனத்தை அவளால் பிரசவிக்க முடியும். ஏனெனில் ஸ்தாபனத்தின் வித்து அவளிடம் நிறைந்து இருக்கிறது. அவள் வேசியாயிருப்பதால் ஆவிக்குரிய பிரகாரமாக அவளால் பிரசவிக்க முடியாது. கத்தோலிக்க சபையானது சில கிறிஸ்துவ மத மூட நம்பிக்கைகளின் மேலும் அநேக ரோம கொள்கைகளின் மேலும் கட்டப்பட்டிருக்கின்றது. பெந்தெகொஸ்தே சபையானது அதைவிட கேவலமாக—-குதித்தல், கூக்குரலிடுதல் அன்னிய பாஷை பேசுதல் போன்ற காரியங்களின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது. ஒரு வேதக் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்ற விவாதம் வரும் போது மூர்க்கத்தினால் நிறைந்து உங்களை அவர்கள் சபையினின்றே துரத்திவிடுவார்கள். தேவன் அங்கு வந்து ஒரு மரித்தவரை உயிரோடு எழுப்பியிருந்தாலும், நீங்கள் அவர்களுடைய ஸ்தாபனத்தை சேராதவர்களாயிருந்து அவர்களோடு ஒத்து போக வில்லையென்றால், அவர்கள் உங்களை விரட்டி விடுவார்கள். 254இந்த பழைய மகாவேசி பாவங்களை மன்னிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்று உரிமை கொண்டாடுகிறாள். உன்னுடைய உரிமைகளின் நிமித்தம் நீ நியாயந் தீர்க்கப்படவோ அல்லது அறியப்படவோ முடியாது, உன்னுடைய கிரியைகளினிமித்தமாகவே நீ அறியப்படுகின்றாய். அவள் எவ்விதம் பாவத்தை மன்னிக்க முடியும்? அவளைக் கவனியுங்கள். இயேசு, “என்னிடத்தில் பாவம் (அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? தேவனுடைய வார்த்தையை எங்கு அவிசுவாசித்திருக்கிறேன் என்று காண்பியுங்கள் பார்க்கலாம்” என்றார். பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டு என்று உரிமை கொண்டாடுகிறார். ஆனால் அதுவோ வார்த்தையினால் மட்டுமே வருகின்றது. அது சரி. பாவத்தை மன்னிக்க தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அது சரியா? அந்த பரிசேயர்கள் அவ்விதம் கேட்டார்களல்லவா? அந்த குருட்டு மாய்மாலக் காரர்களைக் குறித்து என்ன காரியம்? ஏன்? வார்த்தையாகிய அவர் அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருப்பதை அவர்களால் காணமுடியாதவாறு குருடராயிருந்தார்கள்?அவரே வார்த்தையாயிருக்கிறார் ! தேவனுக்கு மகிமை! அதன் காரணமாகவே அவர் பாவங்களை மன்னிக்க முடியும். அவர் தேவனாயிருந்தார். அவரே வார்த்தை மாம்சமானவர். 255தங்களுக்கு இயேசு வல்லமை கொடுத்திருக்கிறார் என்று கத்தோலிக்கச் சபை கூறுகின்றது. சபைக்கு அவர் வல்லமையைக் கொடுத்திருக்கிறார், அது சரிதான், அதை நாம் விசுவாசிக்கிறோம், ஆனால் அவளுடைய ஸ்தாபன குமாரத்திகளெல்லாம் வேசிகளாயிருக்கின்றனர். “சகோ. பிரன்ஹாமே, அது ஒரு பெரிய வார்த்தை ” என்று நீங்கள் கூறலாம். அது என்னுடைய வார்த்தையில்லை; தேவனுடைய வார்த்தை. அது உண்மை. அது என்னுடையது அல்ல, அது அவருடையது. சரி. எவ்விதம்? “அவர்கள் எவ்விதம்...? அவர்கள் எவ்விதம் வேசியானார்கள்? ஏன் அவர்களெல்லோரும் நல்ல ஜனங்களாயிற்றே” என்று நீங்கள் கூறலாம். அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் எப்படியிருக்கிறார்களென்பதைக் குறித்து நான் சொல்கிறதில்லை. கத்தோலிக்கர்கள் நல்லவர்கள் அல்ல என்றும் நான் கூறுகிறதில்லை. எல்லோரைப் போலவும் அவர்களும் நல்லவர்களே. அவர்கள் நம்மைப்போல மனித பிறவிகள். ஆனால் அந்த பழைய ரோம சபையைக் குறித்து பேசும் போது, அவள் தவறாயிருக்கிறாள். ப்ராடெஸ்டண்டுகளும், மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும் அவ்வாறே எல்லோரைப் போன்றும் நல்லவர்களே. 256காரியம் என்னவெனில், பின் அவள் எவ்விதம் ஒரு வேசியாக இருக்க முடியும்? ஏன்? ஏன் அவள் ஒரு வேசி என்று அழைக்கப்படுகிறாள்?...அவளுக்கு ஒரு வார்த்தை பரிசோதனையைக் கொடுங்கள். அதுதான் அவளை யாரென்று கண்டுபிடிக்கும் முறை. ஹூ...ஹூம். வார்த்தையை அவளிடம் கூறி அதற்கு அவள் என்ன சொல்லுகிறாள் என்று பாருங்கள். “ஓ, நாங்கள் வேதப் பள்ளியில் கல்வி பயின்றிருக்கிறோம், அத்தகைய காரியங்களெல்லாம் அப்போஸ்தலருடைய நாட்களுக்குத்தான் பொருந்தும், இன்றைக்கு அல்ல” என்பார்கள். கிறிஸ்துவின் சபை (Church of Christ) என்று உன்னை அழைத்துக் கொள்பவளே, “வேதம் எங்கு பேசுகிறதோ அங்கு பேசு, எங்கு அமைதியாயிருக்கிறதோ அங்கு அமைதியாயிரு” என்று கூறுபவளே, நல்லது; இப்பொழுது நீ சிறிது பேசி நான் கேட்க விரும்புகிறேன். இல்லையென்றால் பேசாமல் வாயை மூடிக்கொள். தேவனுடைய வார்த்தை எல்லா வாயையும் மூடும் சகோதரனே. ஒரு மனிதனும் வீம்புச் செய்ய முடியாது. அது உண்மை . 257அவளுடைய எல்லா குமாரத்திகளும் வேசிகள். எவ்வாறு? அவர்களுடைய தாயாரைப் போலவே வார்த்தைக்கு விரோதமாக ஆவிக்குரிய விபச்சாரம் செய்கிறார்கள். அவ்விதம் தான் கத்தோலிக்க சபையானது மகா வேசியானது. அவளுடைய குமாரத்திகளும் அவ்விதமே வேசியானார்கள்; அதே காரியம், வார்த்தைக்கு விரோதமான வேசித்தனம். அவளும் அவளுடைய குமாரத்திகளும் விபச்சாரத்தின் கருப்பையையுடையவர்கள். மரணம் மட்டுமே அவர்களிலிருந்து வர முடியும். தேவன், ஜீவனை மரணத்தினின்று கொண்டு வர முடியாது, இறந்தே பிறக்கும் எதுவும் உயிரோடு இருப்பதில்லை. அதைக் குறித்து யோபு “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத் தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை ” என்று கூறினான். சரி. நல்லது. அவள் தன்னில் மரித்திருக்கும் போது எவ்விதம் பிரசவிக்க முடியும்? அவள் வேசியாயிருக்கையில் எப்படி கன்னிகையாயிருக்க முடியும்? பாருங்கள், அதுதான் காரியம். அந்த முழு காரியமும் அதுவே. 258ஓ, நாம் இப்பொழுது ஆழமான ஐசுவரியத்தை அடையப் போகிறோம். அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் முடிய அடங்கியுள்ள உயிர் சத்துக்கள். கவனியுங்கள். அவனும், இவனுடைய குமாரத்திகளும் விபச்சார கருப்பையைக் கொண்டிருக்கிறார்கள். மரணம் மட்டுமே அவர்களிலிருந்து உற்பவிக்கும். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தில் சேர விரும்பினால், அவ்வாறு செய்வது சரியென்று நீங்கள் நினைத்தால், எங்கே போய் முடியப் போகிறீர்கள் என்பதை பாருங்கள். நீங்கள் சரியாக மரணத்தின் மத்தியில் போய் முடிவீர்கள். அது முற்றிலும் சரி. அதை இப்பொழுது உங்களால் காண முடியவில்லையென்றால் நீங்கள் ஆவிக்குரிய குருடராயிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். பாருங்கள்? 259இப்பொழுது, நாம் சற்று பின் சென்று அதை மறுபடியும் எடுத்து....நாம் கடந்த ஞாயிற்று கிழமையன்று ஆராதனையில், “ஆத்துமாவின் வாசல்” என்ற பொருளை சிந்தித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? இப்பொழுது கவனியுங்கள். மாம்ச பிரகாரமான கருப்பை என்று ஒன்றும், ஆவிக்குரிய பிரகாரமான கருப்பை என்று ஒன்றும் இருக்கின்றது. அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? ஆவிக்குரிய பிரகாரமான கருப்பை மாம்ச பிரகாரமான கருப்பை. மனம் (mind) அல்லது சிந்தனை ஆவியின் கருப்பையாயிருக்கிறது. ஏன்? நினைவில் கொள்ளுங்கள், கடந்த ஞாயிறன்று நான் அதை உங்களிடம் கூறி, வரைந்து காண்பித்தேன். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். ஐந்து விதமான உணர்ச்சிகள் வெளிபுறத்திலிருந்து உள்ளேயுள்ள வித்திற்கு வந்து நுழைகின்றன என்பதை நான் உங்களுக்கு வரைந்து காண்பித்தேன்: அவைகள் பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், செவிசாய்த்தல் என்பன. ஐந்து விதமான உணர்ச்சிகள் உள்ளேயிருந்து கிரியை செய்கின்றன, அவைகள்: மனோபாவனை, மனசாட்சி, ஞாபகம், யூகித்தல், பாசம் என்பன. ஆனால் ஜீவனின் பக்கம் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. அது நீங்கள் ஏற்றுக் கொள்ளவோ அல்லது புறம்பாக்கவோ தக்கதாக சுயாதீனப் பிரதிநிதியாக (Free moral agency) செயல்படுகிறது. பாருங்கள்? 260அந்த விதமாகத்தான் ஆவிக்குரிய விபச்சாரம் செய்யப்பட்டது. தேவ வார்த்தையின்படி சரியென்று அறிந்த பிறகு, தேவ வார்த்தைக்கு விரோதமாக பிசாசின் பொய் சிந்தனையோடு உறவு (Inter course) கொள்ளுதல்—-சரியாக இதைத்தான் ஏவாள் செய்தாள். சாத்தானின் பொய்யை விசுவாசித்து ஆவிக்குரிய உறவானது ஏவாளின் கருப்பையாகிய சிந்தனையில் முதலாவது சம்பவித்தது, பின்பு அது அவளுடைய ஆத்துமாவைக் கறைபடுத்தி அங்கே மரணத்தை உண்டாக்கின பின்பு தான், மாம்சப்பிரகார மான உறவு சாத்தானோடு நடந்தது. ஒரு பெண் முதலாவது, யாராவது ஒரு மனிதன் தன்னிடம் பேச இடங்கொடுத்து தன் கணவனல்லாத அவனை ஏற்று கொள்வதென்பது, அவள் தன் கணவனுக்கு விரோதமாக விபச்சாரத்தில் ஈடுபடுவதற்குகந்த ஒரு நிச்சயமான வழியாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி, மனிதனால் உண்டாக்கப்பட்ட கொள்கைகளையும், கோட் பாடுகளையும் தேவனுடைய வார்த்தையின் இடத்தை ஆட்கொள்ள விடும் போது அங்கே அவள் விபச்சாரம் செய்கிறாள். 261“ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் ஏற்கனவே அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று” என்று இயேசு கூறவில்லையா? ஏன்? அவன் தன் சிந்தனையில் அதை வர விடுகிறான். அதுதான் கருப்பை; அங்கே தான் அது தன் உற்பத்தியை தொடங்குகிறது. சாத்தான் அங்கு வந்து தன் வார்த்தையை விதைத்து விடுகின்றான். “ஏதாவது ஒரு நாளில் நான் என்னுடைய ஜீவனைக் கொண்டு வந்து இப்பூமியை சீர்படுத்தி அதை நிரப்புவேன்” என்று தேவன் கூறினார். ஏவாள் எதை செய்யத் தவறினாளோ அதை மரியாள் செய்தாள். மரியாள் தேவ வார்த்தையை ஏற்றுக்கொண்டாள். ஏவாளோ, சாத்தானின் பொய்யை ஏற்று கொண்டாள். மரியாளின் வித்தின் மூலமாகவும், அவருடைய வார்த்தையாகிய மணவாட்டியின் மூலமாகவும் திரும்பவும் இந்த உலகம் பெருகி ஆயிரம் வருட அரசாட்சியில் காணப்படும். அனுப்பப்பட்ட வார்த்தையானது ஒவ்வொரு முன் குறிக்கப்பட்ட ஆத்துமாக்களிலும் பயிரிடப்பட்டு, ஆவியானது கீழிறங்கி வந்து அதன் மேல் நீர்ப் பாய்ச்சுவதினால் அவர்கள் மரிக்க மாட்டார்கள் “நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்'' என்றார். ஓ! சகோதரர்களே, சகோதரிகளே அது உண்மை. 262அது என்ன? சிந்தனையே ஆவியின் கருப்பையாயிருக்கிறது. என்ன? ஏற்றுக் கொள்ளுதல் அல்லது தள்ளிவிடுதல். அவ்விதம் தான் அவர்கள் விபச்சாரம் செய்கின்றனர்-தேவனுடைய வார்த்தைக்கு எதிராக சாத்தானின் பிசாசு ஆவி அவர்களுக்குள்ளே வருவதால், விபச்சாரம் செய்கின்றனர். ஏவாள் (இதை கவனியுங்கள்) தவறான வார்த்தை வித்தை, சாத்தானின் பொய்யை, யேகோவாவின் வார்த்தைக்கு விரோதமாக ஏற்றுகொண்டாள். அதன் கனி மரணமாயிற்று. 263இன்னும் சில நிமிடங்களில் நாம் இந்தப் பொருளைக் குறித்து பேசுவதை நிறுத்துவோம். ஆனால் நாம் அதை நிறுத்தும் முன்பாக இது உங்களில் மிகவும் ஆழமாய்ப் பதிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் இந்தப் பக்கத்தை... 264இப்பொழுது, கவனியுங்கள். ஏவாள்...என்ன? இவள் என்ன செய்தாள்? அவள் தவறான வித்தைப் பெற்றுக்கொண்டாள். அதை எவ்விதம் செய்தாள்?—-சாத்தானின் பொய்யை விசுவாசிப்பதினால். எத்தனை பேர் அது சரியென்று கூறுகின்றீர்கள்? ஏன், நிச்சயமாக அது சரியே, நிச்சயமாக. அவள் சாத்தானின் பொய்யை ஏற்றுக்கொண்டாள். அவ்விதம் செய்ததினால் அவள் எதைக் கொண்டு வந்தாள்? சாத்தான் அவளைப் பார்த்து, “இது மகிமையானது என்று உனக்குத் தெரியுமா? இது ஒரு அற்புதமான காரியம், இது உங்களுக்காகவே உண்டாக்கப்பட்டதென்று உனக்குத் தெரியுமா? ஏன், இக்காரணமாகத்தான் நீங்களும் உண்டாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றான். “ஓ, அவ்விதமாகவா நாங்கள்?” என்றாள் ஏவாள். சாத்தான், “இது கண்களுக்கு இன்பமாயிருக்கிறது, மிகவும் நல்லது. நீ நிச்சயமாக இதை முயற்சி செய்து பார்?” என்றான். அதற்கு ஏவாள், “ஆனால் தேவனாகிய கர்த்தர் 'கூடாது, கூடாது! கூடாது-கூடாது அதற்கு இது சமயமில்லை' என்றாரே, நாங்கள் இதைச் செய்யக் கூடாது. இல்லை! இல்லை” என்றாள். சாத்தான், “உனக்கு ஒன்று தெரியுமா ...?” என்று கேட்டான். அதற்கு ஏவாள், 'ஓ அதை நாங்கள் செய்தால், நாங்கள் .........“, என்றாள். சாத்தான், 'நீங்கள் நிச்சயமாக சாவதில்லை“ என்றான். அந்த சொல் நயமுடைய நாவுள்ள சாத்தான். சாத்தான், மிருகத்தின் குளம்புகளைப் போல் பாதங்களும், பிரிந்திருக்கிறவாலும் உடையவன் என்பதை நீங்கள் விசுவாசிக்கும்படி அவர்கள் பிரசங்கிக்கிறார்கள். அவன் அப்படிப்பட்டவனல்ல; அவன் பிரசங்க பீடத்தின் பின்னால் இருக்கும் சொல் நயம் படைத்தவன். அது உண்மை . அல்லது வாத்தைப் போன்று தன்னுடைய தலைமயிரை கீழிழுத்து வாரிவிட்டிருக்கும் சில ”ரிக்கி“ (Ricky) யைப் போன்று, அங்கே உட்கார்ந்திருந்து யாராவது ஒரு தாயாரின் மகளுக்குத் தீங்கு செய்ய காத்திருக்கின்றவனைப் போன்று சாத்தான் இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன் தான் அவன். அவன் அழகான தோற்றம் கொண்டவன். ஓ... 265இப்பொழுது, அந்த கருப்பை...ஏவாள் அந்த தவறான வார்த்தை வித்தை ஏற்றுக் கொண்டாள். இப்பொழுது, சற்று நெருக்கமாய் கவனியுங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் நாம் இப்பொழுது இதை ஆழமாக செலுத்த போகிறாம். அவள் தவறான வார்த்தை வித்தை ஏற்றுக் கொண்டாள். அது என்ன செய்தது? அவள் ஞானமடைவாள் என்றும், ஒரு பெரிய சபையை சேரலாம் என்றும், நகரத்திலேயே அதிகமாகப் போதிக்கப்பட்டவளாயிருப்பாள் என்றும், மற்ற ஜனங்களைப்போல அவளும் இருக்கலாமென்றும் சாத்தான் அவளிடம் பொய் சொன்னான். நிச்சயமாக அப்படித்தான் யேகோவாவின் மணவாட்டியும் விசுவாசித்திருப்பாள். அது முற்றிலும் உண்மை. மரியாளிடம் தேவ வார்த்தை வந்தபோது-அவன் மரியாளிடம் அந்த விதமாகத்தான் சாத்தான் அவளிடம் கூறியிருக்கக்கூடும். ஆனால் மரியாள் அதை உதறித் தள்ளினாள். மரியாள்,“இது எப்படியாகும்? புருஷனை அறியேனே' என்றாள். தேவ தூதன்,“பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன் மேல் நிழலிடும், அது வார்த்தையாகிய தேவன்'' என்றான். அதற்கு மரியாள் “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது' என்றாள். அது ஜீவனைக் கொண்டு வந்தது. அதுதான் காரியம். ஆனால் சாத்தான் அவளைப் பார்த்து, “எல்லோரும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்”என்றான். அந்த அழகிய பெண்மணி, அதை குறித்து ஒரு கவனமும் செலுத்தவில்லை. யூதேயா தேசத்திற்கு அவள் சென்று, “நான் ஒரு பிள்ளையை பெறப்போகிறேன்” என்று கூறினாள்; எதையும் அவள் தன் சரீரத்தில் உணர்வதற்கு முன்பு அவள் அவ்விதம் கூறினாள், ஏனெனில் வார்த்தையானது ஏற்கனவே அங்கு வந்து விட்டது. அது தான் காரியம். அவள் இரண்டாம் தடவை ஜெப வரிசைக்கு செல்ல அவசியமிருக்கவில்லை. ஆம் ஐயா; அவள் அதை விசுவாசித்தாள். ஜீவனுக்குரிய எந்த அடையாளமும் அங்கு காணப்படவில்லை; கர்ப்பத்திற்குரிய எந்தவித அடையாளமும் அவள் அடையவில்லை; எல்லாம் எப்போதும் இருக்குமாப்போல காணப்பட்டது. ஆனாலும் எல்லோரிடமும் அவள், “நான் ஒரு பிள்ளையைப் பெறப்போகிறேன்'' என்றாள். ஏன்? கர்த்தர் உரைத்தார். அது என்ன?... அதுதான் ஆபிரகாமின் ராஜரீக வித்து. 266“அந்த பெண்ணின் மூலமாகவா ஒரு பிள்ளையைப் பெறப் போகிறாய் ஆபிரகாம்” என்று ஜனங்கள் கேட்டார்கள். அதற்கு அவன்,“ஆம், தேவன் அவ்விதம் கூறினார்” என்றான். அதற்கு அவர்கள், “25 வருடங்களுக்கு முன்பு இதையேதான் எங்களிடம் கூறினாய்” என்றார்கள். அதற்கு அவன்,“அது எனக்குத் தெரியும். ஆனால் தேவன் அவ்விதமாக சொன்னார்.” என்றான். அது தான் காரியம். அது, அதே காரியம்தான். “நல்லது, ஸ்தாபனமானது உங்களை வெளியே துரத்திவிடுமே” என்று ஜனங்கள் கூறினால் இன்றைக்கு நீங்கள் என்ன கூறுவீர்கள்? “தேவன் அவ்விதம் கூறினார்; தேவன் அவ்விதம் கூறினார்” என்று கூற வேண்டும். “அந்தவிதமாக நீ ஞான ஸ்நானம் எடுத்தால்—-” என்று கூறுவார்கள். ''நல்லது, தேவன் அவ்விதம் கூறினார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்,“ என்று கூற வேண்டும். அங்கேதான் உங்கள் கன்னித்தன்மை. ஞான ஸ்நான உபதேச மட்டுமல்ல, எல்லா தேவனுடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிய வேண்டும். பாருங்கள்? ஆகவே கவனியுங்கள். 267ஆவிக்குரிய பிரகாரமாகவும், மாம்சப் பிரகாரமாகவும் அது ஏவாளோடு காணப்பட்டது. முதலிலும், அதன் பின்பும், ஒவ்வொரு சமயமும் அவ்வாறே இருந்தது. ஏதாவது ஒரு சமயத்தில் ஒரு பெண் தவறான அடி எடுத்து வைக்கும் போது நான் எவ்விதம் அதைக் கூறுவேன் என்றும், அதை குறித்து என்னை மன்னிக்கும்படியாகவும் இன்று காலையே சகோதரிகளாகிய உங்களுக்கு நான் கூறியிருக்கிறேன் - நான் கிறிஸ்துவையும் அவர் மணவாட்டியையும் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்-ஆனால் எப்பொழுதாவது ஒரு பெண் தவறான அடி எடுத்து வைப்பாளென்றால், அவள் முதலாவதாக அதை தன் சிந்தனையில் ஏற்றுக் கொள்கிறாள். அது உண்மை . யாராகிலும் ஒரு சொல் நயம் படைத்தவன் வசப்படுத்தும் போது, அவள் தன்னுடைய சரியான கணிப்புக்கு எதிராக அதற்கு செவி கொடுக்கும் போது, விபச்சாரம் அங்கு நடக்கிறது. ஆகவே சாத்தான் ஏவாளின் சிந்தனையை முதலில் தாக்கினான். அவளுடைய சிந்தனையின் கருப்பை தேவனுடைய வார்த்தையை சந்தேகித்ததினால் மாம்சமான கிரியை அங்கு சம்பவித்தது. 268நாம் மறுபடியும் பிறப்பதற்கு ஒரே வழி, முதலாவதாக நம் சிந்தனையாகிய கருப்பையில் வார்த்தையை ஏற்று கொள்வதாகும், அதன் பின்தான் ஆவி அதன் மேல் ஊற்றப்பட்டு அதை உயிர்ப்பிக் கின்றது. அங்கு தான் காரியம் இருக்கின்றது. அதுவே சரியான சுவிசேஷச் செய்தியாயிருக்கிறது சகோதரனே. இந்த மணி நேரத்தில் பரி. பவுல் இன்று பிரசங்கிப்பாரென்றால் இதையே தான் பிரசங்கிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. ஏவாளிடம் பலன் எவ்வாறு இருந்தது? ஆவிக்குரியதும், மாம்சத்திற்குரியதுமான மரணமாயிருந்தது. இதற்கொத்ததான மற்ற வார்த்தையைப் பெற்றவர்களுடைய பலன்கள் என்ன? அது கேளிக்கைக்கும், சரசத்திற்கும் சென்றது. ஆவிக்குரிய பிரகாரமாவும், மாம்ச பிரகாரமும் மரணம். சரீரமும் ஆவியும் சேர்ந்து ஒன்றுமில்லாமல் அழிந்து போகும், அது சரியான உண்மை . 269கவனியுங்கள். மரியாளின் சிந்தனை கன்னி கருப்பையாயிருந்தது. ஏன்? அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தாள். யார் எவ்வளவு கேலி செய்திருந்தாலும், அதைக் குறித்து மற்றவர் எவ்வளவாகக் கூறியிருந்தாலும் அவளுக்கு கவலையொன்றுமில்லை, அவள் தேவ வார்த்தையை மட்டும் விசுவாசித்தாள். ஓ! நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்களா? பாருங்கள், அது முதலாவது அவளுடைய சிந்தனையை தாக்குகிறது. அவளுடைய மாம்ச கர்ப்பப்பையில் இயற்கையான செயல் சம்பவிக்கு முன், ஆவிக்குரிய செயல் முதலில் சிந்தனையில் சம்பவித்து, பின்பு ஆவியானது மற்ற கிரியைகளை முடிக்கிறது. ஓ . உண்மையான ஆவிக்குரிய பிறப்பு சம்பவிக்கு முன் தேவவார்த்தையானது உங்களுடைய சிந்தனையில் முதலாவது நுழைய வேண்டியதாயுள்ளது; இதை விசுவாசியுங்கள்.“என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன்உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், (அல்லது உபத்திரவ காலத்திற்குள் வராமல்) மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசு கூறினார். 270ஓ, என்னே. இப்பொழுது. அவனுடைய கன்னித் தன்மையான கருப்பை, கவனியுங்கள், அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கு கன்னித்தன்மையான சிந்தனை அவசியமாயிருக்கிறது. ஓ,சரி. ஒரு வேளை நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, அது சாத்தியமில்லை, அது அவ்விதமல்ல. அது அவ்விதமிருந்திருக்குமானால் ஜான் வெஸ்லி அதைக் கண்டிருப்பார்; இன்னார், இன்னாரும் அதைக் கண்டிருப்பார்கள்” என்று கூறலாம். நிச்சயமாக பிசாசு, மரியாளிடமும் அதே காரியத்தைத்தான் கூறியிருக்கக்கூடும். “நீயா? இந்தப் பட்டணத்திலேயே நீ மிகவும் ஏழை, இருந்தால் 16, 18 வயது கூட உனக்கு இருக்காது. இந்த குழாயினண்டையில் வந்து தண்ணீர் எடுக்கிறவள், உன் தகப்பனார் மரித்து விட்டார், உன் தாயார் குருடியாயிருக்கிறாள். (அன்னாள் தான் அவளுடைய தாய் என்று கூறப்படுகிறது) நீயா பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்போகிறாய்?”என்று பிசாசு மரியாளிடம் கூறியிருக்கக் கூடும். அதற்கு மரியாள், “கவனி, பிசாசே, என்னுடைய வயது சென்ற தாயார் கண் தெரியாதவள் தான், ஆனால் அவள் ஒரு பயபக்தியுள்ளவள். அவளுடைய வாயின் மூலம் என் இருதயத்தில் ஒரு வித்தை விதைத்திருக்கிறாள். ஏசாயா என்னும் புத்தகத்திலே 7ம் அதிகாரம் 14ம் வசனத்தில், தேவனுடைய வார்த்தை , ”இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப்பெறுவாள்'' என்று எழுதியிருக்கிறதை நான் படித்திருக்கிறேன்“ என்றாள். 271அல்லேலூயா! வார்த்தையானது மாம்சமாவதை உங்களால் காண முடிகிறதா? அதுதான் காரியம். தேவன் ஒரு சபையை பெறப் போகிறார். அது தேவனுடைய வார்த்தையினால் பிறந்த சபையாயிருக்கப்போகிறது. ஏனெனில் அது தேவனுடைய ஜீவிக்கிற வார்த்தையாயிருக்கிறது. உங்களால் அதைக் காண முடிகிறதா? “அதை நீ எவ்விதம் அறிந்து கொள்வாய்?, இன்றிலிருந்து நீ எவ்விதம் அழைக்கப்படப் போகிறாய் என்று உனக்குத் தெரியுமா?” நீ இவ்விதமாக அழைக்கப்பட...'' என்றெல்லாம் அவன் மரியாளிடம் கேட்டிருக்கக்கூடும். அதற்கு அவள், “நான் எவ்விதம் அழைக்கப்படப் போகிறேன் என்பதைக் குறித்து கவலையில்லை; அவருடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது” என்று சொல்லியிருப்பாள். அவ்விதம் இன்று எல்லோராலும் சொல்லக் கூடுமா? “கர்த்தருடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது'' என்று ஜனங்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்தினின்று சொல்லக்கூடுமா?உண்மையாகவே சொல்லக் கூடுமா? எங்காவது உள்ள முன் குறிக்கப்பட்ட ஒன்று இரண்டுபேர் அதை பொறுக்கி எடுத்து அவ்விதம் அதை உண்மையாக விசுவாசிப்பார்கள். சகோதரர்களே, நீங்கள் அதை உண்மையாகவே பெற்று கொண்டு, பின் வார்த்தையின் மீது தண்ணீரானது பாய்ச்சப்படும்போது, நீங்கள் அக்கினியைப் பரப்புகிறவர்களாயிருப்பீர்கள். ஆம் ஐயா. 272இப்பொழுது, அது என்ன? சிந்தனை என்னும் கருப்பை ஒரு பிள்ளை வருவதற்கென்று கன்னியாக வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் கனிகள் என்ன? அது நித்திய ஜீவனாகும். ஏவாளும் கன்னித் தன்மையைக் கொண்டவளாயிருந்தாள், ஆனால் முதலாவதாக தேவனுடைய வார்த்தையை ஒரு பொய்யின் மூலம் அவிசுவாசிப்பதற்கு இடம் கொடுத்து விட்டாள். பின் சாத்தான் என்ன செய்தான்? தவறான வழியில் அவள் தொடர்பு கொள்ளுமாறு செய்து விட்டான். அவளுடைய பிள்ளை மரணமா யிருந்தது. மரியாளின் கருப்பை கன்னித் தன்மையாயிருந்தது. தேவதூதன் அவளிடம், “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” என்றான். சாத்தான் அவளைப் பார்த்து, “நீ பேசாமல் இருந்தால் நலமாயிருக்கும்'' என்றான். அதற்கு தேவ தூதன், ”இது தேவனுடையசெயல்“ என்று கூறினான். மரியாள். ஏசாயா: 9:6ஐ சந்தேகமில்லாமல் நினைவு கூர்ந்து, ”இதோ நான் ஆண்டவருக்கு அடிமை“ என்று கூறினாள். அதன் பலன் என்ன? கன்னிப்பிறப்பின் மூலம், நித்திய வார்த்தை அவளுக்குள்ளிருந்து, நித்திய ஜீவனைப் பிறப்பித்தது. 273சரி, யேகோவாவின் மணவாட்டி வார்த்தையைக் கலந்தாள். “இப்பொழுது அவ்விதமாகவா சொல்கிறீர்கள் சகோ. பிரன்ஹாம்? இன்று காலை நீங்கள் யேகோவாவின் மணவாட்டி விபச்சாரம் செய்து விட்டாள் என்று கூறினீர்களே?” அந்த தொடர்ச்சியை நான் விடமாட்டேன். இப்பொழுது கூர்ந்து கவனிப்போம். நமக்கு இன்னும் ஒரு மணி நேரம் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். நான் இன்னும் சிலவற்றை வைத்துள்ளேன். நான் சிலவற்றை விட்டு விட்டு, இன்னும் சில நிமிடங்கள் என்னால் முடிந்த வரை மிக வேகமாக வாசிப்பேன். நீங்கள் என்னுடன் பொறுமையுடனிருந்து, என்னுடன் ஜெபியுங்கள். நான் இன்னும் ஒரு மணிநேரத்தில் முடிந்து விடுவேன் என்று நம்புகிறேன். 274இப்பொழுது யேகோவாவின் மணவாட்டி எங்கே தவறு செய்தாள்? அது சரியா? யேகோவா தம்முடைய மணவாட்டியை எகிப்திற்கு ஏன் அனுப்பினார்? தேவன் ஆபிரகாமிடம் தம்முடைய மணவாட்டியாகிய வித்து எகிப்தில் 400 வருடங்கள் பரதேசியாயிருப்பாளென்று வாக்குத்தத்தம் செய்திருந்தார், அது உண்மையா? அவர்களின் விடுதலைக்கென்று வார்த்தையின் நிறைவேறுதல் வந்தது....நாமும் கூட அப்படிப்பட்ட வார்த்தையின் நிறைவேறுதலுக்காக காத்திருக்கிறோமா? நிச்சயமாக. சரி. அவர்கள் எவ்விதம் வார்த்தையைப் பெற்றுக் கொண்டார்கள்? அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கினார்களா?, ஒரு கூட்ட ரபிக்களாக அவர்கள் கூடிவந்து, “சகோதரர்களே, நாம் 'பரிசேயர்' என்ற ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கப் போகிறாம். அதற்காக சீட்டு போட்டு அதை ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் போகிறோம், அதன் மூலமாக தேவன் கிரியை செய்யப் போகிறார்” என்று கூறினார்களா? தேவன் அவ்விதமான ஒரு காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டார். எப்பொழுதும் செய்ததில்லை. 275அவர்களிடத்திற்கு யாரை அனுப்பினார்?...மோசே என்ற ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடத்திற்கு வருகிறதாயிருக்கிறது. தேவன் மோசேயை அவர்கள் மத்தியினின்றே எழுப்பி, அபிஷேகித்து, அற்புதங்களை செய்த மற்ற பிசாசுகளின் மத்தியில் அவனை நிரூபித்துக் காண்பித்தார். ஏனெனில் மோசே வார்த்தையில் நிலை நின்றான். தம்முடைய ஜனங்களான இஸ்ரவேலரை தேவன் வெளியே கொண்டு வந்தார்; ஆனால் ஜாதிகளும் அவர்களோடு கலந்து வந்தார்கள். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வரும் முன்பு, அவருடைய அருமையான மணவாட்டி மோவாபியரோடு விபச்சாரம் செய்து விட்டாள்.அதை அவள் எவ்விதம் செய்தாள்? அவள் அவ்விதம் செய்யவில்லையென்று உங்களால் கூற முடியுமா? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான ஒரு கள்ள தீர்க்கதரிசியின் மூலமாகச் செய்தாள். மோசேயைப் போன்று அவன் எல்லாவித ஆவிக்குரிய அடையாளங்களையும், முறைமைகளையும் உடையவனாயிருந்தாலும் அவன் கள்ள தீர்க்கதரிசியாயிருந்தான். 276கவனியுங்கள்! இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். இங்கே இஸ்ரவேலர் தங்கள் பாளையத்தில் ஒரு ஸ்தாபனமற்றவர்களாகக் காணப்பட்டனர். அது உண்மை. அது என்ன? அவர்கள் சரியாக செய்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியையும், ஒரு அக்கினி ஸ்தம்பத்தையும், தண்ணீரை அவர்களுக்குத்தந்த ஒரு கன்மலையையும் கொண்டவர்களாயிருந் தார்கள். ஏழு வித பலிபீடங்களின் மேல், கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கும் ஆட்டுக்கடா, போன்ற ஏழு சுத்தமான மிருகங்களை பலியிடுதல் என்ற பரிபூரணமானக் காரியங்களைக் கொண்டிருந் தார்கள். 277மோவாப்... ஆனால் என்ன நடந்தது? பிலேயாம் அங்கே சென்ற போது அவர்களிடமிருந்ததைப் போன்று அவன் சரியாக ஏழு பலிபீடங்களை அங்கே கட்டினான். நீங்கள் எதை பேசுகிறீர்களோ அதைக் குறித்து நன்றாக அறிந்தீர்களானால் நலமாயிருக்கும். ஏனெனில் அவர்கள் அடிப்படையில் தவறாக இருக்கவில்லை. இயேசு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக'' என்று கூறினார். ஆவிக்குரிய வெளிப்பாடு...வார்த்தையை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், பின்பு வார்த்தை உங்களில் வெளிப்படுவதைக் காண்பீர்கள். கவனியுங்கள், அவர்கள் அங்கே இருந்தனர், இங்கே பிலேயாம் இருந்தான். பிலேயாம் ஒரு கண்காணி என்பதற்கு சந்தேகமில்லை. அவன் ஒரு பெரிய மனிதன், அவன் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பதன் அடையாளமாக ஏழு ஆட்டு கடாக்களை அவன் அங்கு வைத்தான். சகோதரர்களே, அடிப்படையான உபதேசம் என்ற காரியத்தில் தேவன் அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டியவராயிருந்தார். காயீன் தேவனுக்கென்று பலிபீடத்தை கட்டினபோது (சாத்தானின் குமாரன் கர்த்தருக்கு பலிபீடத்தைக் கட்டுகிறான்) அது ஆபேலின் பலி பீடத்தைப் போன்று தான் இருந்தது. அவர்கள் இருவரும் ஆலயத்திற்கு சென்று தங்கள் கடன்களை செலுத்தி, ஒரே தேவனைத் தொழுது கொண்டார்கள். ஆனால் ஒருவன் ஏற்றுக் கொள்ளப்பட்டான், மற்றவனோ தள்ளப்பட்டான். அது எவ்விதம் சம்பவித்தது? 278இயேசு, “இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்,” என்று கூறினார். “பேதுரு என்ற கல்லின் மேல் அவர் சபையைக் கட்டினார்” என்று கத்தோலிக்கர் கூறுகின்றனர். பேதுரு அதனடியில் புதைக்கப்பட்டிருக்கிறான் என்று கத்தோலிக்கர் கூறுகின்றனர். அது ஒரு பொய்யாயிருக்கின்றது. ஏனெனில் எனக்குத் தெரிந்த மட்டும் அவன் அங்கு புதைக்கப்பட்டான் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, வேதப் பிரகாரமாக பேதுரு எருசலேமில் புதைக்கப்பட்டான். இருந்தாலும் அவர்கள் அப்படித்தான் கூறுகின்றார்கள். பாருங்கள்? அவன் ஒருபோதும் அங்கே செல்லவில்லை பேதுரு அங்கேதான் (ரோமாபுரியில்—-தமிழாக்கியோன்) புதைக்கப்பட்டதாயிருக்கட்டுமே, அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கப் போவதில்லை. அந்த விதமான காரியத்தைக் குறித்து இயேசு பேசவில்லை. எவ்விதமாக அவர்கள் ஆவிக்குரியதல்லாததைக் கலந்து விட்டார்கள் பாருங்கள் ! 279“இல்லை, இல்லை, தம்மைத்தான் இயேசு அந்த கல் என்று கூறினார்” என்று ப்ராடெஸ்டண்டுகள் கூறுகின்றனர். இப்பொழுது, அவர் ஒரு போதும் அதைக் கூறவில்லை. அவர், கவனியுங்கள், யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை- “ நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து', என்றார். மாம்சமும் இரத்தமும்....அவன் அதை ஒருபோதும் வேதப் பள்ளியில் கற்கவில்லை. ”சில ஸ்தாபனங்கள் இதை உனக்கு போதிக்கவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார், மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் (தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் ) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை“ என்று இயேசு கூறினார். 280மோவாபும் அதையே செய்தது. அவன் அங்கு வந்து இஸ்ரவேலரைப் பார்த்து, “நண்பர்களே,இங்கு கவனியுங்கள்.'' (பெந்தெகொஸ்தேயிலும் அவர்கள் அவ்விதம் தான் செய்தனர்) (இப்பொழுது கவனியுங்கள்) நாம் எல்லோரும் ஒன்றுதானே? ஒரே தேவனை விசுவாசிக்கவில்லையா? என்று கூறினான். இந்த மோவாபியர், லோத்தின் மூலம் அவனுடைய குமாரத்திகளுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் சொந்த தகப்பனோடு விபச்சாரம் செய்தனர் என்பதை எத்தனைப் பேர் அறிந்திருக்கிறீர்கள்? அந்த கும்பலும் அங்கு தப்பி வந்திருக்கிறதை பாருங்கள்?அவர்கள் இன்னும், ”பிஸ்கோத்தில் காணப்படும் மயிரைப் போன்று“ என்ற பழமொழிக்கிணங்க காணப்படுகின்றார்கள். ”நாம் எல்லோரும் ஒன்றுதான்'' என்று கூறுகிறார்கள். “மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள், நாமெல்லோரும் ஒன்று” என்று கூறி “உங்களுடைய எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்” என்று கேட்கிறீர்கள்! அங்கு இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்? தங்களுக்கு பெண் கொண்டார்கள்! விவாகம் செய்து கொண்டார்கள்! அதைத்தான் இந்த பெந்தெகொஸ்தேயினர் ப்ராடஸ்டண்டுகளுக்குச் செய்துவிட்டனர். அவள் ஐக்கிய சபைகளின் சங்கத்தை விவாகம் செய்துகொண்டு தன்னை ஸ்தாபித்துக் கொண்டாள். இப்பொழுது அவள் எங்கே இருக்கிறாள்? இஸ்ரவேலைப் போலவே, ஆவிக்குரிய பிரகாரமாகவும், மாம்ச பிரகாரமாகவும் விபச்சாரம் செய்து விட்டாள். அந்த நேரத்திலிருந்து தேவன் அவளை ஏற்று கொள்ளவில்லை. அங்கு இஸ்ரவேலர் சமாரியர்களாக மாறினபோது தேவன் அவர்களை சபித்தாரே, அது உண்மையா?யேகோவா அவளை விவாகரத்து செய்துவிட்டார். 281கிறிஸ்துவின் மணவாட்டியும், ஸ்தாபனத்தின் வித்தை தன்னுடன் கலந்து தனக்கு விவாகத்திற்கென்று நியமிக்கப்பட்ட மணவாளனாகிய கிறிஸ்துவை தள்ளி விட்டாள். உலர்ந்து போன பெந்தகோஸ்தே கூட்டமே, உனக்கு நேர்ந்தது என்ன? வெளி 3:20ல் லவோதிக்கேயா சபையின் காலத்தில், இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த சபைக்கு புறம்பாக்கப்பட்டு, வெளியே நின்றவராய் கதவை தட்டுகிறதை நாம் பார்க்கிறோம். (சகோ.பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டி உதாரணப்படுத்துகிறார்) .... திரும்பவும் உள்ளே வருவதற்கு முயற்சி செய்யும் மிக பரிதாபமான ஒரு காட்சி. அவள் என்ன செய்தாள்? அவள் விபச்சாரத்தை தெரிந்து கொண்டாள். இயேசு வரும்போது, அவர் எதைத் தட்டப் போகிறார்? இயேசு தம் மணவாட்டியை பெற்று கொள்ளத் திரும்ப வருகிறார்; அவர் அவ்விதம் கதவைத் தட்ட வரும்போது (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்) அதை முழுவதும் பூட்டி விடுகிறார். 282பரிசுத்த ஆவியினால் நிறைந்து உண்மையான தேவனுடைய வார்த்தை வெளிப்படும் ஊழியத்தை உடைய ஒரு நல்ல உண்மையான மனிதனுக்கு நீங்கள், “நீ இங்கு வந்து எழுப்புதல் கூட்டம் நடத்தக் கூடாது, நீ பிரசங்கியாயிருப்பதற்கென்று நியமிக்கப்பட்ட சான்றிதழ்களை காட்டு பார்க்கலாம்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் அவனுக்கு விரோதமாய் ஒருமுறை கேடையும் எதையும் சுட்டிக் காட்ட முடியாது. அதைக் குறித்து அவனை குற்றம் சுமத்துகிறவன் யார்? “ அவன் ஒருத்துவம், தேவ கூட்டுசபை, திரித்துவம், திரித்துவம் அல்லாத போன்ற எந்த ஸ்தாபனங்களினின்றும் வராதவனாயிருக்கிறான்” என்கிறீர்கள். பரிதாபத்திற்குரிய முறை தவறிப் பிறந்த கூட்டமே, உங்களுக்கு அவமானம்! தேவன் கதவுக்கு வெளியே இருக்கிறார். யோவான் ஸ்நானகனும் அதை குறித்து, (இயேசுவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான தூதன்) “தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்; நாங்கள் இதைச் சேர்ந்தவர்கள், அதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்'' என்று கூறினான். ”தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்“, 283சரி, நாம் தொடர்ந்த செல்கையில்...ஓ! நான் இதை எவ்வளவாய் விரும்புகிறேன். கிறிஸ்துவின் மணவாட்டி ஆதாமின் மணவாட்டியைப் போன்றும், மற்றவர்களைப் போன்றும் வித்தைக் கலந்துவிட்டு, ஸ்தாபனமாகி கிறிஸ்துவை வெளியே தள்ளி விட்டாள். அவள் உண்மையாகவே அதைச் செய்தாள். அவள் நிச்சயமாகவே அதைச் செய்தாள். அவள், ஏவாளைப் போன்று, தன் வருங்கால கணவனான தேவனை மறுத்து, சாத்தானின் பொய்யான களைகளை ஏற்றுக் கொண்டாள். அதனால் அவளிலிருந்து ஒரு பாரம்பரியமான சபையே பிறந்தது. இப்பொழுது, அது பொய்யென்று உங்களால் கூறமுடியுமா? உங்கள் பெந்தெகொஸ்தேயினர் எங்கே? இன்றைக்கு இந்த பெந்தெகொஸ்தேயினர் பாப்டிஸ்டுகளை விட பாரம்பரியத்தில் மோசமான காட்சி போல் இப்பொழுது சரியாக காட்சியளிக்கின்றது, அல்லவா?ஆனால் யோவேல் 2:28ல் என்ன கூறுகிறான்? (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி) இந்த லவோதிக்கேயா- காலம் (சகோதரன் பிரன்ஹாம் தட்டுகிறார் - ஆசி)- அவர் மீண்டும் திரும்பவர முயற்சித்துக்கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்-வேதத்திலே மிகவும் பரிதாபமான காட்சி. (ஒலி நாடாவில் காலியிடம்-ஆசி). “நான் திரும்ப அளிப்பேன்'', என்று கர்த்தர் கூறுகிறார். 284ஹூ-ஹூ. ஆதாம் தன் மணவாட்டி சாத்தானின் பொய்யை ஏற்று கொண்டதினிமித்தம் மரணத்தை கர்ப்பந்தரித்தாள் என்று கண்டான், ஆனால் யோசேப்பு தன் மணவாட்டி தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டதினிமித்தம் தேவனுடைய வித்தைக் கர்ப்பந்தரித்தாள் என்று கண்டான். இவைகளெல்லாம் என்ன? நான் எதைக் கூற முயற்சிக்கிறேன்? இங்கு கூடாரத்திலிருக்கும் உங்களுக்கும், வெளியிலுள்ள எல்லோருக்கும், நான் ஏன் வார்த்தையிலே மட்டும் சார்ந்திருக்க முயற்சி செய்து அதிலே நிலைக்கொண்டு, ஸ்தாபனங்களைக் குற்றம் பிடிக்கிறேன் என்பதை உங்களால் காண முடிகிறதா? அதைச் சார்ந்த எந்த ஒரு மனிதனையாவது, பெண்ணையாவது நான் எதிர்க்க வில்லை; அவர்களுக்கு விரோதமாக எனக்கு எந்த ஒரு காரியமுமில்லை. ஆனால் அந்த ஸ்தாபனம் என்ற அடிப்படையில் மட்டும் என்னால் ஒத்து போகமுடியவில்லை. ஏனெனில் அது தவறாயிருக்கிறது. 285நான் மேற்கோள் காட்ட ஒரு வேத வசனத்தை வைத்துள்ளேன். பிசாசு இயேசுவை சோதித்த பொழுது, “உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன். அவைகள் என்னுடையவைகளாயிருக்கின்றன'' என்றான். பாருங்கள்? ஏவாளிடமும் அவ்வாறே கூறினான். ”நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்'' என்று கூறினான். முதலாவது அவன், “இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான். பாருங்கள்? அவன்,“நீர் என்னைப் பணிந்து கொண்டால் நான் இவை எல்லாவற்றையும் தருவேன், நீர் என்னுடைய குழுவின் சேர்ந்து கொள்ளும்,” என்றான். அவர் பிரதியுத்தரமாக, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே”என்றார். 286அது என்ன? ஸ்தாபனத்திற்குள்ளாக வரவிடாமல் செய்து விடுவார்களே என்று கலங்கி, உங்கள் நிலையில் நிற்க பயப்படுகிற பிரசங்கிகளே! “அதை தவிர்த்து எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? ......எங்களை வெளியே துரத்தி விடுவார்களே!'' என்கிறீர்களா? உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். முதலாவது அது உங்கள் பலவீனம். அது உண்மை. தேவன் பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எங்கே? எனக்கும் அதையே தான் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக தேவன் என்னை வெளியே எடுத்து இவ்விதமாய் உருவாக்கும் வரை 17 வருடங்கள் உழைத்து, அதன்பின், ”இப்பொழுது, சாத்தானே இப்பொழுது வா,பார்க்கலாம்“ என்று நினைத்தேன். அது எங்கேயிருக்கிறது என்று பாருங்கள். தேவன் உனக்குச் சத்தியத்தை வெளிப்படுத்திவிட்டார் என்பதை நீ உணரும்போது உலகத்திலுள்ள வேறு எந்த சக்தியும் உன்னிலுள்ளதை மேற்கொள்ள முடியாது. அது தான் காரியம். நீ முற்றிலும் மேற்கொள்ளப்பட முடியாதவனாகிவிடுகின்றாய்; முற்றிலுமாகவே, நீ தோற்கடிக்கப்பட முடியாதவன், அது நீயல்ல, தேவன் உன்னிலிருந்து அதை செய்கிறார். கிறிஸ்து அல்ல-ஆனால் சரீரமல்ல, அவருக்குள் இருந்த வார்த்தை. மரியாள் அல்ல, அவளிடமிருந்து பிறந்த வார்த்தையே கிரியை செய்கின்றது. 287ஆகவே மனிதன் எதினால் பிழைக்கின்றான்?—-ஆகாரக் கட்டண சீட்டினாலல்ல, தேவனுடைய வார்த்தையினால் பிழைப்பான்; உனக்கு தங்க இடம் கொடுக்கும் ஸ்தாபனத்தினாலல்ல, தேவனுடைய வார்த்தையினாலே பிழைப்பான். “நல்லது. உன்னுடைய நற்சாட்சி பத்திரங்களைக் காட்டு பார்க்கலாம், உனக்கு நல்ல நிலைமையுண்டாயிருக்கின்றதா? அதை நாங்கள் சோதிக்க வேண்டும். நல்லது, நீ நூறு சதவிகிதம் சரியாயிருக்கிறாய், சரி. உன்னைக் கொண்டு சில நாட்கள் ஒரு எழுப்புதல் கூட்டம் நடத்தி உன்னுடைய காரியம் எப்படி இருக்கிறது என்று சோதித்து பார்க்கப்போகிறோம்” என்று கூறுகிறார்கள். ஓ! அத்தகைய கூட்டத்தின் மத்தியில் தேவன் எவ்விதம் கிரியை செய்யக் கூடும்? அவர்கள் இலையுதிர்ந்து கனியற்று இரண்டு தரஞ்செத்து வேறற்றுப் போன மரங்கள். ஓ, என்னே!மற்றொரு காரியமும் உண்டு. 288ஓ! ஜனங்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, எனக்கு செவிகொடுங்கள். தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் விசுவாசிக்கிறதில்லை, அதுவே என் ஜீவனாயும் என்னுடையவைகளெல்லாம் அவராகவே கொண்டிருக்கிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்களுடைய நடைகளும், பேச்சுகளும், அசைவுகளும், நீங்கள் எதைச் செய்தாலும் அவைகள் தேவனுடைய வார்த்தையிலிருக்கட்டும். கிறிஸ்துவின் சிந்தையை உங்களில் வர விடுவீர்களானால் அது உங்களை வார்த்தையினால் கர்ப்பந்தரிக்கச்செய்யும். ஸ்தாபனத்தின் சிந்தனையை உங்களில் வரவிடுவீர்களானால், நீங்கள் ஸ்தாபனத்தையே கர்ப்பந்தரிப்பீர்கள். கிறிஸ்துவின் சிந்தனையை உங்களில் வர விடுவீர்களானால், அவர் ஒருபோதும் தம்முடைய வார்த்தையை மறுதலிக்க மாட்டார். ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். அப்பொழுது நீங்கள் வார்த்தையை உற்பவித்து அதை விசுவாசிப்பீர்கள். உங்களை ஸ்தாபனத்தார் வெளியே தள்ளி உதைத்துத் தள்ளி, ஓடச்செய்து, எல்லாக் கதவுகளையும் அடைத்தாலும் நான் அதற்காக கவலைப்படமாட்டேன், நீங்கள் அவ்விதமாகவே வார்த்தையோடு நடந்து செல்வீர்கள்! ஆமென்! வூயூ! நான் துரிதமாக முடிக்க வேண்டும். 289இப்பொழுது கிறிஸ்து தமக்கு ஒரு மணவாட்டியை எடுத்து, தமது வார்த்தையாகிய வித்து அவளுடைய கருப்பையில் கர்ப்பந்தரிக்க செய்து கொண்டிருக்கிறார். (ஆவிக்குரிய கருப்பையில்) அவளுடைய சிந்தனையில் ஸ்தாபனத்தின் பதர் கலக்காது. ஏனெனில் அவள் அவருக்கு ஒரு கன்னிகையாயிருக்கிறாள். ஓ! மூன்று நாட்களாக அங்கு அந்த அறையில் உட்கார்ந்து உபவாசித்து, ஜெபித்துக் கொண்டு கர்த்தரிடத்தில் காத்திருந்ததை நினைவு கூறுகிறேன். அந்த வெளிப்பாடு என்னில் உதித்தபோது நான், ஓ, “தேவனே, இது என்ன? நான் இப்பொழுது ஒரு காட்சியையுடையவனாயிருக்கிறேன், இதோ நான் இங்குள்ளேன். இதின் எல்லா காரியங்களையும் சபைக்குச் சொல்வேனானால், நான் எங்கு இருப்பேன்? நான் அவர்களைப் பிய்த்து விடுவேனே, நான் என்ன செய்வேன்? சபையை எல்லா அவமானங்களுக்கும், நிழல்களுக்கும் ஒப்புவமைச்செய்து அவள் மரித்துப்போனாள் என்று காட்டினேனே. நீர் என்ன செய்யப் போகிறீர்”என்றேன். பின்பு தேவனுடைய வேறொரு வார்த்தையையும் நினைத்தேன்' “நான் திரும்பத் தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்பதே அது. “நான் திரும்ப அளிப்பேன்”. ஹூ...ஹூ... ஹூ பழைய அந்த தேவதாரு மரத்தை ஞாபகங் கொள்ளுங்கள்; அக்கினியானது அவளை எரித்து கீழே சாய்த்த பின்பு, தன்னுடைய ஒரு விதையை அவள் கடைசியாக கீழே விட்டாள். அந்த வித்து வேறொரு புதிய தேவதாரு மரத்தைக் கொண்டு வந்தது. அது தான் சரி. பழைய மரங்கள் ஸ்தாபனங்களும் மற்றவைகளும் எரிந்து விட்டன. ஆனால் அங்கு ஒரு தேவவித்து தரித்துஇருந்தது. அது தேவ வார்த்தையா யிருக்குமானால் நிச்சயமாக திரும்பவும் தன்னை உற்பத்தி செய்து தேவ வார்த்தை என்று காண்பிக்கும். ஆம், அவள் அதை தவற விடமாட்டாள். 290கவனியுங்கள். ஆனால் கிறிஸ்து....நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். அவ்விதம் தானே? பயிர் என்று ஒன்று வளரும் முன்பு ஒரு விதையானது நடப்பட வேண்டும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நான் வார்த்தையில் மட்டும் நின்று, ஸ்தாபன சபைகள் என்னை பலவிதமான பெயர்களால் அழைத்து, பலவிதமாக வசைபாட ஏன் அவர்களை விட்டுவிட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள்? அங்கே ஒரு பயிர் உள்ளது; விதையானது நடப்பட்டாயிற்று; விதையானது ஏற்கனவே பயிரிடப்பட்டுவிட்டது நண்பர்களே. அது முடிந்து விட்டது என்று நான் இப்பொழுது திட்டமாய் சொல்ல முடியும். அதுபோலவே ஸ்தாபன விதையும் பயிரிடப்பட்டுவிட்டது; மற்றவர்களும் அவ்விதமே பயிரிடப்பட்டுவிட்டனர். 291நம்முடைய மகத்தான விலையேறப்பெற்ற சகோ, பில்லிகிரஹாம் ஒரு சமயம், பரி. பவுல் ஒரு பட்டிணத்திற்கு சென்று எழுப்புதல் கூட்டம் நடத்தினால் ஒருவன் மனந்திரும்புவான், பின்பு அடுத்த வருடம் அதே இடத்திற்கு பவுல் போகும் போது அந்த ஒருவனாலே மேலும் அவர் 60 பேரைபெற்றார். “நான் ஒரு பட்டிணத்திற்குச் சென்று ஆறு வார எழுப்புதல் கூட்டம் நடத்தி 20,000 பேர் மனந்திரும்புவார்கள். ஆனால் ஆறுமாதங்களுக்குப் பின் அங்கு திரும்பி போகும் போது 20 பெயரைக் கூட அங்கு மனந்திரும்பினவர்களாய் காணமுடிகிறதில்லை!” என்றாராம். அது என்ன? அவர்கள் மனந்திரும்பினவர்கள் அல்ல! அவர்களெல்லாரும் ஸ்தாபனத்திற்கென்று மனந்திரும்பினவர்கள். அது தான் காரியம். நிச்சயமாக, நீங்கள் பயிரிடும்படி...பாருங்கள், ஸ்தாபனத்தின் விதையை நீங்கள் விதையுங்கள்; அதையே திரும்பவும் பெற்றுக் கொள்வீர்கள். “சகோதரனே, இங்கு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்; இங்கு புத்தகத்திலே உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். அது உண்மை. 292பெந்தெகொஸ்தேயினர் அன்னிய பாஷை பேசி பல காரியங்களைச் செய்கின்றனர். அது தான் அவர்களால் செய்ய முடியும். “இங்கு வந்து எங்கள் சபையை சேர்ந்து கொள்ளுங்கள்” என்கிறார்கள். உங்களுடைய தவறான ஞானஸ்நானம் போன்ற மற்ற எல்லா உபதேசங்களோடு சென்று கொண்டேயிருங்கள், உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான், அதைத்தான் நீங்கள் செய்ய முடியும். பாருங்கள்? ஆனால் கிறிஸ்து வருகிறாரென்றால், அது கறைதிறையல்லாத, ஸ்தாபனமல்லாத, கோட்பாடோடும், கொள்கைகளோடும் கலவாத ஒரு கன்னிகையான சபைக்காகத்தான் அவர் வருகிறார். அது வார்த்தையாக மட்டுமே இருக்கும். 293இப்பொழுது, ஓ, மனிதனே, நாம் இங்கேயுள்ளோம். கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக! கிறிஸ்துவுக்கு மணவாட்டியாகப் போகும் அவருடைய சரீரத்திற்கு நாம் இப்பொழுது வருகிறோம். அவருடைய மாம்சத்திற்கு மாம்சமும் அவருடைய எலும்புக்கு எலும்புமாகயிருக்கிறோம். இப்பொழுது, நாம் துரிதமாக முடிப்போம். அவருடைய மாம்சத்துக்கு மாம்சமும், எலும்புக்கு எலும்புமாய்... ஏன்.....(நான் ஒரு கேள்வி கேட்கிறேன்) உங்களுடைய முன்மாரி மழைகளெல்லாம் ஏன் கிறிஸ்துவின் மணவாட்டியைக் கொண்டு வரவில்லை? நீங்கள் அதற்கு பதில் கூறவேண்டுமென்று நான் விரும்புகிறேன்! அது வருகிறதாயும், ஏற்கனவே வருவதற்கு சமயமுமாயிருக்குமானால், நாம் அதை விசுவாசிப்போம், நோவாவின் நாட்களில் உண்டாயிருந்த நீடியப் பொறுமையைப் போல அவர் தம் மணவாட்டியை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். ஏன் இந்த மழைகள்....சில காலத்திற்கு முன்பிருந்த பெந்தெகொஸ்தேயினராகிய நீங்கள் (40 அல்லது 50 வருடங்களுக்கு முன் நீங்கள் ஆரம்பித்தபோது) கிறிஸ்து என்னும் மணவாளனை மணவாட்டியினிடம் ஏன் கொண்டு வரவில்லை? இன்னும் சிறிது நிமிடத்தில் இதை ஆழமாக பதியவைக்கப் போகிறேன். ஏன் அவ்விதம் செய்யவில்லை? ஏனெனில் நீங்கள் ஸ்தாபனங்களோடு உங்களை கர்ப்பவதியாக்கிக் கொண்டீர்கள்; அதைத்தான் நீங்கள் சரியாக செய்தீர்கள். அவர் ஒரு வேசியை விவாகம் செய்யமாட்டார். அவர் ஒரு கன்னிகையைத்தான் விவாகம் செய்வார். அது வெளிப்படையாயிருக்கிறது, ஆனாலும் அதுதான் உண்மை. அதை வெளிப் படையாகவே அறிகிறீர்கள். அதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். அதைக் குறித்து நான் இடறலடையப் போகிறதில்லை; நான் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறேன். 294ஏன் அவளிடம் கொண்டு வரவில்லை? அவளிடம் கிறிஸ்துவை உங்களால் ஏன் கொண்டு வர இயலவில்லை? ஏனெனில் அவள் தகுதியுடையவளாயில்லை. அவர் அவளை ஒரு விபச்சாரியாகக் கண்டார். அதன் காரணமாகவே பிறக்கும் பிள்ளைகள் நீண்ட காலம் ஜீவிக்காமல் மரிக்கின்றன. ஆதாம் தன் மனைவியை கர்ப்பவதியாகக் கண்டான். அந்த காரணத்தினாலேயே யேகோவா புறஜாதியிலிருந்து ஒரு மணவாட்டியைப் பெற்றார்; அவள் கர்ப்பந்தரிக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். ஆகவே கிறிஸ்து இப்பொழுது அவருக்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்துகிறார். அவர் இவ்விதமாக அழைக்கப்படுகின்ற கூட்டமானது கர்ப்பம் தரிக்கப்பட்டிருப்தைக் கண்டார். இப்பாதையின் கடைசியிலே அவர் தமது வித்தை விதைக்கப் போகின்றார். முன்குறிக்கப்பட்ட சபை என்ற யாரோ ஒன்று அதை பெற்றுக் கொள்ளப்போகின்றது. 295ஆதாமையும் யேகோவாவையும் போல் கிறிஸ்துவும் தம்முடைய மணவாட்டியை மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனக் கோட்பாடுகளினால் கர்ப்பந்தரிக்கப்பட்டவளாகக் கண்டார். ஆதியாகமம் 1ல் சொல்லப்பட்ட சத்தியம் போல, ஒவ்வொரு விதையும் அதனதன் ஜாதியைப் பிறப்பிக்க வேண்டும். ஆகவே ஆவியானது அவள் மேல் பொழியப்பட்டபோது, மனிதன் தன்னுடைய சொந்த சிந்தனையாகிய ஸ்தாபனம் என்னும் விதைகளை அவளுடைய கர்ப்பப்பையில் நுழையப் பண்ணின படியால், அவள் இப்பொழுது இருக்கிற விதமாக இருந்து, கிறிஸ்து அவளிடம் வர முடியாதவராயிருக்கிறார். ம்ம்ம்........ அது மிகவும் கடினமாயுள்ளது, அப்படித்தானே? 296ஒரு நாள், நான் 'கீரீன்ஸ் மில்'லிருந்தபொழுது இரண்டு நாட்கள் ஜெபத்தில் தரித்திருந்தேன். அநேக வருடங்களுக்கு முன்பாக, மிஷிவாக்கா (Mishawaka) என்னும் இடத்திற்கு, நான் சென்றிருந்தேன். (இதை ஒலிப்பதிவு செய்வதற்கென்று இதற்கு முன் நான் கூறினதில்லை) அந்த ஆப்பிரிக்க வாலிபனை பற்றி நீங்கள் ஞாபகம் கொள்கிறீர்களா?அப்பொழுது தான் நான் அந்த பெந்தகோஸ்தே ஜனங்களை சந்தித்தேன்; அவ்விதமான ஒன்று இருந்ததாக நான் ஒருபோதும் அறிந்ததேயில்லை. அங்கு நான் சென்றபோது, ஒரு கூட்ட தேவதூதர்கள் மத்தியில் வந்து விட்டேனோ என்று நான் எண்ணினேன். அங்கே அவர்கள் தரையில் மேலும் கீழுமாக ஓடி அன்னிய பாஷை பேசிக்கொண்டிருந்தனர். நான் அதை அவ்விதம் கேட்டதே இல்லை. “அது மிகவும் அற்புதமானது!” என்று நான் எண்ணினேன். அவர்கள் பழைய ஐக்கிய பெந்தகோஸ்தேயும் (United Pentecost), வெள்ளையருக்கென்ற பெந்தகோஸ்தே சபையும் (Pentecost Assembly for white) இணைந்த ஒரு இயக்கமாய்காணப்பட்டனர். அது வெள்ளையருக்கும், கறுப்பர்களுக்கும் இடையே இருந்த ஒருபிரிவினையாயிருந்தது; அவர்கள் இருசாராரும் இணைந்த ஒரு கூட்டமாய் அது இருந்து அதை அவர்கள், வடக்கு பாகத்தில், இந்தியானாவிலுள்ள மிஷிவாக்காவில் நடத்தினர். 297அன்று என்னிடம், வீட்டிற்கு திரும்பும் வரை ஆகும் செலவுக்குத்தக்கதாக 1 டாலரும் 75 செண்டுகளும் மட்டுமே இருந்தது. என்னிடம் சிறிது ரொட்டியிருந்தது. ஒரு கூஜாவில் நான் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். பின்பு நான் என்னுடைய பழைய போஃர்டு காரின் உட்காரும் இடத்தை வெளியே வயல் வெளியில் போட்டு, அதற்கு மேலாக என் உடைகளை படிவதற்காக (இஸ்திரி போடும் வண்ணம்) போட்டு அதன்மேல் படுத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலை நான் திரும்பவும் அங்கு சென்றேன். அவர்களோடு நான் உணவருந்த விரும்பவில்லை; நான்அவர்களோடு உணவருந்த வரவேற்கப்பட்டேன்; ஆனால் நான் போகவில்லை. ஏனெனில் காணிக்கையாக செலுத்துவதற்கு என்னிடம் ஒன்றுமில்லாதிருந்தது. அன்று அவர்கள் ஆவியில் பாடி துள்ளி குதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “ஓ,அது மிகவும் நன்றாக இருக்கிறது! ம்..ம் ...!” என்று நினைத்தேன். ஒரு மனிதன் எழுந்து அன்னியபாஷை பேசுவான்; இன்னொருவன் எழுந்து அதற்கு அர்த்தஞ் சொல்லுவான். சபையில் அமர்ந்திருக்கும் ஜனங்களின் பெயர்களை சொல்லி அழைத்தார்கள். சகோதரர்களே அது அவ்விதமாயிருந்தது. அப்பொழுது நான், “ஓ, சகோதரனே, அது அற்புதமாயிருக்கிறது!”என்று நினைத்தேன். 298“சகோதரி ஜோன்ஸ் அல்லது இன்னார்-இன்னாரை இங்கு வரச் சொல்லுங்கள், கர்த்தர் அவளை அழைக்கிறார்” என்றார்கள்.....அங்கே ஜோன்ஸ் அம்மையார் வந்தார்கள். அது எவ்வளவுஉண்மையா யிருந்தது. ஒருவர் அன்னியபாஷை பேச இன்னொருவர் அர்த்தம் சொல்லுவார், நான் நினைத்தேன், “ஓ . ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பித்து விட்டது போலும், அது இது தான்” என்று. ஆகவே இத்தகைய தேவ மனிதர்களின் கைகளை நான் குலுக்கினால் நலம்'என்று நினைத்தேன். பின்பு வெளிப்பக்கமாக நடந்து செல்லும்போது அவர்களில் ஒருவரை சந்திக்கலாம் என்று நினைத்தேன். அவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் அவர்கள் மத்தியில் ஒரு சிறியவனாகவே இருந்தேன். ஆகவே, சிறிது இடைவெளி நேரம் அங்கு விடப்பட்ட போது நான் அந்த ஆலயத்தைச் சுற்றி நடந்து வந்து கொண்டிருக்கும் போது, அவர்களில் ஒருவரை நான் சந்தித்தேன். அவருடைய கையை நான் குலுக்கி, “சகோதரனே எப்படியிருக் கிறீர்கள்?” என்று கேட்டேன். 299காரியங்களை அறிந்துக்கொள்ள வேண்டிய சமயத்தில் அதை அறிந்துக் கொள்ளத்தக்கதாக, தேவன் எனக்கு ஒரு சிறு வரத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? அப்பொழுது நான், “இம்மனிதனை நான் பேசவைத்து, அவர் என்னிடம் ஏதாகிலும் பேசினால், அப்பொழுது இவரில் இருப்பது உண்மையா இல்லையா என்று கண்டுபிடிப்பேனே” என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் (அன்னியபாஷை பேசி மொழிப்பெயர்த்தவர்கள்) அங்கு அந்த கூட்டத்திற்கு ஒருவகை தலைவர்கள் போல காணப்பட்டனர். ஆக, இந்த முதல் மனிதனின் கைகளைக் குலுக்கி, சிறிது நேரம் அவரிடம் பேசின பின்பு அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்று கண்டு பிடித்து, “கர்த்தருக்கு மகிமை” என்று எண்ணினேன். பின்பு சிறிது நேரம் கழித்து நான் ஒரு மூலைக்கு வந்தேன், அங்கு அந்த மற்ற சகோதரனைக் கண்டு, “சகோதரனே, எப்படியிருக்கிறீர்கள்?” என்றேன். அவரோடு நான் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் ஒரு மாய்மாலக்காரன் என்றும், கருப்பு நிறமுள்ள அந்த மனிதன் கறுப்பு தலைமயிர் கொண்ட ஒரு பெண்ணின் மூலம் ஒரு குழந்தையும், சிகப்பு தலைமயிர் கொண்ட ஒரு பெண்ணின் மூலம் இரண்டு குழந்தைகளும் கொண்டவராயிருந்தார் என்று ஒரு தரிசனத்தின் மூலம் பார்த்தேன். 300அப்பொழுது நான், “ஓ நான் இப்பொழுது குழப்பமடைந்து விட்டேன், எப்படி ஒரே தேவ ஆவி, தேவபக்தியுள்ள அந்த மனிதனின் மேலும், மாய்மாலமான இந்த பிசாசானவனின் மேலும் இருக்க முடியும்?, கர்த்தாவே, இக்காரியத்தை நான் இவ்விதமே விட்டு விடுகிறேன். ஏனெனில் இது எனக்கு விளங்கவில்லை” என்று நினைத்தேன். நான் பத்தொன்பது அல்லது இருபது வயதுடைய வனாயிருந்தேன். ஆகவே நான், “இக்காரியத்தை இவ்விதமே விட்டு விடுவது நல்லது. நல்லது, நான் ஒன்றும் அறியேன். உலகம் எவ்விதம் இப்படி இருக்க முடியும்? அதைக்குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதை எதிர்த்தும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை”, என்று நினைத்தேன். ஆனால் ஒன்று அறிந்திருந்தேன், அந்த மனிதன் தவறானவன் என்று. பரிசுத்த ஆவி இவன் மேலும் விழுந்து அதே பயனை விளைவித்ததை நான் கவனித்தேன். அப்பொழுது நான், “இதில் எங்கோ தவறிருக்கிறது; அது தான் காரியம்”என்று நினைத்தேன். 301அந்த மனிதன் (மாய்மாலக்காரன்) என்னிடம், “நீ எப்பொழுதாவது பரிசுத்த ஆவியைப் பெற்றீரா?” என்று கேட்டான். அதற்கு நான்,“நீங்கள் அடைந்திருக்கிறதான அதை நான் அடையவில்லை என்று விசுவாசிக்கிறேன்”,என்றேன். அதற்கு அவர்,“தேவனுக்கு மகிமை! எப்பொழுதாவது நீ அன்னியபாஷை பேசினதுண்டா?” என்று கேட்டார். அதற்கு நான்,“இல்லை ஐயா” என்றேன். அவர் மேலும்,“நீர் இன்னும் அதை பெற்றுக் கொள்ள வில்லையா?” என்றார். அதற்கு நான்,“நல்லது, நான் அதை பெற்றுக்கொள்ளவில்லை என்று எண்ணுகின்றேன். மேலும் இது எனக்கு புதியது, இத்தகையக் காரியத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததும், கேள்விப்பட்டதும் கிடையாது” என்றேன். பாருங்கள்? அப்பொழுது அவர், “நல்லது, உள்ளே சென்று அதை பெற்று கொள்ளும்—நிச்சயமாக நீர் அதை பெற்றுக்கொள்ளலாம்” என்றார். அதற்கு நான், “நன்றி ஐயா” என்று கூறினேன். அப்பொழுது நான், “சகோதரனே, நீ என்ன பெற்றிருக்கிறாயோ அது எனக்கு வேண்டாம்!” என்று நினைத்தேன். பிறகு சிறிது நேரம் அங்கேயிருந்து விட்டு, அந்த இரவில் நான் காட்டிற்குள் சென்றேன, “தேவனே, கிருபையாயிரும், நான் இப்பொழுது என் வீட்டிற்குச் செல்கிறேன்” என்று ஜெபித்துவிட்டு, பின்பு நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதைக் குறித்து எதையும் சொல்லவோ,அல்லது எதிராகச் சொல்லவோ, என்னால் இயலவில்லை. 302ஒருசமயம் நான் கிரீன் மில் (Green Mill) என்னும் இடத்தில் இருந்தேன். (நான் எப்பொழுதும் ஜெபிக்கச் செல்லும் அந்த என்னுடைய சிறிய குகையைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்). நான் வேறு ஒரு காரணத்திற்காக அங்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் நான் அங்கு தங்கி உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். குகைக்குள் மிகவும் தூசு படிந்ததினால், நான் அந்த மதியம் அதை விட்டு வெளியே வந்தேன்—- இலைகளினூடே சூரியனின் கிரகணங்கள் மிக அழகாய் இருந்தது. அங்கு ஒரு பழைய மரம் கீழே விழுந்திருந்தது. (அங்குள்ள ஒரு சிற்றோடையினிடமாக) நான் அதின் மேல் அமர்ந்தவனாய் என் கண்களைத் தேய்த்துவிட்டு கொண்டிருந்தேன். (நான் அதற்கு சற்று முன்பாக குகையில் இருந்தபடியால்). என்னுடைய வேதாகமத்தை அங்கு கீழே வைத்தவனாய், “நல்லது, இப்பொழுது வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை வாசித்தால் நலம்” என்று யோசிக்கலானேன். அப்பொழுது நான் அந்த மரத்திலிருந்த ஒரு கொப்பின் மேல் சாய்ந்தவனாக இளைப்பாறிக் கொண்டிருந்தேன். என் மேல் முழுவதும் தூசியாக இருந்தது. 303இவ்விதமாக யோசித்து வேதாகமத்தை எடுத்து திறந்த பொழுது, அது எபிரெயர் 6ம் அதிகாரமாயிருந்தது. பாருங்கள்? அதில், “ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும் பரிசுத்த ஆவியைப் பெற்றும்,தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம், எப்படியெனில் தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக்குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதேஅதின் முடிவு” என்ற பாகத்தை வாசித்தேன். “நல்லது இது என்ன?” என்று நினைத்தேன். நான் “அது என்ன?” என்று நினைத்தேன். “ஓ, இதில் ஏதோ ஒன்று இருக்கிறது,” என்று சொல்லிக் கொண்டேன்.இப்பகுதி? மறைந்தது. நான் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கு ஜெபிக்க வந்திருந்தேன். பின் என் வேதாகமத்தை கீழே வைத்து விட்டு, “சரி. பழைய ஏற்பாட்டில் ஒரு பாகத்தைப் படிப்போம்” என்று நினைத்தவனாய் பழைய ஏற்பாட்டிற்கு வேதாகமத்தை திருப்பி வைத்தேன். திடீரென்று காற்று அங்கு வந்து அதை எபிரெயர் 6ம் அதிகாரத்திற்கு அதை சரியாக திருப்பிற்று. ஆகவே அதை நான் திரும்பவும் படிக்கலானேன். சற்று முன்பு படித்த அதே பாகத்தையே நான் திரும்பவும் படித்துக் கொண்டிருந்தேன். “நல்லது, பில்லி நீ என்ன மூடபக்தியுள்ளவனாக்கிக் கொண்டிருக்கிறாயா?”, என்று எனக்குள் யோசித்தேன். 304“சரி. இதை திரும்பவும் படிக்கலாம்” என்று யோசித்தேன் ஒன்றுமில்லாத காரியத்திற்காக நான் ஆவலாயிருப்பதில்லை. “நல்லது, நான் என் கரங்களை உயர்த்தி, தேவனைத் துதிப்பேன்,” என்று நான் நினைத்தேன். நான் வேதாகமத்தை கீழே வைத்து, “என்னுடைய கரங்களை தேவனைத் துதிப்பதற்காக உயர்த்தின பொழுது, காற்றானது, ”ஊ ஊஷ்“ என்ற சத்தத்தோடே வீசிற்று, நான் கீழே பார்த்தபோது அங்கு வேதாகமம் திரும்பவும் எபிரெயர் 6ம் அதிகாரத்திற்கு திருப்பப்பட்டிருந்தது. நான் மறுபடியுமாக அப்பகுதியை வாசித்தேன். இதன் தார்ப்பரியம் என்ன? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே' என்று யோசித்தேன்.ஏனெனில் அந்த பெந்தெகொஸ்தே சகோதரர்களிடம் கிடைத்த அனுபவத்தை அச்சமயம் நான் மறந்துவிட்டிருந்தேன். ஆகவே, நான், ”இதன் தார்ப்பரியம் என்ன?“ என்று யோசித்தேன். 305அங்கு அமர்ந்தவனாய் நான், “இதில் ஏதாகிலும் இருக்கிறதா கர்த்தாவே”? என்று ஜெபித்தவனாய் யோசிக்கலானேன். “நான் முன்குறித்தலில் விசுவாசம் கொண்டவன், ஆம் ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் (பாருங்கள்?) தேவனுடைய நல் வார்த்தையை ருசிபார்த்தும்...''உண்மையான காரியத்திற்குள் பிரவேசிக்க வந்தவர்களைப் போல் வந்து, பின்பு பின் வாங்கிப் போன யோசுவாவின் நாட்களின் எல்லையோர விசுவாசிகளாக இவர்கள் இருக்கக்கூடும் யோசுவாவும், காலேபும் கானானுக்குள் பிரவேசித்தார்கள், ஆனால் இந்த எல்லையோர விசுவாசிகள் (Borderline Believers) தேவனுடைய நன்மைகளை ருசித்திருந்தும் தேவனுடைய கிரியைகளைக் கண்டிருந்தும் அதை புறம்பாக்கினார்கள் என்று யோசித்தேன். ஜனங்கள் ஆலயத்தில் அமர்ந்திருந்து, “சகோ. பிரன்ஹாம், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்” என்று கூறியும் அதினிடமாகச் செல்ல முயல்வதில்லை. பாருங்கள், கானானுக்குள் கடந்து போக அவர்களால் ஒரு போதும் முடியாது. குறைவான மயிர் வைத் திருக்கும் அத்தகைய பெண்களுக்கு நீ உபதேசம் செய்வாயானால், அடுத்த வருடம் நீ சென்று பார்க்கும் பொழுதும் அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள். புருஷர்களுக்குப் பிரசங்கத்தாலும், அவர்கள் அப்படியே இருக்கின்றனர். நீங்கள் பாருங்கள்? நீ என்ன தான்பிரசங்கித்தாலும் அவர்கள் அவ்விதம் எல்லையோர விசுவாசி களாயிருப்பார்கள். அவர்கள், “ஓ ஆம், அது உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன்,” என்று மட்டுமே கூறுவார்கள். 306“ஆகவே, அத்தகைய முன் குறித்தலை நான் விசுவாசிக்கிறேன்” என்று யோசித்து, மேலும்,“முள்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு என்று கூறப்பட்டதன் கருத்து என்ன? இது புரிய வில்லையே” என்றும் யோசித்தேன். “தேவனே,இதில் ஏதோ ஒன்றிருந்து அதை நான் அறிந்து கொள்ள வேண்டுமென்று நீர் சித்தங்கொண்டால், இதோ நான் இங்கிருக்கிறேன். ஒரு தரிசனத்தின் மூலம் நான் அதை தேடுகிறேன், கர்த்தாவே. அங்கு நடந்த அந்த ஊழியத்தைக் குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன், தகப்பனே” என்று ஜெபித்தேன். பின்பு நான் மலையின் மேலிருந்து நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், (நான் சார்லஸ்டன் என்னும் இடத்திற்கு மேலாக இருந்தேன்) அப்பொழுது ஒரு குழல் போன்ற ஒன்று மேல் நோக்கிச் சென்று புது சந்தை வரை பரவியுள்ள அந்த பள்ளத்தாக்கினிடமாய் வந்து, அங்கு ஒரு வானவில்லைப் போன்று அது தொங்கிக் கொண்டிருக்கிறதைக் கண்டேன். அந்த வான வில்லின் மூலமாக ஏதோ ஒன்று திருப்புவதைக் கண்டேன். சற்று உற்று பார்த்தபொழுது அது இந்த உலகமாயிருந்தது. அங்கே ஒரு மனிதன் வெள்ளை உடை உடுத்தியிருந்தவனாய் சென்றுக் கொண்டிருந்தான். 307இங்கிருக்கும் ஜனங்களில் அநேகர் இதை அறிந்துகொள்வதற்கு மிகவும் சிறியவர்களாயிருக்கிறீர்கள். கக்கத்தில் விதை நிறைந்த பையை மாட்டி, அதனின்று விதைகளை தெளிப்பதை நீங்கள் ஞாபகம் கொள்கிறீர்களா? சகோ. உட் அவர்களே, இவ்விதமாய் விதைகளை தெளித்து, காற்றானது அதை நிலத்தின் மேல் விழச்செய்வதை ஞாபகம் கொள்கிறீர்களா! வெள்ளை ஆடை அணிந்த இந்த மனிதனும் அவ்வாறே விதைகளை தெளித்து கொண்டிருந்தான். அவன் உலகத்தின் எல்லா நெளிவு சுளிவுகளிலும் அவ்விதம் விதை தெளித்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “அதிசயமாயிருக்கிறதே, இதன் தார்ப்பரியம் என்ன.” என்று யோசித்துக் கொண்டே, பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மனிதன் தன் வேலையை முடித்துத் திரும்பினவுடன், அங்கு ஒரு தந்திரக்காரன் வந்து இங்கேயும் அங்கேயும் பார்த்தவனாய், பின்பு தான் கொண்டு வந்திருந்த கோணிப்பையின்று களைகளையும், முள்ளையும் அதே நிலத்தில் வீசியெறிந்து உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் சுற்றிலும் விதைத்தான். 308பின்பு அந்த பயிர்கள் வளர ஆரம்பித்து, கோதுமையாகவும், களையாகவும், முட்களாகவும் வெளிவந்தன. அந்த இரண்டு பயிர்களும் ஒன்றாக வளர்ந்தன. இவ்விதமாக அவை வளர்ந்து வரும் சமயத்தில் அங்கு ஒரு பெரிய வறட்சியுண்டாயிற்று, அப்பொழுது கோதுமை பயிர் தன் தலையைத் தொங்கப் போட்டு தண்ணீருக்காக தவனமாய் மரிக்கும் நிலையில் காணப்பட்டது. அது போன்றே இந்த களைகளும் தண்ணீருக்காக மரிக்கும் நிலையில் காணப்பட்டன. பின்பு இரண்டு பயிர்களும் தண்ணீருக்காக ஜெபிக்க ஆரம்பித்தன ஜெபத்திற்கு பதிலளிக்கும் வகையில் பெரிய மழை அங்கு உடனே பொழிந்து, உலக முழுமையும் பொழிந்தது, மழை பூமியைத் தொட்டவுடன் தானே, அந்த சிறிய கோதுமைப்பயிர், துள்ளி, “மகிமை! மகிமை! மகிமை!”என்றது. அதே சமயத்தில் களைகளும் “மகிமை! மகிமை! மகிமை!” என்று கூக்குரலிட்டன. அப்பொழுது நான், “அது என்ன? கோதுமை குதுகலிப்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அந்த களையும் குதுகலிக்கிறதே, அது என்ன?” என்று யோசிக்கலானேன். அப்பொழுதுதான் கர்த்தர் என்னிடம், “எபிரெயர் 6ம் அதிகாரத்தைப்படி” என்று கூறினார். 309மழையானது நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிகிறதாயிருக்கிறது. அது தான் காரியம்; அதன் காரணமாகத் தான் கிறிஸ்துவின் மணவாட்டி இன்னுமாக ஆயத்தமாகவில்லை. நாம் வார்த்தைக்கு பதிலாக ஸ்தாபன வித்துக்களை விதைத்து விட்டோம். அது என்ன செய்தது? அது இன்னும் அதிகமான ஸ்தாபன பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதன் மத்தியில் சில கோதுமை மணிகளும் விழுந்திருக்கிறது. அது உண்மை . கவனியுங்கள், உண்மையான விசுவாசியை அன்னிய பாஷை பேசவைத்து அவனை கிறிஸ்தவனாக்கும் அதே ஆவி (ஏனெனில் அது வார்த்தையாகிய வித்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறது) தான் ஏவாளின் கலப்பினம் போன்ற களைகளையும் சந்தோஷிப்பிக்கின்றது. உண்மையைப் போலவே அதுவும் கூக்குரலிட்டு சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் சத்தியம் என்ன?.....அது ஆரம்பத்திலேயே தவறான வித்தாயிருக்கிறது. 310ஆகவே உங்கள் மாம்ச பிரகாரமான ஸ்தாபன கிரியைகள் எல்லாம் ஒன்றிற்கும் உதவாது! “நான் மனுஷர்பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்த மிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளை பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்குண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை'' என்று பவுல் கூறினான். ஸ்தாபனங்கள் சத்தமிடுகிற வெண்கலமும், ஓசையிடுகிற கைத்தாளமுமாயிருக்கின்றன, சபையே கவனி: பெந்தெகொஸ்தேயினர் ஒன்றுமில்லாதவர் களுமாயிருக்கின்றனர்! ஏன்? அது ஒரு கலப்பின விதை. அது வார்த்தையிடம் வர முடியாது. 311அது தான் காரியம். கிறிஸ்துவின் சரீரத்தை பிறப்பிக்கும் சரீரமானது கன்னியின் கருப்பையினின்று வர வேண்டியதாயுள்ளது. உண்மை! இதைக் கவனியுங்கள். ஆகவே தான் அது.“நாற்பத்து நான்கோடு லட்சத்தை சேர்” (இது ஒரு பாப்டுஸ்டுகளின் சுலோகம்) என்ற விதமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. ஆகவே தான் இந்த பெந்தெகொஸ்தேயினர் ஆவிக்குரிய வெளிப்பாட்டை பிரசவித்து கிறிஸ்துவைக் கொண்டு வர முடியவில்லை, அது வெறும் விதைக்கு மழையாயிருந்து ஒரு ஸ்தாபன சபையை உற்பவித்து அதை பெரிய சுவிசேஷர்களோடு இணைத்துவிட்டு கோராகைப் போன்று கெட்டுபோனது. 312இப்பொழுது, பழைய ஏற்பாட்டிற்கு நாம் சென்று அங்கு சில நிமிடங்களில் நிழலான காரியங்களை இத்துடன் ஒத்துப் பார்த்து பிறகு கலைந்து செல்வோம். பழைய ஏற்பாட்டிற்கு நாம் சென்று அங்கு சில நிழலான காரியங்களை ஒத்துப் பார்த்து அதை நிரூபிப்போம். இக்காரியங்களிலே நான் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டேன். இப்பொழுது சற்று நம் பொருளையும் நிகழ்ச்சியையும் மாற்றுவோம். இப்பொழுது, முதலாவதாக நான் ஒன்றைப் பெற்றுள்ளேன், நான்...நான் சில பக்கங்களை வைத்துள்ளேன். அதன் பின் நான்.....ஓ ,என்னே, என்னே , நிச்சயமாகவே அதுவல்ல. நான் சற்று துரிதமாகவே முடிக்கவேண்டும். இப்பொழுது, நான் அதை வாசிப்பேன் (பாருங்கள்?), நமக்கு மிகவும் குறைவான நேரமே இருப்பதால், என்னால் முடிந்தவரை மிக துரிதமாகவே வாசிப்பேன். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் மிகவும் களைப்பாயிருக்கிறீர்களா? (சபையார் “இல்லை” என்கின்றனர்-ஆசி) ஓ, நல்லது, அப்படியானால் அது நான் தான், சரி. நாம் தொடர்வோம்; அது சரி. கவனியுங்கள். 313நம்மிடம் இப்பொழுது சம்பவித்திருக்கும் காரியங்கள் எல்லாம் அதன் காரணமாகவே யுண்டாகியிருக்கின்றன. நான் கூறின எல்லா காரியங்களும், அவை வேதத்தோடு ஒத்து போக வில்லையென்றால் அல்லது புறாச் சிறகுகள் போல் இணையவில்லையென்றால் அவைகள் தவறானது ஆகும். நான் அதிகமாக விரும்பும் ஆவிக்குள்ளான பகுதி இங்கு ஒன்று உண்டு. காலந்தோறும் என்ன நடந்தது என்று சபைக்குக் காட்டி வார்த்தையினால் அதை நிரூபிக்கும் பட்சத்தில்,நான், “கர்த்தாவே, இங்கு ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு நான் என்னத்தைச் சொல்ல? நான் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியாது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லக் கூடாதவனாயிருக்கிறேன். நான் அவர்களை இங்கு ஒரு விளிம்பில் நிற்க வைத்து விட்டேனே” என்று யோசித்து ஜெபித்தேன். மேலும், என்னுடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, இதை நான் உமது சித்தத்தின்படி செய்தேன், இதற்கு முன்போ, பின்போ, இவ்விதம் நான் செய்ததில்லை” என்று ஜெபித்தேன். ஏனெனில் வித்தானது இன்னுமாய் விதைக்கப்பட வில்லை. “அதை சொல்வதற்கு இது தான் சமயம் என்று நான் விசுவாசிக்கிறேன்: இப்பொழுது நான் என்னத்தைக் கூறப் போகிறேன்?” என்று ஜெபித்தேன். 314நீங்கள் எவ்வாறு தத்ரூபமாக என் சத்தத்தைக் கேட்கிறீர்களோ, அவ்விதமாய் அப்போது ஒரு சத்தமானது என்னோடு, “உன் எழுது கோலை எடுத்துக்கொள்” என்று உரைத்தது. இன்னும் சிறிது நேரத்தில் அதை நான் உங்களுக்கு வாசிக்கிறேன். அவர் சொல்ல நான் எழுதி முடித்த பின்பு, நான் ஜெபித்ததற்கு பதில் கிடைத்து விட்டது. நான் என்ன எழுதுகிறேன் என்பதை அறியாதவனாயிருந்தேன். பின்பு நான் எழுதியதை பார்த்த போது, “ஓ, தேவனே, கிருபையாயிரும், இதை தான் எதிர் பார்த்தேன் என்று எனக்குள்ளாக ஜெபித்தேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்னும் சிறிது நேரத்தில் அதை நான் உங்களுக்குப் படிக்கிறேன்.பாருங்கள்? 315பழைய ஏற்பாட்டின் எல்லாக் காரியங்களும் நிழல்களாக கிறிஸ்துவையும் சபையையும் குறிகின்றன. ஆதாமும் ஏவாளும், யேகோவாவும் அவர் மணவாட்டியும், கிறிஸ்துவையும் சபையையும் சுட்டிக் காண்பிக்கிறவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நல்லது. அவை நிழல்களாயிருக்குமானால் இது நிஜமாக இருக்க வேண்டும் (உதாரணமும்-எதிர் உதாரணமுமாய்) கிறிஸ்து, தலைக்கல்லாயிருந்து தேவனுடைய உண்மையான கல்லாயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மணவாட்டி அவருடைய சரீரமாயிருக்கிறாள். இதற்கு சில தேவவசனங்கள் தேவையானால், அவைகளை நீங்கள் பார்க்கலாம். (நான் வேத வசனங்களைப் படிக்க வேண்டுமென்றிருந்தேன், ஆனால் நான் அவைகளை வாசிக்கப் போவதில்லை.) 1 பேதுரு: 2:1-6, எபேசியர் 5:22, 23. இவ்வதிகாரத்தை தொடர்ந்து படியுங்கள், அப்பொருள் அவைகளில் காணப்படுகின்றன. பாருங்கள்? 316பழைய ஏற்பாடு: கிறிஸ்து, இங்கு கவனியுங்கள்: ஒரு உதாரணத்தை நாம் பார்ப்போம். (ஒரு வேளை என் மனைவி என்னுடையதை எடுக்காமலிருந்தால், இதோ இது (டாலர்) இங்குள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் சிற்றுண்டிக்காக செலுத்தினோம். நான் இதை கூறியிருக்கக் கூடாது. நண்பர்களே, என்னை மன்னியுங்கள். நான் ஒரு நல்ல மனைவியைப் பெற்றுள்ளேன்) ஒரு டாலர் நாணயத்தின் பின்பாகத்தில் அது நமது தேசத்தின்....பணமாயிருக்குமானால், அதில் இடது பாகத்தில் முக்கியமான முத்திரையான அமெரிக்க தேசத்தின் முத்திரை அதின் இடது பக்கத்தில் இருக்க வேண்டும். அது உண்மையா? நல்லது. அந்த நுனிக் கோபுரம் (Pyramid) ஏன் ஒரு மகத்தான முத்திரை என்று அழைக்கப்படுகிறது? உங்களுடைய பணம் கூட சாட்சி கொடுக்கிறதாயிருக்கின்றது. ஆம். ஒவ்வொரு தடவை நீங்கள் தபால் அனுப்பும் போதும் அதின் மேல் முத்திரை குத்துகின்றார்கள், 1962 என்ற வருடம் ஆண்டவருடைய வருடத்தைக் குறிக்கின்றது. எல்லாம் கிறிஸ்துவை சாட்சியிடுகின்றன. 317கூர்நுனி கோபுரம், அந்த மகத்தான முத்திரையைக் கவனித்திருக்கிறீர்களா? டாலர் நாணயத்தின் முத்திரையிலுள்ள நுனிக்கோபுரம் தலைக்கல்லால் மூடப்படவில்லை என்று எத்தனை பேர் அறிவீர்கள்? நிச்சயமாக..நான் எகிப்திற்கு கெய்ரோவிற்கு சென்றிருந்தபோது அதை கண்டேன். அந்த தலைக்கல் அங்கு வைக்கப்படவில்லை. ஏன்? மூலைக்கல்லானது புறம்பாக்கப்பட்டது. அந்த மூலைக்கல்லே கட்டிடத்தை தாங்குகிறது. அதுவே மையக்கல்லாயுமிருக்கிறது (Key stone). மையக்கல் என்றால் என்ன என்று எத்தனை பேர் அறிவீர்கள்? வளைவு கட்டப்படும்போது, இந்த மையக்கல் தான் அதைக் கூட்டி சேர்த்து பிடித்துக் கொள்கிறது. மூலைக்கல்லோ கட்டிடத்தை தாங்குகிறதாயிருக்கிறது. அது உண்மையா? நுனிகோபுரத்தின் தலைக்கல்லே அதன் மூலைக் கல்லாயிருந்தது. மையக் கல்லானது மற்றவைகளைத் தாங்குகிறதாயிருக்கிறது. இந்த மையக்கல் தான்புறம்பாக்கப்பட்டுவிட்டது. அந்த நுனி கோபுரத்தை கவனித்தீர்களா? தலைக்கல் அதனுடன் சேராமல் அதற்கு மேல் நிற்கிறதாயிருக்கிறது. ஏனோக்கு அதைக் கட்டின பின்பு அது எதைக் குறித்ததாயிருந்தது? 318சம்பவித்த காரியம் இதுதான்: அது ஒரு சுவிசேஷ சபை கட்டப்பட்டு வருவதைப் போன்றுள்ளது. நுனிக்கோபுரத்தின் அகன்ற அடிப்பாகம், ஆதி சீர்திருத்தக் காலங்களை குறிக்கின்றதாயிருக்கின்றது—-உன்னை கிறிஸ்தவன் என்று அழைத்து கொண்டு பின் கத்தோலிக்கச் சபையை மறுதலித்தால், நீ மரணத்திற்கு பாத்திரன் என்ற விதமாக கத்தோலிக்கச் சபையானது அதிகாரத்தைப் பெற்றிருந்தது. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற செய்தியை அவர்கள் அங்கு பிரசங்கித்தார்கள். கவனியுங்கள்—-அந்த மூன்று என்ற எண் திரும்பவும் வருகிறதை பாருங்கள். பின் ஜான் வெஸ்லி அங்கு வந்து பரிசுத்தமாகுதலைப் பிரசங்கித்தார். சபையானது இன்னும் சிறுபான்மையோராக (Minority) மாறிற்று. (நுனி கோபுரம் மேலே செல்ல செல்ல குறுகுகிறது. தமிழாக்கியோன்) 319ஜான்வெஸ்லியின் பரிசுத்தமாக்குதல் காலத்திற்கு பிறகு பெந்தெகொஸ்தே சபை வந்தது, வார்த்தையை ஏற்றுக்கொண்ட அதிலிருந்த ஒவ்வொரு மீதமானவர்களையும் தேவன் வெளியே எடுத்தார். பாருங்கள்? பெந்தெகொஸ்தே என்ற சபையின் காரியம் நுனி கோபுரத்தை சற்று நெருக்கமாக கிட்டி சேரும் வண்ணமாக இருந்தது. ஏனெனில் அது வரங்களைத் திரும்பி பெறுதலான ஊழியத்தை உடையதாயிருந்தது. அது என்ன? தலைக்கு சற்று நெருக்கமாக அது வந்தது. மற்றவைகளைப் போல பூரணமாகப் பொருந்தத்தக்கதாக அது தீட்டப்பட, அல்லது கூராக்கப்பட வேண்டியதாயிருந்தது. அந்த நுனி கோபுரக் கட்டிடத்தில் கற்களுக்கு இடையிலுள்ள சாந்து பூசியிருக்கும் இடத்தில் ஒரு சவரகக் கத்தியைக் (Razor blade) கூட நுழையச் செய்ய முடியாதபடி அக்கட்டிடம் அவ்வளவு இணக்கமாக இடை வெளியில்லாமல் கற்பாறைகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சாலமோனின் ஆலயம் அவ்வாறே இருந்தது என்று சொல்லுகிறார்கள். பாருங்கள்? 320தேவ வார்த்தையினால் முடிவு பெறத்தக்கதாக, தேவன் பெந்தெகொஸ்தே சபையினின்று (தங்களைக் கலப்பினமாக்கிக் கொண்டவர்கள்) தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை வெளியே எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வார்த்தையோடு வார்த்தையானது கலந்து அவ்வளவு நெருக்கமாக இணைய வேண்டும், அப்பொழுது தலைக்கல் அங்குவந்து, “கிருபை, கிருபை, பிரமிக்கத்தக்க கிருபை” என்ற கதறுதல் உண்டாகும். இங்கே நீங்கள் இவ்விதமாயுள்ளீர்கள் (சகோ பிரன்ஹாம் சபையோருக்கு பார்க்கத்தக்கதான உதாரணம் ஒன்றை காட்டுகிறார்.) இங்கு எப்படியிருந்தது என்பதை பாருங்கள்? அது மிகவும் நெருக்கமாக, நெருக்கமாக வந்து கொண்டேயிருக்கிறது (ஊழியம்). இங்கே லூத்தர் நீதிமானாக்குதலை பிரசிங்கித்தார்; நீதிமான்களாக்கப்பட்டார்கள். இங்கு வெஸ்லி வருகிறார்; பரிசுத்தமாக்கப்பட்ட கூட்டம். இங்கே பெந்தெகொஸ்தேயினர் வரங்கள் திரும்பப் பெறப்பட்டன. இப்பொழுது தேவன், அதனின்று தீட்டப்பட்ட ஒரு கூட்டத்தினின்று அங்கே இருந்ததான வார்த்தையைப் போன்ற, சரியான ஒரு ஊழியத்தை உண்டாக்குகிறார், ஏனெனில் அது வார்த்தையில் சரியாகப் பொருந்த வேண்டும். அது தான் மணவாட்டி; அவளை அங்கிருந்து எடுக்கிறார். 321கவனியுங்கள். பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காக கிறிஸ்து வெளிப்பட்டார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவையெல்லாவற்றையும் என்னால் விவரிக்க முடியாது. நான் அதன் ஊடாக கடந்து முக்கியமான இடங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காகவே கிறிஸ்து வெளிப்பட்டார். அது உண்மையா? நீங்கள் யாவரும் அதை விசுவாசிக்கிறீர்களா? அதனால்தான்....அவர் யார்? பிசாசின் கலப்பினக் கிரியைகளை அழிப்பதற்காக வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை. அது சரியா? அவர் அவ்விதம் செய்வதற்காக அவ்விதம் இருக்க, பிசாசின் கிரியைகளை அழிக்க பிறந்தார். அவருடைய சரீரம் அதே கிரியைகளைச் செய்ய வேண்டும், ஏனென்றால் சரீரமும், தலையும் இணைந்தது தான் சரீரம். அது உண்மையா? வார்த்தையாகிய கிறிஸ்து தலையானால் அவருடைய சரீரமும் தலையைப்போல் தான் இருக்க வேண்டும். அது உண்மையா? வார்த்தையினின்று பிறந்த வார்த்தை அது.இப்பொழுது அது ஸ்தாபனத்தினால் பிறக்கவில்லை. அது வார்த்தையினால் பிறந்த கன்னிகையாயிருக்க வேண்டும். 322சரீரம் கிரியை செய்வது தலையின் இயக்க சக்தியினால் தான். அது சரியா? என்னுடைய தலை அசையச் சொன்னாலொழிய என் சரீரம் அசையாது. நல்லது, என் தலை மாம்சமாகவும், என் சரீரம் சாந்து கல்லாகவும் (concrete) இருந்தால் எப்படியிருக்கும்? தலையானது, “அசை, அசை” என்று கூறும். ஆனால் சரீரம் அசையாது. ஏனெனில் செய்தியை அனுப்புவதற்கு அங்கு ஒன்றுமில்லை. அது சரியா. “நல்லது” என் தலை கிறிஸ்துவாயும் என் சரீரம் ஸ்தாபனமாயுமிருந்தால், கிரியை எவ்விதம் அங்கு உண்டாகும்? பரிசுத்தமும் வேசியும் எவ்விதம் ஒன்றாக கிரியை செய்ய முடியும்? ஓ, சகோதரரே, நான் அதை நேசிக்கிறேன். இவைகளின் ஒன்றின் மேல் சிறிது நேரம் பிரசங்கம் செய்ய நான் விரும்புகிறேன். தலையின் கட்டளையால் தான் சரீரம் அவ்விதமாக கிரியை செய்கிறது. அந்த தலை வார்த்தையாயிருக்கிறது. அது சரியா? அந்த தலை வார்த்தையாயிருக்கின்றது. 323இப்பொழுதுள்ள நவ நாகரீக சபையை ஒப்பிட்டு பாருங்கள். அதில் ஏன் அற்புதங்கள் காணப்படவில்லை? அதில் ஏன் வார்த்தையை நாம் காண்கிறதில்லை? வார்த்தையை அதனிடம் வர அது விடுவதில்லை; ஸ்தாபனமானது அதை நிறுத்தி விடுகிறது. ஒரு நல்ல பரிசுத்த தேவ மனிதன் இங்கு வந்து தேவனுடைய வார்த்தையை தன்னால் முடிந்த அளவு வெளிப்படையாக பிரசங்கிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அதைப்பற்றி ஸ்தாபனம்“ ”அம்மனிதனை இங்கிருந்து விரட்டியடி“ என்று கூறும் பாருங்கள்? சரீரம் அசையவில்லை. 324தலை எதைக் கட்டளையிடுகிறதோ அதையே சரீரமானது கிரியையாக நடப்பிக்கிறது. சரி. “ஸ்தாபனமாகு!” என்று தலை எங்கு கூறியிருக்கிறது என்று எனக்குக் கூறுங்கள். “பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளலாம்'' என்று தலை எங்கு கூறியிருக்கிறது என்று எனக்குக் கூறுங்கள். ஹும். அது அங்கே கூறப்படவில்லை.”நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்ய மாட்டீர்கள்“ என்று தலை எப்பொழுதாவது கூறியிருக்கிறதா? எனக்குக் கூறுங்கள்! ஆனால் தலையானது ”என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' (நீங்கள் வேத வாக்கியங்களைக் அறிந்துக்கொள்ள விரும்பினால் அது யோவான் 14:12) என்று தான் கூறியிருக்கிறது. அவ்விதம் அக்கட்டளையை நிறைவேற்றுவது தான் சரீரம் பாருங்கள். சரீரத்திற்கென்று, அந்த ஜாதியான வித்தை நான் ஊன்றியிருக்கிறேன் என்பதைக் குறித்து ஏன் அவ்வித பக்தி வைராக்கியம் கொண்டுள்ளேன் பாருங்கள்? மழையானது கூடிய சீக்கிரத்தில் பொழியப் போகிறது; உண்மையான மழையை நான் குறிக்கிறேன். அது விழுவதற்கு அங்கே வித்தானது இருந்தாக வேண்டும். அதைக்காண நான் உயிரோடிருப்பேன் என்று நம்புகிறேன். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது ஆதியிலே உரைக்கப்பட்ட வார்த்தையைப் போல் ஜீவிக்கிற வார்த்தையாயிருந்து வல்லமையுடையதாயிருக்கும். ஏனெனில் அது அவருக்குள் அவருடைய சொந்த சரீரத்தில் இருக்கிறதாய் இருந்து, தன் வழியில் கிரியை செய்து கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய சரீரத்திற்கு தந்த வாக்குத்தத்தத்தைப் பாருங்கள். 325நாம் இப்பொழுது ஒன்றிற்கு சீயோன் மலையினிடத்திற்கு வருகிறோம். கன்னி வயிற்றில் பிறந்த தம்முடைய சரீரத்திற்கு அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம் (சகோ. பிரன்ஹாம் ஏழு முறை பிரசங்கப் பீடத்தை தட்டுகிறார்) ஒவ்வொரு நாளும் நாம் அதன் போலியான தோற்றங்களைப் பார்க்கிறோம். ஆனால் அவருடைய உண்மையான சரீரத்தைக் குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம். சரி, அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தார் என்பதை நாம் பார்ப்போம். யோவான் 3:16ஐ சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அதைப் படிக்கப்போகிறேன். யோவான் 3:16ஐ விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரும்: “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” ஆமென் என்று கூறுங்கள். ஆமென் (சபையார் “ஆமென்” என்கின்றனர்). நீங்கள் இதை தைரியத்துடன் விசுவாசிக்க வேண்டும். நான் அவருடைய சரீரத்தைக் குறித்துப் பேசுகிறேன். 326யோவான் 20ம் அதிகாரம் படிப்போம். சரி. யோவான் 20ம் அதிகாரத்தை நாம் பார்ப்போம். ஓ, நாம் 19ம் வசனத்திலிருந்து படிப்போம். யோவான் 10 (நான் இதைத்தான் குறித்து வைத்துள்ளேன் என்று நம்புகிறேன்.) 19ம் வசனத்திலிருந்து..... கூர்ந்து கவனியுங்கள். இதை விசுவாசிக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் ! ஓ, நான் அதை நேசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இங்கு நிழலிட்டு, “அது நான் தான்” என்று கூறுவதைக் காண விரும்புகிறேன். “வாரத்தின் முதல் நாளாகிய அன்றையத்தினம் சாயங்கால வேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில் (சீஷர்கள் கூடியிருந்த இடத்தில் கதவுகள் பூட்டப் பட்டிருந்தன) இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் (அவர் அவ்விதம் சொன்ன பின்பு ) தம்முடைய கைகளையும், விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். (தம்முடைய சீஷர்கள் தம்முடைய விலாவை பார்க்க அனுமதித்தப் போது) சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்கு சமாதானமுண்டாவதாக; (ஓ , நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?) பிதா என்னை அனுப்பினது போல (அவர் தான் வார்த்தை...வார்த்தை....வித்து)—-நானும் உங்களை அனுப்புகிறேன். (நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? இதோடு நின்று விடாதீர்கள்; இதற்கு மேலும் உண்டு) என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களே அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.” 327இது சத்தியமா? யாருக்கு அதை கூறினார்...வார்த்தையாகிய வித்திற்கு. ஏன்? அவர்கள் மட்டுமே வார்த்தையினால் பிறக்க முடியும். அதுதான் காரணம். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் மத்தேயு 16ம் அதிகாரம் 19ம் வசனத்தைப் படிப்போம். சரி.@@ 'பரலோக ராஜ்யத்தின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்“ இதை விசுவாசிக்கும்படி உங்களுக்கு சவால் விடுகிறேன். இவைகள் தேவனுடைய வார்த்தை இல்லையென்றால் யோவான் 3:16ம் தேவனுடைய வார்த்தை அல்ல. பின் ஏன் நீங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சிலவற்றை விட்டு விடுகின்றீர்கள்? எல்லா தேவனுடைய வார்த்தைகளும் சத்தியமாயிருக்கின்றன ஆனால் வித்து மட்டுமேயுள்ள கன்னி கருப்பைக்கு அது வர வேண்டியதா யுள்ளது. நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது இன்னும் கவனமாக கேளுங்கள். 328அந்த வேசியானவள் தங்களுடைய (கத்தோலிக்கர்கள்..... தமிழாக்கியோன்) ஸ்தாபனத்தின் வல்லமையினால் பாவங்களை மன்னிக்க உரிமை கொண்டாடுகிறாள் என்று நானறிவேன். ஆனால் அவர்களின் பிள்ளைகளைப் பாருங்கள்: ஒவ்வொரு நடன அரங்குகளிலும் பங்கேற்றுக் கொண்டும், மயிரைக் கத்தரித்து கோமாளிகளைப் போல் முகத்தை வர்ண்ம் அடித்துக்கொண்டும், அவர்களின் ஆண்கள் வேறொவரின் மனைவியுடன் வாழ்ந்து கொண்டும், வீதிகளில் விபச்சாரம் செய்து கொண்டும், கலப்பு குளியல் (Mixed bathing) போன்ற இன்னும் அநேகக் காரியங்களைச்செய்து கொண்டும் காணப்படுகின்றார்கள். நிச்சயமாக அவர்கள், பாவங்களைத் தங்கள் சொந்த வழியில் மன்னிப்பார்கள். ஆனால் அவர்களுடைய கனிகள் அவர்களை யாரென்று வெளிப்படுத்துகின்றது. அது அவர்களுக்கு சாத்தியமல்ல. இல்லை, ஐயா. அவர்கள் என்ன செய்கின்றனர். அவர்கள் குட்டைக் கால் சட்டை அணிந்து, தங்கள் தலைமயிரைக் கத்தரித்து முகத்திற்கு வர்ணம் பூசிக் கொள்கின்றனர். ''அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்“ என்று இயேசு கூறினார். அத்தகைய வித்துகள் தாம் அவர்கள். ஸ்தாபனத்தின் வித்து ஸ்தாபனத்தின் மன்னிப்பைக் கொடுக்கின்றது. நான் கூறுவது சரியான வார்த்தை. தேவன், “வார்த்தை தன்னுடைய ஜாதியைப் பிறப்பிக்கட்டும்” என்றார். அதுதான் காரியம். ஓ, சகோதரனே, தேவ வசனம் சத்தியமாயிருக்கிறது. நீ அதை விசுவாசிக்கிறாயா? 329முன் குறிக்கப்பட்ட சபை தன்னிடம் உள்ள வரத்தை உரிமைக் கொண்டாடுவதை ஆவியானவர் சாட்சி பகருகிறார். அது என்ன? வார்த்தைக்கு நீர் பாய்ச்சி, ஒவ்வொரு வார்த்தையையும் “ஆமென்” என்ற விதமாக்குகிறார். வார்த்தை, “மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்'', என்றும், ”மற்ற காரியங்களெல்லாவற்றையும் இவ்விதமாக செய்“ என்றும் கூறுமானால், மணவாட்டி, ”ஆமென்', “ஆமென்' என்று கூறுவாள். பாருங்கள். அவள் ஒவ்வொரு வேத வார்த்தையையும் ஆமோதிப்பாள். தேவன் தம்முடைய முன் குறிக்கப்பட்ட வரத்தை வரச்செய்து, பாவங்களை மன்னிக்க செய்கிறார், ஆனால் அது ஆவியினால் நிரப்பப்பட்ட வார்த்தை சரீரத்திற்கு கொடுக்கப்பட்டதாயிருக்கிறது. ஏனெனில் வார்த்தை மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், வார்த்தையே தேவனாயிருக்கிறது. 330பரிசேயர்கள் இவ்விஷயத்தைக் குறித்து எவ்வளவு பொருத்தமாயிருந்தார்கள். பரிசேயர்களைக் குறித்து பின்பு நான் பேசுவேன் என்று இன்று காலை உங்களுக்கு குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இப்பொழுது நான் அதைக் குறித்து பேசுகிறேன். பரிசேயர், 'தேவ தூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களைமன்னிக்கத்தக்கவர் யார்? இவன் பாவங்களை மன்னிக்கிறானே?“ என்று தங்களுக்குள் யோசனைப் பண்ணினார்கள். இயேசு வார்த்தையாயிருந்தார் என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள். வார்த்தை பாவங்களை மன்னிக்கிறது. ஏனெனில் அது தேவனாயிருக்கிறது. யார் இத்தகைய வரத்தை அடைவார்கள் என்று தேவன் தம்முடைய முன் குறிப்பில் அறிந்திருக்கிறார். யார் அவ்விதம் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் வார்த்தையோடும் ஆவியோடும் வார்த்தையினால் நிரூபிக்கப்படுவார்கள். அது விளக்கமாயிருக்கிறதா? அநேகர் அது வேதக்கல்வியினாலும், படிப்பறிவினாலும் பட்டங்கள் பெறுவதாலும் வருகிறது என்று உன்னை நம்பச் செய்வார்கள்; நீ அவ்விதம்; ஒரு கண்காணியாகவோ, போப்பாகவோ, அல்லது ஒரு கத்தோலிக்க அதிகாரியாகவோ (அங்கிருந்துதான் அவை வருகின்றன என்று அநேகர் நம்பச்செய்வார்கள்) ஆவதற்காகப் படித்து, மனிதன் தன் கரங்களை உன் மேல் வைத்து உன்னை ஏதோ ஒன்றாக்கி, எதையாகிலும் செய்யச் சொல்வார்களானால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகி விட்டார்கள் என்று அர்த்தம். 331“தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே'' என்று ரோமர் 11:29ல் கூறப் பட்டுள்ளது, தேவன் அதைக் கொடுக்கிற வராயிருக்கிறார். நீங்கள் இதைக் குறித்துக்கொள்ள விரும்பினால், கூர்ந்து கவனியுங்கள்,-யோவான் 15:16லும் அவர் எவ்விதமாகக் கூறியிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். இயேசு தம்முடைய நாளில், ஸ்தாபனங்களினின்று எவ்வளவு வித்தியாசப்பட்டவராயிருந்தார்! இதை சிறிது நேரம் பேச நான் விரும்புகிறேன். வ்யூ. அவர்கள் அவருடைய முதுகுக்குப் பின்னால் சுட்டிக்காட்டினார்கள், ”நாங்கள் மோசேயின் சீஷர், மோசேக்கு தேவன் எரிகிற முட்செடியில் தரிசனமானார் என்று நாங்கள் அறிவோம்“ என்று கூறினார்கள். அது உண்மைதான். அவர்கள் சரித்திர வாயிலான மோசேயை அறிந்திருந்தார்கள், ஆனால் மோசேயின் தேவனை அறிந்திருக்கவில்லை. ஏனெனில் அவர் அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டு, ”ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன். எரிகிற முட்செடி நானே'' என்று கூறினார். அவர்கள் மோசேயின் வரலாற்றை அறிந்திருந்தனர். . அதுபோல் தான் இன்றும் உள்ளது. அவர்கள் வார்த்தையாகிய கிறிஸ்து தங்களுக்குத் தெரியும் என்று உரிமை பாராட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் கிறிஸ்துவிலிருக்கும் தேவனை அறிந்து கொள்ளவில்லை. நெருப்பை வர்ணம் தீட்டி, அதினின்று யார் அனலைப் பெறமுடியும்?—-வேதப் பள்ளிகளின் அனுபவம் அது தான். அவர்கள் மோசேயை அறிந்திருந்தார்கள்; அவனுடைய தேவனையோ அறிந்திருக்கவில்லை. 332இயேசுவால் 'ஆமென்!' என்று கூற முடிந்தது! இதை கவனியுங்கள் சகோதரரே. வ்யூ. ஓ! தாவீது தன் கவணை சுழற்றியது போன்ற உணர்ச்சி எனக்கு இப்பொழுது ஏற்படுகிறது நண்பர்களே, நான் பரிசுத்தக் குலைச்சலாய் உங்களுக்கு காணப்படமாட்டேன் என்று நம்புகிறேன். நான் சரியாக இருக்கிறேன். நல்லவிதமாகவும் உணருகிறேன். “என்னைஅனுப்பின பிதா என்னுடனே கூட இருக்கிறார், அவர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் உங்களை உலகத்தில் அனுப்புகிறேன். (அவருடைய சீஷர்களுக்கு) என்னை அனுப்பின பிதா என்னுடனே கூட இருக்கிறார், என் பிதாவினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அக்கிரியைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளாயிருக்கின்றன' என்று இயேசு கூறினார். அல்லேலூயா! ஓ, சபையே, நீ எங்கேயிருக்கிறாய்? இயேசு சொன்னார். அவர்கள் ஒ, தேவன் இவைகளை யெல்லாம் செய்தார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் அது இன்றைய காலத்திற்கு இல்லை” என்று அவர்கள் கூறுகிறார்கள். இயேசுவும் அதையே கூறினார்...“தேவன் மோசேயோடே இருந்தார் என்று நாங்கள் அறிவோம்.” “என்னுடனே கூட இருக்கிற தேவன் எனக்குள் இருக்கிறார், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை யென்றால் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளையாவது விசுவாசியுங்கள். நான் என்ன செய்வேன் என்று வசனம் கூறுகிறதோ அதன்படி நான் செய்யாதிருந்தால் என்னை விசுவாசியா தேயுங்கள்” என்று இயேசு கூறினார். 333நான் பிரசங்கிக்கிற செய்தியைக் குறித்து, அது பரிசுத்த குலைச்சலாயில்லை என்று நான் பிரசங்கிக்க அனுமதியுங்கள். இது சத்தியம் என்று தேவன் நிரூபிக்காவிடில் அது சத்தியமாயிராது. ஆனால் கூறுவதை தேவ வார்த்தை நிரூபிக்குமானால் வார்த்தையை விசுவாசியுங்கள்! வேத வார்த்தைகள் தாம், நான் சத்தியத்தைச் சொல்லுகிறேனோ இல்லையா என்று சாட்சியிடுகின்றன. அவைகள் தான் சாட்சிகளாயிருக்கின்றன. அவைகளே அவர் எனக்களித்த என்னுடைய ஊழியத்தின் சாட்சிகளாயிருக்கின்றன. கடைசி நாட்களில் அது வரும் என்று அவர் வாக்குத்தத்தம் செய் திருக்கிறார். இதோ அது இருக்கிறது! அவர் எதைச் சொன்னாரோ அதைச் செய்வார். அதுதான் இன்று சம்பவித்துக் கொண்டிருக்கின்றது; அதனூடாக இப்பொழுது நாம் சென்று கொண்டிருக்கிறோம்! அது சத்தியமா இல்லையா என்று நீங்கள் பாருங்கள். தேவனே சாட்சி பகர்வாராக. நான் சொல்கிற கிரியைகளும் நான் பிரசங்கிக்கிறவைகளும் சத்தியம் தான் என்று தேவன் சாட்சி பகராவிட்டால் அது சத்தியமாயிராது; ஆனால் வார்த்தையானது அதை உரைத்து அவ்வண்ணமே அது இங்கு நிகழ்ந்து கொண்டிருந்தால், பின் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 334இயேசு,“நான் உங்களை அறிவேன்; நீங்கள் மோசேயை அறிந்துள்ளதாக நினைக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள் - நீங்கள் மோசேயின் சரித்திரத்தை அறிந்திருக்கலாம். ஆனால் அவனுடைய தேவனை அறியீர்கள். ஏனெனில் நான் மோசேயிற்கு முன்னமே இருந்தேன். மோசேயுடன் பேசினவர் நானே. நான் இருக்கிறவராக இருக்கிறேன்; நான் தான் வார்த்தை,” என்றார். அவர்களால் அதைக் காண முடியவில்லை. ஏனெனில் அவர்கள், அவர்களுடைய பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருந்தார்கள். அவர்களுடைய ஸ்தாபனம் அதைக் காண அவர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் வார்த்தை தொடர்ந்து செல்வதை அதனால் நிறுத்த முடியவில்லை, வார்த்தை பலபேர் மேல் விழுந்து அந்த சந்ததியின் ஒரு மணவாட்டியைத் தெரிந்தெடுத்தது. 335சரி, அது எவ்வளவு வித்தியாசமாயுள்ளது. அக்கினி சித்திரம். இயேசு, “என்னை அனுப்பிய பிதா என்னுடன் இருக்கிறார் - நான் செய்கின்ற கிரியைகள் சாட்சியளிக்கின்றன. ஏனெனில் நான் என்ன செய்ய வேண்டுமென்று வேதவசனங்கள் கூறினவோ அவைகளையே நான் செய்கிறேன்,”என்றார். யூதர்கள் தங்களுடைய சரித்திரப் பிரகாரமான தேவனை அறிந்திருந்தார்கள்; இன்னும் அவ்விதமே. ஆம். அவர்கள் ஏன் சரித்திரப் பிரகாரமான தேவனை அறிந்திருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் சரித்திரப் பிரகாரமான விதையைக் கொண்டிருந்ததால் தான்! அவரை ஏன் அவர்கள் ஏற்று கொள்ளவில்லை? ஸ்தாபனத்தோடு தங்களைக் கலப்பினமாக்கின காரணத்தினால் தான். இயேசு தம்மை அனுப்பினவர் யார் என்று அறிந்திருந்தார், ஏனெனில் அவரை அனுப்பினவர் அவருக்குள் இருந்தார். எந்தவித ஸ்தாபன கட்டுபாடும் அவரில் காணப்படவில்லை. ஆமென்! ஓ, சகோதரனே. அவர் எந்த வேதப் பள்ளியில் படித்தார் என்று எனக்குக் கூறுங்கள்?“ இவனுக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்தது?” “இவனுக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்தது?” என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களால் அவர் படித்த அத்தகைய பள்ளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் பன்னிரண்டாம் வயதில் அவர் சதுசேயரோடும், பரிசேயரோடும், வேதப்பாரகரோடும் வேதத்தைக் குறித்து விவாதம் செய்து அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். ஓ, அது நிறைவேறின ஒன்று. 336ஒரு சிறுவன் தானே என்று அவர்கள் அலட்சியம் செய்ய வில்லை, ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருந்தது. அதன் முன்பாக அவர்களால் நிற்க முடியவில்லை. அவருடைய உபதேசத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியமடைந்ததில் வியப்பில்லை. அதை எப்பொழுதாவது படித்திருக்கிறீர்களா? அது மாற்கு 1:22ல் இருக்கிறது, 'அவர் வேதபாரகரைப் போல் போதியாமல், அதிகாரமுடைய ஒருவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.“ அவர் எதைப் பேசினாரோ, அதைக் குறித்து அறிந்திருந்தார். பாருங்கள்? இன்றுள்ள சபையானது இரட்டிப்பான ஆவியைப் பெற்றதாயிருக்க வேண்டும். அது உண்மையாயிருக்கிறது. ஏனெனில் எலியாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்தது போன்று (இரண்டு மடங்கு) இயேசு கிறிஸ்துவிலிருந்து நமக்கு வரவேண்டியதாயுள்ளது. ஒரு வேளை நீங்கள், “ஓ , சகோ. பிரன்ஹாமே, நீங்கள் இயேசுவின் சபையைக் குறித்துப் பேசுகிறீர்கள்” என்று கூறலாம். அது உண்மை . அது அவருடைய சரீரமாயிருக்கிறது,என்னுடைய மனைவி என்னுடைய பாகமாயிருக்கவில்லையா? அவ்விதமே உன்னுடைய மனைவி உன்னுடைய பாகமாயிருக்கவில்லையா? உன்னுடைய மாம்சத்தில் மாம்சமும், எலும்பில் எலும்புமாக பரிசுத்த விவாகத்தில் இணைக்கப்பட்டாளே. அது சரியா? அதன் காரணமாகத் தான் ஒரு கிறிஸ்தவன் ஒரு வேசியை விவாகம் செய்யக் கூடாது, பாருங்கள். பாருங்கள்? அது சரியானதல்ல. இல்லை, ஐயா, அது தேவனுடைய எல்லாவற்றையும் முறித்துவிடும்.' 337“ஓ, சகோ, பிரான்ஹாமே, சற்று இருங்கள்; கிறிஸ்துவின் ஆவி அதன் மேல்....என்று பேசுகிறீர்களே.....''வேதம் அவ்விதம் கூறுகிறது. அது உண்மையா? ஏசாயா 9:6ல், ”நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர்.....'என்ன?' (தோளின் மேலிருக்கும் என்று சபையார் கூறுகின்றனர்) அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்“ தோள் அவருடைய சரீரத்தின் ஒரு அங்கமா யிருக்கிறது. அது அவருடைய சரீரம். சரி தானா? அவருடைய தோள்கள் அவருடைய சரீரமாயிருக்கிறது. இப்பூமியின் மேல் ராஜாங்கம் எங்கேயிருக்கிறது? அவருடைய சரீரத்தில். பரிசுத்தவான்கள் பூமியை நியாயம் விசாரிப்பார்கள். அது உண்மையா? “உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால் வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல் அநீதிக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?”என்று பவுல் கூறினான். அது உண்மை . பாருங்கள்? பரிசுத்தவான்கள் பூமியை நியாயம் தீர்ப்பார்கள். அவருடைய கர்த்தத்துவம் எங்கேயுள்ளது? அவருடைய தோள்களின் மேல்-அவருடைய சரீரம். கர்த்தத்துவம் அவருடைய தோள்களின் மேல் இருக்கும், ஏனெனில் அது அவருடைய சரீரத்தின் பாகமாயுள்ளது. அது என்ன? தேவனு டைய பூமிக்குரிய வல்லமையானது இப்பூமியில், வார்த்தையானது மாம்சமான அவருடைய சரீரத்தில் இருக்கிறது, அது நிறைவேறுதலை கொண்டு வருகிறது. மோசஸ்..... 338இங்கு கவனியுங்கள். தேவனுடைய தூதர்கள் எப்பொழுதும் புறம்பாக்கப்பட்டவர்களாயிருந்தனர். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மோசே புறம்பாக்கப்பட்டான், அது உண்மையா? இயேசுவும் புறம்பாக்கப்பட்டார். லூக்கா: 10:16ல் (நீங்கள் அதைக் குறித்துக் கொள்ளவிரும்பினால், சரி) அதைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. 1 சாமு 8:7ல் தேவனுடைய செய்தி புறம்பாக்கப்பட்டது. தேவன் சாமுவேல் என்ற ஒரு தீர்க்கதரிசியைத் தூதனாகக் கொண்டிருந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவனையும் அவன் செய்தியையும் ஜனங்கள் தள்ளினார்கள். அதற்கு பதிலாக அவர்கள் உலகத்தை தெரிந்து கொண்டார்கள். இது தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது, இதை சொல்லலாமா கூடாதா என்று எனக்குத் தெரியவில்லை.இது தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது. தேவனுடைய பிரமாணம், நிரூபிக்கப்பட்ட ஊழியக்காரனை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இங்கு ஒரு வசனத்தை படிக்கவிரும்புகிறேன். யோவான் 13:20ல் அதை சற்று பார்ப்போம். இங்கு நான் ஒன்றை எழுதி வைத்துள்ளேன். அது இப்பொழுதுதான் என் சிந்தையில் தோன்றினது. ஓ... நாம் இங்குள்ளோம். 'நான் அனுப்புகிறவனை ஏற்று கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.“ நிரூபிக்கப்பட்ட ஒரு ஊழியக்காரன், ஓ , சகோதரனே, ஆயிரக்கணக்கான பிரசங்கங்கள் இங்கே இப்பொழுது உள்ளன. அது உண்மை . ஓ, அது தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது; அதை பெற்றுகொள். 339சாமுவேல் தீர்க்கதரிசி அவர்களிடம் வந்து, “உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். கர்த்தருடைய நாமத்தினால் நான் உங்களுக்கு சொன்ன ஏதாகிலும் நிறைவேறாமல் போனதா?” என்றான். அவர்கள், “இல்லை” என்றார்கள். “நான் எப்பொழுதாவது உங்களுடைய காணிக்கைகளை எடுத்து பெரிய கட்டிடங்களை கட்டி எனக்கு மகிமையைத் தேடினதுண்டா ?”, என்றான். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். நான் கூறின தேவ வார்த்தைக்கு தேவன் பதிலளித்து நிரூபித்திருக்கிறாரா? என்றான். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். பின்பு சாமுவேல், “நல்லது, பின் ஏன் எனக்கு செவி கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்?” என்றான். 340இயேசு பரிசேயரைப் பார்த்து......“நீ விபச்சாரத்தில் பிறந்தவன் என்று நாங்கள் அறிவோம்.” “என்னில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? தேவனுடைய வார்த்தையை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று பார்க்கலாம். தேவன் அதை உங்களில் நிரூபிக்கிறாரா இல்லையா பாருங்கள். நான் என்னைக் குறித்து பேசுவேனானால் பொய்யனாய் இருப்பேன்; ஆனால் நான் தேவனைக் குறித்துப் பேசி, பின் தேவன் என் மூலமாக வார்த்தையைப் பேசுவாரென்றால், அதுவே உண்மையாயிருக்கும். ஆகவே தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பது நானா அல்லது நீங்களா” என்றார். ஆ! இயேசு,“நான் அனுப்பிகிற உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். இப்பொழுது, அவர் அனுப்புகின்ற அவர்கள்....” என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் என்னை அனுப்பிய பிதாவை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்,“ என்றார். இதிலே நிலைத்திருக்க நமக்கு நேரம் கிடைக்குமானால்..... 341தேவனுக்கு உங்களால் ஊழியம் செய்யமுடியும்...தேவன் அனுப்புகின்ற அவருடைய ஊழியக்காரரை நீங்கள் விசுவாசிப்பதனாலேயே, நீங்கள் தேவனுக்கு சேவை செய்ய முடியும். தேவன் தம்முடைய ஊழியக்காரர்களை இப்பூமிக்கு திவ்விய ஆலோசனையோடு வார்த்தையை வியாக்கியானப்படுத்த உன்னிடம் அனுப்பும் போது, அவர்களை நீ ஏற்று கொள்வதே நீ தேவனுக்கு செய்யும் சரியான ஆராதனை (பாருங்கள்?) நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? அதைக் குறித்ததான சில வேதாகம வசனங்களைக் குறித்துக் கொள்கிறீர்களா? 1கொரி 4:16ல் பவுல், “என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்'' என்றான். 1 கொ. 11:1ல் @@ ”நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்று கிறவர்களாயிருங்கள்“ என்றான். சரி. இப்பொழுது லூக்கா 10:16ம் வசனத்தைப் படிப்போம். லூக்கா10:16ல் இயேசு இங்கே என்ன கூறினார் என்று நாம் பார்ப்போம். லூக்கா10:16 - இதோ நாம் அதை.... இதோ, இது இங்கே என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம். அதை அவர்கள் குறித்துக்கொண்டிருக்கையில்-அது 1 கொரி 14:16 மற்றும் 11:1ல்-நாம் இப்பொழுது இதைப் படிப்போம். நான் லூக்கா 10:16ஐ படிப்பேன். சரி. அதில் இயேசு, சீஷரை நோக்கி:@@ ”உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான். உங்களை அசட்டை பண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான், என்னை அசட்டை பண்ணு கிறவன், என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்“ என்றார். இவ்வசனங்கள் தேவன் தம்முடைய செய்தியை தமது ஊழியக்காரர்களின் மூலம் பேசுகிறார்என்பதை நிரூபிக்கின்றன. எப்பொழுதும் அவ்விதமே செய்கிறார். அது உண்மை . 342விசுவாசிக்கும் சபையின் வல்லமை என்பது: கிறிஸ்து வானத் திலும் பூமியிலும் எல்லா அதிகாரங்களையும் உடையவராயிருக்கிறார் என்பதே. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?அப்படியானால் அவர் உங்களில் இருப்பாரென்றால் என்னவாயிருக்கும்? கிறிஸ்துவுக்கு எல்லா வல்லமையும் உண்டா ? மத் 28:18ஐ வாசித்துப்பாருங்கள். அது உண்மை . அவரேவார்த்தை....விதையாய் தம்முடைய சரீரத்தில் இருக்கிறார், அவர் நம்மில் இருப்பது என்பது நம்மில் வார்த்தை—-விதையாய் உருவாகிறார் என்பதாகும். தேவன் என்னப்படுவதெல்லாம் கிறிஸ்துவில் ஊற்றப்பட்டது, கிறிஸ்து எனப்படுவதெல்லாம் சபைக்குள்ளே ஊற்றப்பட்டது; அதுவே வல்லமையாயிருக்கிறது. 343இப்பொழுது கவனியுங்கள்! தேவனுடைய பிரதியுற்பத்தியை ஞாபகம் கொள்ளுங்கள். அதன் தன் ஜாதியின்படி அதை செய்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மையா? கிறிஸ்துவாகிய வார்த்தை வித்து, அவருடைய சரீரத்தின் மூலமாய் வர வேண்டியதாயிருக்கிறது. (ஒ, நீங்கள் களைப்படைந்து கொண்டிருக்கிறீர்களா? சரி. இன்னும் சில நிமிடத்தில் நாம் அமைதலாயிருந்து ஜெபிப்போம்) இது சற்று ஆழமாக பதிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உங்கள் உள்ளூரச் சென்று பணி தீர்க்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் வித்து நிச்சயமாக (நி-ச்-ச-ய-மா-க) அவருடைய சரீரத்தின் மூலமாக வரவேண்டியதாயிருக்கிறது—-ஸ்தாபனத்தின் மூலமாயல்ல, ஆனால் வார்த்தை வித்தின் மூலமாக, மறுபிறப்படைந்த சரீரத்தின் மூலமாகவே வர வேண்டியதாயிருக்கிறது. நினைவில் கொள்ளுங்கள். அது என்ன? கிறிஸ்துவின் வித்து......என்னுடைய வித்து எங்கிருந்து வருகிறது? என்னுடைய சரீரத்தின் மூலமாகவே. ஒரு ஆப்பிள் மரத்தின் வித்து எவ்விதமாய் வருகிறது? அதனுடைய சரீரத்தின் மூலமாகவே. ஆகவே வித்து சரீரத்தின் மூலமாய் வருகிறதாயிருக்கிறது? சபையானது கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. அது உண்மையா? இந்த வேதாகம சபை தன் சரீரத்தில் அவரை உற்பத்தி செய்கிறது (மறுபிறப்பு). அவருடைய சபை அவருடைய வார்த்தையாகவே யிருப்பதினால் ஜனங்கள் எபி: 13:8ல் கூறப்பட்டபடி @@“இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''என்பதின் நிறைவேறுதலைக் காண்பார்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவர்கள் இப்பொழுது ஸ்தாபனத்தின் கலப்பினங்களாய் இல்லை. இவர்கள் அங்கு நிறைவேறுதலின்எண்ணுதலுக்காக (count down) எடுத்துக் கொள்ளப்படுதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஸ்தாபனக் கலப்பல்ல. இங்கு நிற்பவர்கள் அவர்களல்ல. மகிமை! இவர்கள் வித்தாயிருக்கிறார்கள். இல்லை. ஐயா. 344பவுல்,தான் ஏதாவது மிகப்பெரிய வார்த்தைகளை (அவனுடைய சில வேதக் கல்வியறிவு) கூறக்கூடும், அதை ஜனங்கள் கவனித்து விடுவார்களோ என்று பயந்திருந்தான். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் ( கொ. 2:1.8ஐ குறித்துக் கொள்ளுங்கள், அதில் பவுல், “அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய (வேத பள்ளியின்) ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், எளிமையுள்ளதாயிருந்து, ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயும், உங்கள் விசுவாசம் தேவ வார்த்தையில் இளைப்பாறத்தக்கதாகவும் இருந்தது” என்று கூறினான். ஆம் ஐயா! 345மணவாட்டி சபையில் ஒரு பிள்ளை பிறந்தால், ஸ்தாபன சபைகளில் ஆயிரம் பிள்ளைகள் என்ற விதமாக, அங்கத்தினர்களால் மணவாட்டி சபையை ஸ்தாபன சபை மிஞ்சுவதாயிருக்கிறது....அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்விதம் போதிக்கிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது அவ்விதம் இருக்கும் என அவர் வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார். சரி. ஏசாயா: 54:1ல் அதைக் குறித்து கூறியிருப்பதைப் படிப்போம். நான் அதைப் படிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? சரி. நாம் அந்தப் பகுதிக்குக் செல்வோம். அவர்கள் இவ்விதமாக மிஞ்சுவதா யிருப்பார்கள் என்பதை அவர் எங்கே வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று நீங்கள் காண விரும்பினால் அது ஏசாயா 54:1-ல் “பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; கர்ப்ப வேதனைப்படாதவளே, கெம்பீரமாய் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும். அநாதை ஸ்திரியினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்” அது உண்மையா? விவாகம் செய்யப்பட்ட மனைவியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் வேசியின் பிள்ளைகள் எண்ணிக்கையில் அதிகமாயிருக்கின்றனர். அவர்கள் நம்மைவிட அதிகமாயிருப்பார்கள். அவர்கள் அநேகம் பிள்ளையாயிருந்தாலும் அவர்களுக்கு உண்மையான தகப்பன் இல்லை! இந்த ஸ்தாபன ஜாதி தனிப்பட்ட விதமான சபையென்று யூதா: 8.13 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. “இவர்கள் காற்றுகளால் அலையுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டு தரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்.' பெந்தெகொஸ்தே ஸ்தாபன ஜாதியினர் II தீமோ: 3:1-8ல் கூறப்பட்டுள்ளனர். ”தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு“ (5ம் வசனம்) அவர்களுடைய வித்து அவர்களுடைய ஜாதியைப் பிறப்பித்து விட்டது. 346இந்த எத்தியோப்பிய மந்திரியைக் குறித்து கவனியுங்கள்...ஓ இங்கே, நாம் சில ஆழமான காரியங்களை இப்பொழுது காணப் போகிறோம். உண்மையான வித்தையுடைய உண்மையான சபையை, வித்து சபையை இப்பொழுது கவனியுங்கள். கவனியுங்கள், இந்த எத்தியோப்பிய மந்திரி எல்லாவித D.D பட்டயங்களையுமுடையனாயிருந்தான். தேவன் தமது சுவிசேஷத்தை ஒரு போதும் ஒரு தேவ தூதனுக்கு ஒப்படைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? @@ “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது. வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்''என்று கலா: 1:8ல் கூறப்பட்டிருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே ஒரு வான தூதனும் வார்த்தையினின்று வித்தியாசப்பட்டிருந்தால் அவன் தவறானவனாகும். தேவன் தேவ தூதருக்கும் கீழாக வந்து சுவிசேஷத்தை அவருடைய குமாரர்களான மனிதனிடம் ஒப்படைத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, கவனியுங்கள். அவர் அதை ஒரு போதும் தூதரிடம் ஒப்புக் கொடுக்கவில்லை. கவனியுங்கள், அவர் அதைச் செய்யவில்லை. 347பிலிப்பு பெந்தெகொஸ்தே பண்டிகைக்கென எருசலேமில் பணிந்துக் கொள்ள சென்றிருந்தான். எத்தனைபேர் “ஆமென்” என்பீர்கள்? அந்த எத்தியோப்பியனான (ஆங்கிலத்தில் அண்ணகன் என்று எழுதியிருக்கிறது......தமிழாக்கியோன்) மந்திரி, எருசலேமிலிருந்த எல்லா பட்டம் பெற்ற மேதாவிகளோடும் தேவனைத் தொழுது கொண்டான். ஆனால் ஏன் அவன் ஒன்றையும் பெற்று கொள்ள முடியாமல் திரும்பி வந்து ஏசாயாவின் தீர்க்கதரிசன ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்? ஒரு தூதன் பிலிப்புவை அங்கு போகும்படி வழி நடத்தியிருந் தாலும், ஜீவனின் வித்து பிலிப்புவின் சரீரத்தினின்று வர வேண்டியிருந்தது. ஓ சகோதரனே, நாம் இப்பொழுது அந்த வரிசையில் இருக்கிறோம் ! ஜீவ வித்து எங்கிருந்து வருகிறதாயிருக்கிறது? ஒரு வான தூதனின் மூலமாகவா? ஒரு வானத் தூதன் எங்கு போக வேண்டும் என்று அவனுக்கு வழிக்காட்டி ஊழியஞ் செய்தான். ஒருவான தூதன் செய்தியைக் கொண்டு வருகிறவனாயிருக்கிறான்; ஆனால் பிலிப்புவோ குமாரனாயிருக்கிறான். பிலிப்பு ஜீவ விதையாகிய வார்த்தையென்னும் செய்தியைக் கொண்டிருந்தான், அந்த விதமாகத்தான் ஒரு பிள்ளை பிறக்க முடியும். பிலிப்பு தன் கரங்களை அவன் மேல் வைத்து அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். அப்பொழுது அங்கு பரிசுத்த ஆவியானவர் வந்தார். நிச்சயமாக. ஜீவ வித்து சரீரத்தினின்று வர வேண்டியதாயிருந்தது. என்ன சரீரம்? கிறிஸ்துவின் சரீரம். உண்மை. பிலிப்பு அந்த சரீரத்தின் ஒரு அங்கமாயிருந்தான். 348கவனியுங்கள். அப்போஸ்தலர் 10:48லும் இதே காரியம் தான் நடந்தது. பேதுரு மேல் வீட்டில் இருந்தான். அப்பொழுது ஒரு தூதன் அவனைக் கொர்நேலியுவின் வீட்டிற்கு வழி நடத்தினான். ஆனால் வார்த்தை எங்கிருந்து வந்தது? பேதுருவின் சரீரத்தினின்று. ஓ,நான் இப்பொழுது நல்லவிதமாக உணருகிறேன் பறப்பதைப் போல. ஒரு தூதன் அவனிடம்,“தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்றும், “ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களுடனே கூடப்போ ” என்றார். அங்கு சென்று பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தபோது....ஒரு தேவ தூதன் அல்ல, ஒரு கத்தோலிக்க மத குருமார்கள் அல்ல (Cardinal)...பேதுரு பேசிக் கொண்டிருந்த போது என்ன சம்பவித்தது? அவன் வார்த்தை தங்கியிருந்த சரீரமாயிருந்தான். வார்த்தை பற்றிக்கொண்டது. ஓ, சகோதரனே. வ்யூ! ஊம். ஓ, என்னே! தூதன் நடத்தினான், ஆனால் ஓ,சகோதரனே! ஜீவன் கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாய் வருகிறதாயிருக்கிறது. 349தமஸ்குவிற்கு போகிற வழியிலே பவுல் ஒரு தரிசனத்தின் மூலம் வழி நடத்தப்பட்டான்; ஆனால் அனனியா ஜீவ வித்து இவனிடமிருந்தது, வார்த்தையை உடையவனாயிருந்தான். ஆமென்!“ அங்கே சென்று அவன் மேல் உன் கைகளை வை” என்ற ஒரு தரிசனத்தை அனனியா என்னும் தீர்க்கதரிசி கண்டான். “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர்'' என்று கூறினான். அவன் அதை எவ்விதம் அறிந்தான்? அவனிடம் வார்த்தை இருந்தது. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறதாயிருக்கிறது. அவன் அங்கு சென்று,தீர்க்கதரிசனம் உரைத்து, ”நீ பார்வையடையும் டிக்கும், பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படிக்கும் அவர் என்னை அனுப்பினார், பார்வையடைவாயாக!“ என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தன. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றான். பின்பு இக்காரியங்களை பற்றி ஆராய அரபு தேசத்திற்குச் சென்றான். தேவ தூதன் வழி நடத்தினான். அது உண்மை. ஆனால் பவுலுக்காக் கிரியை செய்ய ஒரு வார்த்தை வித்து இருந்தது. நித்திய ஜீவனைக் கொடுக்க வித்தானது தேவனுடைய ஆவியை எடுக்க வேண்டியதாயுள்ளது. வ்யூ. என்னே. 350இப்பொழுது இன்னும் இரண்டு மணி...நான் அதை அறிந்துள்ளேன். நான் சிலவற்றை படிப்பேன். நான் பத்து நிமிடங்களுக்கு அதைப் படிக்கட்டும், சரியா? நான் இதிலே சிறிது நேரம் தரித்திருக்க வேண்டுமென்ற ஓர் நல்லெண்ணம் பெற்றிருந்தேன். ஆனால் நாம் தொடர்ந்து செல்வோம்-நமக்கு நேரம் கடந்துவிட்டது. இப்பொழுது ஐந்து மணிக்கு இருபத்தைந்து நிமிடங்கள் உள்ளன. ஜார்ஜியாவில் இப்பொழுது என்ன நேரம் என்பதை நான் அறியேன். நான் சிறிது நிறுத்தி இதைக் குறித்து சிறிது வியாக்கானம் அளிக்க வேண்டும் என்று விரும்பினேன்-ஆனால் நான் இதை மிகவும் மெதுவாகப் படிப்பேன். 351இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான், ஆவியானவர் என் எழுதுகோலை எடுத்து எழுதச் சொன்னதை உங்களுக்கு மிகவும் மெதுவாக படிக்கப்போகிறேன். நண்பர்களே, ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்து ஒரு உண்மையான சபையை அடைய நான் ஏன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களால் காணமுடிகிறதா? அது ஏன் வார்த்தை மூலமாக வரவேண்டும் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? மனித ஞானத்தினால் ஒரு போதும் அது வர முடியாது; தேவ வார்த்தை யினால் மட்டுமே வரமுடியும், அதன் காரணமாகத் தான் நான் எழுதப்பட்ட வார்த்தையை அதன் வழியின் படியே விசுவாசிக் கிறேன். அதனோடு ஒன்றையும் சேர்க்காமல் ஒன்றையும் கூட்டாமல் அது இருக்கிற வண்ணமாகவே அதை பிரசங்கித்துக் கொண்டு செல்லுகிறேன். சகோதரர்களே (ஒலிப்பதிவு செய்பவர்கள்) நீங்கள் என்னோடு ஒவ்வாமலிருந்தால், நான் உங்களுக்காக ஜெபம் செய்வேன்; நான் தவறாயிருப்பேனென்றால், நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள். நான் இப்பொழுது படிக்கப் போகிறதை மிகவும் நெருக்கமாக கவனியுங்கள். ஆவியானவர் என்னோடு பேசி, “உன் எழுது கோலை எடுத்துக்கொள்'' என்று கூறினார். நான் என் பிரசங்கத்தின் சிலவற்றை இப்பொழுது விட வேண்டிவனாயிருக்கிறேன், ஆனால் சிலவற்றைக் கட்டாயமாக இங்கு கொடுக்க வெண்டியவனாக இருக்கின்றேன். 352சரி. இப்பொழுது, இதைத்தான் நான் உங்களுக்கு கூற முயற்சிக்கிறேன். பிரதியுற்பத்தியின் பிரமாணமானது தங்கள் தங்கள் ஜாதியை பிறப்பிக்கிறதாயிருக்கிறது (ஆதி 1:11). இந்த கடைசி நாட்களில், உண்மையான மணவாட்டி சபையானவள் தலைக் கல்லினிடத்திற்கு நெருங்குவாள். அவள் அவ்விதம் அந்த மகத்துவமான தலைக்கல்லை நெருங்கும் போது ஒரு விசேஷமான சபையாயும், விசேஷமான ஜாதியாயும் இருப்பாள். அவரோடு அவள் இணைக்கப்படத்தக்கதாய் அவரைப் போலவே அவருடைய சாயலைப் பெற்றிருப்பாள். அவர்களிருவரும் ஒன்றாயிருப்பார்கள். ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாய் அவர்களிருப்பார்கள். ஸ்தாபனங்கள் இதை ஒரு போதும் உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் கொள்கைகளோடும் கோட்பாடு களோடும் தேவனுடைய வார்த்தையைக் கலந்து ஒரு கலப்பினத்தை உற்பத்தி செய்வார்கள். 353முதலாம் குமாரன், உரைக்கப்பட்ட தேவ வார்த்தை.... விதையாயிருந்தான். அவனுக்கு ஒரு மணவாட்டி கொடுக்கப் பட்டது. (ஆவியை நான் திரும்ப பெறுகிறேன், நான் எதைக் கூறினேனோ அதை திரும்பவும் பொறுக்கி எடுக்கிறேன். பாருங்கள்?) தன்னை பிரதியுற்பத்தி செய்து கொள்ள ஒரு மணவாட்டி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவள் விழுந்து போனாள் (அவன் தன்னைப் போல இன்னுமொரு தேவ குமாரனை உற்பத்தி செய்யவே மணவாட்டி கொடுக்கப்பட்டாள். ஆனால் அவள் கலப்பினத்தினால் விழுந்து போனாள். பாருங்கள்). அவள் விழுந்து போனாள்; அதன் காரணமாக அவனும் மரித்தான். இரண்டாவது குமாரனும், உரைக்கப்பட்ட தேவ வார்த்தை.... விதையாயிருந்து, ஆதாமுக்கு ஒரு மணவாட்டி கொடுக்கப்பட்டது போன்று, இவருக்கும் ஒரு மணவாட்டி கொடுக்கப்பட்டது; ஆனால் அவர் விவாகம் செய்யும் முன்பு அவள் விழுந்து போனாள்; ஏனெனில் அவள் ஆதாமின் மணவாட்டியைப் போன்று சுயாதீனப் பிரமாணத்திற்குட்பட்டவளாய் வார்த்தையை ஏற்றுக் கொண்டு ஜீவிப்பாளா அல்லது வார்த்தையைச் சந்தேகித்து அதன் காரணமாக மரிப்பாளா என்று சோதிக்கப்பட்டாள். அவ்விதமே அவள் வார்த்தையைச் சந்தேகித்து மரித்தாள். 354பின்பு, உண்மையான வார்த்தை—- தையாகிய ஒரு சிறு கூட்டத்தினின்று தேவன் ஒரு நேசமுள்ள, கற்புள்ள மணவாட்டியை கிறிஸ்துவுக்கு கொடுப்பார். அவள் ஒரு வார்த்தை கன்னிகை யாயிருப்பாள்.....மனித கோட்பாடுகளையும், கொள்கைகளையும் அறியாத அந்த கன்னிகையான அவர்களாலும், அவர்கள் மூலமாயும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டயாவும் நிறைவேறும். தேவன் மரியாளிடம் வாக்குத்தத்தம் செய்தது போல தம்மிலே வார்த்தையாகிய வாக்குத்தத்தத்தை உடையவராய், தேவன் தாமே தம்மை வெளிப்படுத்துவார். தம்மைக் குறித்து எழுதியிருப் பவைகள் யாவையும் நிறைவேறுவதற்காக தம்முடைய சொந்த வார்த்தையாகிய வாக்குத்தத்தின் பேரில் தாமே கிரியைச் செய்வார். கன்னியின் கருப்பையினின்று (இப்பொழுதுள்ள ஆவிக்குரிய கருப்பையைப் போன்ற உதாரணம்) அவர் வந்த போது செய்த விதமாக, எழுதப்பட்ட வார்த்தையாக இருந்த போதிலும் (ஏசாயா 9:6) ஒரு தேவதூதன் மூலம் உரைக்கப்பட்டபோது, 'உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது“ என்று அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட மரியாளைப் போன்று இப்பொழுது உள்ள மணவாட்டியும் கிரியைச் செய்வாள். அவர்கள் அவரில் அன்பு கூறுவர், (அவருடையவைகளை நேசிப்பார்கள்). அவர் சபையின் தலைவராக இருந்து எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறபடியால் இவர்களும் அவருடைய தன்மைகளைப் பெற்றிருந்து, சரீரத்தின் அவயவங்கள் தலைக்குக் கட்டுப் பட்டிருக்கும் வண்ணமாக அவர்கள் தலையாகிய கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள். 355ஒரு ஒற்றுமையைக் கவனியுங்கள். பிதா முதலில் எதையாகிலும் காண்பியாமல் இயேசு தாமாக கிரியை செய்யாததுபோல (தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள ஒரு மனம்—-யோ: 5:19ஐ பார்க்கவும்) மணவாட்டியும் இருப்பாள். அவளுக்கு அவர் தம்முடைய வார்த்தையாகிய ஜீவனைக் காண்பிக்கிறார். (அவளுக்கு அவர் காண்பிக்கிறார்). அவள் அதைப் பெற்றுக்கொள்ளுகிறாள். அதைக் குறித்து அவள் ஒரு போதும் சந்தேகம் கொள்வதில்லை. ஆகையால் யாதொன்றும்—-மரணம் கூட—-அவளை சேதப்படுத்துவதில்லை; ஏனெனில் விதையானது விதைக்கப் பட்டால் தண்ணீரானது பயிரை வளரச் செய்ய வேண்டும். ஆமென். (இப்பொழுது என்னிடம் ஒரு மகத்தான அல்லேலூயா உண்டு) இங்கே தான் இரகசியம் இருக்கிறது; வார்த்தையும் கிறிஸ்துவின் மணவாட்டியினுள் இருப்பதால், வார்த்தையைக் கொண்டு அவர் என்ன செய்ய சித்தமாயிருக்கிறாரோ, அதை அவள் அவருடைய நாமத்தினாலே செய்கிறாள். கர்த்தருடைய நாமத்தினாலே செய்கிறாள். “கர்த்தர் உரைக்கிறதாவது” என்ற வார்த்தை அவளிடம் இருக்கிறது. பின்பு அது உயிர்ப்பிக்கப்பட்டு, தனது நோக்கத்தை நிறைவேற்றும் வரை அது வளர்வதற்காக பரிசுத்த ஆவி அதற்கு நீர் பாய்ச்சுகிறது. அவர்கள் அவருடைய சித்தத்தை மட்டும் செய்வார்கள். (ஆமென்! அதை நான் விசுவாசிக்கிறேன்) வித்தியாசமாக கிரியை செய்ய யாராலும் அவர்களை பலவந்தப் படுத்த முடியாது. அவர்கள் ''கர்த்தர் உரைக்கிறதாவது“ என்பதை உடையவர்களா யிருப்பார்கள்; அல்லது அமைதலாயிருப்பார்கள். அவர்கள் தேவனுடைய கிரியையைச் செய்வார்கள். ஏனெனில் அவர் இவ்வுலகத்திலிருந்த போது எல்லாக் கிரியைகளையும் முடிக்காததன் காரணத்தால், அவரே அவர்களுக்குள்ளிருந்து கிரியை செய்து முடிக்கிறார். அவர் இப்பொழுது அவர்கள் மூலமாய் நடப்பிக்கும் கிரியைகளை அவர் மாம்சத்திலிருந்தபோது நிறைவேற்றுவதற்கு அது ஏற்ற சமயமாயிருக்கவில்லை. 356யோசுவா,காலேப் என்பவர்களைப் போன்று நிற்போமாக (உன்னிப்பாக கவனியுங்கள், இப்போது நாம் ஆவிக்குரிய பின்னணியைப் பெற்று கொள்ளப் போகிறோம்). வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதேசம் நமது கண்களுக்குத் தெரிகிறதினால், யோசுவா , காலேப் என்பவர்களைப் போன்று உறுதியாக நிற்போமாக. அதற்குரிய நேரமானது நெருங்கிவிட்டது. யோசுவா என்பதற்கு எபிரெய பாஷையில் இரட்சகர் என்றும், சபையை கானானுக்குள் கொண்டு செல்லும் கடைசிக் கால தலைவன் என்றும் அர்த்தம். காலேப் என்பதற்கு யோசுவாவுடன் நிலைத்திருந்த உண்மையான விசுவாசி என்று அர்த்தமாம். தேவன் இஸ்ரவேலை தம்முடைய வார்த்தையோடு ஒரு கன்னியாக ஆரம்பித்தார், ஆனால் அவர்களோ வித்தியாசமான தொன்றை விரும்பினார்கள். கடைசி கால சபையும் அதுபோலவே இருக்கிறது. 357கவனியுங்கள். குறித்த சமயம் வரும் வரையில் தேவன் இஸ்ரவேலரைப் புறப்படப் பண்ணவில்லை. (இப்பொழுது, கவனியுங்கள். இது ஒரு பொருளை சுட்டிக் காட்ட போகின்றது) யோசுவா அந்த நேரத்திற்காக காத்திருந்தான்! “தேவன் நமக்கு தேசத்தைக் கொடுத்தார், வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், நாம் சென்று அதை சுதந்தரித்துக் கொள்வோம்” என்று ஜனங்கள் சொல்லியிருக்கக் கூடும், “யோசுவாவே, உனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை நீ இழந்து விட்டாய், நீ பின் வாங்கி விட்டாய். ஏன் நீ ஏதாகிலும் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது? ”கர்த்தர் உரைக்கிறதாவது“ என்று ஒரு நிமிடத்தில் காரியங்களைச் செய்வாயே! இப்பொழுது என்ன?'' என்றெல்லாம் அவர்கள் கூறியிருக்கலாம். ஆனால் தேவனால் அனுப்பப்பட்ட இந்த ஞானமுள்ள தீர்க்கதரிசி தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிந்திருந்தான், அது மட்டுமல்ல, அவன் வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கென்ற காலத்திற்கான திட்ட வட்டமான தீர்மானம் தேவனிடத்தினின்று வர காத்திருந்தான். (இந்த உவமைகளை கவனியுங்கள்) சமயமானது வந்த போது, தேவனுடைய வார்த்தையோடு நிலைத்து இருந்த யோசுவாவிடம் அவர் அதை ஒப்படைத்தார், அவனைத் தவிர வேறு யாரையும் அவர் நம்பவில்லை. இதுவே இக்கடைசிக் காலத்திலும் திரும்ப சம்பவிக்கும். 358வல்லமையாய் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான மோசே தன்னை அவர் உபயோகிப்பார் என்று அறிந்திருந்தான். ஏனெனில் அவன் அவருக்கு ஊழியக்காரனாயிருப்பான் என்பதை அவனு டைய விநோதமான பிறப்பினால் தேவன் உறுதிப்படுத்தியிருந்தார். ஆபிரகாமின் வித்தை விடுவிக்கும் சரியான சமயம் வந்தபோது (நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?) மோசே, ஒருபோதும் எகிப்தில் தங்காமல் எகிப்திலுள்ள மக்களோடு வேதத்தைக் குறித்து தர்க்கியாமல், ஜனங்கள் அவனை ஏற்றுகொள்ளும் சமயம் வரும் வரை வனாந்தரத்தில் தேவனிடத்தில் காத்திருந்தான். அவர்களைக் குறித்து சாட்சி கொடுக்க அவன் வந்தான்; ஆனால் அவர்களோ அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை வனாந்தரத்திற்கு அழைத்துக் கொண்டார். தேவன் அவனைத் தெரிந்தெடுத்ததை சாட்சி பகிர்ந்தார். ஆனால் மோசே தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கருதி தேவன் அவனை வனாந்திரத்துக்கு கொண்டு செல்லவில்லை. மோசேயை ஏற்றுக் கொள்ள ஜனங்கள் ஆயத்தமாயிராததன் காரணத்தால் அவன் அங்கு கொண்டு போகப்பட்டான். ஜனங்கள் இதைப் புரிந்து கொள்வார்களென்று நினைத்தான். ஆனால் அவர்களோ இதைப் புரிந்து கொள்ளவில்லை. (இதை நான் எழுதவில்லை. அவரே இதை எழுதினார்). 359தேவனுடைய வார்த்தையை தன்னிடம் வரப்பெற்ற அந்த வல்லமையான நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசி எலியா தன்னுடைய செய்தியை, தேசத்தில் தன் தலை மயிரை கத்தரித்துக் கொண்ட முதல் பெண்ணாகிய யேசபேலுக்கும் அவளைச் சார்ந்த நவநாகரிக வர்ணந்தீட்டிக்கொண்ட அமெரிக்கக் குழுக்களுக்கும் பிரசங்கித்த பின், தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை நிரூபிக்கிறவராயிருந்தார்; ஒவ்வொரு தடவையும் அவன் தீர்க்கதரிசனம் உரைத்த போது, அது சத்தியமாயிருந்தது. தேவனுடைய தீர்க்கதரிசியையும் அவர்களுக்காக அவன் மூலமாய் அனுப்பியிருந்த தேவனுடைய வார்த்தையையும் அவர்கள் புறக்கணித்ததின் காரணமாக தேவன் இந்த சந்ததியை மகா வாதைகளினால் வாதித்தார். தேவன் தமது தீர்க்கதரிசியை வனாந்திரத்திற்கு அனுப்பி அங்கு அவனை மறைத்து வைத்தார். தேசத்தின் ராஜாவாலும் அவனை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக அவனை பலாத்காரமாக அழைத்து வர முயற்சி செய்தவர்கள் மரித்தார்கள். ஓ, மகிமை! ம்ம்ம்....! ஆனால் தேவன் தமது உண்மையுள்ள தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். அப்பொழுது அவன் ஒளிப்பிடத்திலிருந்து வெளி வந்து “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உரைத்தான். அவன் என்ன செய்தான்? நேராக வார்த்தைக்குத் திரும்பிச்சென்றான். தகர்க்கப்பட்ட பன்னிரண்டு கற்களையும் ஒன்று சேர்த்து பலி பீடத்தைச் செப்பனிட்டான். 360கிறிஸ்துவுக்கு முன்னோடினவனான அந்த அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையுள்ள தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானன், மேசியாவாகிய ஆட்டுக்குட்டி வருகிறார்! என்ற தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் வரை அவன் தேவனால் வனாந்தரத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு சென்றான். அவனுடைய தகப்பனுடைய ஆசாரிய முறைமையின் பள்ளியோ, பரிசேயருடைய பள்ளியோ அல்லது அந்த ஸ்தாபனமோ, வனாந்தரத்தினின்று அவனை அழைக்க முடியவில்லை. ஆவிக்குரிய சிந்தையோடு கவனிக்கின்றீர்களா? இன்னும் எவ்வளவோ நான் சொல்லக் கூடும்! நான் இங்கே சிலவற்றை விட்டுவிடுகிறேன், இப்பொழுது. 361இன்றைக்கு எவ்வளவு வித்தியாசப்பட்டதாயிருக்கின்றது! ஜனங்களுக்காக செய்தியை தேவனிடத்தில் பெற்று கொண்டதாக கூறும் இக்காலத்திய அநேக சுவிசேஷகர்கள் கோராகைப்போல் இருக்கின்றனர். அபிஷேகம் பெற்றிருந்து நீரூபிக்கப்பட்ட தேவ ஊழியக்காரனான மோசே பெற்றிருந்த அதிகாரத்தை இந்த கோராகு மறுதலித்து அதைக் குறித்து விவாதம் செய்தான். இஸ்ரவேலர் அவனோடு சேர்ந்து பொன் கன்றுக்குட்டியைச் செய்தது போன்று இன்றும் அநேகர் பணம் சம்பாதிக்கும் வழிகளை உற்பத்தி செய்து, பெரிய கட்டிடங்களைக் கட்டியும், பெரிய பள்ளிக் கூடங்களைக் கட்டியும், தங்கள் சொந்த வித்தை செயற்கை முறையாக குஞ்சு பொறிக்கச் செய்கிறார்கள். அபிஷேகிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மையான தேவ தீர்க்கதரிசியின் செய்தியைக் கேட்ட பின்பும் ஜனங்கள் அன்று அவனுடைய காரியத்திற்கு விழுந்து போனது போன்று இன்றும் விழுந்து போனார்கள். அவர்கள் கோராகின் பொய்க்கு விழுந்து போனார்கள். தம்முடைய தீர்க்கதரிசிகளைத் தம்முடைய வார்த்தையினால் நிரூபிப்பார் என்று தேவன் தெளிவாக இஸ்ரவேலருக்கு கூறியிருந்தார்.கோராகு வேதப்பிரகாரமான தீர்க்கதரிசியாயிராமலிருந்தும் மக்களுக்கு நல்லவனாகக் காட்சியளித்தது போல, இன்றும் சுவிசேஷகர்கள் நெற்றியில் இரத்தத்தையும் கைகளில் எண்ணெயையும், மேடையில் தீப்பந்தங்களையும் வருவிக்கின்றனர். அவர்கள் பெண்கள் பிரசங்கிக்கவும் தலை மயிரைக் கத்தரிக்கவும் ஆண்களின் உடையை அணியவும் அனுமதித்து இவ்வித காரியங்களை உற்பத்தி செய்கின்றனர். நீங்கள் பெற்றிருப்பது என்ன? ஜனங்கள் இவைகளுக்கு விழுந்து போவார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா?அவர்கள் கோராகுக்கு விழுந்தது போன்றே உண்மையான வார்த்தையினின்று திரும்பி ஸ்தாபனத்திற்காக விழுந்து போனார்கள். அவர்களுக் குள்ளிருக்கும் வித்தின் தன்மையை அவர்களுடைய குறைவான ஆடைகள் காட்டுகின்றன. 362ஆனால் முழு இஸ்ரவேலும் கோராகின் பொய்க்கு விழுந்து விடவில்லை. தேவனுக்கு துதி உண்டாவதாக. அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான மோசேயோடும், தேவனுடைய வார்த்தை யோடும் சிலர் துணை நின்றனர். இக்காலத்திலும் அநேகர் அழைக்கப்பட்டிருந்தாலும் சிலரே அவருடைய வார்த்தைக்கும் ஆவிக்கும் நிலை நிற்கின்றனர். 363கோதுமை மணிகளையும் களைகளையும் குறித்த உவமையை நினைவு கூறுங்கள். களைகள் சுட்டெரிக்கப்படுவதற்கென முதலில் கட்டப்பட வேண்டும். அது உண்மையா? இது நிறைவேறப் போகிற ஒன்று. இந்த விசுவாசமில்லாத ஸ்தாபன சபைகள் முன்பிருந்ததை விட மிக நெருக்கமாகக் கட்டப்படுவார்கள். அவர்கள் ஐக்கிய ஆலோசனை சபையின் சங்கமாக கூட்டிக் கட்டப்பட்டு தேவனுடைய நியாத்தீர்ப்பின் அக்கினிக்கு இரையாக்கப் படுவதற்கு ஆயத்தமாகின்றனர். (நான் இதை எழுதவில்லை; அவரே அதை எழுதினார் என்று உணர்கிறேன்.) இந்த பெந்தகோஸ்தேயினரும் அவ்விதமேயாவார்கள். ஆனால் வார்த்தையாகிய கோதுமை மணிகள் என்றாவது ஒரு நாள் கூட்டி சேர்க்கப்பட்டு எஜமானின் களஞ்சியத்தில் சேர்க்கப்படுவார்கள். 364கடைசி காலங்களில் மல்கியா 4ம் அதிகாரத்தில் (ஜாக்கிரதைப் படுங்கள்!) கூறப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்; அது நிச்சயமாக நிறைவேறும். ஏனெனில் அது உயிர்ப்பிக்கப்பட்ட தேவ வார்த்தையாயிருந்து மல்கியா என்னும் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட தாயிருக்கிறது. இயேசு அதைக் குறிப்பிட்டார். அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னதாக சம்பவிக்கவேண்டும். (இப்பொழுது நன்கு கவனியுங்கள்) இயேசு வருவதற்கு முன்பு நிறைவேறாத எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியாக வேண்டும். வேதம் நிறைவேறியாக வேண்டும். இந்த அபிஷேகிக்கப்பட்ட தூதன் வரும்போது, புற ஜாதியின் காலம் சபையின் காலங்களோடு முடிவு பெறவேண்டும். அவன் முன்மாரி தொடங்கி பின்மாரி வரையிலான சத்தியங்களான சர்ப்பத்தின் வித்திலிருந்து ஆரம்பித்து முழு வேதத்தையும் விதைப்பான். தன்னுடைய முற்பிதாக்களான எலியா, யோவான் ஸ்நானன் என்பவர்களைப் போன்று அவனும் ஸ்தாபனங்களால் புறக்கணிக்கப்படுவான். எலியா, முதலாவதாக ஆகாபின் காலத்தில் புறக்கணிக்கப்பட்டான். ஆகாப் காலத்தில் இஸ்ரவேலில் நடந்த சம்பவம், மல்கியாவினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசி தோன்றும் காலத்தில், அமெரிக்காவில் நடைபெறும். ஏனெனில் இந்த தேசம் இஸ்ரவேலுக்கு உதாரணமாயிருக்கிறது. 365“யேசபேல் மார்க்கம்” என்ற செய்தியைப் படியுங்கள் அல்லது கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமாக வழிபட எகிப்தை விட்டு வெளியேறி அவர்கள் குடியேறிய நாடுகளிலுள்ள ஜாதிகளைப் புறம்பே தள்ளி, ஒரு பலத்த ஜனமாகி, தாவீதைப் போன்ற உத்தம தலைவர்களால் அரசாளப்பட்டு, பின்பு ஆகாப் எனும் கொடியவனை சிம்மாசனத்தில் ஏற்றி, அவனுடைய மனைவியாகிய யேசபேல் இஸ்ரவேலின் நிர்வாகத்தை நடத்தியது போன்று, நம் முற்பிதாக்களும் சுதந்தரமாக வாழ எண்ணி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவின் சுதேசிகளை விரட்டியடித்து, அந்நாட்டை கைப்பற்றினர். வாஷிங்டன், லிங்கன் போன்ற மகத்தான தேவ மனிதர்கள் நாட்டின் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். சிறிது காலம் கழித்து, தரம் குறைந்தவர்கள் பதவியேற்று, யேசபேலைப் போன்ற அவர்களுடைய மனைவி மறைவாக நிர்வாகத்தை நடத்தினாள். இந்த சமயத்தில் தான் அந்த மனிதன் தோன்ற வேண்டும். அது “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதாகும். 366கர்மேல் பர்வதத்தில் தேவனுடைய மகிமை காணப்பட்டது போன்று, பின்மாரிக் காலத்திலும் சம்பவிக்கவேண்டும். வேதம் முற்றிலுமாக நிறைவேறியாக வேண்டும். மல்கியா 3ம் அதிகாரத்தில் கூறப்பட்ட முன்னோடியானவன் (fore runner) யோவான் ஸ்நானனாகும். அவன் முன்மாரியில் விதை விதைத்து, ஸ்தாபனங்களினால் புறக்கணிக்கப்பட்டான், (பரிசேயர் சதுசேயர் என்ற ஸ்தாபனத்தார்). பின்னர் இயேசு வந்து, மறுரூப மலையின் பலப்பரீட்சை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடுடவன் பின்மாரிக்கென விதைப்பான். இயேசு (வார்த்தையானவர்) ஸ்தாபனங்களுக்கும், கோட்பாடு களுக்கும் மத்தியில் ஒரு மகிமையான சவாலாயிருப்பார். இயேசு வரும் போது ஸ்தாபனங்களையும் பிராமணங்களையும் உதறித் தள்ளி தம்முடைய மணவாட்டியைக் கொண்டு செல்வார். முதலாம் பலப்பரீட்சை கர்மேல் பர்வதத்திலும், இரண்டாம் பலப்பரீட்சை மறுரூப மலையிலும் நிகழ்ந்தன. மூன்றாம் பலப்பரீட்சை கூடிய விரைவில் சீயோன் பர்வதத்தில் நடைபெறும். 367மோசே எலியா, யோவான் ஸ்நானன் இம்மூவரும் மக்களின் சமூகத்தினின்று விலகி வனாந்திரத்துக்குச் சென்ற சம்பவம் அநேகரை குழப்பத்திற்குள்ளாக்கினது. அவர்களையும் அவர்களு டைய செய்திகளை மக்கள் ஏற்றுகொள்ளாததால் அவர்கள் வனாந்தரத்திற்கு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆயினும் விதை விதைக்கப்பட்டாயிற்று; அடுத்தது நியாயத்தீர்ப்பு தான். வரப்போகும் நியாத்தீர்ப்பை அறிவிக்க இவர்கள் அனுப்பப்பட்டனர். விதைத்தலானது முடிவு பெற்று விட்டது. 368என்றாவது ஒரு நாள் கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி தேவ வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு தடைசெய்யப்படுவாள். (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால்,)வெளி: 13:16ல் வேதம் அதைக் குறித்து தீர்க்கதரிசனமாயுரைக்கிறது. ஸ்தாபனங்கள் மணவாட்டியை தடை செய்யும்; அல்லது, “மிருகத்தின் முத்திரையை” அணிந்து கொள்ள வற்புறுத்தும். அப்பொழுது தான் ஆட்டு குட்டியானவர் மணவாட்டியை எடுத்துக் கொள்வார்.பின்பு வேசியை நியாயந்தீர்ப்பார். 369ஒரு முக்கியமான காரியத்தை செய்ய மோசே பிறந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்கிரியைகளைச் செய்ய அவசியமான விஷேச வரங்களைப் பெறும்படி அவன் கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. (அவன் திரும்பிச் சென்று காத்திருக்க வேண்டியிருந்தது) தேவனால் குறிக்கப்பட்ட அச்சமயம் வரும் வரை சிம்மாசனத்தில் ஒரு பார்வோன் இருக்க வேண்டியதாயிருந்தது. தேவன் மோசேயை திரும்பவும் வனாந்தரத்திலிருந்து அவர்களிடமாய் கொண்டு செல்வதற்கு முன்பு ஜனங்கள் ஜீவ அப்பத்திற்காக பசியடைய வேண்டியதாயிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கடைசி நாட்களில் அடையாளக் கிரியைக்காரராயிருந்து அதன் விளைவாக, வார்த்தையைக் குறித்தும் தேவனுடைய அசைவைக் குறித்தும் ஒன்றும் அறியாத அடையாளங்களைத் தேடும் சந்ததி உண்டாயிருக்கிறது. நான் உங்களுக்கு கூறினது போன்று, “இரத்தத்தையும், எண்ணெயையும் மேடையில் வரவழைப்பது போன்ற மாம்சமான கிரியைகளை செய்தால் அது தேவனுடைய வார்த்தையா யிராவிட்டாலும் அதை ஆதரிப்பார்கள். ” கடைசிக் காலங்களில் என்ன நிகழும் என்பதைக் குறித்து இயேசு நம்மை எச்சரித்து இருக்கின்றார். மத் 24ல் இரண்டு ஆவிகள் நெருக்கமாக இருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று நான் கூறியிருக்கிறேன். அதை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? வார்த்தை பரிசோதனையை அவர்களிடம் கொடுங்கள். நீங்கள் அதை எப்படி அறிந்து கொள்ளுவீர்கள்? வார்த்தையை அவர்களிடம் பேசுங்கள்; அதைக் குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பாருங்கள்? அவர்கள் வார்த்தையை விசுவாசிக்கவில்லையென்றால், அவர்களிடம் வித்து இல்லையென்று பொருள். அவர்கள் பிசாசாய் இருந்து உங்களை வஞ்சிப்பார்கள்: முதல் இரண்டு மணவாட்டிகள் வஞ்சிக்கப்பட்டது போன்று, வார்த்தையைக் கலப்பினமாக்குவதால் மூன்றாவது மணவாட்டியையும் வஞ்சிக்கிறார்கள். 370தேவன் ஒருக்காலும் தம்முடைய வார்த்தைக்கு மேலாக அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. (ஆமென்! அது ஒரு கடுஞ்சொல்) தேவன் வார்த்தைக்கு முன்பாக ஒரு போதும் அடையாளங்களை வைத்ததில்லை. ஆனால் அடையாளங்கள் அவருடைய வார்த்தையை நிரூபிப்பதற்கென கூட சேர்க்கப்பட்ட ஒரு காரியமாகும். ஆனால் வார்த்தையே முதன்மையானது. இதை நிரூபிக்க, எலியா அந்த விதவையிடம், “முதலில் எனக்கு ஒரு சிறு அடையை செய்து கொடு, பின் அற்புதம் நிகழ்வதை கவனி” என்றான். வார்த்தையை முதலில் நீங்கள் ஏற்றுக்கொண்டு, பின்பு உங்கள் ஜீவியத்தில் அற்புதம் நடப்பதைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்படும். தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் சில வசனங்களை மட்டும் விசுவாசித்து மற்றவைகளை எவ்வாறு மறுதலிக்க முடியும்? வார்த்தையின் ஒரு பகுதியை மறுதலிக்க...... 371கடைசி காலத்தின் உண்மையான தீர்க்கதரிசி வார்த்தை முழுவதையும் மக்களுக்கு எடுத்துரைப்பான்; ஸ்தாபனங்கள் அவனைப் பகைக்கும். “விரியன் பாம்பு குட்டிகளே” என்று அழைத்த யோவான் ஸ்நானனின் சொற்களைப் போன்று அவனுடைய சொற்கள் கடூரமாக இருக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டும் அவனுக்கு செவி கொடுத்து எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படுவர். ஆபிரகாமின் ராஜரீக சந்ததியார் ஆபிரகாமோடு முன் குறிக்கப்பட்டு அவன் விசுவாசத்தை (அவனைப் போல) பெற்றவர்களாய் அவனோடு கூட தேவனுடைய வசனத்தை உறுதியாய் கடைபிடிப்பர். தேவன் நிர்ணயித்தக் காலத்தில் மல்கியா4ல் கூறப்பட்ட தூதன் தோன்றுவான். நாமெல்லோரும் அவனுக்காகக் காத்திருக்கிறோம். அவன் வருவானென்று நாமெல்லோரும் விசுவாசிக்கிறோம். அது அவருடைய வார்த்தையின்படியே கடைசி காலத்தில் தோன்றும். அதைக் காணத்தக்கதான நேரம் இன்றேயாகும். 372தேவனுடைய வார்த்தைக்கு அவன் சரியாக சமர்ப்பிக் கப்பட்டிருப்பான். அவருடைய தீர்க்கதரிசிகள் எல்லோரும் அப்படித்தான். அவர்கள் நிரூபிக்கப்பட்டவர்களாயிருப்பர். எலியாவை தேவன் நிரூபித்தது போன்று அவன் பிரசங்கிப்பதை தேவன் சத்தியம் தான் என்று நிரூபிப்பார்; ஏனெனில் அவனுடைய வருகை எலியாவின் வருகையாயிருந்து, சீயோன் மலையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாக்குகிறதாயிருக்கிறது. லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் கடைசி நாட்களில் நடக்கும் என்று இயேசு கூறினார். அவனுடைய பிரசங்கம் ஆவியினால் சார மேற்றப்பட்டதாயிருந்து தேவனுடைய வார்த்தைக்கு நேராக ஜனங்களை வழி நடத்தும். அநேகர் வேதத்தை தவறான முறையில் கற்றுக் கொண்டிருக்கிறபடியால் இந்த தூதனையும் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். (நான் இங்கு தீர்க்கதரிசனம் P-R-O-P-H-E-C-Y என்று எழுதி வைத்திருக்கிறேன்) பொய்யர்களால் அநேகர் வேதத்தை தவறான முறையில் கற்றுக் கொண்டிருக்கிறபடியால், அநேக உண்மையான ஊழியக்காரரும் இத்தூதனைத் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். 373கடைசி கால தீர்க்கதரிசனங்கள் திரும்பக் கூறப்படுவது போல முதலாவது முன்னோடியானவன் வனாந்திரத்திலிருந்து வந்து, “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அறை கூவியது போன்று, அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடுபவனும் வார்த்தையினால் பிறந்த மணவாட்டியை ஜனங்களுக்கு சுட்டிக் காண்பிப்பான். வானத்தில் இயேசு மகிமையில் தோன்றுவதை மணவாட்டிக்கு சுட்டிக் காண்பித்து, “இதோ தேவனுடைய ஆட்டுக்குட்டி மகிமையில் வருகிறார்” என்று அறை கூவுவான்.இந்த நிறைவேறப்போகின்ற சம்பவத்திற்காக தேவன் தாமே நம்மை ஆயத்தப்படுத்துவாராக. 374இப்பொழுது, நான் இங்கேயே நிறுத்திவிடுவது நல்லது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவைகள் ஏன் இவ்விதமிருக்கின்றன என்பதை இப்பொழுது நீங்கள் நல்லவிதமாய் புரிந்து கொண்டீர்களா? அது வார்த்தை, நண்பர்களே, அநேக காரியங்கள் சொல்லப்பட வேண்டியதாயுள்ளது. நாம்-இதன்பேரில் ஐந்தரை அல்லது ஆறு மணி நேரம் பிரசங்கித்துள்ளேன். ஆனால் நான் எதை பேசிக்கொண்டிருக்கிறேனோ அது இந்நேரம் பரிசுத்தஆவியினால் உங்களில் ஆழமாக பதிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விதைகள் பின்மாரிக்கென இப்பொழுது விதைக்கப்பட்டு விட்டன. நினைவில் கொள்ளுங்கள். வெகு விரைவில் ஸ்தாபனங்களின் ஒரு கூட்டு சேர்க்கை உண்டாகப்போகிறது. அது மிகவும் பயங்கரமாயிருக்கும். ஐக்கிய சபைகள் என்ற அமைப்பினுள் அவர்கள் தங்களைக் கூட்டி சேர்ப்பார்கள்; பின்பு நம் போன்ற சபையை கிரியை செய்யக்கூடாதவாறு செய்வார்கள் (அவர்கள் அறிந்த வரை). அந்த நேரத்தில் தான் இயேசு தோன்றி யார் மணவாட்டி, யார் மணவாட்டியில்லையென்று காண்பிப்பார். 375நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்தவ நண்பர்களே, நான் ஒரு மனிதன்; நான் தவறுகள் செய்யக்கூடியவன். ஆனால் தேவன் தேவனாயிருப்பதால் தவறு செய்ய முடியாது. எல்லா எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களும் நிறைவேற வேண்டும் என்று இயேசு கூறினார். ஆகவே ஒரு கட்டுபாடு மணவாட்டியின் மேல் உண்டாகும், என்று வேத வசனத்தில் கூறப்பட்டுள்ளவைகளும்- இதை அவைகளில் ஒன்று-காரியமும் இங்கே நிறைவேற வேண்டும். ஆனால் அத்தகைய கட்டுபாடு உண்டாகும் முன்பு (மிருகத்தின் முத்திரையிடுதல்) மணவாட்டி சபையை எடுக்கத்தக்கதாக தேவன் விதையை விதைக்க வேண்டிய வராயிருக்கிறார். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?விதையானது விதைக்கப்பட வேண்டும். ஸ்தாபன வித்து...இந்த ஸ்தாபனங்கள் மிருகத்திற்கு (ரோம சபை) ஒரு சொரூபத்தை உண்டாக்க வேண்டும். ஆனாலும் அவைகளின் மத்தியில் ஒரு உண்மையான மணவாட்டி இருந்தாக வேண்டும். 376தன்னை மணவாட்டியென்று அழைத்துக் கொண்ட ஆதாமின் மணவாட்டி ஜீவனைக் கொண்டு வரத் தவறினாள்! அவள் மரணத்தைக் கொண்டு வந்தாள்; நாம் அவளுடைய உற்பத்தியா யிருந்து (நம்முடைய சரீரம்) எல்லோரும் மரிக்கிறோம். யேகோவாவின் மணவாட்டி மரித்தாள்; அவளை அவர் தள்ளி ஒரு கூட்ட ஜனத்தை தம்முடைய நாமத்திற்கென்று புறஜாதியினிடத்தில் தெரிந்தெடுத்தார். அது உண்மையா? ஒரு பெண் தன் புருஷனுடைய பெயரை தனக்கு எடுத்துக் கொள்வது போன்று மணவாட்டியும் இருக்கிறாள். இவளும் எதைச் செய்தாள்? அக் காலங்களில் அவர்கள் செய்தது போன்று இவளும் தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டாள், சிதைப்பட்டுப்போனாள். ஆனால் ஒவ்வொரு சந்ததியிலும் ஒவ்வொரு எழுப்புதலின் போதும் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி (தீர்க்கதரிசி, பிரசங்கியும், வார்த்தையில் நிலைநிற்கும் உண்மையான பிரசங்கியுமாயிருக்கிறான்) தோன்று கிறான். அவன் எழுப்புதலைக் கொணர்ந்து அந்த சந்ததியில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டி சேர்க்கிறான். அவள் வித்திற்குள் செய்கிறாள். பின்பு தேவன் விடப்பட்ட மற்றவர்களை விட்டு ஒரு போதும் திரும்பவும் அதை அவர் உபயோகிப்பதில்லை. ஸ்தாபனமான பின்பு எப்பொழுதாவது அது திரும்பவும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று எல்லா சரித்திரக்காரர் களையும் நான் கேட்கிறேன். அவள் தன்னை ஸ்தாபித்தவுடனே மரித்து விடுகிறாள். 377மூடி என்பவரைக் குறித்து நான் யோசிக்கிறேன். அவருடைய காரியங்கள் நடு இரவைப் போன்று மரித்தாகிவிட்டது. மெத்தோடிஸ்டு, பெந்தகோஸ்தேயினர், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள, நசரேயர்கள், பில்கிரீம் ஹோலினஸ்; என்ற அமைப்புகளைக் குறித்து நான் யோசிக்கிறேன். பரிசுத்த மனிதர்களான ராபின்சன், ஜார்ஜ் ஒயிட்பீல்டு போன்றவர்களை நான் யோசிக்கிறேன். அவர்களெல்லோரும் சுவிசேஷ்த்தைப் பிரசங்கித்தார்கள், அந்தந்த சந்ததிகள் ஒரு பகுதியாக விதைக்கப் பட்ட விதையைப் பெற்றுக்கொண்டனர். அந்த ஊழியக்காரன் அந்த காலத்தின் வார்த்தையைக் கொண்டு வந்தான். ஒரு பயிரைப் போன்று அவைகள் கீழ் தண்டாகவோ, இலையாகவோ, பட்டு குஞ்சமாகவோ, அல்லது மணியாகவோ அந்தந்த காலத்தின் ஊழியக்காரர்களால் கொண்டு வரப்பட்டன. பூமியின் நான்கு காற்று திசைகளினின்றும் அவைகள் அழைக்கப்பட்டு பின் அதினின்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அச்சந்ததிக்காக எடுக்கப்பட்டனர். அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மூலமாக ஜீவிக்கிற தேவனுடைய சபையானது கட்டப்பட்டது. 378இந்த ஊழியமானது, இயேசு கிறிஸ்துவின் அதே கிரியைகளை நடப்பிக்கும் வரை, அது பொருந்தத்தக்கதாக கூர் தீட்டப்பட வேண்டியதாயிருக்கிறது, ஏனெனில் அவர் வரும் போது தலைக்கல் லானது அதனுடன் சேர்ந்திட வேண்டும். எடுத்துக்கொள்ளப் படுதல் என்று ஒன்று உண்டு; அதில் அவர்கள் எடுத்துக் கொள்ளப் படுவார்கள்; பின்பு சரீரத்தின் மற்ற பாகமும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, பரலோகத்திற்குள் சென்று விடுவார்கள். ஒரு ஸ்தாபனம் அவ்விதம் செல்லாது நண்பர்களே; வார்த்தையாகிய தேவனின் சபையே அவ்விதம் செல்லும். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா ? இங்கே சில கைக் குட்டைகள் உள்ளன. 379இங்கிருந்து எங்கு செல்வேன் என்று எனக்குத் தெரியாது. உங்களைப் போலவே நானும் தேவ சித்தத்தை தேடிக்கொண்டிருக் கிறேன். இங்கேயே கூடாரத்தில் நான் தங்கியிருக்க விரும்புகிறேன். ஆனால் அவ்விதம் என்னால் செய்ய முடியாது. பிசாசானவன் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குள்ளிருந்து அவர்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறான். என்னால் அதிக நேரம் தூங்க முடியவில்லை. ஜெப வரிசையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு வருவதையும், பிள்ளைகள் அழும் சத்தத்தை நான் கேட்கும் போதும், சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விசிறிக் கொண்டிருப்பதை காணும்போதும், வெளியிலே நின்று கொண்டு மழைத் தண்ணீர் தங்கள் பிள்ளை களின் மேல் படாதவாறு மறைத்த வண்ணமாய் நிற்பதைக் காணும் போதும் என்னுடைய இருதயம் அவர்களுக்காக இரத்தத்தை கசிக்கின்றது. 380இந்த கூடாரம் கட்டப்பட்ட போது, நான் அந்த மூலைக்கல்லை நாட்டின போது உண்டான தரிசனத்தை நான் நினைவு கூறுகிறேன். அந்த மூலைக் கல்லின் மேல் எழுதப்பட்ட வார்த்தை இதுதான். “இது உன்னுடைய கூடாரம் அல்ல; சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.” இதை தான் நேசிக்கிறேன்; எல்லா இடங்களிலுமுள்ள தேவ பிள்ளைகளை நான் நேசிக்கிறேன். அவர் என்னை எங்கு நடத்தப் போகிறார் என்பதை அறியாதவனாயிருக்கிறேன். எனக்குத் தெரியாது; நான் காத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை நான் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கும்; எனக்குத் தெரியாது. அடுத்த அசைவு என்ன என்பதை அறியாதவனாயிருந்து அதற்காக காத்து கொண்டிருக்கிறேன். வேத வார்த்தையின்படி வசனமானது விதைக்கப்பட்டாயிற்று என்று நான் எண்ணுகின்றேன். வரவிருக்கும் அடுத்தக் காரியம் அவருடைய ஆவி தான். 381பில்லி கிரகாமும், ஓரல் ராபர்ட்சும் எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கலாம். வேறு எங்கெங்கோ(சில ஊழியங்கள்) விதைகள் விதைப்பதற்காக கர்த்தர் ஒரு வேளை என்னை அனுப்பக்கூடும் ஆனால் நம்முடைய தேசமானது விதைக்கப்பட்டு அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். ஆவியானது விழும்போது அங்கு ஜனங்கள் மத்தியில் ஒரு அசைவு ஏற்படுகிறது, அதே சமயத்தில் நான் இங்கு மேடையில் நிற்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அந்த ஸ்தாபனங்களும் கோதுமையோடு குதித்தெழுந்து அசைவில் காணப்படுகின்றது. பின்பு தேவனுடைய சபையானது அங்கிருந்து துரத்தப்படுகிறது. அவர்கள் (ஸ்தாபனங்கள்) தங்களை ஐக்கியப் படுத்தி தங்களைச் சார்ந்தவர்களின் மேல் ஒரு கட்டுப்பாட்டை விதிக்கும் வரை அங்கே அவர்கள் பலவிதமான வியாபாரங்களை உற்பத்தி செய்கின்றார்கள். ரோமாபுரி இவ்வுலகை ஒரு காலத்தில் அரசாளப் போகிறது, கம்யூனிசம் அல்ல; தேவனால் தள்ளப்பட்ட ஸ்தாபன சபையாகிய இந்த ரோமானிசமும், ப்ராடஸ்டானிசமும் ஒரு ஐக்கியத்தின் அடிப்படையில் உலகை ஆளுவார்கள். தேவனுடைய வார்த்தையை நான் அறிந்தமட்டில் அது மிகவும் சமீபமாயிருக்கிறது. 382நான் உங்களை நேசிக்கிறேன். பாராட்டுகிறேன். ஒருவேளை ஒரு வாரம் கழித்து திரும்பவும் உங்கள் மத்தியில் நான் வரக்கூடும். ஃப்ளாரிடாவுக்கும், நாளை இரவு ஜார்ஜியாவிற்கும் கர்த்தருக்குச் சித்தமானால் செல்லவிருக்கிறேன். சில கூட்டங்கள் பரவலாக எனக்கென்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கர்த்தருக்குச் சித்தமானால் சகோ. ராபர்சன், பார்டர்ஸ் அவர்கள் ஒழுங்கு செய்யும் கூட்டங்கள் எனக்கு ஏராளம் உண்டு. ஏறத்தாழ 40 சபைகள் ஐக்கியம் கொள்ள தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளனர் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் ஆவியானவரோ அதை தடை செய்வது போல காணப்படுகின்றது. ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள். நானும் உங்களுக்காக ஜெபம் செய்வேன். ஐக்கியமாக நாம் நிற்போம், தேவன் நமக்கு உதவி செய்வாராக இங்குள்ள ஒருவராவது அந்த மகத்தான சமயத்தை தவறவிடக் கூடாது. 383நான் அநேக காரியங்களில் குற்றம் சாட்டப்பட்டவனாக இருக்கிறேன், நண்பர்களே, அவ்விதம் அநேக காரியங்களில் நான் குற்றமுள்ளவனாகவும் காணப்படுகிறேன்; அது உண்மை . அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. யாராகிலும் என்னை மூலையில் தள்ளி சண்டையிட வைப்பது போல் இருக்கிறது. எனக்குத் தெரியாது; அது ஒரு சுபாவம். நான், கண்டிப்பாக செய்யக்கூடாது என்று நிச்சயித்த காரியத்தை நானே செய்திருக்கிறேன். என் மனப்பூர்வமாக இல்லை, ஆனாலும் நான் அதற்கு கொள்ளையாகி விட்டேன். இந்த நாளில் (நாம் வாழ்கின்ற காலத்தில்) அதுதான் என்னை மிகவும் பயப்படுத்துகிறது. நான் அவை வருவதற்கு முன்பாக கூடுமானால் தேவனிடத்தினின்று பதிலைப் பெற்று கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் நான் அவரை விட்டுவிட விரும்பவில்லை. எல்லா இடங்களிலும் நான் அவரோடு இருப்பதையே விரும்புகிறேன். நீங்கள் எனக்காக ஜெபம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 384நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறினேன் என்பதை நினைவு கூறுங்கள். இன்று முழுவதும் (காலையிலிருந்து) நீங்கள் இங்கே இருந்ததற்காகவும், அநேகர் கால் வலிக்க நின்றுகொண்டும், வெளியே வாகனங்களிலும் அமர்ந்து பாட்டரிகள் தீர்ந்து போகும் வரை செவிகொடுத்துக் கொண்டும் இருந்தமைக்காக நான் நன்றி கூறுகிறேன். இவை யாவும் ஒலிநாடாவில்உள்ளன. சகோதரர் அதை ஒலிப்பதிவு செய்துள்ளனர்; நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த செய்திகள் அடங்கிய ஒலி நாடாக்கள் உங்களுக்கு கிடைக்குமானால், அதை வீட்டிற்குக்கொண்டு சென்று ஞானத்துடன் மிகவும் சிரத்தையுடன் பரிசீலனை செய்து, கர்த்தர் உங்களுக்கு எதை வெளிப்படுத்துகிறார் என்பதை பாருங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? எப்படி எங்கே? இங்குள்ள இந்த கைக்குட்டைகளுக்கு நான் ஜெபம் செய்யுமுன் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபம் செய்ய விரும்புகிறேன். இப்பொழுதுஅந்த பாடலை நான் பாடவிரும்புகிறேன். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் (அவருடைய வார்த்தையை நீங்கள் நேசிக்கிறீர்களா? அப்படியானால் அவரை நீங்கள் நேசியுங்கள்) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) 385.......எங்களை வழி நடத்தினவரே, நான் எதற்காக அந்த காரியங்களைக் கூறினேன், ஏன் அவைகளைக் செய்தேன் என்பதை என் உடன் சகோதரர் புரிந்து கொள்ள நான் இவ்வளவு நேரமாக பிரசங்கித்து, விளக்கிக் கூறினேன். ஆண்டவரே, இங்கு காணப்படுகின்றவர்களையும், இந்த ஒலி நாடாக்களை கேட்க இருப்பவர்களையும் நான் உம்மிடம் கொண்டு வருகிறேன். தேவனே நீரே அவர்களுக்கு தெய்வீக வியாக்கியானத்தைத் தாரும். கர்த்தாவே, நான் வார்த்தையைக் கொண்டு வந்திருந்தால், யார் மேல் விழ வேண்டும் என முன் குறிக்கப்பட்டதோ அவர் மேல் அது விழட்டும். உமது வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. பிதாவே, நான் அநேக தடவை உம்மை அதிருப்திபடுத்தியிருக்கிறேன், என்னை மன்னியும். நான் பார்க்கக் கூடியதும், பார்க்க கூடாமலுமிருக்கிற சபையோரின் பாவங்களை மன்னிக்கும்படி கேட்டு கொள்கிறேன்; தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் யாத்திரையின் முடிவில் இருக்கிறோம் என்பதை உணருகிறோம். எல்லா அடையாளங்களும் இதோ எங்கள் முன்பாக இருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு நான் கூறியவைகளை ஆவிக்குரிய சிந்தை கிரகித்துக் கொள்ளும் எனநிச்சயித்திருக்கிறேன். அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென அவர்களுக்காக நான் வேண்டிக் கொள்ளுகிறேன். நாங்கள் ஏதோ ஒன்றின் அருகாமையில் இருக்கின்றோம். நாங்கள் பேரிரைச்சல்களைக் கேட்கிறோம்; நாங்கள் மிக அருகில் உள்ளோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்டு கொள்ளுகிறேன்.ஆமென். 386பரலோகப்பிதாவே, எங்களுக்கு உதவிச் செய்யும். இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். என்னை நம்புவதற்கு அடையாளமாய் வியாதியஸ்தர் வைத்துள்ள கைக்குட்டைகளுக்காக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே நான் எல்லாருக்குமாக விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இப்பொழுது, தேவனுடைய வார்த்தைக்கு திறந்த இருதயமுள்ளவர்களில் இந்த விதையை நான் நடுகிறேன். கர்த்தராகிய தேவனே, தேவனாகிய உம்மில் விசுவாசம் உள்ளவனாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உரிமை கோரி, நான்அவர்களை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். அதை நீர்ப்பாய்ச்சி, ஆண்டவரே, நீரே சுகமளிக்கின்ற அதே மகத்தான தேவன், இரட்சிக்கின்ற அதே மகத்தான தேவன், உயிர்த்தெழுந்த அந்த மகத்தான தேவன் நீர் அங்கே முளைத்தெழுந்த அந்த வித்தின் மீது உம்முடைய ஆவியை அனுப்பும். நீரே தேவன். வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்படியாய் அவர்களுடைய இருதயமாகிய கருப்பையை நீர் பரிசுத்தப்படுத்தி, கிறிஸ்துவுக்கென்று ஒரு மணவாட்டி மணியை உற்பவித்தருளும். கர்த்தாவே இதை அருளும். தேவனே, உமக்குச் சித்தமானால் இங்குள்ள ஒவ்வொரு வரையும் உம்முடைய மணவாட்டியாக எடுத்துக் கொள்ள நான் அவர்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 387நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்... நம்முடைய கரங்களை உயர்த்தி, நாம் எல்லாரும் ஒன்றாக... நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்.... இப்பொழுது, வார்த்தையானது ஆறு மணி நேரம் பிரசங்கிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒன்று. உங்கள் முதற்படி.....நான் மெச்சுகிறேன். மனந்திரும்பி.....? அவர்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே தங்கள் பாவ மன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார். ஏனெனில் வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ளவர்க்கும் அது மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், கத்தோலிக், பிரஸ்பிடரியன், மற்றும் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருக்கும் ஆகும்-வருகிறவன் எவனோ அவன் வரட்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் உங்கள் போதகரை...நாம் இப்பொழுது சகோதரன் நெவில் அவர்களைக் கேட்கப் போகிறேன் .....சிறிது நேரம் அமர்ந்திருங்கள். சகோ. நெவில் மற்ற ஆராதனையைப் பற்றிய அறிவிப்புகளை உங்களுக்குக் கூறுவார்.